Pages

Jun 27, 2013

நிழலாக நினைவுகளாக...


க்விலிங் கைவேலையில் சென்ற வருடம் இதே நாளில் ஒரு நண்பிக்குச் செய்த வாழ்த்துமடல். இதுவும் (அந்த நண்பியும்) இப்பொழுது என் நினைவுகளில் மட்டும்... 
~~~~~~~~~


நிழலாக நினைவுகளாக!...

               கண்மூடிக் காணுகின்றேன் கனவல்ல மனஓவியங்கள்
               விண்காண வளர்ந்திடுதே விரட்டியெனை மிரட்டிடுதே
               பண்பாடித் தமிழ்வளர்த்து பலகதைகள் நான்பயின்ற
               மண்வாடி நிற்கிறதே மனதை துயர்வருத்திடவே...

               சின்னவளாய் நானும் சிரித்திருந்த காலமதில்
               இன்னுயிர்த் தோழர்களாய் இருந்திட்ட எத்தனையோ
               மின்மினிப் பூச்சிகள் மின்னலாய் மறைந்தனரே
               என்னசொல்லி ஏதுபயன் இழந்தவைகள் மீண்டிடுமோ...

               தேசம்விட்டு நாமும் தெருவெல்லாம் திரிந்தலைந்து
               பாசமுடன் இருந்த பலரையும் தொலைத்துவிட்டோம்
               வேசமுடன் இங்கே வெளிநாட்டு வாழ்க்கையும்தான்
               நேசமில்லை நெருக்கமில்லை நிம்மதி சற்றுமில்லை...

               வானகமோ வையகமோ வாழ்க்கை நீர்க்குமிழிதானே
               கானகத்து வாழ்வாகக் கலங்கித்தான் வாழுகின்றோம்
               தேனகமாம் அருமைத் தென்னக உறவுகள்தானெங்கள்
               ஊனகமும் உயிருங்காத்து நிழலாக நம்நினைவுகளாக!...
ⱷⱷⱷⱷⱷⱷⱷⱷ


பாரம்...
~~~
குடையும் பாரம்
மழை இல்லையென்றால்

பட்டமும் பாரம்
வேலையில்லை என்றால்

அழகும் பாரம்
ரசனை இல்லை என்றால்

வாழ்க்கையும் பாரம்
சுவையே இல்லை என்றால்... 
♦♦♦♦♦♦♦♦

ѳѳѳѳѳ


பதிவோடு பகிரும் பதிவர்
ᴥᴥᴥᴥᴥᴥᴥᴥᴥᴥᴥᴥᴥ


பதிவோடு ஒரு அறிமுகம் என்றிருந்த இப்பகுதியை அறிமுகம் என்பதை விடுத்து - அநேகமான பதிவர்கள் பலருக்கும் அறிமுகமானவர்கள் என்பதனால் - பதிவோடு சக பதிவரை, அவரின் வலைப்பூவினை இங்கு உங்களுடன் பகிர்ந்துகொள்ளவதை ”பதிவோடு பகிரும் பதிவர்” என மாற்றியுள்ளேன்.

இங்கு பதிவோடு பகிரும் பதிவராக 
வலைப்பூப் பதிவாளர் கவிஞர் கி.பாரதிதாசன் ஐயா அவர்களின்
 கவிஞர் பாரதிதாசன் கவிதைகள் எனும் வலைப்பூவினை  உங்களுடன் பகிர்ந்துகொள்வதில் மிகவும் மகிழ்வுறுகின்றேன்.


bharathidasanfrance.blogspot.de

கவிஞர் ஐயா அவர்கள் தனது வலைப்பூவில் கவிதை, கட்டுரை, விழாப்புகைப்படங்கள் என  பல விடயங்களைப் பகிர்ந்துகொள்கிறார்.
ஐயா நிறைந்த இனவுணா்வினையும் தமிழ்ப் பற்றினையும் உடையவர். தமிழே அவரின் உயிர் மூச்சு!

பிரான்சுக் கம்பன் கழகத்தின் தலைவராகவும், கம்பன் இலக்கிய இலக்கணத் திங்களிதழின் நிறுவுநராகவும் தொண்டாற்றுகிறார்.  
பிரான்சில் யாப்பிலக்கண வகுப்புக்களை நடத்தி 
பல கவிஞா்களை உருவாக்கியுள்ளார்.

ஐயா அவர்கள் கம்பன் விழா, பொங்கல் விழா ஆகிய விழாக்களை ஆண்டுதோறும் நிகழ்த்தித் தமிழரின் பண்பாட்டினை, கலாச்சாரத்தினை அனைவர்க்கும் பறைசாற்றுகிறார்.

தனது வலைப்பூவில் ஏராளமான கவிதைகளை மிகமிக எளிய இனிய நடையில் நாமெல்லாம் விளங்கிக் கொள்ளும் வண்ணம் தினமும் பதிவேற்றி வருகிறார்.

ஐயாவின் படைப்புகளை நான் இங்கு சொல்வதைவிட நீங்களே அவரின் வலைப்பூவினில் பார்த்தால் புரிந்து கொள்வீர்கள்.
கவிதை எழுதுவதில் அவருக்கு நிகர் அவரேதான்!.

அவரின் தந்நலமற்ற மொழிப்பற்றும் இனப்பற்றும் சொல்லுக்குள் அடங்காதவை.

நானும் எழுதுபவற்றில்விடும் சில தவறுகளை அவ்வப்போது சுட்டிக் காட்டியுமுள்ளார்.

நீங்கள் நன்றாக எழுதுகிறீர்கள் என என்னை நீங்கள் பாரட்டுவதற்கு  நானும் ஐயாவிடம் ஏதோ கொஞ்சம் அவ்வப்போது கேட்டு மொழியைச் சிறிதளவு என் மூளையில் பதித்து  
அதன்படி எழுதுவதால்தான்.
இருந்தும் அவரிடம் மொழியையும், கவி புனைவதையும் முறைப்படி கற்க எனக்கும் மிகுந்த ஆவல். ஆகையினால்...

 ஐயா! ஒரு விண்ணப்பம்!....

உலகம் முழுவதும் பரந்து வாழும் என் போன்ற ஆர்வமுள்ளவர்களுக்கு இணையவழியாக இவற்றை உங்களிடம் கற்க ஆவன செய்யுமாறு பணிவன்புடன் இவ்விடத்தில் கோரிக்கையாகக் கேட்டுக்கொள்கின்றேன்.

கவிஞர் ஐயாவின் வலைப்பூவினைத் தெரியாதவர்கள் இருப்பின் இப்படியாகினும் தெரிந்துகொள்வதுடன் நல்ல அற்புதக் கவிஞரை ஊக்குவித்து தமிழை, தமிழறிவை மென்மேலும் வளர்த்திடலாமென இங்கிவற்றை உங்களுக்கு அன்புடன் பகிர்ந்துகொள்கின்றேன்.

மிக்க நன்றி அன்புறவுகளே!.
_()_


பிந்திய முக்கிய செய்திப் பகிர்வு!...

