Pages

Jun 19, 2013

இயற்கை தரும் இனிமை!...க்விலிங் கைவேலையில் செய்த மிக இலகுவான 
ஒரு சிறிய வாழ்த்து மடல்.
∞∞∞∞∞∞

mother natureஇயற்கை தரும் இனிமை...
~~~~~~~~~~~~~~~~~~~

நிலம்!
¤¤¤¤¤¤
                                           பொறுமைக்கு மண்ணாம் நல்ல
                                           பெருமைக்கும் பேற்றுக்கும் 
                                           நற்கருணைக்கும் நல்அன்னையாம்
                                           நிதமெமை தாங்கும் பொறையாம் 
                                           வறுமை நீக்கும் தரையாம்
                                           வாழவைக்கும் நல் வரமாம்
                                           தரிசாய்க் கிடக்கும் தங்கமாம்
                                           பரிசாக எமக்குப் பலமான நிலமே!.

நீர்
¤¤¤
                                           கருமேகம் மிகக் குளிர்ந்தே
                                           மழையெனப் பொழிகையிலும்
                                           சிறு துமியாய் அதுசிதறி
                                           சில்லென உடல் நனைக்கையிலும்
                                           மலைதழுவி அருவி ஆறு நதியெனஆகி
                                           மண்தவழ்ந்தும் கடல் கலந்தே
                                           உடல்சோரா நலன்காக்கும் நீரானாய்
                                           உளமுவக்கும் பேறானாய் தண்ணீரே!.

நெருப்பு
¤¤¤¤¤¤
                                           தீயதை அழிக்கும் தீயென்றால்
                                           போய்விடுமே யாவும்
                                           காய்வதும் எரிவதும் தீய்ந்துபின்
                                           சாம்பலாகி மீள்வதும் இவ்வுலகில்
                                           நோயினைத் தடுக்குமே காவலென
                                           நெருப்பாகநில் என்றால்  வீரமாகி
                                           விருப்பாகி வெளிச்சமாகி சத்தியத்தின்
                                           சாட்சியான கடவுளே காக்கும் கனலே!.

காற்று
¤¤¤¤¤¤
                                           பூஞ்சோலை மலர்தழுவி
                                           பொதிகைமலை வனம்மேவி
                                           நீர்நிலைகள் குளம் தவழ்ந்து
                                           நிம்மதியாம் இறைசந்நதி புகுந்து
                                           தீராஇனிமை இளமையுடன் எமக்கு
                                           பாரில் உயிர்காக்கும் சுவாசமுமாய்
                                           யாவர்க்கும் சுகம் சேர்க்கும்
                                           தேவர்க்கு நிகரான தென்றலே!.

ஆகாயம்
¤¤¤¤¤¤
                                           சுட்டெரிக்கும் சூரியனும்
                                           பட்டொளி வெண்ணிலவும்
                                           கட்டுக்கடங்கா மின்மினிகளாம்
                                           நட்சத்திரங்களும் நீர்தரும்
                                           கார்மேகம் மென்முகில் இன்னும்
                                           வண்ணமாய் மிளிரும் வானவில்லும்
                                           வானூர்தி பறந்திட வனப்பான வழியும்
                                           சீர்பலதருதே வானமெனும் ஆகாயமே!.
♣♣♣♣♣♣♣♣♣♣பொல்லாத மனிதம்!..
~~~~~~~
நிராகரித்தாலும் நிழல்தந்து
வெட்டி எறிந்தாலும் விறகாகி
கல்லால் அடித்தாலும் கனிதருதே
பொல்லாத மனிதம் இதைப்புரிந்திடுமோ!..
~~~~
ѻѺѻѺѻѺѻ

பதிவோடு ஒரு அறிமுகம்
ᴥᴥᴥᴥᴥᴥᴥᴥᴥᴥᴥᴥᴥ

வலைப்பூப் பதிவாளர் தோழி அம்முலு அவர்களின் பிரியசகி எனும் வலைப்பூவினை  இங்கு அறிமுகம் செய்வதில் மிகவும் மகிழ்வுறுகின்றேன்.

பிரியசகி     http://www.piriyasaki.blogspot.de/

பிரியசகி தனது வலைப்பூவில் பல சுவாரசியமான விடயங்களைப் பகிர்ந்துகொள்கிறார்.

எங்கள் சகபதிவாளர் தோழி அஞ்சலினிடம் நானும் பிரியசகியும் அதிராவும் க்விலிங் கைவேலையை அவ்வப்போது சந்தேகங்களைக் கேட்டு நிவர்த்திபண்ணி மேலும் கற்றுவருகிறோம். அவ்வகையில் பிரியசகியும் தான் செய்த சில க்விலிங் மடல்களையும் இன்னும் வேறு கைவேலை ஆக்கங்களையும் சமையல், வெளிப்புறக்காட்சி நிழற்படங்கள், மனதைக் கவர்ந்த பாடல்கள் என பல சுவாரசியமான பதிவுகளை பதிந்துவரும் ஒரு வளரும் வலைப்பூ பதிவர் ஆவார். 
கவிதை எழுதவும் ஆரம்பிப்பதாக அறிந்தேன். விரைவில் அவர் வலைப்பூவில் கவிதைகளையும் காணலாம் என எண்ணுகிறேன்...:).

(ஏனோ நீண்ட காலமாக பதிவேதும் ஏற்றாமல் இருக்கிறார். இப்பொழுதாவது... இனியாவது விரைந்து செயற்படுவாரென நம்புகிறேன்.)

தோழி பிரியசகியின் வலைப்பூவினை தெரிந்திருந்தோர் இருப்பினும் தெரியாதவர் யாரேனும் இருந்தால் அவர் வலைப்பூவினை தெரிந்துகொள்வதற்காகவும் அவரை மேலும் ஊக்குவிக்குமுகமாகவும் இங்கு அவரின் வலைப்பூவினை அறிமுகம் செய்வதில் மிகவும் மகிழ்வுறுகின்றேன்.

தோழி பிரியசகியின் வலைப்பூவிற்கும் சென்று அவரையும் ஊக்குவிக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றேன்.

மிக்க நன்றி நட்புகளே!.
☼☼☼☼☼☼☼

135 comments:

 1. எல்லாமே மிகவும் அருமையாக உள்ளது. பாராட்டுக்கள்.

  >>>>>

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் ஐயா!

   உங்களின் அன்பான வரவும் வாழ்த்தும் மனதிற்கு மகிழ்வினைத் தருகிறது.

   மிக்க நன்றி ஐயா!

   Delete
 2. //க்விலிங் கைவேலையில் செய்த மிக இலகுவான
  ஒரு சிறிய வாழ்த்து மடல்.//

  சூப்பரோ சூப்பர் ! ;)))))

  >>>>>

  ReplyDelete
  Replies
  1. க்விலிங் வாழ்த்து மடலினை ரசித்தமைக்கும் நன்றி!

   Delete
 3. இயற்கை தரும் இனிமை...

  கவிதாயினியின் ஐந்து பாடல்களும் அட்டகாசம்.

  >>>>>

  ReplyDelete
 4. //பொல்லாத மனிதம்!..
  ~~~~~~~
  நிராகரித்தாலும் நிழல்தந்து
  வெட்டி எறிந்தாலும் விறகாகி
  கல்லால் அடித்தாலும் கனிதருதே
  பொல்லாத மனிதம் இதைப்புரிந்திடுமோ!..//

  ஹைய்யோ! நீங்க எங்கேயே போய்ட்டீங்கோ.!!!!!!

  உங்களிடம் எவ்வளவு திறமைகள்?

  இனிமையோ இனிமை தான். ;) மகிழ்ச்சிம்மா!!

