Pages

Sep 27, 2013

சிரிக்கும் பூவே!..

வின்டேஜ் படத்தில் செய்த க்விலிங்!.

நேற்றுத் தனது முதலாவது பிறந்த நாளைக் கண்ட
என் உறவினரின் மகளிற்காகச் செய்த 
க்விலிங் வாழ்த்து மடல் இது!
~~~~~~~~~~

 சிரிக்கும் பூவே!
 ☼☼☼☼☼☼☼

சிரிக்கும் பூவே! சின்னச் சிட்டே!
தரிக்கும் மணியே! தழைக்கும் தமிழே!
விரிக்கும் விழியில் வியக்கும் அழகே!
உரைக்கும் சொல்லை உள்ளம் பதிப்பாய்!

அன்பாய் அனைத்தும் ஆண்டிட வேண்டும்!
அறிவாய் எதையும் அளந்திட வேண்டும் !
பண்பாய்ப் பணிவாய்ப் பழகிட வேண்டும்!
பாங்குடன் செயல்களைப் படைத்திட வேண்டும்!

இன்தமிழ் மொழியைக் கற்றிட வேண்டும்!
இனிமையாய் இயல்பாய் இருந்திட வேண்டும்!
எம்உயிர் நாட்டினை இறைஞ்சிட வேண்டும்!
என்றும் உணர்வுடன் இயங்கிட வேண்டும்!.
 ********சிந்தை வயலில் தெளிவு விதையாக
விந்தை விளையும் விரைந்து!
********


பதிவோடு பகிரும் பதிவர்
~~~~~~~~

வலையுலகில் எனது அன்புக்குரிய இன்னுமொரு நண்பியாகிய
 மகி அவர்களின் Mahi's Space என்னும் வலைப்பூவினை இம்முறை பதிவோடு பகிரும் பதிவராக உங்களுடன் பகிர்ந்துகொள்வதில் 
மிக்க மகிழ்வடைகிறேன்.


http://mahikitchen.blogspot.de/ 

 மகி சமையற்கலையில் வல்லுநர். தானறிந்த சமையற் குறிப்புகளையும் சுய முயற்சியாக மிகுந்த ரசனையுடன் செய்து பார்க்கும் புதுவிதமான சமையற் குறிப்புகளையும் எம்முடன் ஆர்வமுடன் பகிர்ந்து வருகிறார்.

சமையல் மட்டுமல்லாது கைவேலைகள், வீட்டுத்தோட்டம், வெளியே மனதிற்கு மிக மகிழ்ச்சியைத்தரும் இயற்கைக் காட்சிகளைப் படம் பிடித்தல் போன்ற பல விடயங்களில் மிகவும் சாமர்த்தியசாலி. அவற்றை அவ்வப்போது எம்முடன் தனது வலையில் பகிர்ந்தும் வருகிறார்.

வீட்டுத் தோட்டத்திற்கென்று அவர் நேரம் ஒதுக்கிச் செய்யும் முயற்சிகளை அவரின் வலைப்பூவில் தோட்டம் என்னும் பகுதியில் பாருங்கள்.. வியந்து போவீர்கள்!..
உண்மையாகவே உள்ளங்கை இடத்திலும் தனது அயரா முயற்சியால் கிடைக்கும் அறுவடையை நம்முடன் அத்தனை மகிழ்ச்சியாக அங்கு பகிர்ந்துகொள்கின்றார்!

அனைத்தையும் மகி எம்முடன் பகிர்ந்துகொள்ளும் விதமே அலாதியானது. அத்தனை நகைச்சுவை உணர்வோடு படிப்பவர்களை கவரும் விதமாக எழுதுவதிலும் மிகவும் திறமையானவர்….:)

இவர் இதே பெயரில் ஆங்கில மொழியிலும் சமையற்கலை வலைப்பூவினை வைத்திருக்கின்றார்.

இவரைப் பற்றி நான் சொல்வதைவிட நீங்களே மகியின் வலைத்தளங்களைப் பார்த்தால் மேலும் அறிந்துகொள்வீர்கள்!

மகியின் வலைப்பூக்களைத் தெரியாதோர் இருக்கமாட்டார்கள்.  இருந்தும் இதுவரை அறியாதோர் இருப்பின் அவரின் தளங்களுக்கும் சென்று அவரையும்  ஊக்குவிக்கலாமென இவற்றை இங்கு மகிழ்வுடன் பகிர்ந்துகொள்கின்றேன்!...