கவிஞர் கி. பாரதிதாசன் ஐயா அவர்கள் எமது விண்ணப்பதினை ஏற்று கருத்துப் பகிர்வினில் இவ்வாறு கூறியுள்ளார்...
28 June, 2013 01:53
வணக்கம்!

தங்களின் அன்பு விண்ணப்பம் ஏற்கப்படுகிறது!

வருகின்ற ஞாயிற்றுக் கிழமையிலிருந்து கவிதை எழுதும் மரபு இலக்கணத்தை என் வலையில் எழுதுகிறேன்!

கவிதைக் கலையைக் கற்க விரும்புவோர் தொடா்புகொள்ளவும். kambane2007@yahoo.fr

116 comments:

 1. க்விலிங் வாழ்த்துமடல் சூப்பர்...!

  பாரம் வரிகள் அபாரம்...!

  கவிஞர் கி. பாரதிதாசன் அவர்களின் அறிமுகம் சிறப்பு...

  வாழ்த்துக்கள்...

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் தனபாலன் சார்!...

   உடனடி வரவுகண்டு மிக்க மிக்க மகிழ்ச்சி!

   உங்கள் அன்பிற்கும் ஆதரவிற்கும் இனிய வாழ்த்திற்கும் என் மனமார்ந்த இனிய நன்றிகள் பல!!!

   Delete
 2. SUPER POST. CONGRATS. ALL THE BEST. THANKS FOR SHARING.

  ReplyDelete
 3. க்விலிங் வாழ்த்துமடல் சூப்பர்...!

  BEAUTIFUL POEMS ;)))))

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் வை. கோ. ஐயா!.

   தங்களின் வருகையும் வாழ்த்தும் மிக்க மகிழ்வினைத் தருகிறது...

   மிக்க நன்றி ஐயா!

   Delete
 4. க்விலிங் வாழ்த்துமடல் சூப்பர் எனக்கும் இதை கற்றுக் கொள்ள ஆசையாக உள்ளது அக்கா

  ReplyDelete
  Replies
  1. வணக்கம சகோ ஹிஷாலீ!...

   ம். கற்றிட்டால் போச்சு... :)

   அன்பான வருகைக்கும் இனிய கருத்திற்கும் மிக்க நன்றி சகோ!

   Delete
 5. க்விலிங் சூப்ப்ப்ப்ர் இளமதி. மிகமிக‌ அழகாக செய்திருக்கிறீங்க.
  கவிதை வாசித்துவிட்டு வருகிறேன்.

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் அம்மு...

   ஆஹா.. அப்படியா...
   நீங்களும் இதில் வல்லவராச்சே!...
   மிக்க நன்றி தோழி உங்கள் வாழ்த்திற்கும்!

   Delete
 6. நிழலாக நினைவுகளாக!...
  மனஓவியங்கள் அருமை ..
  பாராட்டுக்கள்..

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் சகோதரி இராஜராஜேஸ்வரி!..

   நினைவுகள் எப்பவும் இனிமை... அருமை...:)

   வருகைக்கும் அன்பான பாரட்டிற்கும் மிக்க நன்றி!

   Delete
 7. கவிஞர் கி.பாரதிதாசன் ஐயா அவர்களின்
  கவிஞர் பாரதிதாசன் கவிதைகள் எனும் வலைப்பூவினை பகிர்ந்துகொண்டதற்கு
  வாழ்த்துகள்..!

  ReplyDelete
  Replies
  1. வாழ்த்திற்கும் இனிய நன்றி சகோதரி!

   Delete
 8. வாழ்த்து மலர் தங்கள் கவிதைப் பாடல் போலவே அழகாக உள்ளது...

  தொடருங்கள் தோழி... வாழ்த்துகள்...

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் சகோ வெற்றிவேல்!...

   உங்கள் ரசனையும் அலாதிதான்...
   கவிதை மலரினை இணைத்தே ரசித்து எழுதிவிட்டீர்கள்!

   அன்பு வரவிற்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றி!

   Delete
  2. வாழ்க்கையும் பாரம்
   சுவையே இல்லை என்றால்...

   வாழ்க்கையும் பாரம்
   நீ இல்லையென்றால்... என இருந்திருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்குமோ என தோன்றுகிறது...

   Delete
  3. ம்.. உங்கள் கற்பனையும் நன்றாக இருக்கிறதே...

   நம் மனதில் அவ்வப்போது என்ன தோன்றுகிறதோ அதை எழுதிவிட்டுப்போய்விடுகிறோம். பின்னர் எடுத்துப் பார்க்கும்போது அட இப்படி எழுதியிருக்கலாமோன்னு தோன்றுவது இயல்பே.

   உங்கள் கருத்திற்கும் நன்றி சகோ!..

   Delete
 9. வாழ்த்துக்கள் தொடருங்கள்

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் ஐயா!

   தங்கள் வாழ்த்திற்கும் ஊக்கத்திற்கும் என் அன்பு நன்றி!

   Delete
 10. அருமையான படைப்பு இதற்க்கு என் வாழ்த்துக்கள் தோழி !

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் அம்பாள் அடியாள்!

   அனபு வருகைக்கும் வாழ்த்திற்கும் உளமார்ந்த நன்றி தோழி!

   Delete
 11. //இன்னுயிர்த் தோழர்களாய் இருந்திட்ட எத்தனையோ
  மின்மினிப் பூச்சிகள் மின்னலாய் மறைந்தனரே//
  உண்மையானவரிகள்.
  //வேசமுடன் இங்கே வெளிநாட்டு வாழ்க்கையும்தான்
  நேசமில்லை நெருக்கமில்லை நிம்மதி சற்றுமில்லை..//
  இன்றைய யதார்த்த நிலையுங்கூட.மிகவும் அழகான கவிதை இளமதி.
  பாரம்,உண்மை இரு கவிதைகளும் அசத்தல்.
  க்விலிங், கவிதைகள் அருமையான பகிர்வு.நன்றி இளமதி.

  ReplyDelete
  Replies
  1. அம்மு.. உங்கள் மீள்வருகையும் ரசனையும் எனக்கு மிகுந்த உற்சாகத்தைத் தருகிறது...
   மனதில் எம் நாட்டு எண்ணங்களும் அதனால் உண்டாகும் கவலையுமே இப்படி சிலவாக வெளிவருகிறது.
   உங்கள் அன்பான கருதுக்களுக்கும் வாழ்த்திற்கும் மனமார்ந்த இனிய நன்றிகள் பல.

   Delete
 12. "பதிவோடு பகிரும் பதிவர்" தலைப்பு நன்றாக இருக்கு இளமதி.
  கவிஞர் ஐயாவின் வலைப்பூவினை பகிர்ந்தமைக்கு வாழ்த்துக்கள். நானும் பார்க்கின்றேன் இளமதி. கவிஞர் ஐயாவிற்கு என் வாழ்த்துக்கள்.

  ReplyDelete
  Replies
  1. "பதிவோடு பகிரும் பதிவர்" தலைப்பு பற்றிய இனிய கருத்திற்கும்,
   கவிஞர் ஐயாவை வாழ்த்தியமைக்கும் உங்களுக்கும் அன்பு மிக்க நன்றி!