  ReplyDelete
  Replies
  1. ஐயா!... கவிதைகளையும் மிகவே ரசித்து பாராட்டியமை எனக்கு மேலும் ஊக்கத்தை தருகிறது.

   உங்கள் அன்பான வருகைக்கும் நல்ல ரசனைக்கும் பாராட்டு, வாழ்த்துக்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள் பல.

   Delete
 5. வலைப்பூப் பதிவாளர் தோழி அம்முலு அவர்களின் பிரியசகி எனும் வலைப்பூவினை இங்கு அறிமுகம் செய்வதில் மிகவும் மகிழ்வுறுகின்றேன்.

  பிரியசகி http://www.piriyasaki.blogspot.de/

  அதைவிட நான் மிக்க மகிழ்ச்சியடைகிறேனம்மா !

  யாரு? நம்ம அம்முலு தானே !

  அவர்களுக்கும், உங்களுக்கும் என் அன்பான பாராட்டுக்கள் + வாழ்த்துகள்.

  பகிர்வுக்கு நன்றிகள்.

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றிகள் அண்ணா.

   Delete
  2. மிக்க நன்றி!

   Delete
 6. மிக அருமையான பகிர்வு இளமதி.

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் ஆசியா!

   அன்பான வரவும் உங்கள் வாழ்த்தும்கண்டு மகிழ்ந்தேன்.
   மிக்க நன்றி!

   Delete
 7. பஞ்ச பூதங்களை அழகா கவிதையா கொடுத்திட்டீங்க இளமதி.. பாராட்டுக்கள்..!
  வாழ்த்து அட்டையும் பிரமாதம்.

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் ராதா ராணி!

   பஞ்ச பூதங்களே எங்கள் வாழ்வின் ஆதாரம். அதைவைத்து எழுதிப்பார்த்தேன்.

   உங்கள் வரவும் ரசனையும் மகிழ்வை தருகிறது.

   Delete
 8. பச்சை தாளில் ஒரு வெள்ளை பேனா.. நல்லாருக்கு ரசித்தேன்.

  ReplyDelete
  Replies
  1. ம்.மிக்க நன்றி தோழி உங்கள் வாழ்த்திற்கு!

   Delete
 9. நிலம், நீர், காற்று, ஆகாயம், நெருப்பு என ஐம்பூதங்களையும் கவிதையில் அழகுற வடித்துள்ளீர்கள் இளமதி ! யாவும் அருமை - முதலாவதாக இருக்கும் வாழ்த்துமடலும் பார்க்க அழகாக இருக்கிறது!

  அது என்ன உங்கள் டீமில் எல்லோருமே க்விலிங் வேலை செய்து படம் போடுகிறீர்கள் ?? :)))) எல்லோரும் சேர்ந்து பிசினெஸ்ஸா?? :)))

  விளக்கம் ப்ளீஸ்!!!!

  ReplyDelete
  Replies
  1. கொஞ்சம் தேம்ஸ் கரைக்கு வரமுடியுமோ ம.க.ஓனர்?:)) பயப்பூடாதீங்க:))) விளக்கம் சொல்லத்தான்ன்:)))...

   Delete
  2. வணக்கம் மணீ...
   எல்லாம் உங்களிடம் கற்றதுதான். காணுற எல்லாத்தையும் வைத்து பாடலாம் என்று சொல்லித்தந்து என்னிடம் ஃபீஸும் வாங்கி காணாது இன்னும் தரோணும் எண்டு சொன்னதெல்லாம் மறந்திட்டீங்களாக்கும்.
   வயசும் போகுது.. உங்களின் கெட்டப்பை பார்த்தாலே தெரியுது...:).
   சரி அது போகட்டும்.

   வந்து பார்த்து ரசிச்சு வாழ்த்தியிருக்கிறீங்கள். எல்லாத்துக்கும் மிக்க மிக்க நன்றி மனீ மாஸ்டர்!...

   ஆ.. வாங்கோ அதிரா... மணீக்கு சந்தேகமாம். விளங்கபடுத்திட்டீயளோ... மிக்க நன்றி உங்களுக்கும்..:))).

   Delete
 10. தோழி அம்முலு என்கிற ப்ரியசகியின் அறிமுகம் அருமை! நனும் கவனித்தேன் அவர் ரொம்ப நாளாக பதிவேதும் இடவில்லை! இருப்பினும் எமது ப்ளாக்குகளில் வந்து பின்னூட்டம் இட்டு, மகிழ்ச்சிப்படுத்தும் அவரது பணியை பாராட்டி வாழ்த்துகிறோம்!

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றிகள் மாட்ஜிஜோஜ்ஜி மனீ மனீ

   Delete
  2. மிக்க நன்றி மணி!

   Delete
 11. கவிதைகள் பிரமாதம் அதுவும் கொக்கு பற்றிய கவி மிக ஆளுமையான வரிகள் வாழ்த்துக்கள்!
  பிரிசகியின் வலையை இனி நோட்டம் இடுவோம்!

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றிகள் தனிமரம்.

   Delete
  2. வாங்கோ வணக்கம் நேசன்!

   உங்கள் ரசனையும் கருத்தும் கண்டு மிக்க மகிழ்ச்சி!

   நல்லது பிரியசகியின் வலைப்பூவையும் நோண்டிவிடுங்கள்...:)

   யாவற்றிற்கும் மனமார்ந்த நன்றிகள் நேசன்!

   Delete
 12. பஞ்ச பூதக் கவிதைக்கும் க்விலிங் மடலுக்கும்
  மனமார்ந்த பாராட்டுக்கள் & வாழ்த்துக்கள் !

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் தோழி ஸ்ரவாணி!

   உங்கள் வருகைகண்டு அகம் மகிழ்ந்தேன்.
   பாராட்டுக்களுக்கும் வாழ்த்துக்களுக்கும் மனமார்ந்த நன்றிகள் பல...

   Delete
 13. என் ப்ளாக்கை அறிமுகப்படுத்தியமைக்கு மிக்க மிக்க நன்றிகள் இளமதி.
  தவிர்க்கமுடியாத சூழ்நிலையால் பதிவு போடவில்லை. கூடியவிரைவில்
  பதிவு போடுவேன். உங்களின் ஆர்வத்துக்கும்,ஊக்கத்துக்கும் மிக்க நன்றிகள்.
  என்னை வாழ்த்தியவர்களுக்கு மிக்க நன்றிகள்.

  ReplyDelete
  Replies
  1. வாங்கோ வணக்கம் அம்முலு!...

   ஒரு திடீர் அதிர்ச்சியாக உங்களையும் இங்கு அறிமுகப் படுத்தியதால் கோபம் கொள்லவில்லைதானே...:)

   ம். பதிவினை நீண்டகாலமாக காணவில்லை துரிதமாக அடுத்த பதிவை தரவேண்டுமென்றே இப்படிச்செய்தேன். விரைவில் பதிவிடுங்கள்...:).

   உங்கள் அன்பான வரவிற்கு மிக்க நன்றி அம்முலு!.

   Delete
 14. பொல்லாத மனிதம் இதைப்புரிந்திடுமோ!..//புனிதம் இல்லாதோர் மனிதம் மறப்பரே!பஞ்சபூதமும் பார்க்கிறது என்ன செய்தது ?

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் சகோதரர் கண்னதாசன்!..

   ம். பொல்லாத மனங்கள் மனிதருக்குத்தான்.
   பொறுமைகாக்கிறது பஞ்சபூதம். அவை பொங்கிவிட்டால் மிஞ்சாதே ஒன்றும் புவியில்...:).