மிக்க நன்றி அன்பு உறவுகளே!
__()__

86 comments:

 1. சக பதிவரின் வலைதளத்தை அறிமுகம் செய்தது சிறப்பு... நன்றிகள்... வாழ்த்துக்கள்...

  ReplyDelete
  Replies
  1. [co="DarkGreen"]வணக்கம் சகோதரர் தனபாலன்!..
   உங்கள் உடனடி வரவும் நல்ல கருத்தும் வாழ்த்தும்
   மிகுந்த மகிழ்வினைத் தருகிறது.

   மிக்க நன்றி!...[/co]

   Delete
  2. நன்றி தனபாலன் சார்!

   Delete
 2. அனைத்தும் அருமை. ”சிரிக்கும் பூவே” அழகோ அழகு.

  மனம் நிறைந்த பாராட்டுக்கள். அன்பான இனிய நல்வாழ்த்துகள்.

  ReplyDelete
  Replies
  1. [co="DarkGreen"]வணக்கம் ஐயா!.

   அன்பான உங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும் மகிழ்ச்சி!
   மிக்க நன்றி ஐயா!...[/co]

   Delete
 3. aahaa!!! ஊஞ்சலாடும் குட்டிப்பெண் மிக அழகான கார்ட் பொருத்தமான படத்தேர்வு..
  கவிதையும் அபாரம் !!!
  மகிக்கு வாழ்த்துக்கள் :))

  ReplyDelete
  Replies
  1. தேங்க்யூ ஏஞ்சல் அக்கா! :)

   Delete
  2. [co="DarkGreen"]வணக்கம் அஞ்சு!...:)

   உங்களின் அன்பான வரவும் அழகான ரசனையும் கண்டு மனம் மகிழ்ச்சியில் குதிக்கிறது..:)

   வாழ்த்துக்கு மகிழ்ச்சியும் என் நன்றியும் அஞ்சு!...[/co]

   Delete
 4. சிரிக்கும் பூவே! சின்னச் சிட்டே!
  அருமையாய் இருக்கிறது..பாராட்டுக்கள்..

  ReplyDelete
 5. அனைத்தையும் மகி எம்முடன் பகிர்ந்துகொள்ளும் விதமே அலாதியானது. அத்தனை நகைச்சுவை உணர்வோடு படிப்பவர்களை கவரும் விதமாக எழுதுவதிலும் மிகவும் திறமையானவர்….:)

  மகி எனக்கு மிகவும் அருமையான பதிவர்.. அவரது அறிமுகத்திற்கு இனிய வாழ்த்துகள்..பாராட்டுக்கள்..!

  ReplyDelete
  Replies
  1. இராஜேஸ்வரி மேடம், உங்கள் அன்பான வார்த்தைகளுக்கு என் மனமார்ந்த நன்றிகள்! :)

   Delete
  2. [co="DarkGreen"]வணக்கம் இராஜராஜேஸ்வரி!..

   அன்பான உங்கள் வரவுக்கும் பாராட்டிற்கும்
   என் மனமார்ந்த மகிழ்ச்சியும் நன்றியும் சகோதரி!..[/co]

   Delete
 6. உங்கள் அழகிய கைவேலைக்கும் கவிதைக்கும் இனிய உணர்வளித்த
  அந்த இளஞ் சிட்டுக்கு முதலில் என் வாழ்த்துக்கள் தோழி .மிக அழகாக
  இரண்டு அன்பளிப்பை வழங்கிக் கௌரவித்துள்ளீர்கள் .கூடவே இன்றைய அறிமுகமும் வெகு சிறப்பு .மொத்தத்தில் உங்களுக்கு என் அன்பு கலந்த பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் உரித்தாகட்டும் தோழி .

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றி அம்பாளடியாள்! :)

   Delete
  2. [co="DarkGreen"]வணக்கம் அம்பாள் அடியாள்!.

   சிட்டுக்கும் வாழ்த்துரைத்து
   சில்லென்ற உணர்வினைப் பகிர்ந்த
   செந்தமிழ்க் காரிகையே!
   உந்தன் அன்பில் உவக்கின்றேன் நான்!

   அன்பான உங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
   மட்டற்ற மகிழ்ச்சியும் என் நன்றியும் தோழி!..[/co]

   Delete
 7. அழகிய க்விலிங்
  அருமையான வாழ்த்துக் கவி....சகோ

  இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்
  அந்த மழலைக்கு உரித்தாகட்டும்....

  அறிமுகப் பதிவருக்கு வாழ்த்துக்கள் நானும் போய் இருக்கின்றேன்

  அனைத்தும் அருமை வாழ்த்துக்கள் சகோ

  ReplyDelete
  Replies
  1. //அறிமுகப் பதிவருக்கு வாழ்த்துக்கள் நானும் போய் இருக்கின்றேன் // தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி திரு.சீராளன்!