   Delete
 13. anaithum rasanai...!

  ayyaa" enakku pidithamaanavarkalil oruvar...!

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் சகோ!

   உங்கள் வரவும் வாழ்த்தும் மனதிற்கு மிக மகிழ்ச்சியே!
   ஐயாவைப் பற்றிக்கூறிய இனிய கருத்திற்கும் மிக்க நன்றி!.

   Delete
 14. Replies
  1. என்றன் வலையின் எழில்எண்ணி
   உன்றன் வலையில் பகா்ந்துள்ளீா்!
   இன்றென் இதயம் இமயத்தில்
   ஏறிக் குதித்து விளையாடும்!
   அன்றென் ஆசான் அளித்ததமிழ்
   அடியேன் அடைந்த வாழ்வாகும்!
   குன்றென் தோள்கள் நன்றியினைக்
   குவித்துச் சுமக்கும் பணிவுடனே!

   தென்றல் மணக்கும் சொல்லேந்தி!
   தேமா மணக்கும் கருத்தேந்தி!
   மன்றம் மணக்கும் உரையேந்தி!
   மலராய் மணக்கும் கவியேந்தி!
   என்னுள் மணக்கும் இன்றமிழை
   ஏந்தி மணக்கும் உளமேந்தி!
   அன்பின் மணக்கும் இளமதியே
   அடியேன் அளித்தேன் நனிநன்றி!

   கவிஞா் கி. பாரதிதாசன்
   தலைவா்: கம்பன் கழகம் பிரான்சு

   Delete
  2. ஐயா வணக்கம்!.

   இங்கு பதிவோடு பகிரும் பதிவர் பகுதியில் உங்களை அனுமதிகேளாமலே பகிர்ந்துவிட்டு பதைத்துக்கொண்டிருந்த எனக்கு உங்களின் இந்த மகிழ்ச்சி பொங்கும் கவியினைக்கண்டு மனம் கொண்ட மகிழ்ச்சியை சொல்ல வார்த்தை இல்லை.

   மிக்க மகிழ்ச்சியுடன் என் நன்றியை உங்களுக்குக் கூறிக்கொள்கின்றேன்.

   உங்கள் கவிதை கண்டு உள்ளம் துள்ளும் உவகை கொண்டேன். மிகவே மெச்சி எழுதியுள்ளீர்கள். மிக்க நன்றி!...

   ஐயா!... என் ஆவல் நானும் உங்களிடம் கவிக் கலையை சிறிதளவேனும் கற்கவேண்டும். அத்துடன் என்னைப்போன்ற இக்கலையைக் கற்க விரும்புபவர்களுக்கும் ஏதாவது வகையில் உதவவேண்டுமென்பதே.
   இப்படி பகிரும் பதிவராக இம்முறை உங்களை இன்கு பகிர்ந்தமையால் இங்கு வருபவர்கள் இப்படியாயினும் தமது ஆவலையும் நிறைவேற்றிக்கொள்ளட்டுமே.
   உங்கள் ஆதரவிற்கும் ஒத்துழைப்பிற்கும் அனைவரின் சார்பில் இனிய நன்றிகளைக் கூறிக்கொள்கின்றேன்

   Delete

 15. வணக்கம்!

  தோழியுன் கைவண்ணம் நன்றே சுடா்ந்தோங்கி
  வாழியென வாழ்த்துமென் வாய்

  ReplyDelete
  Replies
  1. மிக்க மிக்க நன்றி ஐயா!

   Delete

 16. வணக்கம்!

  நெஞ்சுள் நிலைத்த நினைவுகளைத் தந்துள்ளீா்
  கொஞ்சும் தமிழால் குழைத்து!

  ReplyDelete
  Replies
  1. வாழ்த்திய வாழ்திலென் வார்த்தைகள் வசமிழந்தேன்
   தாழ்த்திய என் தலையுடனே - வீழ்த்திடமுடியாது
   வீழ்ந்திடாது நம்மொழி வளர்த்திங்கே உங்களினால்
   சூழ்ந்திடுமே வெற்றி வாகைசூடி.

   உங்கள் வரவிற்கும் இனிய நல் வாழ்த்திற்கும்
   மிக்க மிக்க நன்றி ஐயா!

   Delete

 17. வணக்கம்!

  தங்களின் அன்பு விண்ணப்பம் ஏற்கப்படுகிறது!

  வருகின்ற ஞாயிற்றுக் கிழமையிலிருந்து கவிதை எழுதும் மரபு இலக்கணத்தை என் வலையில் எழுதுகிறேன்!

  கவிதைக் கலையைக் கற்க விரும்புவோர் தொடா்புகொள்ளவும். kambane2007@yahoo.fr

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் ஐயா!

   தங்களின் அன்பான வருகையும் இனிய நல்ல வாழ்த்துக்களும் மிகுந்த மகிழ்வினைத் தருகிறது.

   அத்துடன் எமது விண்ணப்பத்தினை ஏற்று மரபு இலக்கணக் கற்பித்தலை ஆரம்பிக்க இசைந்தது இரட்டிப்பு மகிழ்ச்சியைத் தந்துள்ளது.

   எப்படி நன்றி சொல்வதென விக்கித்து நிற்கின்றேன்...

   மிக்க மிக்க நன்றி ஐயா!

   உங்களுக்கு இருக்கும் நேரப்பற்றாகுறையிலும் எமக்காக இப்பணியையும் ஏற்றுக்கொண்டதற்கு என்னுடன் இணைந்து கற்க வரும் அனைவரின் சார்பிலும் மனம் நிறைந்த இனிய நன்றிகளை இங்கு கூறிக்கொள்கின்றேன்!.


   வளரட்டும் எங்கள் மொழி!
   தொடரட்டும் உங்கள் பணி!

   என் பணிவான வணக்கமும் வாழ்த்துக்களும்!.

   Delete
 18. பாரமான பாடல் நிழலாய் நினைவுகளாய்!
  வீரம்நம் சொத்தாய் விளைந்திருக்க - தூரமில்லை!
  தீரமுடன் வாழ்வில் திளைத்திடுவோம்! கண்ணோரம்
  ஈரத்தைச் சுண்டி எறி!

  கவிஞருக்கும் உங்களுக்கும் என் வாழ்த்துக்கள் தோழி.  ReplyDelete
  Replies
  1. வணக்கம் தோழி அருணா!

   அன்பு வருகைக்கும் ஆதரவு வாழ்த்திற்கும்
   என்பும் உருகுதே இணைந்து துன்பு
   தொடராது துணிந்தேன் திடமோடு நீயிருக்க
   இடராது இன்னல் இனியே.

   அனைத்திற்கும் மனம் நிறைந்த நன்றிகள் தோழி!

   Delete
 19. தோழியின் நினைவாய் அவர்களுக்கு செய்த வாழ்த்து அட்டை
  அவரின் நினைவுகளை உங்களுடன் இருத்தி வைத்துக் கொண்டே இருக்கும் என்றும் பிரியாத தோழியாய்.

