Pages

Sep 6, 2013

இன்னும் என்ன!...

 இது பல மாதங்களுக்கு முன்னர் செய்த 
க்விலிங் கைவேலையில் ஒன்று...
ᴥᴥᴥᴥᴥᴥᴥᴥ

இன்னும் என்ன...
~~~~~~~~
 

நாட்டை இழந்தோம் நறுந்தேனாம்
நம்மொழி இழந்தோம்! இனமிழந்தோம்!
ஏட்டில் எழுத முடிந்திடுமோ?
ஏதிலியாய் அலைகின்றோம்!

கூட்டைக் கலைத்துக் குதறிடவே
கூறவிலாத் துயரங்கள் மிகச்சுமந்தோம்!
கேட்டு வலிஅகற்ற எங்களின்
கேவல்களை உணர்பவர் யார்?

பெற்றாரை இழந்தோம்! பெருமைதரு
பேறெல்லாம் நாம் இழந்தோம்!
உற்றாரை இழந்தோம்! உயிராகக்
கற்றவை யாவையும் சேர்த்திழந்தோம்!

பண்பாடு பழக்கங்கள் பலஇழந்தோம்!
கொண்டாடும் கலைகள் கூடஇழந்தோம்!
கண்மூடிடத்தாங்கும் தோழமை இழந்தோம்!
மண்ணிழந்தோம் எம்மகிழ்வும் இழந்தோமே!..
ᴥᴥᴥᴥᴥᴥᴥᴥ

~~~~~~~~

பதிவோடு பகிரும் பதிவர்இந்திரலோகமல்ல இது இமாவின் உலகம்!
சிந்தைக்கு நிறைவாக சீர்தரும் ஓருலகம்
வந்திடும் உறவினை வசப்படுத்தும் தனியுலகம்
தந்திரமில்லாத் தனியுலகமது இமாவின் உலகம்!..

என் ஆரம்பகால அன்புத் தோழிகளில் ஒருவரான இமா அவர்களின் இது இமாவின் உலகம் என்னும் வலைப்பூவினை இங்கு உங்களுடன் மகிழ்வோடு பகிர்ந்து கொள்கின்றேன்!இமா, ஒரு பள்ளிக்கூடத்தில் ஆசிரியராகக் கடமையாற்றுகிறார். நாங்கள் எப்பவும் அவரை ரீச்சர் என்றே செல்லமாக அழைப்பது வழக்கம்!...:).

இமாவின் உலகத்தில்  இல்லாத விடயங்களே இல்லை எனலாம். கதை, கவிதை, கைவேலை, சமையல், ஓவியம், வீட்டுத்தோட்டம், ஒப்பனை, அலங்காரம் இன்னும் இன்னும்...எவ்வளவோ.. அங்கு இருக்கின்றன!
எல்லாவற்றிற்கும் சிகரம் வைத்தாற்போல் ஜீவகாருண்ணியம் என்றால் உதாரணம் இமா தான். தன் வீட்டுத்தோட்டத்திற்கு வரும் அத்தனை செல்லப் பிராணிகளிடமும் சொல்ல முடியாத பாசத்தினைப் பொழிந்திடுவார். அவைகளுடன் தனக்குக் கிடைக்கின்ற நேரம் முழுவதையுமே செலவிடுவார்.

இயற்கையை விதவிதமாகப் படங்கள் எடுப்பதும் பகிர்வதும் அவரின் இன்னொரு சிறப்பு ஆகும்!

இமாவின் வலைப்பூவினைத் தெரியாதோர் இருக்கமாட்டார்கள். இருந்தும் இதுவரை அறியாதோராயின் அவர் வலைக்கும் சென்று அவரை ஊக்குவிக்கலாமென இங்கு இவற்றை மகிழ்வுடன் பகிர்ந்துகொள்கின்றேன்!...
மிக்க நன்றி அன்புறவுகளே!
__()__

114 comments:

 1. கவிலிங் கைவேலை அழகு.
  கவிதை நெஞ்சை கனக்க வைக்கிறது.
  ஆசிரியர் தினத்தில் இமாவின் வலை அறிமுகம் பொருத்தம்.
  வாழ்த்துக்கள் இமாவிற்கு.
  இமாவின் இயற்கை படங்களை ரசிக்க போகிறேன்.
  நன்றி.

  ReplyDelete
  Replies
  1. [co="DarkViolet"]வணக்கம்! வாங்கோ சகோதரி!..

   உங்கள் வரவு மனதிற்கு மட்டற்ற மகிழ்ச்சியைத் தருகிறது...

   ஆசிரியர் தினமானதால் ஒர் அர்த்தத்துடனேதான் இமாவை இங்கு இணைத்தேன். சட்டெனக் கண்டுபிடித்துவிட்டீர்கள். ..:).

   அன்பான வரவிற்கும் வாழ்த்திற்கும் இனிய நன்றிகள் சகோதரி!.[/co]

   Delete
  2. வாழ்த்துக்கு என் அன்பு நன்றி கோமதி. சந்தோஷம். நேரம் கிடைக்கும்போது வாங்கோ.

   Delete
 2. தாங்கள் இயற்றிய சோக கீதம் உள்ளத்தை உருக்குகிறது.

  உலகெங்கும் சிதறிக்கிடக்கும் தமிழினம் இன்று தங்கள் நிலைகண்டு
  கண்ணீர் வடிப்பதன்னியில் வேறெதும் செய்யவில்லை .

  மூன்று சோக ராகங்களில் தங்கள் பாடலை இசைத்து இம்முதியவனும்
  உங்கள் துயரத்தில் பங்கு கொள்ள விழைகிறான்.


  சுப்பு தாத்தா.
  பாடலை பதிவேற்றிய பின் எனது வலையில் இடுகிறேன். உங்களது
  இ மெயில் ஐ. டி. தெரியவில்லை.
  www.vazhvuneri.blogspot.com
  www.subbuthatha72.blogspot.com

  ReplyDelete
  Replies
  1. [co="DarkViolet"]வணக்கம் ஐயா!...

   மனதின் அடித்தளத்தில் உறைந்துள்ள சோகமிது. அடிக்கடி இப்படி உருகி வார்த்தைகளாய் வெளியே வந்துவிடுகிறது.

   துயர்தீர்ந்து அந்த வாழ்வு திரும்புமோ?... அதன்முன் நாமெல்லாம் சிதறியபடியே இப்படியே சீரழிந்திடுவமோ என்னும் நினைப்பு.. வேதனை...
   அதுவே என்னுள் எப்பவுமே!...