   Delete
  2. [co="DarkGreen"]வணக்கம் என் இனிய உறவே சீராளனே!.

   உமது வரவும் ரசனையும் வாழ்த்தும் உள்ளத்தில் இனிக்கிறது!

   அன்பான வாழ்த்துக்கள் அனைத்திற்கும் மனமார்ந்த நன்றிகள் சகோ!..[/co]

   Delete
 8. Replies
  1. [co="DarkGreen"]வணக்கம் சகோ சீனி!.

   அன்பான உங்கள் வரவுக்கும் மனமார்ந்த ரசனைக்கும்
   என் மகிழ்ச்சியும் நன்றியும்!...[/co]

   Delete
 9. ஆஹா!! கவிதையும் க்வில்லிங்கையும் ரசிக்க வந்தால் இங்கே இன்னொரு இன்ப அதிர்ச்சியைக் குடுத்திருக்கீங்களே இளமதி?! :)))

  எனது வலைப்பூவைக் குறிப்பிட்டமைக்கும், இவ்வளவு நீண்டதொரு அறிமுகத்துக்கும் நன்றியை "நன்றி!" என்ற ஒரு வார்த்தையில் அடக்கிவிட முடியாது. வார்த்தைப் பஞ்சம் வந்து என் வாயை அடைத்துவிட்டது!! ;)

  க்வில்லிங்கில் ஊஞ்சலாடும் சிறுமியைக் காண்கையில் என் மனமும் ஊஞ்சலாடுகிறது. அழகான கைவேலை, அருமையான கவிதை..உங்கள் உறவினரின் குட்டிப்பெண் வாழ்வில் எல்லா வளங்களும் நலங்களும் பெற்று நல்வாழ்வு வாழ வாழ்த்துக்கள்!

  நன்றி இளமதி! நன்றி!

  ReplyDelete
  Replies
  1. [co="Crimson"]வாங்கோ!... வணக்கம் மகி!..

   [im]https://encrypted-tbn1.gstatic.com/images?q=tbn:ANd9GcTXzBVvNg1ENb06u20EOppijFp8jRA4ZhNztsmHbN9CQHgBCZSn[/im]

   உங்கள் வலைப்பூப் பகிர்வினை எனக்குப் புரிந்தவரை எழுதியுள்ளேன்..:)
   தவறுகள் இருந்தால் பொறுத்துக்கொள்ளுங்கள்!.
   உங்கள் வலைப்பூவினையும் இங்கு பகிரக் கிடைத்தமை எனக்கும் மனமகிழ்வே!...:)

   உங்கள் அனபான வரவும் மகிழ்வான கருத்தும் இன்னும் உற்சாகமாக எனக்கும் இருக்கிறது. உங்களின் வாழ்த்தையும் அவர்களிடம் சேர்த்துவிடுகிறேன்.

   உங்களின் அன்பிற்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி மகி!...[/co]

   Delete
 10. மகியை அறிமுகப்படுத்திது அருமை....

  ReplyDelete
  Replies
  1. [co="DarkGreen"]வணக்கம் சகோ மனோ!.

   அன்பான உங்கள் வரவுக்கும் ரசனைக்கும்
   என் மனமார்ந்த மகிழ்ச்சியும் நன்றியும்!...[/co]

   Delete
 11. நல்ல கிவிலிங் வேலைப்பாடு,வாழ்த்துக்கள்.பிறந்த நாள் சிறக்க வேண்டி செய்த கிவிலிங்கின் உள் மனவெளி மிகவும் பெரியதாய்/வலை அறிமுகம் நன்று/

  ReplyDelete
  Replies
  1. [co="DarkGreen"]வணக்கம் சகோதரர் விமலன்!.

   அன்பான உங்கள் வரவும் கலாரசனையும் மனத்தில் ஊக்கத்தைத் தருகிறது.!

   வாழ்த்துக்கள் அனைத்திற்கும் மனப்பூர்வமான நன்றிகள் சகோ!..[/co]

   Delete
  2. //வலை அறிமுகம் நன்று/// நன்றி திரு.விமலன் அவர்களே!