  வாழ்க்கையும் பாரம்
  சுவையே இல்லை என்றால்... //
  அருமை.
  ”பதிவோடு பகிரும் பதிவர்”
  கவிஞ்ர் பாரதிதாசன் அவர்கள் என் வலைத்தளம் வந்து பின்னூட்டம் இட்டு இருக்கிறார்கள். அவர்கள் வலைத்தளத்தை பகிர்ந்து கொண்டமைக்கு வாழ்த்துக்கள். அவர்களின் தமிழ் தொண்டு வாழ்க! வளர்க!

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் சகோதரி!

   உண்மைதான். வாழ்க்கையில் நிறைய நிஜங்களே நிழலாக, நினைவுகளாக எம்மோடு மீதமாக இருக்கின்றன.
   அப்படி ஒரு நினைவுதான் இது...

   உங்கள் ரசனை என்னை இன்னும் ஊக்குவிக்கின்றது சகோதரி!

   கவிஞர் ஐயாவைத்தெரியாதோர் இருப்பார்களா என்ன...:)
   அவரை இங்கு பதிவர் பகிர்வில் கூறியது இன்று அவரிடமே கவிதைக் கலையை கற்கக்கூடிய வழியை ஏற்படுத்திவிட்டதே..

   உங்கள் அன்பான வருகையும் ஆழமான ரசனை மற்றும் கருத்துகளுக்கும் இனிய வாழ்த்திற்கும் இதயங்கனிந்த நன்றிகள் பல...

   Delete
 20. வேசமுடன் இங்கே வெளிநாட்டு வாழ்க்கையும்தான்
  நேசமில்லை நெருக்கமில்லை நிம்மதி சற்றுமில்லை...//
  அப்படியா ? உண்மைதானா?
  அனைவருக்குமே சொல்லுங்கள்
  இப்படியே தாய்நாட்டை
  எண்ணித் திரும்பிப் பாருங்கள்
  நற்கதியே கிடைக்கும்
  நல்வாழ்வும் பிறக்கும்

  ReplyDelete
  Replies
  1. நீங்கள் புகழ்ந்துப் பாடிய கவிஞர்.பாரதிதாசன் அவர்கள் பெருமைக்கும் போற்றுதழுக்கும் உரியவர் தகுதியானத் தமிழர்.அன்னாருக்கும் உங்களுக்கும் எனது அன்பான வணக்கமும் வாழ்த்துக்களும்

   Delete
  2. வணக்கம் சகோ கண்ணதாசன்!

   ஏதோ நிர்ப்பந்தத்தில் நாட்டைவிட்டு வெளியேறியோர் யாவருமே இப்படியான மன உளைச்சலில்தான் இருப்பார்கள்.
   என்று எமக்கான பாதை கிடைக்கும் மீண்டும் தாய்நாடு காண்போமென.

   நம்பிக்கையில் இருக்கின்றோம். நடுவில் வலிதாளாமல் அலறுகிறோம் சகோ.

   உங்கள் அன்பான வருகைக்கும் ஆதங்கமான கருத்திற்கும் இனிய நல் வாழ்த்துகளுக்கும் நிறைந்த நன்றிகள் பல.

   Delete
 21. க்வில்லிங் வாழ்த்து மடல் அழகு.. இளைய நிலா பொழிந்த கவிதை இரண்டும் மிக அருமை.. பாராட்டுக்கள் .

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் தோழி ராதா ராணி!..

   உங்கள் அன்பான வாழ்த்து மழையில் நனைந்து நடுங்கிவிட்டேன்...:)

   வருகைக்கும் வாழ்த்துக்கும் இனிய நன்றி தோழி!

   Delete
 22. வாழ்த்துமடலும் க்விலிங் கைவண்ணமும் அழகு! பாரம் கவிதை சுமையானது மனதுக்கு! பதிவர் அறிமுகம் மூலம் நல்லதொரு பதிவரை சிறப்பித்தமை அருமை! நன்றி!

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் சகோ சுரேஷ்!

   வாழ்த்து மடலின் ரசனை மனம் நிறைவைத்தருகிறது.

   பாரம் மனதிற்கு சுமையானதுதான்.
   சிலசமயம் சிலசுமைகள் பாரமானாலும் சுகமானதல்வா...:).

   உங்கள் வருகைக்கும் நல்ல ரசனைக்கும் இனிய கருத்திற்கும் மனம் நிறைந்த நன்றி சகோ!.

   Delete
 23. கைவேலையும், கவிதை வண்ணமும், கவிஞர் அறிமுகமும், அனைத்தும் சிறப்பு. நன்றி இளமதி!

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் தோழி கவிநயா!
   உங்கள் முதல் வருகை இங்கு! வாருங்கள்!...

   உங்கள் அன்பு வருகையும் ரசனையும் தருகிறதே மகிழ்வெனக்கும்.
   மிக்க நன்றி தோழி!

   Delete
 24. ஆஹா... என்னே சொல்ல.. குயிலிங் வேலை சூப்பரோ சூப்பர்ர்... இவ்ளோ அழகா குயிலிங் செய்யும் நீங்க... கவிதையை மட்டும் எப்பவும் சோகமாக வடிக்கலாமோ... கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))..

  கவிதை அத்தனையும் சூப்பர்.

  ReplyDelete
  Replies
  1. ஆஹா... வணக்கம் வாங்கோ அதிரா!

   எனக்கும் வந்த உங்களை வரவேற்க சுணக்கம் ஆகிவிட்டது..:( பொறுத்துக்கொள்ளுங்கோ...

   ம்... க்விலிங் ரசனைக்கு நன்றி. கவிதை சோகம்தான் ஆனாலும் சூப்பர் எண்டதால் அதையேதான் எழுதத்தோணுது எனக்கும்...:)

   Delete
 25. கவிஞர் கி. பாரதிதாசன் - கம்பன் கழகத் தலைவரை அறிமுகம் செய்தமைக்கு வாழ்த்துக்கள். நான் ஏற்கனவே போயிருக்கிறேன் அங்கு...

  ReplyDelete
  Replies
  1. உங்களுக்குத் தெரியாதோர் உங்களைத் தெரியாதோர் எவருமில்லையே வலையுலகில்... அவ்வளவு பிரபலம்ம்ம்ம் நீங்கள்...;).

   வாழ்த்திற்கு மிக்க நன்றி அதிரா!

   Delete
 26. க்விலிங் கைவேலையில் சென்ற வருடம் இதே நாளில் ஒரு நண்பிக்குச் செய்த வாழ்த்துமடல். இதுவும் (அந்த நண்பியும்) இப்பொழுது என் நினைவுகளில் மட்டும்... ///

  இது நானில்ல நானில்ல:))...

  ReplyDelete
  Replies
  1. அச்சச்சோ... அது நீங்க இல்லை நீங்க இல்லை...

   அவ வேறை. நீங்க வேறை... இது வேறை...:).

   அன்பு வருகைக்கும் இனிய கருத்துகளுக்கும் வாழ்த்துகளுக்கும் மனமார்ந்த நன்றி அதிரா!.

   உங்கள் பிரயாணம் இனிதே அமைய என் வாழ்த்துக்கள்!

   Delete
 27. வாழ்த்துமடல் அழகு... கவிதைகள் அவ்வளவும் அருமை ...