   Delete
 15. வாழ்த்துமடலும் க்விலிங் அற்புதம் அருமை.தொடர்ந்து செய்யுங்க எனக்கும் அனுப்புங்க.வாழ்த்துக்கள்

  ReplyDelete
  Replies
  1. சகோ.. உங்கள் வாழ்த்தும் கருத்தும் மகிழ்வைத் தருகிறது எனக்கு...

   கேட்டுவிட்டபின் தராமலா... வாழ்த்து மடல் செய்து நிச்சயம் உங்களுக்குத் தருகிறேன்...:)

   மிக்க நன்றி சகோ அத்தனைக்கும்!

   Delete
 16. க்விலிங் மிக அருமையாக இருக்கு.இலகுவாக க்விலிங் மட்டுமா வருகிறது.
  கவிதையும் சேர்ந்தல்லவா இலகுவாகிறது உங்களுக்கு.
  இம்முறை பஞ்சபூதங்களை வைத்து மிகவும் அருமையான‌ கவிதைத் தொகுப்பினை வெளியிட்டு இருக்கிறீங்கள். வாழ்த்துக்கள்,பாராட்டுக்கள்.
  //கருமேகம் மிகக் குளிர்ந்தே
  மழையெனப் பொழிகையிலும்// இங்கு சுட்டெரிக்கும் அனல் வெயிலுக்கு
  இப்படி மழை வராதா என நினைக்கிறோம்.
  எனக்கு காற்று கவிதை மிகவும் பிடித்திருக்கு இளமதி.
  ""பொல்லாத மனிதம்"" மிக அழகாக எழுதியிருக்கிறீங்க.
  "பச்சைத்தாளில் ஒரு பேனா"" மிகவும் அசத்தல்.
  பகிர்விற்கு மிக்க நன்றிகள்.அறிமுகப்படுத்தியமைக்கு மீண்டும் நன்றிகள்.

  ReplyDelete
  Replies
  1. ம். பிரியசகி... ரசிப்பதில் உங்களை மிஞ்ச யாரும் இல்லை...:)

   ரொம்பப் புகழுறீங்க... அப்படியெல்லாம் இல்லை. சில கிறுக்கல் உடனே வரும். சிலது நாட்கள் எண்ணிக்கையே தெரியாது.. எழுதி முடிப்பதுக்குள் நானே கடுப்பாகிவிடுவதுண்டு. சொற்கள் தானாக வந்தமைய வேண்டும் அப்போது எழுதுவது சுலபம்.

   உங்க பாராட்டு பார்த்தபின் இன்னும் இப்படி எல்லார் கழுத்தையும் வெட்டலாம்னு எண்ணம் வருகிறது...:))).

   என்ன அங்கை சுட்டெரிக்குதோ??? மழை.. வருகுது... வந்து கொண்டிருக்குதே இங்கு..;) அங்கையும் வரும்...

   மிக்க மிக்க நன்றி அம்மு உங்க வரவுக்கும் அழகிய ரசனை, வாழ்த்துக்கள் அத்தனைக்கும்.

   சரீஈஈ... நீங்க எப்ப புது போஸ்ட் போடபோறீஈங்ங்... ...:))).

   Delete
 17. க்விலிங் வாழ்த்து மடல் - Simply Superb...

  கவிதைகள் அதைவிட அருமை... பாராட்டுக்கள்...

  பலரும் அறிய நல்லதொரு தளம்... நன்றி...

  தொடர வாழ்த்துக்கள்...

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் தனபாலன் சார்!...

   உங்கள் வருகை கண்டாலே மனதில் மகிழ்வு ஒரு நிறைவு...:)

   உங்கள் நல்ல ரசனை மனதிற்கு மகிழ்வாயிருக்கிறது.

   வாழ்த்துக்கள் பாராட்டுக்கள் அனைத்திற்கும் மிக்க மிக்க நன்றி தனபாலன் சார்!

   Delete
  2. மிக்க நன்றி தனபாலன் சார்

   Delete
 18. ஐம்பூதங்கள் பற்றிய வரிகள் அழகோ அழகுங்க. க்விலிங் வாழ்த்துமடல் அற்புதம் பொல்லாத மனிதம் என்ன சொல்ல அசத்துறிங்க தோழி. தொடருங்கள். வெகு சிறப்பு.

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் தோழி சசிகலா!...

   நீங்கள் படைக்காத படிக்காத பாட்டா நான் பாடிப்புட்டேன்...:).
   அதெல்லாம் ஒண்ணுமே இல்லீங்க. உங்க திறமைக்குமுன்னே இதுவெல்லாம் ரொம்ப சாதாரணம்தான். ஆனாலும் இப்படி புகழ்ந்திட்டீங்க... ரொம்பவே சந்தோஷம் எனக்கும்.

   உங்க வரவுக்கும் வாழ்த்துக்கும் ரொம்ப ரொம்ப நன்றி தோழி!

   Delete
 19. பச்சைத்தாளில்
  ஒரு வெள்ளைப்பேனா..
  ஹைக்கூ அருமை தோழி.

  ReplyDelete
  Replies
  1. ம்.ம் ரசிப்புக்கு மீண்டும் நன்றி!

   Delete
 20. பஞ்சபூதங்களையும் உங்கள் கற்பனையில் அழகாக சிருஷ்டித்து கவிதை வெள்ளம் பொழிந்து விட்டீர்கள்.

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் ஸாதிகா அக்கா!.. வாங்கோ...
   ரொம்பநாளா காணவே இல்லை. நலமோ?

   உங்க வரவு கண்டு எனக்கும் சந்தோஷம் அக்கா...:)
   வாழ்த்திற்கும் மிக்க நன்றி!...

   Delete
 21. நோஓஓஓஓஓஓஓ நா ஒத்துக்க மாட்டேன்ன்ன்ன்:)) இது அநீதி:) அநியாயம்:) அக்கிரமம்:))... இது திட்டமிடப்பட்ட சதி:)... இது உள்நாட்டு சதித்திட்டம்ம்ம்:)))).. அதெப்பூடி அதிரா இருக்க அம்முலுவை அறிமுகம் செய்யலாம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்:)))????...

  தோஓஓஓஓஓஓஒ.. இப்பவே போகிறேன்ன்.. பயன் மியூனிக் ஃபுட்போல் கிரவுண்டில.. இப்பவே குளிக்கிறேன்ன் தீஈஈஈஈஈஈஈ:)) ஆரும் என்னைக் காப்பாற்ற முயலவேணம்ம்ம்ம்ம்:)))... முன்னே வச்ச காலை பின்னே எடுக்க மாட்டனாக்கும்:)))... விடுங்கோ விடுங்கோ.... என்னை தடுக்காதீங்கோ:))... அதெப்பூடி அதிரா இருக்க அம்முலுவை:))).. நோஓஓஓஓஒ... நெஞ்சு பொறுக்குதில்லையே:))))

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் அதிரா.... வாங்கோ...:)
   என்னதிது வரேக்கையே பெருங்கூச்சலோடு வாறீங்க... எதுக்கு இப்ப ஃபுட்போல் கிரவுண்டுக்கு போகோணும்... அங்கை ஆரும் தெரிஞ்சவை விளையாடுகினமோ..;).

   தீக்குளிப்ப்..போஓஓ.. இதென்னதிது... எவ்வளவு அனுபவசாலி, பெரிய ஆள் நீங்க இப்பிடி விட்டுக்குக்காம எனக்கு இடம்தரேலை எண்டு... ச்சீச்சீ... சின்னப்பிள்ளைகள் மாதிரி...

   உங்கள் புகழ்தான் அங்கை கீழ்க்கோடில இருந்து அமேரிக்கா கனடா அந்தாட்டிக்கா இப்ப என்னமோ சொல்லுறீங்க இந்தாட்டிக்கா வரைக்கும் தெரியுமே... பிறகெதுக்கு உங்களுக்கு விளம்பரம்.. அதெல்லாம் உங்களுக்கு ஒண்ணுமே இல்லை.