   Delete
 12. மிகவும் அழகான க்விலிங் கார்ட் இளமதி.மாமரத்தில் கயிறு கட்டி,ஆடிய ஞாபகத்தை நினைவுபடுத்தியது.அழகாக செய்திருக்கிறீங்க.கலர்த்தேர்வு நன்றாக‌ இருக்கு."சிரிக்கும்பூவே சின்னச்சிட்டே..கவிதை நன்றாக எழுதியிருக்கிறீங்க.
  "சிந்தை வயலில்...,அழகான 2வரிக்கவிதை.பொருத்தமாய் ஒருபடம்.
  உங்க உறவினரின் மகளுக்கு "பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்.

  ReplyDelete
  Replies
  1. [co="DarkGreen"]வணக்கம்!... வாங்கோ அம்மு!..

   மாமரத்திலை கட்டியிருந்த ஊஞ்சலில ஆட அக்காவோட சண்டைபிடிச்சு ஆடினது எனக்கும் தெரியுமே..;)..
   (தெரியாட்டியும் சும்மாவேனும் சொல்லிவைக்கோணும்..:))).. )

   அம்மு.. உங்கள் அன்பான வரவும் நல்ல மலரும் நினைவுகளும் சந்தோசமாக இருக்கு! 2வரி ரசிப்புக்கும் மகிழ்ச்சி..;)

   அழகிய கருத்துக்கும், வாழ்த்துக்களுக்கும்.. முக்கியமா அந்தக்குட்டிக்கும் அவையின் அப்பா அம்மாவிடம் சொல்லீட்டன்.. மிக்க நன்றி அம்மு!..[/co]

   Delete
 13. //அத்தனை நகைச்சுவை உணர்வோடு படிப்பவர்களை கவரும் விதமாக எழுதுவதிலும் மிகவும் திறமையானவர்….://உண்மைதான்.அவர் கோவைத்தமிழில் எழுதுவது ரெம்பபிடிக்கும். அருமையான பதிவர் மகி. மகிக்கு என் வாழ்த்துக்கள்.
  அறிமுகப்படுத்திய உங்களுக்கு வாழ்த்துக்கள்,நன்றி.

  ReplyDelete
  Replies
  1. [co="DarkGreen"]மகியைப்பற்றி உங்களுக்குத்தெரியாததா.. நீங்க அவவின் ’விசிறி’ ஆச்சே..:)))

   வாழ்த்திற்கு மீண்டும் என் நன்றி அம்மு!..[/co]

   Delete
  2. அம்முலு, நன்றி! :)

   Delete
 14. க்வில்லிங் செமையாக உள்ளது..அறிமுகம் அடாடா..இந்த முறை மகியா?கூடவே அவரது பதிவுகளில் உங்களுக்கு பிடித்த பதிவையும் சுட்டிகளுடன் தந்து இருக்கலாம்.அடுத்த முயற்சியில் செய்யுங்கள்.தொடருங்கள் இளமதி

  ReplyDelete
  Replies
  1. [co="DarkGreen"]வணக்கம் ஸாதிகா!. வாங்கோ!..

   உங்களின் அன்பான வரவும் அழகான ரசனையும் பார்க்க மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது..:).

   பதிவர்களின் எனைக் கவர்ந்த பதிவுச் சுட்டிகளை இணைப்பது..நல்ல யோசனைதான் ஸாதிகா!...
   ஆனா கூடவே ஒரு பயமும் இருக்கே... அவங்களே ஏன் எனது ஏனைய பதிவுகள் மொக்கையான்னு என்மீதே கோவிச்சுக்குகிட்டா... யோசனை... பண்ணுகிறேன்...:).
   நல்ல யோசனை. என் பயத்துக்கும் யோசனை சொல்லுங்க...:)

   அன்பான வரவிற்கும் நல்ல கருத்துக்கும் மனமார்ந்த நன்றி ஸாதிகா..! [/co]

   Delete
  2. ஸாதிகாக்கா, தேங்க்யூ! :)

   Delete
 15. வாழ்த்து மடல் வாழ்த்து கவிதை இரண்டுமே அருமையோ அருமை...

  ReplyDelete
  Replies
  1. [co="DarkGreen"]வணக்கம் பிரியா!.

   அன்பான உங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
   மிக்க மகிழ்ச்சியும் நன்றியும் தோழி!... [/co]

   Delete
 16. ஹை! அருமையாக இருக்கிறதே க்விலிங். அந்தக் குழைந்தை லக்கி. வாழ்த்தும் அருமை. அவரது வளமான எதிர்கால வாழ்வுக்காக எனது பிரார்த்தைகளும் வாழ்த்துக்களும்.
  // சிந்தை வயலில் தெளிவு விதையாக
  விந்தை விளையும் விரைந்து!// உண்மை.
  மகீ... :-) மகிழ்ச்சி. வாழ்த்துக்கள்.