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் தோழி பிரியா!

   உங்கள் வரவிற்கும் ரசனைக்கும் இனிய நன்றிகள் பல!

   Delete
 28. க்வில்லிங் வாழ்த்துமடலில் நிறத்தெரிவு மிக அருமை! அழகாக இருக்கிறது. உங்கள் தோழியின் ஆத்மா சாந்தியடைய என் ப்ரார்த்தனைகள்!

  நாடு விட்டு வந்த சோகம் உங்கள் மனதில் ஆறாத ரணமாகப் பதிந்திருக்கிறது என்பது கவிதைகளில் வெளிப்பட்டுக் கொண்டே இருக்கிறது. பகிருங்கள், சோகம் பகிரப் பகிரத்தான் குறையும். மனமும் ஆறும்.

  பாரம் கவிதையும் நன்றாக இருக்கு! கவிஞர் பகிர்வும் நன்று! நல்லதொரு பதிவு!

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் மகி!

   உங்கள் வரவும் வாழ்த்தும் மனதிற்கு மிக்க மகிழ்ச்சியாய் இருக்கின்றது.

   இவ் வாழ்த்து மடல் சென்ற வருடம் இக்கால நேரத்தில் எமக்கு தெரிந்த மிக நல்ல உள்ளங்கொண்ட பலபல வழிகளில் எனக்குதவிய ஜேர்மனிய நண்பி ஒருத்திக்குச் செய்து கொடுத்தது.
   ஆனால் அவள் தன் குடும்பத்தில் ஏற்பட்ட சில சிக்கல்களினால் திடீரென ஒருநாள் யாருக்கும் தெரியாமல் தன் இருப்பிடம் விட்டு நீங்கிவிட்டாள். மீண்டும் இன்னும் வரவில்லை. அவர்கள் குடும்பத்துடன் அவ்வளவாய்ப் பழக்கமில்லை. இருந்தும் விசாரித்தேன் தெரியாதென்றுவிட்டனர்.
   ஆனால் எங்கோ இருப்பாள். இருக்கவேண்டுமென என என் உள்மனம் சொல்கிறது.
   அவள் நினைவாய் இதைப் பகிர்ந்தேன். இந்த க்விலிங் படத்தை இங்கு பதிவிட எடுத்தபோது அவள் நினைவுமட்டுமே இன்று எஞ்சியிருப்பதால் அப்படி எழுதிவிட்டேன். உங்களையும் நான்தான் குழப்பிவிட்டேன் போலும்...:(.

   சோகங்கள் சூழ்ந்த வாழ்வுதான் நம்மவர்க்கு. காத்திருக்கின்றோம் தீருமென்று..
   நல்ல ரசனையும் அழகிய கருத்துகளும் தந்தீர்கள் மகி.

   மனம்விட்டு உங்களுடன் பேசிய நிறைவெனக்கு.
   மிக்க நன்றி உங்கள் வாழ்த்திற்கும் என் இனியதோழியே!

   Delete
  2. //ஆனால் எங்கோ இருப்பாள். இருக்கவேண்டுமென என என் உள்மனம் சொல்கிறது.// oh!!!....Sorry about my misinterpretation Ilamathy! Your friend will be somewhere, happy and healthy! I wrote a bit too much thinking otherwise..sorry,sorry!

   Delete
  3. ஐயோ... மகி. அதெல்லாம் ஒண்ணுமில்லை. வருந்தவேண்டாம்.
   இதுக்கு ஏன் இப்படி... மன்னிப்பு அது இதுன்னுகிட்டு..
   நானும் தெளிவில்லாம சொல்லீட்டேன்.

   பரவாயில்லை. கவலை வேணாம். வழமைபோல இருங்க.
   சரியா...:)

   Delete
 29. நிழலாக நினைவுகளாக!...மனஓவியங்கள் அருமை ..
  பாராட்டுக்கள்..அருமை....அருமை...

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் அக்கா!

   உங்கள் வருகையும் எனக்கு மிக்க மகிழ்வாயுள்ளது

   அழகாக ரசித்துப் பாராட்டியுள்ளீர்கள் மிக்க நன்றி அக்கா!

   Delete
 30. க்வில்லிங் கார்டும் கலரும் மிக அருமை,கவிதையும் பகிர்வும் மிக்க அருமை.மனதை தொட்டது.

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் ஆசியா!...

   உங்கள் வரவும் கருத்தும் தருவது மகிழ்வே.

   மிக்க நன்றி ஆசியா!

   Delete
 31. இளமதி,

  க்விலிங் வாழ்த்து மடலுக்கான நிறத்தேர்வும், அதிலுள்ள வேலைப்பாடும், மனதைக் கவர்கின்றன.

  "நிழலாக நினைவுகளாக..."_____கவிதையின் தலைப்பும்,அதிலுள்ள ஒவ்வொரு வரியும் இழப்பின் வலியை உணர்த்துகின்றன. விரைவிலேயே அதிலிருந்து மீண்டுவர வாழ்த்துகள். உண்மை, பாரம், பதிவர் அறிமுகம் என எல்லாமும் அருமையாக‌ இருக்கிறது. வாழ்த்துகள்.

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் சகோதரி சித்ராசுந்தர்!..

   உங்களின் க்விலிங் ரசனை மேலும் என்னை ஊக்குவிக்கின்றது சகோதரி.

   வலிகள் இல்லாத வாழ்க்கை இல்லை. மீளவேண்டும். கிட்டிடும் என்ற நம்பிக்கையில் நாமும்...

   வரவிற்கும் வாழ்த்திற்கும் இனிய நன்றிகள் சகோதரி!

   Delete
 32. மயில் நீலம், கடல் நீலம் என்று மனது மயக்கும் நீலக் க்விலிங் வேலை. அழகு! அழகு!
  ஆசிரியர் பாரதி தாசன் தானாக முன்பு இப்படி வகுப்பு தொடங்கப் போவதாகக் கூறினார்.
  பின்பு சமீபத்தில் நினைவூட்டினேன்.
  மகிழ்வடைந்தார்.
  இணைவதாகப் பதிலிட்டுள்ளேன்.
  இன்றும்போய்ப் பார்த்தேன் தெரியவில்லை. பார்ப்போம்.
  உங்கள் கவிதைப் பாணி எனக்குப் பிடிக்கும்.
  பதிவு மிக நன்று.இனிய வாழ்த்து.
  வேதா. இலங்காதிலகம்.

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் சகோதரி கோவைக்கவி! வாருங்கள்...
   உங்கள் ரசனையும் மிகவும் நன்றாகவே உள்ளது. மிக்க நன்றி சகோதரி!

   கவிஞர் ஐயா இன்று ஆரம்பிப்பதாகக் கூறினார்தான். ஆனால் பாவம் அவருக்கும் தமிழ்த் தொண்டுகள் ஏராளம்.
   வருவாரென நானும் காத்திருக்கின்றேன்.

   உங்கள் வருகையும் வாழ்த்தும் மிக்க மகிழ்வாயுள்ளது. மனம் நிறைந்த நன்றிகள் பல சகோதரி!