   அழக்கூடாது கண்ணைத்துடைச்சிட்டு சிரிச்சுகொண்டிருங்கோ. அப்பதான் அடுத்தடுத்த பதிவிலை நீங்கள் வருவியள்...:)

   Delete
 22. //தோழி பிரியசகியின் வலைப்பூவிற்கும் சென்று அவரையும் ஊக்குவிக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றேன்.///

  நோஓஓஓஓஓஓஓஓஒ இந்த உசிர்:) உடம்பில இருக்கும்வரை அது நடக்காதூஊஊஊஊஊஊஊஊஊஊ:)).. பூஸோ கொக்கோ:))

  ReplyDelete
  Replies
  1. ஏன் இந்த கொலவெறி????

   Delete
  2. ஸ்.ஸ்ஸ்ஸ் அம்முலு... நீங்க சும்ம இருங்க... அதெல்லாம் உல்லுலாயி.. அவ வருவா.. சும்மா ஏன் ஏன் எண்டு கேட்ககேட்க உசார் கூடீடும்.
   பேசாம இருங்கோ..:)

   Delete
 23. சரி சரி என் கண்ணைத் துடைச்சுக்கொண்டு.. விஷயத்துக்கு வருவம்:)).

  வண்ணத்துப் பூச்சியார்ர் சூப்பர்ர்.. நல்ல அழகாக உட்கார்ந்திருக்கிறார்ர்ர்..... இன்னும், இமா இதைக் காணேல்லைப் போலும்....

  குயில் வேர்க் சூப்பர் வழமைபோல.

  ReplyDelete
  Replies
  1. ஏன் இமாவுக்கு பட்டர்ஃப்ளை ரொம்ம்பப் பிடிக்குமோ...;).

   அவ எங்கை இப்பெல்லாம் இங்கால வாறதில்லையே... கண்டா கேட்டனான் எண்டு சொல்லிவிடுங்க அதிரா..

   ரசனைக்கு நன்றி அதிரா...:).

   Delete
 24. பஞ்ச பூதங்களுக்கும் கவிதையோ? கலக்கிட்டேள் போங்கோ... ஆனா எனக்கு ஏதும் புரியுதில்லை...

  கிரேட் குருவை தாங்கியிருப்பவருக்கு வடித்த கவி சூப்பர்.

  அனைத்தும் அருமை.

  ReplyDelete
  Replies
  1. என்னதிது... பஞ்சபூதமெண்டா என்னன்னு புரியேலையோ?... கடவுளே இதை உங்கட அப்பா பார்த்தா என்ன சொல்லுவர்... சொல்லித்தந்ததெல்லாம் காத்தில பற்ந்து போச்ச்..:)

   அட உங்கட குரு குந்தியிருக்கும் பாட்டு பிடிச்சிருக்கு உங்களுக்கு... ஞாயம்தான்...:))).

   நன்றி! நன்றி!

   Delete
 25. ஹா..ஹா..ஹா.. அம்முலு இதை மட்டும்தான் படிக்கோணும் சொல்லிட்டேன்ன்:))..

  அறிமுகத்துக்கு வாழ்த்துக்கள். ஏன் இன்னும் தூசு தட்டேல்லை வெள்ளை அடிக்கேல்லை.. கெதியா அடிங்கோ பிறகு நான்.. “இந்தாட்டிக்கா”:) போனபின்பு அடிக்கடி வரமுடியுதோ தெரியாது.

  ReplyDelete
  Replies
  1. உங்க இந்த பின்னூட்டத்தை தவிர வேறு எதனையும் படிக்கவில்லை அதிரா.நீங்க நேர்த்தி வைச்ச முருகன்சாட்சி.
   நீங்க சொன்ன உடனே தூசி தட்டி,வெள்ளை அடிச்சாச்சு. நீங்கள் எந்தாட்டிக்கா:) போகமுதல் கடையை ஓபன் செய்திடலாம். என்ன அடிக்கடி வரமாட்டியளோ ஓ..ஓ...என்ன இப்படி பாம் போடுறீங்க. எதுக்கும் நல்லா ஓசியுங்கோ.மிக்க நன்றி அதிரா.

   Delete
  2. சரி அம்முலு இதை படிச்சாச்சு... விரைவில பதிவு வெளிவர போகுது...:)

   மிக்க மிக்க நன்றி அதிரா உங்கள் வரவுக்கும் அட்டகாசமான கருத்துப்பரிமாற்றத்திற்கும் அன்பான வாழ்த்துகளுக்கும்...!

   Delete
 26. பஞ்ச பூதங்கள் ஐந்தின் பயன்களையும் அதன் சிறப்புக்களையும்
  மிக அழகாக வர்ணித்தமை வெகு சிறப்பு .அத்துடன் கடமை
  உணர்வுடன் சக தோழியின் வலைத்தளத்தை அறிமுகப் படுத்திய
  தங்கள் உயர்ந்த பண்பிற்கு தலை வணகுகின்றேன் தோழி !

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் தோழி அம்பாள் அடியாள்!..

   உங்கள் ரசனை கண்டு மகிழ்ந்தேன். சகபதிவாளரையும் ஊக்குவிப்பதிலும் ஒரு நிறைவு மகிழ்வு. முடிந்தவரை செய்யலாமென எண்ணியுள்ளேன்...

   உங்களின் அன்பான வரவும் நற்கருத்தும் வாழ்த்தும் எனக்கு நிறைந்த மகிழ்வே.
   மிக்க நன்றி தோழி!

   Delete
 27. எல்லாமே நன்றாக இருக்கிறது. நீருக்கும், ஆகாயத்துக்கும் நீலநிறத் தெரிவு உட்பட!

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் சகோதரர் ஸ்ரீராம்!..

   உங்கள் ரசனை தருகுதே நிறைவு.

   மிக்க நன்றி உங்கள் வரவிற்கும் வாழ்த்திற்கும் சகோ!

   Delete
 28. நீங்கள் கொடுக்கும் லிங்க் க்ளிக் செய்தால் இதே தளத்திலேயே திறக்காமல் புதிய தளத்தில் திறக்குமாறு செட்டிங்க்ஸ் மாற்றினால் நன்றாக இருக்குமே....

  ReplyDelete
  Replies
  1. ஆமாம் அப்படிச் செய்யத்தான் வேண்டும்...
   என்ன எனக்கு யாராவது இதைப்பற்றிச் சொல்லி செய்துவிட்டோ காட்டித்தந்தால்தான் உண்டு. அவ்வளவிற்கு கணனித்துறையில் வெகு திறமைசாலி நான்...:).

   மிக்க நன்றி உங்கள் ஆலோசனைக்கு!..

   Delete
 29. Replies
  1. வணக்கம் ஜெயக்குமார் ஐயா!

   உங்கள் வரவிற்கும் ரசனைக்கும் மிக்க நன்றி ஐயா!

   Delete
 30. நிலம், நீர், ஆகாயம், காற்று, நெருப்பு
  இவை ஆனதே அழகிய கவிப்பூ
  இலகு என்று நீங்கள் சொல்வது
  எனக்கு இலகுவாக இல்லையே
  இது சொல்வது உங்கள் கை சிறப்பு
  மனிதம் பேனா இரண்டும் அழகு

  பிரியசகியின் தளம் பார்க்கிறேன், நன்றி.

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றி கிரேஸ்

   Delete
  2. வாங்கோ வணக்கம் தோழி கிரேஸ்!..

   உங்கள் ரசிப்பு தருகுதெனக்கு உவப்பு
   நீங்கள் சொல்லும் வியப்பு
   அதில் ரகசியமேயில்லை வெறும்பருப்பு...:)
   மிகவே ரசித்தேன் உங்கள் கவிவார்ப்ப்பு!