   உங்கள் அன்பிற்கு எப்படி என் நன்றியினைச் சொல்வது...
   பாடித்தாருங்கள் இங்கேயே இணைப்பையும் இடுங்கள்!.
   சேர்க்கின்றேன். ...

   மிக்க நன்றி ஐயா தங்கள் அன்பான வரவிற்கும் ஆதரவான நற் கருத்திற்கும்!.[/co]

   Delete
 3. Replies
  1. [co="DarkViolet"]வணக்கம்! வாங்கோ சகோ. தனபாலன்!..

   உங்கள் வரவிற்கும் ஆழ்ந்த கருத்திற்கும் மனமுவந்த நன்றி!.[/co]

   Delete
 4. இந்திரலோகமல்ல இது இமாவின் உலகம்!
  சிந்தைக்கு நிறைவாக சீர்தரும் ஓருலகம்
  வந்திடும் உறவினை வசப்படுத்தும் தனியுலகம்
  தந்திரமில்லாத் தனியுலகமது இமாவின் உலகம்!..

  இமாவின் வலைத்தளத்தை ஆசிரியர் தினத்தன்று
  இசைவாய் பகிர்ததற்குப் பாராட்டுக்கள்..வாழ்த்துகள்

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றி அக்கா. :-)

   Delete
  2. [co="DarkViolet"]மிக்க நன்றி சகோதரி![/co]

   Delete
 5. ஏட்டில் எழுத முடிந்திடுமோ?
  எத்தனை சோகத்தை சுமந்த வ்ரிகள்
  அத்தனையும் ..!

  இந்நிலை மாறவே
  இறைவனைப் பிரார்த்திக்கிறோம் ..!

  ReplyDelete
  Replies
  1. [co="DarkViolet"]வாருங்கள் இராஜராஜேஸ்வரி!

   உங்களின் அன்புக்கும் பிரார்த்தனைக்கும் என் மனமார்ந்த நன்றிகள்![/co]

   Delete
 6. அழகான கைவேலைப் பாட்டினைப் பார்த்து ரசித்திருந்த சமயத்தில், கலங்கடிக்கும் கவிதையைத்தந்து வாயடைத்து விட்டீர்களே.. அனைத்தும் மாறும் நம்பிக்கையுடன் பயணிப்பபோம்...

  ReplyDelete
  Replies
  1. [co="DarkViolet"]வணக்கம் பிரியா!

   உங்கண் அன்பான, ஆதரவான, நம்பிக்கையூட்டும் வரிகள் எம்மைத் தூக்கி நிறுத்துகின்றன.
   மிக்க நன்றி தோழி![/co]

   Delete
 7. கவிதை கலங்க வைக்கிறது. Quilling மிக அருமை தோழி. தாங்கள் அறிமுகப்படுத்திய தோழி இமா அவர்களுக்கு இனிய வாழ்த்துகள்.

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றி தமிழ்முகில். :-)

   Delete
  2. [co="DarkViolet"]வணக்கம் தமிழ்முகில்!

   உங்கள் அன்பும் எனக்கு மிகுந்த ஆறுதலைத்தருகிறது.

   கருத்துக்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றி தோழி![/co]

   Delete
 8. ரொம்ப அழகாக வந்திருக்கு இளமதி.

  ReplyDelete
  Replies
  1. [co="DarkViolet"]வணக்கம் ஸாதிகா!

   உங்கள் வரவும் ரசனையும் மகிழ்வும் நிறைவும் எனக்கு!

   மிக்க நன்றி![/co]

   Delete
 9. விரைவில் மீண்டு வருவோம் !

  ReplyDelete
  Replies
  1. [co="DarkViolet"]வணக்கம் ஸ்ரவாணி!

   உத்வேகமும் உறுதியும் இறுதிவரை காப்போம்!
   மிக்க நன்றி![/co]

   Delete
 10. நிஜங்களே நினைவுகளாக.. உண்மையானதொன்று. கவிதை நெஞ்சைக்கனக்க வைத்துவிட்டது.அழகான க்விலிங் இளமதி. நன்றாக இருக்கிறது.வாழ்த்துக்கள்.

  //இந்திரலோகமல்ல இது இமாவின் உலகம்!
  சிந்தைக்கு நிறைவாக சீர்தரும் ஓருலகம்
  வந்திடும் உறவினை வசப்படுத்தும் தனியுலகம்
  தந்திரமில்லாத் தனியுலகமது இமாவின் உலகம்//
  அருமையாக கவியால் பாராட்டியிருக்கிறீங்க. உண்மையில் அவாவின் உலகம்"தனியுலகமே".நான் அவாவின் இடத்தைச்சொன்னேன்.
  பாந்தமான பதிவர் பகிர்வினை பகிர்ந்த‌மைக்கு நன்றி. வாழ்த்துக்கள்.  ReplyDelete
  Replies
  1. அவ்வ்!! ரெண்டு பேருமாக நல்லாக் கலாய்க்கிறியள் என்னை. ;))) குழப்படிப் பிள்ளைகள். ;))

   நன்றி ப்ரியா.

   Delete
  2. [co="DarkViolet"]வாங்கோ அம்மு!

   பொய்மை அந்தவுடனேயே பொய்த்துப்போய்விடும்.
   நிஜங்கள் நினைவுகளாகிறது.
   நினைவுகள்தாம் எமை வாழவைக்கின்றன.

   இமாவின் உலகம் இணையில்லாத ஒரு உலகமன்றோ...:)

   உங்கள் அன்பான வரவும் நற்கருத்துகளும் வாழ்த்தும்
   தெம்பாக இருக்கிறது எனக்கு...:)

   மிக்க நன்றி அம்மு!


   அம்மு!... ஓடுங்கோ... ரீச்சர் குழப்படிப் பிள்ளைகள் எண்டிட்டு தடி எடுக்கிறா...:)))[/co]

   Delete
 11. இன்று உங்கள் அழகான கவிதை போலவே உங்கள் கிவிளிங்கும் உள்ளது... இழந்தவற்றை எண்ணி வருந்தவேண்டாம், இனியொரு காலம் எதையும் இழக்காமல் பார்த்துக் கொள்வோம்...

  இன்று கூறிய பதிவருக்கு பாராட்டுகள்...

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றி சகோதரரே. :-)

   Delete
  2. [co="DarkViolet"]வணக்கம் வெற்றிவேல்!

   உங்கள் ரசனயும் பாராட்டும் போலவே
   ஆறுதலும் இதமாக இருக்கிறது.