  ReplyDelete
  Replies
  1. [co="DarkGreen"]வாங்கோ..! வணக்கம் இமா!...:).

   உங்கள் அன்பான வரவும் வாழ்த்துங்கூட - அந்தச் சிட்டுக்குருவிக்கும் -
   மெத்தச் சந்தோசமாய் இருக்கு..:)

   இருவரி எழுதுவது எனக்குள் மிகுந்த ஆவலான ஒன்று!

   அந்தக் கவி வரியைச் சொன்னன்.. அதுக்காக இங்கை 2 வரிக்குமேல கதைக்கிறனெண்டு சொல்லப்படாது சொல்லீட்டன்..:))).

   உங்கள் அன்பிற்கும் வாழ்த்துகளுக்கும் உளமார்ந்த நன்றி இமா!..

   (அவ்வ்வ்வ்... ரீச்சர்... பார்த்து.. ஸ்பெல்லிங் மிஸ்டேக்கூஊஊ...;)))
   நான் எதையும் உத்துப் பாக்கேலை..:))... [/co]

   Delete
  2. தேங்க் யூ இமாஆ! ;) :)

   Delete
 17. கைவண்ணமும் கவிவண்ணமும்
  அருமையிலும் அருமை
  சக பதிவரை அறிமுகப் படுத்திய பாங்கு
  உள்ளம கவர்ந்தது
  பகிர்வுக்கும் தொடரவும்
  மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

  ReplyDelete
  Replies
  1. [co="DarkGreen"]வணக்கம் ரமணி ஐயா!.

   அன்பான உங்கள் வரவும் இனிய நற் கருத்தும் மட்டற்ற மகிழ்வாயுள்ளது ஐயா!

   உண்மையிலும் உங்களைப் போன்றோரின் ஊக்குவிப்பாலேயே நான் மேலும் வலையுலகில் வாழ்கின்றேன்...

   உங்களின் அன்பான வாழ்த்துகளுக்கு உளமார்ந்த நன்றி ஐயா!... [/co]

   Delete
  2. நன்றி திரு.ரமணி அவர்களே!

   Delete
 18. மிகவும் அழகான க்விலிங் ... அருமையாக இருக்கிறது...வாழ்த்துக்கள்...

  ReplyDelete
  Replies
  1. [co="DarkGreen"]வணக்கம் விஜி பார்த்திபன்!...

   அன்பான உங்கள் வரவுக்கும் ரசனைக்கும் வாழ்த்துக்கும்
   மிக்க மகிழ்ச்சியும் என் நன்றியும்!... [/co]

   Delete
 19. ஹய்யோ... அப்படியே அள்ளி அணைக்கத்தூண்டும் அழகு க்வில்லிங் பாப்பா. ஊஞ்சலாடிப் பறக்கும் கவுன் கண்ணைப் பறிக்கும் அழகு. பாராட்டுகள் இளமதி. தழைக்கும் தமிழே என்று பாராட்டுக்குப் பின்னரான அன்பை அறிந்து மகிழ்கிறேன். என் நல்வாழ்த்துக்களும் உரித்தாகட்டும் அன்புக்குழந்தைக்கு.

  மகியின் வலைத்தள அறிமுகத்துக்கு நன்றி. வாழ்த்துக்கள் அவருக்கு. விரைவில் அவர் தளம் செல்கிறேன்.

  ReplyDelete
  Replies
  1. [co="DarkGreen"]வணக்கம்!.. வாங்கோ கீதமஞ்சரி!.

   ஹய்யோ!!!.. இம்முறை உங்கள் வரவு இங்கு பெற நான் என்ன தவம் செய்தேனோ!..
   அத்தனை மகிழ்வாயுள்ளது...:)

   உங்கள் ரசனையே எனக்கு அப்படி ஒரு ஊக்கச்சக்தி! கண்ணெதிரே காட்சிப்படுத்தி ரசனையை வர்ணிக்கின்றீர்கள். இந்தக் க்விலிங் செய்த பலனை இப்போ அடைந்தேன்...!..:).

   உங்கள் அழகிய ரசனைக்கும் பாராட்டிற்கும் மனம் நிறைந்த மகிழ்ச்சி தோழி!
   அன்பு வாழ்த்துகள் அனைத்திற்கும் உளமார்ந்த இனிய நன்றிகளும் உங்களுக்கு!.. [/co]

   Delete
  2. கீதமஞ்சரி, இங்கிருந்து அங்கே வந்ததுக்கும் அன்பான கருத்துக்கும் நன்றிகள்!