   மிக்க நன்றி தோழி உங்கள் வரவிற்கும் வாழ்த்திற்கும்!

   Delete
 31. ஐயும் பூதங்களையும் கவிக்குள் அடங்கிவிட்டதே ஒவ்வொரு வருகளும் அருமை அக்கா

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் சகோ ஹிஷாலீ!...

   உங்கள் வரவும் ரசனையும் நிறைந்த மகிழ்வெனக்கு.
   மிக்க நன்றி சகோ!

   Delete
 32. ஐம்பூதங்களையும் அருமையாய்
  போற்றிய கவிதைகள் அழகு ..!
  இனிய பாராட்டுக்கள்...

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் சகோதரி இராஜராஜேஸ்வரி!

   உங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும் மனமார்ந்த நன்றிகள் சகோதரி!

   Delete
 33. தோழி பிரியசகியின்
  வலைப்பூ அறிமுகத்திற்கு
  வாழ்த்துகள்..!

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றி இராஜேஸ்வரிய‌க்கா

   Delete
  2. மிக்க நன்றி!

   Delete
 34. பஞ்சபூத கவிதைகள் மிகவும் அருமை.. வாழ்த்துமடல் அழகு.. புதிய வலைப்பூ நல்லதொரு அறிமுகம்...

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் பிரியா!

   உங்கள் வரவும் வாழ்த்தும் மிக்க மகிழ்வாயுள்ளது. அறிமுக பதிவர் பிரிய சகியையும் ஊக்குவிப்பதற்கு மிக்க நன்றி தோழி!

   Delete
 35. கவிதையுடன் கூட கைவேலைகளும் அழகாகச் செய்வீர்கள் போல! உங்களின் பஞ்ச்பூதங்களுக்கான கவிதை நன்றாக இருக்கிறது.
  ரொம்பவும் ரசித்தது பொல்லாத மனிதம், பச்சைத்தாளில் ஒரு வெள்ளைப் பேனா இரண்டும்.
  உங்கள் தளத்தில் இன்னொரு வலைப்பதிவாளரை அறிமுகப் படுத்துவது ரொம்பவும் பிடித்திருக்கிறது.

  உங்கள் பணி, உங்கள் பாணி இரண்டுமே சுவையாக இருக்கிறது

  பாராட்டுக்கள்!

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் சகோதரி ரஞ்சனி நாராயணன்!... வாங்கோ இங்கு வருவது இதுதான் முதல்தரமென எண்ணுகிறேன்... மகிழ்ச்சி!

   உங்கள் ரசனையை நான் ரசிக்கின்றேன்...:)
   //உங்கள் பணி, உங்கள் பாணி // சொல்லாடல் அற்புதம் சகோதரி!

   அன்பான வரவிற்கும் வாழ்த்திற்கும் என் மனமார்ந்த இனிய நன்றிகள்!

   Delete
 36. அருமையான கவிதைகள்
  கைவேலைகள் அழகு.

  "தீயதை அழிக்கும் தீயென்றால்
  போய்விடுமே யாவும்.." சரியாகச் சொன்னீர்கள்  ReplyDelete
  Replies
  1. வணக்கம் வைத்தியர் ஐயா!

   உங்கள் ரசிப்பும் அற்புதம்! வரவும் வாழ்த்தும் எனக்கு மிக்க மகிழ்வாயுள்ளது.

   மிக்க நன்றி ஐயா!

   Delete
 37. இயற்கை தருமினிமை! இங்கே இதயம்
  மயங்கிட தந்தீர்! மகிழ்ந்தேன்! - செயற்கை
  வளங்கள் சிறப்புறும் வண்ணக்கை வேலை!
  இளமதியுன் இன்ப படைப்பு!

  வாழ்த்துக்கள் தோழி.

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் தோழி அருணா செல்வம்!.

   இயற்கையும் செயற்கையும் இணைந்ததெம் வாழ்வே
   வியப்பென காண்பதற்கு விமர்சையான கவியல்லநான்
   தயக்கமொடு கிறுக்குகிறேன் தரமென்றீர் மகிழ்கிறேன்
   முயற்சிதான் கைவேலை மிக்கநன்றி உன்வாழ்த்திற்கே!..

   வரவிற்கும் நல்லகவி வாழ்த்திற்கும் மனமார்ந்த நன்றி தோழி!

   Delete
 38. இயற்கைைய மிகவும் இரசித்து எங்களையும் ரசிக்க வைத்திருக்கிறீங்க... ஆகாயத்தின் நிறம் தான் கொஞ்சம் கண் கூசுது .. :))

  குவிலிங் சூப்பர் அம்மா... இப்படி அழகான கைவேலைப்பாடுகளைப் பார்க்கும் போது எனக்கும்ஆசையாக இருக்கு... ஆனால் செய்யத் தெரியல...
  அருமையான பகிர்வுக்கு பாராட்டுக்கள் அம்மா...

  ReplyDelete
  Replies
  1. வாங்கோ பூங்கோதை! வணக்கம் மகளே!...:)

   ஆகாயம் பார்த்தால் கண்கூசுகிறதுதான்.. அஜெஸ் பண்ணீடுங்கோ...:)

   கைவேலை யாரும் முயன்றால் செய்திடலாம். பொறுமை நிறைய மூலதனமாக இடவேண்டும்.

   அன்பு வருகைக்கும் பாராட்டுக்கும் மிக்க நன்றி மகளே!

   Delete
 39. எனக்கு எம்ப்ராய்டரியும், கூடை பின்னுதல், உல்லன் வேலை மட்டுமே தெரியும்.., இந்த குவிலிங் வேலைலாம் தெரியாது.., ஆனா கத்துக்க ஆசை.., அதோட உங்களுக்கு தெரிஞ்ச லிங்குகள் எனக்கு சொல்லுங்களென் ப்ளீஸ்.., உங்க கைவண்ணத்துல வந்த அழகான் குவிலிங் பார்த்ததும் செய்ய ஆசையா இருக்கு.

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் தோழி ராஜி! முதன்முறை இங்கு உங்கள் வருகை வாருங்கள்!..

   உங்கள் திறமையும் சிறந்ததே. உங்கள் ஆர்வம் கண்டு மகிழ்ச்சி தோழி!
   இந்த க்விலிங் கைவேலை நெட்டில் தேடி நானாக அவ்வப்போது பழகினேன். அத்துடன் என் அன்புத்தோழி அஞ்சலினின்

   http://kaagidhapookal.blogspot.de/

   இப்பக்கத்தில் க்விலிங் என்றிருக்கும் பதிவுகளைப் பாருங்கள். அவரிடம் அங்கு கொட்டிக்கிடக்கிறது இந்த க்விலிங் வேலைபாடுகள். ஆரம்ப நிலையினருக்கு சில பயிற்சிகள் அஞ்சு விளங்கப்படுத்தியுள்ளார். மிகவும் பிரயோசனமாக இருக்கும்.

   கிட்ட வாருங்க காதில் ரகசியமாகச் சொல்கிறேன் அஞ்சு என் மானசீக குரு. அப்படிச் சொன்னால் அஞ்சுவுக்குப் பிடிக்காது...:).

   உங்கள் அன்பான வருகைக்கும் ரசனைக்கும் மனமார்ந்த நன்றிகள் தோழி!

   Delete
 40. http://blogintamil.blogspot.ae/2013/06/blog-post_22.html
  இன்று வலைச்சரத்தில் பகிர்ந்துள்ளேன்.அருமை.மிக்க நன்றி.