   மிக்க நன்றி சகோ![/co]

   Delete
 12. எதை இழந்திருப்பினும் இணையத்தினூடாக
  மலர்ந்திருக்கும் எங்கள் நட்பு தங்களின் மனதிற்கு மகிழ்வு தர
  வேண்டும் என்பதே என் ஆதங்கம் .கவலைகள் மறந்து
  களிப்புடன் இருங்கள் தோழி ! கைவேலையும் கவிதையும்
  மிகவும் சிறப்பாக அமைந்துள்ளது ."இமாவின் உலகம்" நான்
  ஏற்கனவே இவரை வலைச்சரத்தில் அறிமுகம் செய்துள்ளேன்
  என எண்ணுகின்றேன் .சிறந்த படைப்பாளி .இருவருக்கும் என்
  பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் உரித்தாகட்டும் இந்நேரம் .
  வாழ்த்துக்கள் தோழி .மிக்க நன்றி பகிர்வுக்கு .

  ReplyDelete
  Replies
  1. வாழ்த்துக்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள் சகோதரி.

   Delete
  2. [co="DarkViolet"]வாங்கோ அம்பாள் அடியாள்!

   இந்த வலிகள் நீங்கள் உணராததோ சுமக்காததோ அல்ல... இருப்பினும் சில சமயங்களில் ஊர் நினைவு முள்ளாய் மனதில் குத்துகிறது. அதிலிருந்து வடியும் இரத்தத்தினால் வரும் பிசுபிசுப்பு... வேறொன்றுமில்லை.

   எம் உறவு தொடரும் தோழி.. ஆதங்கம் வேண்டாம். நாடுவிட்டு வந்துவிட்டோம். ஆதரவாய் இருப்போம் அனைவருடனும்.

   அன்பான வருகைக்கும் வாழ்த்திற்கும் உளமார்ந்த நன்றி தோழி![/co]

   Delete
 13. கிவிலிங் எப்பொழுதும்போல அழகு!
  உங்கள் இழப்பையெல்லாம் பட்டியல் செய்திருக்கும் அருமையான கவிதை மனதை வருத்துகிறது..இழந்த தோழமைகளுக்கு ஈடாகாவிட்டலும் வலையுலக தோழமை உங்களுக்கு ஆறுதலாய் இருக்கட்டும். இழப்புகள் இனிதாய் மீண்டும் சேர்ந்திட உங்கள் மகிழ்ச்சி நிறைந்திட இறைவனை வேண்டுகிறேன் தோழி!
  பகிர்வுக்கு நன்றி, இமா அவர்களின் தளம் பார்க்கிறேன்.

  ReplyDelete
  Replies
  1. தங்கள் வருகையை அன்போடு எதிர்பார்க்கிறேன் கிரேஸ். மிக்க நன்றி.

   Delete
  2. [co="DarkViolet"]வாருங்கள் தோழி கிரேஸ்!

   உங்களைப் போன்றோரின் அன்பும் ஆதரவும்தான் இன்னும் எம்மை இங்கு நிறுத்திவைத்துள்ளது.

   உங்கள் வருகைக்கும் இனிய வாழ்த்து மற்றும் நல் ஆதரவிற்கும் மனமார்ந்த நன்றிகள்![/co]

   Delete
 14. புது விதமான குயில் வேர்க்காக இருக்கு.. சூப்பர்ர்.. சிம்பிள் எனினும் அருமை. பூவுக்கு மேலே வைத்திருக்கும் மணி ரெடிமேட்டோ?.. சைன் பண்ணுதே...

  ReplyDelete
  Replies
  1. [co="DarkViolet"]வாங்கோ அதிரா!...

   ம்.. இந்த க்விலிங் கிட்டத்தட்ட 6,7 மாதத்துக்கு முன் செய்தது.. அதில் பூவுக்குமேல் பூந்துணராக இருப்பது ரெடிமேட்டாக பல காலத்திற்கு முன் வாங்கியது என்று என் இங்கத்தை வெள்ளை நண்பி தந்தார். மேலே நீட்டு மணிபோல நீளமாக பேப்பரில் மெல்லியதாக உருட்டப்பட்டது இது. அதைத்தான் இதற்குப் பொருந்துமென வைத்தேன்...:)[/co]

   Delete
  2. அதீஸ்.. அவை stamens. ஸ்டொக்கிநெட் பூ கட்டேக்க நடுவில வைக்கிறது இதுதான். விதம் விதமான வடிவில கிடைக்கும்.
   https://www.google.co.nz/search?q=floral+stamens+images&client=firefox-a&hs=Cz9&sa=X&rls=org.mozilla:en-GB:official&channel=fflb&tbm=isch&tbo=u&source=univ&ei=fcgrUu8cpM6IB7PwgOgC&ved=0CCkQsAQ&biw=1280&bih=650

   Delete
  3. பூவுக்கு மேலே வைத்திருக்கும் மணி ரெடிமேட்டோ?.. சைன் பண்ணுதே...////

   ஹா ஹா அது மணி என்றால் அப்படித்தான் இருக்கும்!!

   Delete
  4. [co="DarkViolet"]மிக்க நன்றி இமா... விளக்கத்திற்கு. எனக்கு உடனே பெயர் சொல்லத்தெரியேலை. ..:)[/co]

   Delete
  5. [co="DarkViolet"]அட இதாரிது இங்..கை:0)!....
   மணி!.. வாங்கோ!...

   ஹையோ அடையாளமே தெரியேலை... படத்தைச் சொன்னன்..:)
   மாத்தி மாத்தி யோசிக்கிறீங்க...:)))[/co]

   Delete
  6. ஆவ்வ்வ் நன்றி இமா... சிலர் மணி எண்டதும் தங்களையாக்கும் என அவசரப்பட்டு ஆனந்தப்படுகினம்:) ஹையோ ஹையோ:))

   Delete
 15. கவிதை அழகாக வடித்திருக்கிறீங்க.. மனதை நெருடுது.. ஆனாலும்..