   Delete
 20. சுயநலமான இவ்வுலகில் நண்பர்களையும் அறிமுகப்படுத்தும் உங்கள் நல்லமனம் வாழ்க..

  ReplyDelete
  Replies
  1. [co="DarkGreen"]வணக்கம் சகோதரர் கலியப்பெருமாள்! வாங்கோ!

   என்ன நீண்ட நாட்களாகக் காணவில்லையே என நினைத்தேன்!...
   நீங்களும் பதிவேதும் போடக் காணவில்லையே...

   சகோ!.. வரும்போது என்ன கொண்டுவந்தோம் போகும்போது என்ன கொண்டு போவோம்...
   மத்தியில் நான், எனது எனக்கு மட்டும் என்னும் எண்ணம்.. எனக்கதில் துளியும் உடன்பாடில்லை.
   நான் மட்டும் வாழ்ந்தேன் என்றில்லாமல் அடுத்தவர்க்கு இயன்றவரை இருக்கும்வரை நல்லதை செய்துவிடவேண்டும் இதுமட்டுமே நோக்கம். மகிழ்வோடு செய்கிறேன்...:)

   உங்கள் அன்பான வரவிற்கும் வாழ்த்திற்கு உளமார்ந்த நன்றி சகோ!.. [/co]

   Delete
 21. எவ்வளவு அழகான வாழ்த்துமடல்! அன்பு நெஞ்சங்களுக்கு நீங்கள் செய்யும் வாழ்த்து அட்டைகள் எல்லாம் உங்கள் அன்பை அழகாய்ச் சொல்லுகின்றன.
  'சிரிக்கும் பூவே' சிந்தை கவர்கிறது..ஒவ்வொரு வரியும் ஒரு முத்து, மிக மிக அருமை தோழி! மகி அவர்களின் பதிவுகள்சில பார்த்திருக்கிறேன், இனிமேல் தொடர்கிறேன். நன்றி இளமதி!

  ReplyDelete
  Replies
  1. கிரேஸ், நன்றிங்க!

   Delete
  2. [co="DarkGreen"]வணக்கம் கிரேஸ்!.

   அன்பான உங்கள் வரவும் இனிய ரசனையும் மனதை நிறைக்கின்றது தோழி!

   உங்கள் வாழ்த்துக்கும் மிக்க மகிழ்ச்சியும் என் நன்றியும்!..[/co]

   Delete
 22. அருமையான க்விலிங் வேலை படத்தின் காட்சியைப் போலவே பிறந்த நாள் கண்ட அச்சின்னஞ்சிறு சிட்டு இன்பம் எனும் வானத்தில் சிறகடித்துப் பறக்க எல்லாவல்ல இறைவனிடம் வேண்டிக்கொள்கிறேன். //அன்பாய் அனைத்தும் ஆண்டிட வேண்டும்!
  அறிவாய் எதையும் அளந்திட வேண்டும் !// தங்களின் கவிவரிகளின் மூலமே வாழ்த்துகிறேன். //இன்தமிழ் மொழியைக் கற்றிட வேண்டும்!
  இனிமையாய் இயல்பாய் இருந்திட வேண்டும்!// தங்களின் தமிழ்ப்பற்றையும் இவ்வரிகள் பிரதிப்பளிக்கின்றன. மகி அவர்களின் வலைத்தளத்திற்கு இதோ புறப்படுகிறேன், சிறப்பான பதிவுக்கு நன்றிகள் சகோதரி.

  ReplyDelete
  Replies
  1. பாண்டியன், என் வலைப்பூவுக்கு வந்து, கருத்தும் தந்தமைக்கு மனமார்ந்த நன்றிகள்!

   Delete
  2. [co="DarkGreen"]வணக்கம் பாண்டியன்!.

   உங்களின் வாழ்த்தினையும் அந்தச் சிட்டுக்கு உரிய நேரத்தில் சேர்த்துவிட்டேன் சகோ!..