  ReplyDelete
  Replies
  1. ஆசியா... எத்தனை பெரிய கவிஞர்களுடன் என்னையும் இன்று அங்கு அறிமுகம் செய்துள்ளீர்கள்...
   உங்கள் அன்பிற்கு ஈடிணை இல்லை.
   மிக்க நன்றி ஆசியா!

   Delete
 41. ''.. வறுமை நீக்கும் தரையாம்..''
  ''... சிறு துமியாய் அதுசிதறி
  சில்லென உடல் நனைக்கையிலும்..''
  ''..சத்தியத்தின் சாட்சியான கடவுளே காக்கும் கனலே!...''
  ''.. சுகம் சேர்க்கும் தேவர்க்கு நிகரான தென்றலே!.''
  ''...பொல்லாத மனிதம் இதைப்புரிந்திடுமோ!..''
  என்று பல நல்ல வரிகளைக் கவிதையாகியுள்ளது. அருமை!
  உயர் வரிகள் கைவேலையும் மிக அழகு.

  பிரியசகியின்
  வலைப்பூ அறிமுகத்திற்கு
  வாழ்த்துகள்..!
  Vetha.Elangathilakam.

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் சகோதரி கோவைக்கவி!

   உங்கள் வரவும் வாழ்த்தும் மனமகிழ்வினைத்தருகிறது.
   ரசனை மிகச்சிறப்பு.

   வாழ்த்திற்கு மிக்க நன்றி!

   Delete
 42. வணக்கம் இளமதி...

  ஐம்பூத கவிதைகள் மிக அழகு...

  நிராகரித்தாலும் நிழல்தந்து
  வெட்டி எறிந்தாலும் விறகாகி
  கல்லால் அடித்தாலும் கனிதருதே
  பொல்லாத மனிதம் இதைப்புரிந்திடுமோ!..

  மனிதம் பற்றிய மிக அழகான வரிகள்...

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் சகோதரர் வெற்றிவேல்!. வாருங்கள்!

   மனிதம் பற்றி உங்கள் ரசனை அருமை. மனதிற்கு மகிழ்வுடன் இப்படி எழுதவும் எனக்குத் தூண்டுதலாக இருக்கின்றது.

   உங்கள் அன்பான வரவிற்கும் கருத்திற்கும் இனிய நன்றிகள் பல!

   Delete
 43. க்வீலிங் எக்ஸ்பர்ட் இளமதி! பஞ்ச பூதங்கள் பட்டிய கவிதைகள் அருமை.
  பச்சைத்தாளில் வெள்ளைப் பேனா பிரமாதம்

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் சகோதரர் முரளிதரன்!.

   வந்தவுடனேயே க்விலிங் எக்ஸ்பர்டோ நானோ...
   அதிகமாகப் புகழுகிறீர்கள் சகோ...:). நன்றி நன்றி. உங்கள் ரசனையும் அபாரம்தான்.

   உங்களின் வரவிற்கும் நல்ல ரசிப்பிற்கும் வாழ்த்திற்கும் மனமார்ந்த நன்றிகள் சகோ!.

   Delete
 44. மிக நல்ல குவிலிங் வேலைப்பாடும்,படமும்,கவிதைகளும் நன்று.தோழியின் வலைப்பூவை கண்டிப்பாக படித்துவிட்டு இதோ கருத்தும் கூறி விடுகிறேன்/

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் சகோதரர் விமலன்!.

   உங்கள் வருகையும் தருகிறது மனமகிழ்வு எனக்கு!..

   தோழி பிரியசகி வலைப்பூவிற்கும் செல்கிறேன் என்றதற்கும் என் நன்றிகள்!

   நல்ல ரசனை, வாழ்த்து அத்தனைக்கும் உங்களுக்கும் இனிய நன்றிகள் பல.

   Delete

 45. வணக்கம்!

  பட்டம் பறக்கும் படத்தினியே இன்னமுதம்
  சொட்டும் அழகைச் சொரிந்து!

  கவிஞா் கி. பாரதிதாசன்
  தலைவா்: கம்பன் கழகம் பிரான்சு

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் கவிஞர் ஐயா!

   இட்டமுடன் வந்து இயம்பிய வாழ்த்து
   பட்டம் கிடைத்த பேறானதே சொட்ட
   சொட்ட நீங்கள் சொல்லும் கவியழகு
   எட்ட இருப்போரையும் எழுந்துவர செய்யுமே..

   நீங்கள் அன்புடன் வந்து வாழ்த்துவதே பேருவகை எனக்கு ஐயா!

   Delete
 46. இடுகை.. பசுமை! அழகு.
  கவிதைகள் அனைத்தும் அருமை. கடைசி.. ஆஹா!

  க்வில்லிங் வேலைப்பாடு வெகு அழகு.

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் இமா!..

   உங்கள் வருகை
   கருத்துத் தருகை
   நல்ல இடுகை
   அத்தனையும் ஆஹாஹா... அற்புதம்!..:).

   மிக்க மிக்க நன்றி இமா! உங்கள் வாழ்த்தும் எனக்கு குளிர் காச்சலைத் தரப்போகிறது...:).

   மிக்க நன்றி இமா எல்லாத்துக்கும்..;).

   Delete

 47. மீண்டும் வணக்கம்

  நிலமும் நீரும் நெருப்பும் வானும்
  உலவும் காற்றும் உடல்உயிர்த் தத்துவம்!

  ஆடும் கூத்தன் அழகாய் ஒளிர்ந்து
  பாடும் தமிழைப் பாங்குறச் சுவைப்பான்!

  நிலத்தின் கோயில் காஞ்சி! நீராம்
  தலத்தின் கோயில் அனைக்கா! தணலைக்
  காட்டும் கோயில் மலையாம்! காற்றை
  நாட்டும் கோயில் நற்கா ளத்தி!
  தில்லைக் கோயில் எல்லை இல்லா
  வல்ல வானை வடித்து மின்னும்!
  இறைவன் படைப்பை எண்ணித் தெளிந்தால்
  நிறையொளி தோன்றும்! பிறவிகள் நீங்கும்!

  இளமதி இங்கே எழுதிய கவிதை
  உளமதில் நின்றே ஒளிரும் நன்றே!

  பஞ்சபூதக் கோயில்கள்

  திருஆருா்[காஞ்சி] - நிலம்
  திருஆனைக்கா - நீா்
  திருஅண்ணாமலை - நெருப்பு
  திருக்காளத்தி - காற்று
  தில்லை - வான்

  கவிஞா் கி. பாரதிதாசன்
  தலைவா்: கம்பன் கழகம் பிரான்சு

  ReplyDelete
  Replies
  1. ஐயா...

   பஞ்ச பூதமதன் பயன்மிகு விடயங்கள்
   நெஞ்சமதில் என்றும் நிலைக்கவே கொஞ்சமல்ல
   கூறியதிங்கே நாமறிய கேட்டதும் பார்த்ததும்
   ஊறியது சேர்ந்து உணர்விலுமே!..

   நிறைய விடங்களை உங்கள் பாக்களில் அருமையாகத் தந்தீர்கள் ஐயா..

   அறிந்துகொண்டேன். அகம் மிக மகிழ்வுகொண்டேன்.

   ஐயா...
   தங்களின் அன்பான வரவிற்கும் அழகான வாழ்த்திற்கும் அரியபல தகவல்களை அருமையாகப் பாவில் கூறியமைக்கும் என் பணிவான மனம் நிறைந்த இனிய நன்றிகளும் வணக்கங்களும்!..

   Delete
 48. aஅழகான ஐம் பூதங்கள். உங்கள் கவியில் நெருப்பு கூட குளிர்கிறது. அழகிய சொல்லாடல்கள். வாழ்த்துக்கள் சகோதரி.