  //பண்பாடு பழக்கங்கள் பலஇழந்தோம்!
  கொண்டாடும் கலைகள் கூடஇழந்தோம்!
  கண்மூடிடத்தாங்கும் தோழமை இழந்தோம்!
  மண்ணிழந்தோம் எம்மகிழ்வும் இழந்தோமே!..///

  இப்போ சண்டை தீர்ந்து, ஓரளவு நிலைமை நல்லாயிருக்கும்போது ஏன் இப்படிக் கவிதை?.. அடுத்து கொஞ்சம் மகிழ்ச்சிக் கவிதை எழுதோணும் சொல்லிட்டேன்ன்:)).. இல்லையெனில் மீராவை பிறாண்டச் சொல்லுவேன்ன்ன்ன்:))

  ReplyDelete
  Replies
  1. அதையே நானும் வழி மொழிகின்றேன் ..எனது வளர்ப்பு மகனையும் அனுப்புவேன் பிராண்ட :))

   Delete
  2. [co="DarkViolet"]கவிதை.....

   நாட்டைவிட்டு இங்கு வந்து பல வருடங்களாக இங்கும் வந்த இடத்தில் இழப்புகள் தொடர மனவலி மிகுகிறது. அங்கும் எல்லாவற்றையும் இழந்திட்டோமே `எமக்கென` என்ன, எங்கு இருக்கு. இழப்புகளே மிச்சம் என எனக்குத் தோன்ற எழுந்த வரிகள்.... எழுதிய வரிகள்....

   மாற்றத்தை எண்ணுகிறேன்.. மாறவேண்டுமெனவும் எண்ணுகிறேன்..
   நன்றி அதிரா!

   மீரா என்னை பிறாண்டாது...:)
   ம்மா...ம்மா.. எண்டுதான் அது என்னைப் பார்த்துக் கூப்பிடுறதே.. அப்பிடி ஒரு பாசம் என்னில்..:)
   பிறாண்டாது...:)))[/co]

   Delete
  3. [co="DarkViolet"]அஞ்சு.. வாங்கோ!

   வந்த இடத்தில் உதென்ன அதிராவோடகூட்டுச்சேர்ந்து....
   ஏதேதோ சொல்லுறீங்கள்...:)

   அப்பிடியெல்லாம் செய்யாதேங்கோ... நான் இனி மாற்ற முயற்சி செய்கிறேன்..:)[/co]

   Delete
 16. //இது இமாவின் உலகம் என்னும் வலைப்பூவினை இங்கு உங்களுடன் மகிழ்வோடு பகிர்ந்து கொள்கின்றேன்!//

  அடடா இன்னொரு புதுப்பதிவரோ?:) வாழ்த்துக்கள்.. இப்பவே சென்று பார்க்கிறேன்ன்:).

  ReplyDelete
  Replies
  1. ;)) குழப்படி அதீஸ். ;)

   Delete
 17. //இமாவின் வலைப்பூவினைத் தெரியாதோர் இருக்கமாட்டார்கள். ///

  அப்போ தெரிஞ்சாட்களெல்லாம் இருப்பினமோ?(ஷெயாரில:)):)) ஹையையோ என் வாய்தேன் நேக்கு எதிரி.. விடுங்கோ என்னை விடுங்கோ..:))

  ReplyDelete
 18. //நாங்கள் எப்பவும் அவரை ரீச்சர் என்றே செல்லமாக அழைப்பது வழக்கம்!...:)./// நோஓஓஓஓ உங்கள் தமிழில் தப்பிருக்கிறது:).. அது ரீ அல்ல, றீ :) ஆக்கும்:) எங்கிட்டயேவா? நாங்க தமிழ்ல டி எடுத்த ஆட்களாக்கும்:)

  ReplyDelete
  Replies
  1. //தமிழ்ல டி/ ம். மாட்டுவீங்கள். ;))

   Delete
  2. :))ஏற்கனவே மாட்டியாச்சு இமா :))

   Delete
  3. [co="DarkViolet"]நான் எழுதினதில குற்றம் கண்டாப் பரவாயில்லை....
   எங்கட ரீச்சர் எழுதினதிலயுமா...;)

   ஓ.. எனக்கு விளங்கீட்டு. அது சிலநேரம் கணினி ஏதாகிலும் கோளாறு பண்ணினா இப்பிடித்தான் எழுத்து மாறி வரும்...:) உதையெல்லாம் பெரிசு படுத்தலாமோ...;0).
   (முருகா. ஏதும் சொல்லி ரீச்சரைக் காப்பத்தோணும்..:))[/co]

   Delete
  4. ;)))))) நேரமில்லாமல் அவசரமா தட்டி வைக்கிறதால வாற வினை அது. பாதி நேரம் நித்திரைக் குழப்பம்.

   மேல... ஒரு காலைக் காணோமே இளமதி!!!!!!!!

   Delete
  5. அது ரீ அல்ல, றீ :) ஆக்கும்:) எங்கிட்டயேவா? நாங்க தமிழ்ல டி எடுத்த ஆட்களாக்கும்:) ////

   எத்தினையாம் ஆண்டு அந்த டி யை எடுத்தீர்கள் என்று சொல்ல முடியுமா? :))))))))))

   Delete
  6. என்ர பிள்ளையாரே.. ஒரு “டி” க்கு இவ்ளோ விளக்கம்:)) இவ்ளோ குவெஷனா?:))..

   //எத்தினையாம் ஆண்டு அந்த டி யை எடுத்தீர்கள்// பத்தாம் ஆண்டிலதான்ன்:)) அதாவது ஓ லெவல்ல்ல்ல்ல்:)) எங்கிட்டயேவா?:) பூஸோ கொக்கோ:))... நான் போட்டு வாறன் இளமதி இனியும் இங்கின நிண்டால் ஆபத்து:)

   Delete
 19. இன்னும் என்னவென்று
  ஏங்கி அழுவதெல்லாம்
  கண்ணுக்குள் வந்து
  கனக்கிறது நினைவுகளால்.....!

  அழகிய கை வேலைப்பாட்டோடு அழகிய கவிதை ........அறிமுகம் அசத்தல் இமாவின் உலகத்தை எப்போதும் பார்ப்போம்ல ....

  வாழ்த்துக்கள் சகோ

  ReplyDelete
  Replies
  1. //இமாவின் உலகத்தை எப்போதும் பார்ப்போம்ல ....// :-) என் அன்பு நன்றிகள் சீராளன்.

   Delete
  2. [co="DarkViolet"]வாங்கோ சீராளன்!..

   எல்லாருக்கும் இருக்கிற கவலையும் நினைப்பும்தான் சகோ!
   அப்பப்ப தோன்றும் எழுதீடுவன்.. பார்ப்பம் விடியும்...

   அன்பான வரவிற்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி![/co]

   Delete
 20. க்வில்லிங் மலர் அழகாய் இருக்கு. இதுவரை இந்த முறையில் செய்யப்பட்ட டிசைன்களைக் காணவில்லை, கலக்கறீங்க இளமதி! மலரின் காம்பும் இலைகளும் செய்யப்பட்ட விதம் ரொம்ப பிடிச்சிருக்கு எனக்கு.