   Delete
 33. க்விலிங் அழகோ அழகு! அதிலிருந்து கண்களை அகற்றி மேலே படிக்க வைப்பதற்குள் ...மிகவும் கடினமாகப் போய்விட்டது தோழி..அடுத்து அருமையாய் கவிதைகள் இருக்கும் போ போ என்று சொல்லி மேலும் படித்தேன்..
  தேசம் பிரிந்த ஏக்கம் கவியாய்க் கொட்டியுள்ளீர்கள்..என்ன சொல்வது..எல்லாம் சரியாகும் தோழி!
  பாரம் மற்றும் உண்மை கவிதைகளும் அருமை..
  கவிஞர் பாரதிதாசன் அவர்களின் தள பகிர்வுக்கு நன்றி..கவிதை மரபு கற்றுக்கொள்கிறேன்..கவிஞர் அவர்களுக்கும் நன்றி!

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் தோழி கிரேஸ்!

   அடடா உங்கள் ரசனையை அனுபவிப்பதற்காகவே தினம் ஒரு க்விலிங் கைவேலை செய்யட்டுமோ...:).
   அப்படி ரசிகின்றீர்கள்! மெத்த மகிழ்ச்சிதான் எனக்கும்.

   என்ன செய்வது மனதில் சில ஞாபகங்கள் அவ்வப்போது என்னைக் குடைகிறது. அதுவே ஏக்கமாகி இப்படிக் கொட்டிட வைக்கிறது.
   நானும் சரியாகிவிடும் அந்த நாளிற்காகக் காத்திருக்கின்றேன் தோழி!

   கவிஞர் ஐயாவுக்குக் கூறிய நன்றிக்கும் நன்றி!

   உங்கள் வரவிற்கும் அருமையான கருத்துப்பகிர்தல், வாழ்த்துக்கள் அத்தனைக்கும் என் மனம்நிறைந்த இனிய நன்றிகள் தோழியே!

   Delete
  2. //அடடா உங்கள் ரசனையை அனுபவிப்பதற்காகவே தினம் ஒரு க்விலிங் கைவேலை செய்யட்டுமோ...:).// அப்படியென்றால் மகிழ்ச்சி தான், எனக்கு அழகிய வேலைப்பாடுகள் காணக் கிடைக்குமே :)
   புரிகிறது தோழி..அந்த நாள் விரைவில் வர வாழ்த்துக்கள்!

   Delete
 34. எல்லாமே அருமை
  " வாழ்க்கையும் பாரம்
  சுவையே இல்லை என்றால்... "
  நித்திய உண்மை
  ஒரு வரியில் அழகாகச் சொல்லிவிட்டீர்கள்.
  வாழ்த்துக்கள்

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் வைத்தியரையா!...

   தேசம் விட்டு ஓடோடிய நாடோடி வாழ்க்கையிது.
   வாழ்க்கையே நனைத்துச் சுமக்கும் ஈரச்சாக்கினைப்போல் சுவையும் இன்றி பாரமாய் இருக்கிறதே...

   அன்பு வரவிற்கும் இனிய வாழ்த்திற்கும் மிக்க நன்றி ஐயா!

   Delete
 35. பாரம். எவ்வளவு அழகான கவிதை. மிகவும் அழகாக எழுதியிருக்கிராய். எங்கு பார்த்தாலும் உன் மறுமொழிகளைப் பார்க்கும் போது எல்லாவற்றிலுமுள்ள உன் ஆர்வம் புரிகிரது.பாராட்டுக்கள். அன்புடன்

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் வாங்கோ அம்மா!

   உங்கள் வரவே எனக்கு திகைப்பும் மகிழ்வுமாய்... என்னவெனச் சொல்ல... :).
   உங்கள் ரசனையும் அற்புதமம்மா.

   எல்லாவற்றையும் அறியும் ஆர்வம் ஒருபுறம் இருப்பினும் என்னால் முடிந்தவரை யாவரிடமும் போய் அவர்களையும் ஊக்கப்படுத்துதலே எனக்கும் மிகுந்த மகிழ்வாயிருக்கின்றது.
   அவர்களுக்கும் அது மனதிற்கு விருப்பமானதாய் இருப்பதை உணருகிறேன். நேரம் போதாமல் சில நேரம் சிலரிடம் போகமுடியாமலும் போவதுண்டே.

   உங்கள் அன்பிற்கும் பாராட்டிற்கும் மிக்க மிக்க நன்றி அம்மா!

   Delete
 36. அட்டா, உங்கள் பதிவை இத்தனை நாளா பார்க்காம இருந்துட்டேனே! இனி தவறாமல் வருகிறேன்.

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் ஐயா!... வாங்கோ!
   உங்கள் வரவு இங்கு நான் காண...
   உண்மையிலே அதிர்ஷ்டசாலிதான் நான்.

   மிக்க மகிழ்வாயிருக்கின்றதையா! தொடர்வோராயும் இணைந்துள்ளீர்கள். இரட்டிப்பு மகிழ்வே...

   உங்கள் வரவிற்கும் இனிய கருத்திற்கும் மனமார்ந்த நன்றிகள் பல ஐயா!

   Delete
 37. \\வேசமுடன் இங்கே வெளிநாட்டு வாழ்க்கையும்தான்
  நேசமில்லை நெருக்கமில்லை நிம்மதி சற்றுமில்லை...\\

  நம்மை நாமே நினைந்து கழிவிரக்கம் கொள்ளவைக்கும் வரிகள். வாழ்க்கையை வாழ்ந்துதானாக வேண்டும். அதற்காகவேனும் வலிந்து கூட்டுவோம் சில வாழ்வியல் சுவாரசியங்களை. தோழமை சுமந்த தோள்களையும், உறவையும் மண்ணையும் நினைவில் கொண்டு பாடும் கவிதையும் தோழிக்கான க்வில்லிங் வாழ்த்தட்டையும் மனத்துக்கு மிக நெருக்கமான உணர்வைத் தந்தன. பாராட்டுகள் இளமதி.

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் தோழி கீதமஞ்சரி!

   தோழி கிரேஸ்ற்குக் கூறியதுதான். ஊர் நினைவு, நண்பர்கள் பிரிவு என மனத்தில் தோன்றும் உளைச்சலின் விளைச்சலே இப்படியாகிறது.

   உங்களின் நெகிழவைக்கும் அன்பும் ரசனையும் இனம்புரியா ஒரு ஆறுதலைத் தருகிறது தோழியே!

   அன்பிற்கும் அருமையான கருத்திற்கும் நெஞ்சார்ந்த நன்றிகள்!

   Delete
 38. இளையநிலாவின் கவிதைகள் அருமை..இன்றுமுதல் உங்கள் ரசிகனாய் நானும்

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் சகோதரர் கலியப்பெருமாள்!
   முதன்முறை வரவிங்கு வாருங்கள்!

   உங்கள் வரவும் ரசனையும் தருகிறது நிறைவே!.

   தொடர்வோர் இணைப்பிற்கும் மிக்க நன்றி சகோ!

   Delete
 39. This comment has been removed by the author.