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் சகோதர் இராஜ முகுந்தன்! இங்கு உங்கள் முதல் வருகை இது. வாருங்கள்!...

   நெருப்பிலும் குளிர்மை காணும் இருப்பிடம் எங்களதல்லவா!...
   அதுதான் கனலும் கனிவாயுள்ளது.

   உங்கள் அருமையான ரசனை நல்ல ஊக்குவிப்பாக எனக்குள்ளது சகோ!

   அன்பு வருகைக்கும் வாழ்த்திற்கும் இனிய நன்றிகள் பல!

   Delete
 49. பஞ்சபூதங்களுக்கும் கவிதை அழகாய் எழுதி விட்டீர்கள் அருமை.
  வாழ்த்துக்கள் கவிதைக்கு.
  தோழி பிரியசகியின் வலைத்தளத்திற்கு சென்று பார்க்கிறேன்.
  நன்றி இளமதி.

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் சகோதரி கோமதி அரசு!
   நலமா? நீண்ட நாட்களாக உங்கள் பதிவுகளையும் காணவில்லையே...

   உங்கள் அன்புக் கருத்துப்பகிர்வும் எனக்கு மகிழ்வாயுள்ளது.

   அனைத்திற்கும் மிக்க நன்றி சகோதரி!

   Delete
 50. 100 க்கு 101 ;)))))

  எனக்கே எனக்காக !

  ReplyDelete
  Replies
  1. நான் கணக்கிடவில்லை இங்கு.

   நன்றி ஐயா...:)

   Delete
 51. Looks like I am the late comer...avvvv!

  Nice post Ilamathy..Will come again tomorrow with detailed comments!

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் மகிம்மா! இம்முறை இவ்வளவு சுணக்கம் ஏனோ?..:)

   ம். இப்படி வந்து பார்த்து ஒருவரி சொன்னாலும் உங்கள் கருத்து ஒரு கோடி பெறுமே!...;).

   பொறுமையாக வாருங்கள். மிக்க நன்றி மகி!

   Delete
  2. ஐம்பூதங்கள் பற்றிய 5 கவிதைகளும் அருமையாக உள்ளன. ரிதம்- படத்தில் வைரமுத்து எழுதிய 5 பாடல்களுக்கும் பரம விசிறி நான்! அதிலும் "நதியே, நதியே.." பாட்டு என்றால் அவ்வளவு இஷ்டம்! அதில் கேமரா, அர்ஜூன், கவிதை, இசை என எல்லாமும் ரசிப்பேன். ;) :)

   உங்க கவிதைகளும் சூப்பர்ப்! க்வில்லிங் அருமையாக இருக்கு. சிம்பிள் அண்ட் ஸ்வீட்! தொடருங்க!
   (நாம் ஏற்கனவே) அறி(ந்த)முகப் பதிவருக்கும் வாழ்த்துக்கள்! :) [அம்முலு, உங்கள மாதிரி சிலபல வார்த்தைகளை கோர்த்துப் பார்த்தேன், காமெடியாத்தான் வந்திருக்கு. ஹிஹி!;)]

   பி.கு. தங்கள் இனிய வாழ்த்துக்களுக்கு மனமார்ந்த நன்றிகள். 25 தான் எனக்கு இனிய நாள்! :)

   Delete
  3. ஹாஆ அப்ப இன்றைக்கோ வாழ்த்துக்கள். வாழ்த்துகள் என் இனிய தோழியே!..

   நீங்கள்கூறிய படப்பாட்டு அத்தனையும் சூப்பர்தான். எனக்கும் பிடித்ததவையே...
   இன்றைய நெருக்கடிக்கடிக்குள்ளும்... ;) உங்கள் அன்பான வருகையும் ரசனையும் வாழ்த்தும் எனக்கும் மிக்க மகிழ்வே.

   அம்முலுவுக்கு எழுத்துக்கோர்ப்பும் வார்தை ஜாலமும் தண்ணி பட்டபாடு...:))).. கேட்டால் அடிக்க வர போறா...

   மிக்க நன்றி மகி உங்கள் மீள் வருகைக்கும் கருத்துகளுக்கும்!...
   இன்றைய நாள் இனிதாக இருக்க வாழ்த்துகிறேன்!

   Delete
 52. வணக்கம்...

  உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

  மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2013/06/blog-post_25.html) சென்று பார்க்கவும்... நன்றி...

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் தனபாலன் சார்!

   பாருங்கள்....
   விடியற்காலையில் விசேட செய்தியென
   விரைந்து வந்து நீங்கள் தந்த வியப்பான தகவல்.
   விதிர்விதித்துப்போனேன்...
   கோடைகாலமானாலும் அடை மழையால் குளிர்கிறது இங்கு. விறைத்துவிட்டேன் மேலும் உங்கள் செய்தியால்..:).

   மிக்க மிக்க நன்றி தனபாலன் சார்!

   யாவர்க்கும் செய்யும் உங்கள் தன்னலமற்ற சேவைக்கும் மனமார்ந்த நன்றிகள் பல!...

   Delete
 53. 100 க்கு 108 !

  இன்று 25.06.2013 வலைச்சரத்தில் தங்கள் தளம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. மகிழ்ச்சியோ மகிழ்ச்சிகள். ம்னம் நிறைந்த பாராட்டுக்கள். அன்பான இனிய நல்வாழ்த்துகள். ;)))))

  ReplyDelete
  Replies
  1. நன்றி! நன்றி! மிக்க நன்றி ஐயா!

   ச்சே.. ஒரே ஒரு நிமிட வித்தியாசத்தில் முதாலாம் இடத்தை தனபாலன் சார் பெற்றுவிட்டாரே...:).
   பரவாயில்லை உங்களுக்கும் ஆறுதல் பரிசு இல்லைஇல்லை தவறு... மனமார்ந்த இனிய நன்றிகளுண்டு!...:)

   தகவலுக்கு மிக்க நன்றி ஐயா!

   Delete
 54. ஹும்...! வழமைபோலப் பிந்தி வந்துட்டேன். ஆனா எல்லாரையும் போல மிகமிக ரசிச்சேன் பஞ்சபூதக் கவிதைகளை! க்விலிங் வழக்கம் போல் ரசனை! இன்றைய வலைச்சர அறிமுகம் பெற்றிருக்கும் உங்களுக்கு மகிழ்வுடன் என் இனிய நல்வாழ்த்துகள் சிஸ்!

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் சகோதரர் பால கணேஷ்!..

   ஹும்.. நானும் தான் பார்த்துப்பார்த்து...
   ”இல்லை... சகோ பாலகணேஷ் இங்கு வரமாட்டார் நம்பாதே” என்று திருவிளையாடல் தருமி போலப் புலம்பி ஓய்ந்த சமயம் இதோ வந்துவிட்டேனென ஓடிவந்துவிட்டீர்கள்...:).

   வரவு கண்டு அகம் மகிழ்ந்தேன் பிறதர்!..

   நீங்கள் சாமானியவரா? ஏகப்பட்ட ஜோலிகள் பார்ப்பவராச்சே... எத்தனை காதல் கடிதங்களை வாசித்து வாசித்து இப்போ நீங்களும் ஏதோ...ன்னு சரி.. என்னவாயிருக்கட்டும் எனக்கு வேண்டாம் ஊர்த் துழாவாரம்..:))).

   உங்கள் ரசனையும் அபாரம்! என்னை மேலும் ஊக்குவிக்கும் இனிய கருத்துக்கள் சகோ அவை.

   ம்..வலைச்சர அறிமுக அதிர்ச்சியால் இன்னும் மீளவில்லை நான்..:)

   உங்கள் வரவிற்கும் அன்பான வாழ்த்துகளுக்கும் இதயங்கனிந்த இனிய நன்றிகள் பற்பல சகோ!