  உங்க கவிதைகளில் படிப்போரின் மனதைக் கனக்கச் செய்யும் சோகம் ஒரு கனமான திரையாகப் படிந்திருக்கு. கடந்தவை போகட்டும், உள்ளிருக்கும் சோகத்தையெல்லாம் சீக்கிரம் எழுத்தில் வடித்தெடுத்து மனதை லேசாக்குங்க. விரைவில் சோகத்திரை வில(க்)கி இளமதி மகிழ்ச்சியுடன் முழுமதியாய் வெளிவரவேண்டும். இல்லைன்னா, நானும் மீராவை பிறாண்டச் சொல்லுவேன்ன்ன்ன்:)), ஜாக்கிரதை! ;) :)

  ஆசிரியர் தினத்தில் பகிர்ந்த பதிவருக்கு வாழ்த்துக்கள்! :)

  ReplyDelete
  Replies
  1. :) மிக்க நன்றி மகி.

   Delete
  2. [co="DarkViolet"]வாங்கோ மகி!

   க்விலிங்கை ரொம்ப ரசிச்சு எழுதியிருக்கிறீங்க.. மிக்க நன்றி!

   சோகக் கவிதையால் என் மீராவை எனக்கெதிராத் திருப்பும் முயற்சியில் நீங்களுமோ.... அவ்வ்வ்...:)

   உங்கள் அன்பு வருகையும் நற்கருத்துடன் வாழ்த்துக்களும் மிகுந்த மனநிறைவாக உள்ளது. மிக்க நன்றி மகி![/co]

   Delete
 21. பெற்றாரை இழந்தோம்! பெருமைதரு
  பேறெல்லாம் நாம் இழந்தோம்!
  உற்றாரை இழந்தோம்! உயிராகக்
  கற்றவை யாவையும் சேர்த்திழந்தோம்!..
  இழப்புகளின் எண்ணிக்கை அதிகம் அதை படிக்க முடியாது ஏதோ ஒன்று தொண்டையை அடைத்து நிற்கிறது..

  ReplyDelete
  Replies
  1. [co="DarkViolet"]வாங்கோ சசி கலா!

   ம். இம்முறை மனதில் இருப்பதை அதிகமாக் கொட்டீட்டன்போல...
   நோகடிச்சிட்டனோ... இப்ப யோசிக்கிறன்...

   வரவுக்கும் கருத்திற்கும் அன்பு நன்றிகள் தோழி![/co]

   Delete
 22. கைவேலை அழகு.
  பிரிவின் வலி...வரிகள் வேதனை தான்.
  தமிழ் சிறப்பு . இனிய வாழ்த்து.
  இமாவிற்கும் வாழ்த்து. சென்று பார்ப்பேன் புதியவர் எனக்கு.
  வேதா. இலங்காதிலகம்.

  ReplyDelete
  Replies
  1. எப்போ வேண்டுமானாலும் வருக. ஆனால்... பெரிதாக எதிர்பார்க்க வேண்டாம். சும்மா கிறுக்கல்கள்தான் இருக்கும். :-) மிக்க நன்றி அக்கா.

   Delete
  2. [co="DarkViolet"]வாங்கோ சகோதரி!

   உங்கள் அன்பான வரவிற்கும் வாழ்த்திற்கும் மனமுவந்த நன்றிகள்![/co]

   Delete
 23. க்விலிங்... நெருப்பு வர்ணச் சேர்க்கை - காந்தள் மலரை நினைவுபடுத்துகிறது. வெகு அழகாக இருக்கிறது இளமதி. ஒரு எக்ஸிபிஷன் வைக்கிற அளவு சேர்த்து வைத்திருப்பீர்கள் போல இருக்கே!

  நீங்கள் //பதிவோடு பகிரும் பதிவர்// யாரென்றே எனக்குத் தெரியேல்லயே! நானும் போய்ப் பார்க்கிறேன். பகிர்வுக்கு நன்றி. ;))) அந்தப் படம்... புத்தகம் & க்வில் பகிர்வுக்குப் பொருத்தமாகத் தேடிப் பிடித்திருக்கிறீர்கள். அருமை.

  நிஜங்கள் நினைவுகளாய் மாறும்போது நிலைத்திருதே நெஞ்சில் நிறைந்து. ;) இந்த இடுகை என் நினைவில் நிலைத்திருக்கும். என் அன்பான நன்றிகள் சகோதரி. எழுதிய விதம்.. ;) ரவெகுவாக சித்தேன். ;)

  ReplyDelete
  Replies
  1. [im]http://t3.gstatic.com/images?q=tbn:ANd9GcTY51AhpMZzAblNUD5csVTGbeDeK4Msc2CCFPR5bxtTU4ax737uFQ[/im]

   [co="red"]வாங்கோ வணக்கம் இமா!..
   இருங்கோ வாறன் கொஞ்சத்தில...:)[/co]

   Delete
  2. [co="DarkViolet"]ம்..இவ்வளவு நேரமாய்ப் போச்சு மன்னியுங்கோ இமா. போன இடத்தில மினக்கெட்டுட்டன்..:)

   காந்தள் மலராய்ச் செய்திருக்கலாமோன்னு இப்ப நீங்கள் சொன்னாப்பிறகு யோசிக்கிறன்..
   பாப்பம் சந்தற்பம் வரேக்கை செய்வம்..;). ஞாபகப் படுத்துங்கோ..!

   க்விலிங் கார்ட் எல்லாம் என்னட்டை இருக்குதென்று இல்லை. அரைவாசி குடுத்தாச்சு. சிலதுதான் இருக்குது.. அதிலயும் இப்ப இங்கை என் வலைல இருக்கிறது மட்டுமே ஞாபகத்துக்கு மிஞ்சி இருக்கு. மிச்சமெல்லாம் போட்டோவாய்ப் பிடிச்சு கணினில போட்டு வைச்சிருக்க 3 கிழமைக்கு முன் கணினி ஹார்ட் டிஸ்க் மண்டையைப் போட்டு என் பொக்கிஷம் எல்லாமே அழிஞ்சிடிச்சு...:’(

   பதிவோடு பகிரும் பதிவரைத் தெரியாதோ உங்களுக்கு... அப்ப கட்டாயம் போய்ப் பாருங்க..:)))

   நினைவில் நிற்கும் எல்லாமே, அது துன்பமோ இன்பமோ எமக்கு என்றுமே கண்ணில் நிழலாடும்...