   அன்பான உங்கள் வரவும் நல் ரசனையும் கண்டு மிக்க மகிழ்ச்சி எனக்கும்..
   வாழ்த்துக்கும் மிக்க நன்றி சகோ!.[/co]

   Delete
 23. அருமையான க்விலிங் வேலை படத்தின் காட்சியைப் போலவே பிறந்த நாள் கண்ட அச்சின்னஞ்சிறு சிட்டு இன்பம் எனும் வானத்தில் சிறகடித்துப் பறக்க எல்லாவல்ல இறைவனிடம் வேண்டிக்கொள்கிறேன். //அன்பாய் அனைத்தும் ஆண்டிட வேண்டும்!
  அறிவாய் எதையும் அளந்திட வேண்டும் !// தங்களின் கவிவரிகளின் மூலமே வாழ்த்துகிறேன். //இன்தமிழ் மொழியைக் கற்றிட வேண்டும்!
  இனிமையாய் இயல்பாய் இருந்திட வேண்டும்!// தங்களின் தமிழ்ப்பற்றையும் இவ்வரிகள் பிரதிப்பளிக்கின்றன. மகி அவர்களின் வலைத்தளத்திற்கு இதோ புறப்படுகிறேன், சிறப்பான பதிவுக்கு நன்றிகள் சகோதரி.

  ReplyDelete
 24. சிறு பிள்ளை பருவத்தை நினைவுபடுத்திப்போகும் அழகிய தங்கள் கைவண்ணம் அற்புதம்.
  தங்கள் வரிகளும் சிறப்புங்க தோழி.
  அறிமுகப்பதிவருக்கு வாழ்த்துக்கள்.

  ReplyDelete
  Replies
  1. நன்றிங்க!

   Delete
  2. [co="DarkGreen"]வணக்கம் சசி கலா!.

   சிறு பிள்ளைப்பருவம், அவர்களின் உலகம் எத்தனை மகத்தானது... பிள்ளையாய் இருந்துவிட்டால் இல்லையொரு தொல்லையடா என்னும் பாடல் வரிகள் எனக்குப் பிடித்த ஒன்று..:)

   உங்கள் அன்பான வரவுக்கும் வாழ்த்துக்கும்
   மிக்க மகிழ்ச்சியும் என் நன்றியும் தோழி!..[/co]

   Delete
 25. உங்கள் [அழகிய பாடல் இங்கு ஒலிக்கிறது.
  http://www.youtube.com/watch?v=jHFz0_vdYoQ
  சுப்பு தாத்தா.

  ReplyDelete
  Replies
  1. [co="OrangeRed"]ஐயா வணக்கம்!...

   என் பாடல் அழகானது உங்களால் இப்போதுதான் ஐயா!..

   என் மகிழ்ச்சியை எவ்வாறு உங்களுக்குத் தெரிவிப்பது...
   உங்கள் அன்பில் உறைந்து போகின்றேன்!..

   உங்களுக்காகவே உங்கள் குரலில் கேட்பதற்காகவேனும்
   இன்னும் இன்னும் எழுதிடத் தோன்றுகிறது....

   மிக்க மிக்க நன்றி ஐயா!
   மேலும் மேலும் உங்கள் திறமை சிறக்க
   உடல் உள நலமோடு நீங்கள் நீடூழி வாழ்ந்திட உளமார இறைவனிடம் இறைஞ்சுகிறேன்!...

   என் பணிவான வணக்கமும் வாழ்த்துக்களும் ஐயா!..[/co]

   [im]http://greetings.webdunia.com/cards/tm/thank_you/thaks02.jpg[/im]

   Delete
  2. [co="OrangeRed"]ஐயா!... தாங்கள் பாடித்தந்த இப்பாடலையும் இங்கேயே பத்திரப் படுத்திப் பதிந்துள்ளேன்!..

   மீண்டும் அன்புடன் என் நன்றியும் உங்களுக்கு ஐயா!..[/co]

   Delete
 26. [co="blue green"] வாவ்வ்வ் சூப்பராக இருக்கு குழந்தையின் சட்டை... மிக அழகாக செய்திருக்கிறீங்க... வாழ்த்துக்கள் இளமதி.. முதலாவது பிறந்தநாள் காணும் பேபிக்கும் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். [/co]

  ReplyDelete
  Replies
  1. [co="DarkGreen"]ஆ... வணக்கம் வாங்கோ அதிரா...:)

   என்ன வந்து மின்னல் வேகத்தில எழுதீட்டு ஓடுறீங்க....:)))

   அட.. நில்லுங்கோ... என்னால ஓட முடியேல...;)..

   சட்டை நல்லா இருக்கோ.. வேணுமின்னா இந்தச் சட்டையை நீங்க எடுத்துக்கோங்க..:) பேபிக்கு இந்தச் சொக்கா வேணாம் - இது வேற சொக்கா..:)) சொக்கிளேற் குடுப்பம்..:))

   பேபிடை அப்பா அம்மாக்குச் சொல்லிவிடுறன் உங்க வாழ்த்தினையும்..