   Delete
 55. இன்றைய வலைச்சரத்தில் அறிமுகமாகியிருக்கிறீங்க. வாழ்த்துக்கள் இளமதி.

  ReplyDelete
  Replies
  1. தகவலுக்கு மிக்க நன்றி அம்மு...:)

   Delete
 56. வலைச்சரத்தில் அறிமுகம் பார்த்தாலும் உடன் வர இயலவில்லை! தாங்கள் என் வலைதளம் வந்து கருத்திட்டமைக்கு மிக்க நன்றி! உங்களின் ஐம்பூத கவிதைகள் மிகவும் சிறப்பு! வார்த்தை நயமும் எதுகை மோனை நயமும் மிகவும் சிறப்பு! தொடர்கிறேன்! நன்றி!

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் சகோதரர் சுரேஷ்!
   முதல்முறையாக இங்கு உங்கள் வருகை. வாருங்கள்!

   உங்கள் அன்பான வருகையும் சிறந்த ரசனையும் கண்டு மிக்க மகிழ்ச்சி! ஊக்கமளிக்கின்றன உங்கள் கருத்துக்கள்.

   வருகைக்கும் வாழ்த்திற்கும் மனமார்ந்த நன்றிகள் சகோ!

   Delete
 57. ##நிராகரித்தாலும் நிழல்தந்து
  வெட்டி எறிந்தாலும் விறகாகி
  கல்லால் அடித்தாலும் கனிதருதே
  பொல்லாத மனிதம் இதைப்புரிந்திடுமோ!..##

  அருமையான கவிதை ... என் முக நூல் பக்கத்திலும் பகிர்ந்துள்ளேன்... அதென்ன க்வில்லிங்க் ... அருமையாக இருக்கிறது ..
  என் வலைப்பக்கம் வந்து சென்றமைக்கு நன்றி... இனி தொடர்ந்து சந்திப்போம்... வாழ்த்துக்கள் இளமதி...

  ReplyDelete
 58. வணக்கம் வாங்கோ எழில்!

  முதன்முரை இங்கு வருகின்றீர்கள்... மிக்க மகிழ்ச்சி!
  உங்கள் பெயரே அத்தனை ’அழகாய்’ இருக்கிறது.

  இக் கிறுக்கல் உங்கள் முகப்புத்தகத்திலா... அத்தனை சிறப்பாகவோ இருக்கிறது. மிக்க மகிழ்ச்சி!

  க்விலிங் மெல்லிய இழையாக வெட்டிய வண்ணக் காகிதத்தில் செய்யப்படும் அழகியல் வேலைப்பாடு தோழி! Quilling என்று கூகிலில் தேடிப்பாருங்கள் நிறைய அறியலாம்.

  உங்கள் வருகைக்கும் நல் வாழ்த்திற்கும் மனமார்ந்த நன்றிகள் தோழி!

  ReplyDelete
 59. க்வில்லிங் வேலைப்பாட்டுடான அட்டை இவ்வளவு நேர்த்தியாகவும் மனம் ஈர்ப்பதாகவும் இருக்கிறதே...நிறைய நேரமெடுத்திருக்கும். இலகுவென்கிறீர்களே என்று வியப்பு எனக்கு...வண்ணத்துப்பூச்சி வெகு பிரமாதம். பாராட்டுகள் இளமதி.

  பஞ்சபூதங்களைப் பாராட்டிய கவிவரிகளில் வசமிழந்தேன். இயற்கையை மதித்து அதனைப் பாதுகாக்கத் தவறுவதாலேயே சீரழிவுகள் நித்தமும் அரங்கேறுகின்றன. மரத்தின் பெருமை உரைக்கும் வரிகள் மனத்தில் ஏற்றவேண்டிய வரிகள்.

  ஒற்றைவரியில் மனம் வசீகரிக்கும் கவிதை எல்லோருக்கும் கைவருமா? உங்களுக்குக் கைவந்துள்ளது அழகாக. பச்சைத்தாளில் வெள்ளைப்பேனா... நல்ல கற்பனை வளமும் கவிவன்மையும் உங்களிடம் உண்டு. மனமுவந்த பாராட்டுகள் இளமதி.

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் தோழி கீத மஞ்சரி!
   நலமா?..

   நீண்ட காலமாக உங்களைக் காணவில்லையே என மனம் வாடினேன்.
   உங்கள் வருகை தருகுதே உவகை!...

   ஒப்பற்ற ரசனை உங்களது.. மிக்க மகிழ்ச்சி தோழி!!

   வருகைக்கும் நற்கருத்து, வாழ்த்துகளுக்கும் இனிய நன்றிகள் பல!

   Delete
 60. பஞ்சபூதங்கள் பற்றிய கவிதை சூப்பர்,மனிதம் பற்றிய கவிதை சூப்பரோ சூப்பர்

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் சகோ டினேஷ் சுந்தர்!

   உங்கள் வருகைக்கும் இனிய கருத்திற்கும் மனம் நிறைந்த நன்றிகள் சகோ!.

   Delete
 61. ஐம்பூதத்தின் அருமைகளை
  அழகழகாய் வடித்தவிதம்
  ஆறறிவில் இடம்தேடி
  அமர்ந்து கொள்கிறதே...!

  வார்த்தைகள் பூவென்றால்
  வான்தட்டும் உன்கவிமாலை
  சேர்க்கைகள் சிறிதெனினும்
  சிந்தனைக்கு பெருவிருந்து..!


  ஓரறிவுள்ளமரம் ஒருதப்பும் செய்யாமல்
  ஆறறிவுள்ளவர்க்கு ஆயுளெல்லாம் பயன்தரினும்
  வேரறுக்க விளைகின்ற விறகான மனிதனுள்ளம்
  விளங்கிடுமோ விரைந்து மாறிடுமோ மண்ணில்...!


  அனைத்தும் ரசித்தேன்
  அர்த்தங்கள் அமிர்தமாகி
  அடிமனதில் இனிப்பதென்ன
  அன்புறவே உன்கவிக்கோ...!

  எல்லாமே மிக அருமை வாழ்த்துக்கள் சகோ வாழ்கவளமுடன்

  ReplyDelete
 62. ஐம்பூதங்களும் கவியாகி மிளிர்கின்றன.

  "பொல்லாத மனிதம் இதைப்புரிந்திடுமோ!.."
  வருகின்ற அனர்த்தங்களை கண்டுகொண்டுதான் இருக்கின்றோம்.

  ReplyDelete
 63. அருமையான் இந்த கவிதை இன்றைய வலைச்சரத்தில்.
  வாழ்த்துக்கள்.

  http://blogintamil.blogspot.in/2013/12/blog-post_28.html#comment-form

  ReplyDelete
  Replies
  1. ஓ.. அப்படியா சகோதரி!

   என்னையும் வலைச்சரத்தில் அறிமுகம் செய்துள்ளீர்களோ..

   மிக்க மிக்க நன்றி! வாழ்த்துக்கள் உங்களுக்கும்!

   Delete
 64. வணக்கம்

  இன்று தங்களின் வலைத்தளம் வலைச்சரத்தில் அறிமுகமாகியுள்ளது வாழ்த்துக்கள்

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
  Replies
  1. மிக்க மிக்க நன்றி ரூபன்!
   உங்கள் அறிவிப்பிற்கும் வாழ்த்திற்கும் உளமார்ந்த இனிய நன்றி!
   வாழ்த்துகிறேன் உங்களையும்!

   Delete
 65. நல்லா இருக்கு

  ReplyDelete

உங்களின் அன்பான வரவிற்கும் ஊக்கந்தரும்
இனிய கருத்திற்கும் என் உளமார்ந்த நன்றி! _()_