   உங்கள் நினைவிலும் நிற்கும் பதிவாய் இது அமைஞ்சது எனக்கும் மட்டில்லா மகிழ்ச்சிதான் இமா!
   வரவிற்கும் அன்பான கருத்துக்களுக்கும் என் உளமார்ந்த நன்றிகள்![/co]

   Delete
 24. quilling எப்பவும் போல அழகு ..எதாச்சு காப்பி ,இனிப்பு இதெல்லாம் இருந்தா சாப்பிட்டுக்கொண்டே நாங்க இமா உலகம் போக வசதியாருக்கும் :))

  புரியுதா இளமதி :))உங்க சமையல் குறிப்புகளையும் பகிருங்க இங்கே :))

  ReplyDelete
  Replies
  1. //எதாச்சு காப்பி, இனிப்பு இதெல்லாம் இருந்தா சாப்பிட்டுக்கொண்டே// அதுதானே! நல்லாக் கேளுங்கோ ஏஞ்சல். ;)

   Delete
  2. [co="DarkViolet"]என்னாது... சமையல் குறிப்போ... ஆர் நானோ... ச்சீ விளையாடாதேங்கோ அஞ்சு...:)
   அதுக்கு எக்ஸ்பேட்டான உங்கள் எல்லாராலையும்தான் முடியும் .
   அதிலும் நீங்க.. ஸ்ரெப் பை ஸ்ரெப்பா நல்ல அழகா விளங்கப்படுத்தி படத்தோட போடுறது.. எப்படி இருக்கிறது தெரியுமோ... ஆராலை அப்பிடி ஏலும்...:)

   ஏன் கனநாளா உங்கட தளத்தில ஒண்ணுமே போடக்காணேலை..
   ஒண்ணுமே சமைக்கேலையோ...;)
   ம்.. அதால நானும் சமைக்கேலை காத்துக்கொண்டு இருக்கிறன் உங்கட பதிவு வரும் வரைக்கும்...:))

   பரவாயில்லை இந்தாங்கோ இதைச் சாப்பிட்டுக்கொண்டே இமா வீட்டை போய் அவவுக்கும் கொடுங்கோ மிக்க நன்றி அஞ்சு..:)[/co]

   [im]https://encrypted-tbn0.gstatic.com/images?q=tbn:ANd9GcThyOVTeYruVhnjWYPKLFo6aoBJqbcCz75re6pqesCY9RpbNUxz[/im]

   Delete
  3. கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) அதென்ன ரகசியா அஞ்சுவுக்கு மட்டும்:))

   Delete

 25. you may at your leisure time, listen to your song here in three different melodies.

  http://www.youtube.com/watch?v=4WEkga2GeEA

  subbu thatha.
  www.vazhvuneri.blogspot.com
  www.subbuthatha.blogspot.com

  ReplyDelete
  Replies
  1. [co="Crimson"]ஐயா... எனது நன்றியை எப்படிச் சொல்வது?..
   மிகமிக உருக்கமாகப் பாடி எனது கவிக்கு உயிர் தந்துள்ளீர்கள்!

   மனமுருக கண்கள் கசிய நினைவலைகளில் மீண்டும் நான்...

   உங்களுக்கு என் உளம் நிறைந்த
   நன்றிகளும் வணக்கமும் ஐயா![co="Crimson"]...[/co]

   * இந்தப் பாடலையும் உங்கள் பாடல்களைச் சேர்க்கும் இடமான
   இங்கே எனது வலைப்பூவின் வலது பக்கத்தில்
   கோர்வையாகச் சேர்த்துள்ளேன்![/co]

   Delete
 26. "நாட்டை இழந்தோம் நறுந்தேனாம்
  நம்மொழி இழந்தோம்! இனமிழந்தோம்!
  ஏட்டில் எழுத முடிந்திடுமோ?
  ஏதிலியாய் அலைகின்றோம்!" என்ற அடிகளில்
  நம்மவர் துயரை
  அப்படியே கொட்டி விட்டீர்!

  ReplyDelete
  Replies
  1. [co="DarkViolet"]வாங்கோ சகோதரர் யாழ்பாவாணன்!

   உங்கள் அன்பான வரவும் ஆழ்ந்த ரசனையும் மனதைத்தொடுகின்றன.

   துயர் கொட்டக்கொட்டத் தீராமல் ஊறுகிறது சகோதரரே!
   மிக்க நன்றி உங்கள் கருத்திற்கு![/co]

   Delete
 27. நேர்மை மாறா நெஞ்சம் கொண்டோம்
  நேரில் காண அஞ்ச மாட்டோம்
  ஊரும் உறவும் மறந்து விட்டோம்
  உண்மையைத் தவிர சொல்ல மாட்டோம்
  பேதையின் அன்பை மறக்க மாட்டோம்
  பெண்ணே உன்னை விலக்க மாட்டேன்......

  உங்களின் பதிவுகளிக் காண எப்போதும் எதிர்பார்த்திருப்பேன்,தாமதம் தவிர்க்கிறேன்

  ReplyDelete
  Replies
  1. [co="DarkViolet"]வாங்கோ கவியாழி கண்ணதாசன்!
   சகோதரரே!..

   காணவில்லையே மறந்துவிட்டீர்களோ..
   வரவேண்டாமென இருந்துவிட்டீர்களோவென நினைத்துக் கேட்டேன்.

   அப்படியல்ல என்று வந்து நல்ல கவிதையால் கருத்திட்டீர்கள்!

   உங்கள் அன்பும் ஆதரவும் கண்டு கண்கள் கசிகிறது சகோ!

   //பேதையின் அன்பை மறக்க மாட்டோம்
   பெண்ணே உன்னை விலக்க மாட்டேன்......//

   பெண்ணே உன்னை விலக்க மாட்டோமென பன்மையில் கூறுங்கள்..
   உங்கள் அனைவரின் ஆதரவிலும்தான் இன்று உலகெல்லாம் பரந்திருந்தாலும், நாமும் நம்பிக்கையில் வாழ்கிறோம்..

   அன்பான வரவிற்கும் இனிய நற் கருத்திற்கும் என் மனமுவந்த நன்றிகள் சகோதரரே![/co]

   Delete
 28. உங்கள் வலைப்பக்கம் மிகவும் நேர்த்தியாகவும் ரசிக்கும்படியும் மகிழ்ச்சியாகவும் உள்ளது, வாழ்த்துக்கள்

  ReplyDelete
  Replies
  1. [co="DarkViolet"]மிக்க நன்றி![/co]

   Delete
 29. கவிதை மனதை தொட்டது.இதோ இமாவின் உலகம் நோக்கி பயணம்.