  ReplyDelete
 40. நினைவினில் நீ தேடும் நிஜங்களெல்லாம்
  நிழலாக நெஞ்சமதில் நிலைத்திருக்க காணுகிறேன்
  பகுத்தறியா பருவத்தில் பழகிவிட்ட
  பாசத்தின் துடிப்புக்கள் பரிதவிக்க கண்டேன் ...!

  ஊரோடு விளைந்தோம் உறவுக்குள் மகிழ்ந்தோம்
  சீரோடும் செல்வம் செழித்திட வாழ்ந்தோம்
  தேரோடும் மண்ணிலெல்லாம் செல்விழுந்து சிதறிவிட
  போராடும் மண்விட்டு புலம்பெயர்ந்த பாவிகள்நாம் ...!

  *******************************

  இனிய நண்பிக்கான நினைவு பகிர்வு மிக அழகு


  பாரத்தின் பன்வகைமை
  படித்ததிலே பிடிக்கிறது
  நேரத்தை வீணடித்த
  நினைவெல்லாம் கொதிக்கிறது
  சீராக சிந்தித்தால்
  சிறகல்ல வானம் நீ
  சிறுதூரம் என்றாலும்
  சின்னவனும் உன்வழியே....!

  பாரம் எனக்குள் பாரம் குறைக்கிறது மிக அருமை சகோ...!

  அழகிய தமிழின் அற்புதங்கள்
  அனைத்தும் உணர்ந்த கவிஞரினை
  அன்பாய் விளக்கி சொன்னீர்கள்
  அவரின் கவிக்கு அடிமைநானும்..!

  ஆசானாக அவர் வந்தால்
  ஆர்வலர்மீதில் தமிழ் மணக்கும்
  அரிச்சுவடறியா மாந்தர் நாவும்
  அழகாய் வெண்பா தினம்பாடும்...!

  ********************

  கவிஞர் திரு கி . பாரதிதாசன் அவர்கள் கவிதைகள் கொள்ளை அழகு,அவர் வலையில் எமக்கு வழிகாட்ட வருவதை இட்டு மகிழ்கின்றேன் வேண்டுகை கொடுத்த என்னுயிர் சகோதரி இளமைதிக்கும் என் நன்றிகள்....

  அனைத்தும் மிக அருமை சகோ காலம்தாழ்த்திய பதிலுக்கு வருந்துகின்றேன் ,,,வாழ்த்துக்கள் வாழ்கவளமுடன்


  ReplyDelete
  Replies
  1. ஊருமுறவும் வேரொடு சாய
   யாருமில்லா ஏதிலி நாமாய்
   வாழும் வகைதேடும் போது
   சூழும்நட் பிதுசொந் தமானதே!

   வணக்கம் சீராளன்! மன்னிக்கவும்! இடைவெளி மிகவே நீண்டுவிட்டது.
   உங்கள் அன்பான வரவும் கருத்துக்கவியும் நிறைந்த மகிழ்வைத் தருகிறது.
   அனைத்திற்கும் என் மனமார்ந்த நன்றிகள் சகோ!

   Delete
 41. தோழியின் நினைவலைகளுடன் அழகிய கவிதையையும் தந்துவிட்டீர்கள்.

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் மாதேவி!

   இங்கு உங்கள் வரவும் மனநிறைவே எனக்கு!

   மிக்க நன்றி தோழி!

   Delete
 42. ஓடுகிற தண்ணீரில் உரசிவட்ட சந்தணமாய் கற்றோடு கலநதுவிட்ட இந்த அழகிய கவிதைப் பூ தங்கள் தோழி மடி நிச்சயம் சேரும் வாழ்துக்களுடன்

  ReplyDelete
  Replies
  1. ஐயா வணக்கம்!

   மிகமிகத் தாமதமாக பதிலளிப்பதற்கு மனம் வருந்துகிறேன்.

   உங்களின் வரவும் வாழ்த்தும் மனதிற்கு மிகுந்த நிறைவாக உள்ளது.
   மிக்க நன்றி ஐயா!

   Delete
 43. கை வேலை மிக அழகு இளமதி!
  ஆனாலும் உங்கள் கைவேலை அழகைக்காட்டிலும் உங்கள் கவிதைத் திறமை என்னை தொடர்ந்து அசத்துகிறது! அதுவும் அந்த ‘பாரம்’ குறுங்கவிதை அசத்தல்!
  ஒரு சின்ன கருத்து..
  வாழ்க்கை நெடுக வலிகளும் கசப்புகளும் காயங்களும் தொடர்ந்து கொண்டு தானிருக்கும். முள் குத்திய வலியிலேயே தேங்கி நின்று விட்டால் வழி நெடுக நமக்காகக் காத்திருக்கும் அழகுகள், அன்பு உள்ளங்கள், இனிமைகள் எல்லாவற்றையும் நாம் சந்திக்க முடியாமலேயே போய் விடும்.
  மனதை உற்சாகப்படுத்திக்கொள்ளுங்கள் இளமதி!

  ReplyDelete
  Replies
  1. வாங்கோ வணக்கம் மனோ அக்கா!..

   உங்களிடமும் தாமதத்திற்கு வருந்துகிறேன்.

   என் கவிக்கிறுக்கல்களை இப்படி ஆழ்ந்து ரசிப்பதையிட்டு பூரிக்கின்றது என் மனம்.
   கசப்புகளும் காயங்களும் ஒன்று மாற ஒன்று உருவாகிறதால் இதயம் இயந்திரமாகாமல் கொஞ்சம் இடர்ப்படுகிறது அக்கா... உங்கள் கருத்தினையும் உள்வாங்கி உய்யும் வழியைத் தேடுகின்றேன்.
   உரிமையுடன் உரைத்த கருத்து உவகையாக உள்ளது.
   அக்கா உங்கள் அன்பான வருகைக்கும் நற்கருத்திற்கும்
   என் இதயங்கனிந்த நன்றிகள் பல!!..

   Delete
 44. மன்ம் கார்கிறா கிவிலிங் வேலைப்பாடுகள் வாழ்த்துக்கள்.

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் சகோ விமலன்!

   உங்கள் வருகையும் கருத்தும் மனதிற்கு மகிழ்வே!
   வாழ்த்திற்கும் அன்பு நன்றிகள்!

   Delete
 45. பாரதிதாசன் ஐயாவின் வலையில் அவரின் கவிதைகளைப் படித்து நானும் வியந்ததுண்டு. உங்களால் அவர் ஏற்றுக் கொண்ட பொறுப்பு மிக மகிழ்வைத் தருகிறது. நினைவில் நிற்கும் தோழிக்காய் நீங்கள் செய்த க்விலிங் வழக்கம் போல் மனதைப் பறிக்கத் தவறவில்லை சிஸ்! நிழலாக நினைவுகளாக வந்த கவிதையும், அதற்கான படமும் மிகமிக ரசிக்க வைத்தன!