  ReplyDelete
  Replies
  1. :-) அங்கு உங்கள் கருத்து கண்டேன். மிக்க நன்றி ஆசியா.

   Delete
  2. [co="DarkViolet"]வாங்கோ ஆசியா!

   வரவுகண்டு மனம் மகிழ்ந்தேன்.

   வந்தவுடனேயே பயணமோ...:))

   மிக்க நன்றி சகோதரி![/co]

   Delete
 30. தங்கள் கைவண்ணமும்
  இழப்புகளின் துயர சொல்லிப்போகும்
  கவிதையும் இன்பமும் துன்பமுமாய்
  மனதை அதிகம் பாதித்துப்போனது
  பகிர்வுக்கும் தொடரவும் மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

  ReplyDelete
  Replies
  1. [co="DarkViolet"]வணக்கம் ரமணி ஐயா!

   தாங்கள் கூறும் அளவிற்கு என்னால் வலிகளைக்கூறத் தெரியவில்லை.. முடியவில்லை.
   ஆயினும் சொன்னால் ஆறுமோ மனம் என்று இங்கு கூறிவிட்டேன்.

   உங்கள் அன்பான வரவும் ஆறுதல் வரிகளும் உளம் நிறைக்கின்றது.

   வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி ஐயா![/co]

   Delete
 31. க்விலிங் வேர்க் வழக்கம் போல அசத்தல்...... கவிதை.... என்ன சொல்ல?? அது அப்படியே ஆகிவிட்டது....!!

  ReplyDelete
  Replies
  1. [co="DarkViolet"]மணி... க்விலிங் ரசனைக்கு மிக்க நன்றி!

   கவிதை... எனை மீறிய எனக்குள் அடங்க மறுக்கும் உணர்வு...
   என்ன செய்ய ... மாற்றம் தேடுகிறேன்...[/co]

   Delete
 32. பதிவர் அறிமுகத்தில் அறிமுகமாகியிருக்கும் இமா ரீச்சருக்கு வாழ்த்துக்கள். இதற்கு முன்னர் அவரின் தளம் சென்றதாக ஞாபகம் இல்லை! நீங்கள் சொல்வதைப் பார்க்கும் போது அவரின் பதிவுகளைப் படிக்க ஆவலாக உள்ளது.

  அறிமுகம் செய்து வைத்தமைக்கு நன்றிகள் இளமதி.

  ReplyDelete
  Replies
  1. [co="DarkViolet"]பாருங்கோ மணி! இங்கே பதிவுடன் பகிரும் பதிவர் என நான் குறிப்பிட்டு நடைமுறைப் படுத்தலின் பலாபலனை..:)

   இமா ரீச்சரை இப்பதான் உங்களுக்கும் தெரிய வந்திருக்கு...:0).
   மெத்தச் சந்தோசம்...:)))

   போய்ப் பாருங்கள் இமாவின் தளத்தினை..
   நிறைய அறியலாம்..:)

   உங்கள் அன்பான வரவிற்கும் நல்ல கருத்துப் பகிர்தலுக்கும், வாழ்த்துகளுக்கும் என் உளமார்ந்த இனிய நன்றிகள் மணி![/co]

   Delete
  2. //இமா ரீச்சருக்கு வாழ்த்துக்கள்.// மிக்க நன்றி ஜீ... //என் உளமார்ந்த இனிய நன்றிகள் மணி!// !!!! இப்ப நான் மாத்தியோசிக்க வேண்டிக் கிடக்கே!! மணி அடிச்சிட்டுது மூளைக்குள்ள. ;)) மிக்க நன்றி ஜீவன் / மணி.

   //நீங்கள் சொல்வதைப் பார்க்கும் போது அவரின் பதிவுகளைப் படிக்க ஆவலாக உள்ளது.// ;))) இளமதியை நம்பாதைங்கோ. நான் எப்பவாவது ஆடிக்கொருக்கா ஆவணிக்கொருக்கா வந்து போடுறது என்னவென்று விளங்காமல் அவவே குழம்பிப்போயிருக்கிறா. ;)))

   Delete
 33. இழப்பின் வலியை
  உணர்த்தும்
  அருமையான படைப்பு

  ReplyDelete
  Replies
  1. [co="DarkViolet"]வணக்கம் வைத்தியர் ஐயா!
   உண்மைதான் ஐயா.. இல்லாமலே இருப்பது தெரிவதில்லை. இருந்து இழப்பது... கொடுமை ஐயா!

   உங்கள் அன்பான வரவும் உணர்வுபூர்வமான கருத்திற்கும்
   மனமார்ந்த நன்றிகள் ஐயா![/co]

   Delete
 34. http://blogintamil.blogspot.in/2013/09/blog-post_1266.html

  இன்றைய 9.9.2013 வலைச்சர அறிமுகத்துக்குப் பாராட்டுக்கள். வாழ்த்துகள்.

  ReplyDelete
  Replies
  1. [co="OrangeRed"]வணக்கம் வை.கோ ஐயா!...

   தங்களின் வரவு கண்டு மகிழ்ச்சி! அதேசமயம் தாங்கள் கொண்டு வந்த செய்தி மேலும் இரட்டிப்பான மகிழ்வைத் தருகிறது!...

   நான் இன்னும் அங்கு சென்று பார்க்கவில்லை..
   இதோ பார்க்கின்றேன்.

   தங்களின் அன்பான வரவிற்கும் தகவலுக்கும் வாழ்த்திற்கும் மனம் நிறைந்த இனிய நன்றிகள் ஐயா![/co]

   Delete
 35. 45/1/6 ஏகாதஸி மஹிமை
  http://gopu1949.blogspot.in/2013/09/45-1-6.html

  45/2/6 புதுமுகங்கள் [கிளியின் பார்வையில்]
  http://gopu1949.blogspot.in/2013/09/45-2-6.html

  45/3/6 சாதனைக் கிளிகள்
  http://gopu1949.blogspot.in/2013/09/45-3-6.html

  45/4/6 அமைதிப் புறாக்கள்
  http://gopu1949.blogspot.in/2013/09/45-4-6.html

  45/5/6 சிட்டுக்குருவிகள்
  http://gopu1949.blogspot.in/2013/09/45-5-6.html

  45/6/6 சீறிடும் சிங்கங்கள்
  http://gopu1949.blogspot.in/2013/09/45-1-6.html

  மேலேயுள்ள இணைப்புக்களில் தங்களின் அன்புத்தோழிகள் + தோழர்கள் பற்றிய நிறைய சுவாரஸ்யமான தகவல்கள் உள்ளன. இது தங்கள் தகவலுக்காக மட்டுமே. நேர அவகாசமும் விருப்பமும் இருந்தால் படித்துப்பாருங்கள். பல்வேறு படங்களும் உள்ளன. கட்டாயம் ஏதும் இல்லை. உங்கள் இஷ்டப்படி செய்யவும்.

  ReplyDelete
 36. //இது பல மாதங்களுக்கு முன்னர் செய்த
  க்விலிங் கைவேலையில் ஒன்று...//

  மிகவும் அழகாக உள்ளது. கைவேலை செய்துவரும் கைகளுக்கு என் மனமார்ந்த பாராட்டுக்கள்.

  ReplyDelete
 37. இன்னும் என்ன?

  படித்ததும் என்னையறியாமல் என் கண்களில் கண்ணீர்.

  நிலைமை மாறிட, பழமை திரும்பிட என் மனமார்ந்த பிரார்த்தனைகள்.

  இனிய பிள்ளையார் சதுர்த்தி நல்வாழ்த்துகள்.

  ReplyDelete
  Replies
  1. [co="DarkViolet"]தங்களின் வரவிற்கும் நற்கருத்துகளுக்கும் மிக்க நன்றி ஐயா!

   விநாயகர் அருள் உங்களுக்கும் கிடைத்திட வேண்டுகிறேன்....[/co]

   Delete
 38. இன்றுதான் உங்கள் பிளாக் பார்த்தேன் அனைத்தும் அருமையான பதிவுகள் ...

  ReplyDelete
  Replies
  1. [co="LimeGreen"]வணக்கம் சகோதரர் ராஜா! வாருங்கள்!.. தங்கள் வரவு நல்வரவாகட்டும்!...

   முதன்முறையாக இங்கு உங்கள் வருகை... மிக்க மகிழ்ச்சி!

   தங்கள் அன்பான வரவிற்கும் நல்ல ரசனைக்கும் உளமார்ந்த நன்றியும் வாழ்த்துக்களும் சகோ![/co]

   Delete
 39. வணக்கம் சகோதரி, என்னுடய முதல் வருகை. கவிதை நெஞ்சை நெகிழ வைக்கிறது. ஒவ்வொரு வரியும் மனதை அழுத்துகிறது. இதுவே படைப்பிற்கான வெற்றி. இமாவின் உலகத்திற்கு அழைத்து சென்றமைக்கு நன்றிகள்.வலைப்பக்கத்திற்கு புதியவன் தங்கள் வழிகாட்டி வாழ்த்துங்கள் வளர்கிறேன்.. பகிர்வுக்கு நன்றி.

  ReplyDelete
  Replies
  1. [co="Green"]வணக்கம் சகோதரர் பாண்டியன்! வாருங்கள்!.. தங்களின் வரவும் நல்வரவாகட்டும்!...
   வருகை கண்டு மிக்க மகிழ்ச்சி!

   உங்களின் ரசனை மனதிற்கு நிறைவைத் தருகிறது. நானும் இவ்வலைப்பூவினை ஆரம்பித்து இன்னும் ஒரு வருடமும் ஆகவில்லை. இபொழுதுதான் ஒவ்வோர் படியாக ஏறுகிறேன்.
   வாருங்கள். சேர்ந்தே பயணிப்போம்...

   தங்கள் அன்பான வரவிற்கும் நல்ல ரசனை, வாழ்த்திற்கும்
   என் உளமார்ந்த நன்றியும் வாழ்த்துக்களும் சகோ!...[/co]

   Delete
  2. மிக்க நன்றி பாண்டியன்.

   Delete
 40. "....கண்மூடிடத்தாங்கும் தோழமை இழந்தோம்!
  மண்ணிழந்தோம் எம்மகிழ்வும் இழந்தோமே!.."
  உள்ள நிலைமையை அப்படியே படம்பிடித்துக்காட்டும் வரிகளைக் கவிதையாகக் கோர்த்திருக்கிறீர்கள்.
  நிலைமை மாறி நல்வாழ்வு மலர்ந்திட இறைவனை வேண்டுகிறேன்

  ReplyDelete
 41. "....கண்மூடிடத்தாங்கும் தோழமை இழந்தோம்!
  மண்ணிழந்தோம் எம்மகிழ்வும் இழந்தோமே!.."
  உள்ள நிலைமையை அப்படியே படம்பிடித்துக்காட்டும் வரிகளைக் கவிதையாகக் கோர்த்திருக்கிறீர்கள்.
  நிலைமை மாறி நல்வாழ்வு மலர்ந்திட இறைவனை வேண்டுகிறேன்

  ReplyDelete
  Replies
  1. [co="DarkGreen"]வணக்கம் சகோதரர் விய பதி!
   வாருங்கள்!..
   தங்கள் வரவுகண்டு மகிழ்கின்றேன்!...

   தங்கள் அன்பான வரவிற்கும் உளமார்ந்த கருத்துப்பகிர்வினுக்கும்
   என் மனமார்ந்த நன்றியும் வாழ்த்துக்களும் சகோ!...[/co]

   Delete
 42. மிக அருமையான் க்வில்லிங்
  கவிதை படித்து மன கனத்து போச்சு இளமதி

  மிகசிறப்பாக நம்ம இமா அக்காவை அறிமுகப்படுத்தி இருக்கீங்க,

  ReplyDelete
  Replies
  1. நன்றி ஜலீ.

   Delete
  2. வாங்கோ ஜலீலா!...

   அன்பான வரவிற்கும் இனிய நற் கருத்திற்கும் என் மனமுவந்த நன்றிகள்!..

   Delete
 43. சொந்த மணை இழந்தவர்களின் மனப்பொருமலே இங்கு கனம் கொண்ட கவிதையாய் உருமாறித்தெரிகிறதநல்ல கிவிலிங் வேலைப்பாடு./

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் விமலன்!

   உங்களின் அன்பான வரவிற்கும் இனிய நற் கருத்திற்கும் என் மனமுவந்த நன்றிகள் சகோ!

   Delete

உங்களின் அன்பான வரவிற்கும் ஊக்கந்தரும்
இனிய கருத்திற்கும் என் உளமார்ந்த நன்றி! _()_