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் சகோ பாலகணேஷ்!
   என் நிலையைப் பாருங்கள்... நீங்கள் இங்கு வர நான் என்வலையிலிருந்து வெளிநடப்புச் செய்துவிட்டேன்...:).
   அப்படியல்ல சில தடங்கல்கள் தொடரிடர்பாடுகளென இங்கு வரமுடியவில்லை. பின்னர் அங்கங்கே அனைவரிடமும் போகவே எனக்கு நேரம் சரியாகிவிட்டது. அதனால் இங்கும் உங்களுக்கும் பதில் தரச் சுணக்கம்...

   உங்கள் ரசனையும் ஒரு தனிரகம்தான்...:).

   மிக்க நன்றி பிறதர் ! உங்கள் வருகைக்கும் வாழ்த்துகளுக்கும்!...

   Delete
 46. மிக அருமையான க்வில்லிங், தோழியின் நினைவலைகள் உடன் கவிதையும் அருமை

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் ஜலீலா!
   நன்றி நன்றி மிக்க நன்றி அனைத்திற்கும்...:)

   Delete
 47. க்வீளிங் ராணி இளமதியே! வாழ்த்து மடல் சிறப்பு.
  கவிஞர் பாரதிதாசன் பெயருக்கு பெருமை வகையில் அற்புதக் கவ்ஞர். அவராது அசுர வேகக் கவி ஆற்றல் பிரமிப்பை ஏற்படுத்துகிறது.

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் முரளிதரன்!
   சரியான பிரளி...:)))..

   என்னைப்பார்த்து க்விலிங் ராணியோ... அவ்வ்வ்..
   அப்படியெல்லாம் இல்லை. ஏதோ கைக்கு வந்ததைச் செய்து, செய்ததை இங்கு உங்களுக்கும் காண்பிக்கின்றேன் அவ்வளவே. நான் கற்றுக்கொள்ள இன்னும் இருக்கிறது..

   உங்கள் வரவிற்கும் இனிய நற் கருத்திற்கும் மனமார்ந்த நன்றிகள் பல சகோ!

   Delete
 48. பனிக்கட்டியை உருக்கினால் எடையும் குறையுமோ ?
  பாரம் கவிதையோ என் இதயத்தை உலுக்கியதே !
  இல்லை.
  உருக்கியதே !!

  சுப்பு தாத்தா.
  www.subbuthatha72.blogspot.com

  ReplyDelete
  Replies
  1. வாங்கோ வணக்கம் ஐயா!

   ’பாரம் உருக்கிய மனது’ அருமையாக இருக்கிதே இதையும் ஒரு பதிவிற்கு தலைப்பாக வைக்கின்றேன்!

   மிக்க நன்றி ஐயா! உங்கள் வரவிற்கும் நற் கருத்திற்கும்!...

   Delete
 49. வணக்கம்.
  உங்களைத் தொடர் பதிவிட அழைப்பு விடுத்துள்ளேன். என் அழைப்பைத் தயவுகூர்ந்து ஏற்று பதிவிடுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் தோழி!

   என்னை ஏனிந்த தொடர் டெரரில் மாட்டினீர்கள்...:)
   ஏதோ கோபம் வைத்து தருணம்பார்த்து மாட்டிவிட்டுள்ளீர்கள்...;))).

   என்ன எழுதப்போகிறேனோ.. ஆண்டாவா!
   ம். பார்க்கலாம்.. நன்றி தோழி!

   Delete
 50. visit : http://blogintamil.blogspot.in/2013/07/2.html

  வாழ்த்துக்கள்...

  ReplyDelete
  Replies
  1. மனம் நிறைந்த நன்றிகள் பல சகோதரரே!

   Delete
 51. நல்ல கிவிலிங் வேலைப்பாடு,பாரம் சுமந்த கவிதை,பாரமாக நினைக்கிற கனம் பாரமே எதுவும்.அது அல்லாது இனிமை என நினைத்தால் இனிமையே/

  ReplyDelete
  Replies
  1. ஆமாம் சகோ. மனம் சோர்ந்தால் பஞ்சும் பாரம் தான்...:)

   உங்கள் அன்பு வருகையும் கருத்தும் மகிழ்வைத்தருகிறது சகோ.
   உங்கள் வலைப்பூப் பக்கம் தேனீர்க்கடைக்கு வர எனக்கு இன்னும் நேரம் வருகுதே இல்லை.
   விரைவில் வருவேன்...

   மிக்க நன்றி சகோ உங்கள் வருகைக்கும் வாழ்த்திற்கும்!

   Delete
 52. தேசம் விட்டகன்ற உள்ளங்களின் எதிரொலி வேதனையோடு வெளிப்படுகிறது கவிதையில்.கிவிலிங் அழகு எப்போதும்போல.மறத்தல் இயல்பல்ல மனசுக்கு.மறைந்திருக்கிறது அவ்வளவுதான்.சந்திக்கலாம் இனி அடிக்கடி இளமதி !

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் ஹேமா!!!!!!!

   என்ன ஆச்சரியம்! என்னால் நம்பவே முடியவில்லையே.
   கவியரசி, கவிதைப்புயல் இன்று இளையநிலாவில் களமிறங்கியிருக்கின்றதே...:)

   மெத்தச் சந்தோஷம் தோழி! உங்கள் வருகையும் வாழ்த்தும் கருத்தும் மட்டில்லா மகிழ்ச்சி எனக்கு!

   வாங்கோ.. நேரங்கிடக்கும்போது. என் கிறுக்கல்களையும் உங்கள் அங்கீகாரத்திற்காக, கருத்திற்காக வைத்துக் காத்திருப்பேன்.

   அத்தனைக்கும் மிக்கமிக்க நன்றி என் இனிய தோழியே!

   Delete
 53. வணக்கம், தங்களது தளத்தை வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தியுள்ளேன். மேலும் விபரங்களுக்கு கீழுள்ள முகவரியில் சென்று காணவும். நன்றி...

  http://blogintamil.blogspot.in/2013/08/blog-post_18.html

  ReplyDelete
 54. Lovely card Ilamathi. Good colour celection.

  ReplyDelete
 55. வணக்கம்
  இன்று வலைச்சரத்தில் அறிமுகம்மானதற்கு எனது வாழ்த்துக்கள் பார்வைக்குhttp://blogintamil.blogspot.com/2013/09/blog-post_6.html?showComment=1378424615986#c2485677240117282867

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
  Replies
  1. மிக்க மிக்க நன்றி ரூபன். நல்ல செய்தியை இங்கு வந்து கூறியமைக்கு!...
   மிக்க மகிழ்ச்சி!

   Delete
 56. வாழ்க்கையும் பாரம்
  சுவையே இல்லை என்றால்...

  உணர வைக்கும் அருமையான வரிகள்..

  வலைச்சர அறிமுகத்திற்கு
  வாழ்த்துகள்..!

  ReplyDelete
 57. மிக்க மிக்க நன்றி இராஜராஜேஸ்வரி...
  உங்களைப் போன்றோரின் ரசனையும் வாழ்த்தும் மேலும் என்னை ஊக்குவிக்கின்றது...

  அன்பு நன்றிகள்!

  ReplyDelete

உங்களின் அன்பான வரவிற்கும் ஊக்கந்தரும்
இனிய கருத்திற்கும் என் உளமார்ந்த நன்றி! _()_