   மிக்க நன்றி அதிரா! [/co]

   Delete
 27. [co="blue green"]வழமைபோல கவிதையில் கலக்கிட்டீங்க... குறை சொல்ல முடியாமல் எழுதிட்டீங்க ((ஹா..ஹா..ஹா.. முறைக்காதீங்க :) பின்ன நாங்க ஆரு டமில்ல டி எடுத்தாட்களெல்லோ?:) எழுத்துப் பிழை எல்லாம் அப்பூடிக் கண்டு பிடிச்சிடுவோமாக்கும்:)))) [/co]

  ReplyDelete
 28. [co="blue green"] என்னாது இம்முறை சமையல் வல்லுனரா? அவரின் பெயர் மகியோ?:)) ஹையோ ஒவ்வொரு முறையும் புதுப் புதுப் பதிவரா அறிமுகம் செய்து வைக்கிறீங்க.. :) இப்பவே போகிறேன்ன்.. மகி வீட்டுக்கு... :) ஆவ்வ் வாழ்த்துக்கள் மகி... [/co]

  ReplyDelete
  Replies
  1. இப்பவே போறேன்னு சொல்லிட்டு ஆடி அசைந்து ஆறு மாசம் கழிச்சு வீட்டுக்கு வந்தமைக்கு என் வன்மையான கண்டனங்கள் பூஸக்கா! ;))))
   வாழ்த்துக்களுக்கு நன்றிங்கோ! :)

   Delete
  2. [co="DarkGreen"]அதிரா...
   கவிதை எழுதி உங்களிடம் பாரட்டுப் பெறுவதும்
   ஒரு சாதனைதானே...:))

   சமையற்கலை வல்லுநரிடம் போனீர்களோ..
   இன்னும் போகவில்லையென்றால் போய்ப் பாருங்கோ
   இப்ப நல்ல எள்ளுருண்டை செய்து காட்டியிருக்கிறா..:))

   வரவுக்கும் வாழ்த்துக்கும் மிக்க மகிழ்ச்சியும் நன்றியும் அதிரா..:)))..[/co]

   Delete
 29. முதலாவது பிறந்த நாளைக் கொண்டாடும்
  உங்கள் உறவினரின் மகளிற்கு எனது வாழ்த்துக்களும்
  அதற்கேற்ப கவிதைக்கும் என் வாழத்துக்கள்

  ReplyDelete
  Replies
  1. [co="DarkGreen"]வணக்கம் வைத்தியர் ஐயா!.

   தங்களின் அன்பான வரவும் வாழ்த்தும் கண்டு மகிழ்ந்தேன் ஐயா!
   மிக்க நன்றி!..[/co]

   Delete
 30. உற்சாகம் தரும் ஊஞ்சலாட்டக் க்வில்லிங்கும்
  உணர்வு ஊட்டும் பாடலும் இனிமை இளமதி.
  மகியில் இணைந்தேன் .

  ReplyDelete
  Replies
  1. ஸ்ரவாணி, என் வலைப்பூவில் ஃபாலோயராக இணைந்தமைக்கு நன்றிங்க!

   Delete
  2. [co="DarkGreen"]வணக்கம் ஸ்ரவாணி!.

   அன்பான உங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
   மிக்க மகிழ்ச்சியும் என் நன்றியும் தோழி!..[/co]

   Delete
 31. ஓ மஹியா. இளமதி அழகாக மஹியை அறிமுகம். எல்லாவற்றையும்
  சிறப்பாக எழுதும் மஹி, எனக்கு மிகவும் வேண்டிய பெண், உன்னைப் போலவே. சிரிக்கும் பூவே அருமையான கவிதை. என்ன அழகாக எழுதுகிறாய். ஸந்தோஶமாக யிருக்கு. மஹிக்கும்,உனக்கும் வாழ்த்துக்கள். அன்புடன்

  ReplyDelete
  Replies
  1. [co="DarkGreen"]வணக்கம் வாங்கோ அம்மா!.

   உங்கள் வரவுகண்டு ஆச்சரியத்தில் அமிழ்ந்தேன் நான்...
   என்னைத் தேடிவந்த உங்களின் அன்பினை என்னவெனச் சொல்வேன்..

   உங்கள் ரசனை இன்னும் எனக்கு உற்சாகத்தை தருகிறது...
   வரவுக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க மகிழ்ச்சியும் என் நன்றியும் அம்மா!..[/co]

   Delete
 32. இதை விட யாராலும் அழகாய் குழந்தைக்கு வாழ்த்து சொல்ல முடியாது இளமதி! வாழ்த்துக்கவிதை அத்தனை அருமை! கை வேலை மிக அழகு!!

  ReplyDelete
  Replies
  1. [co="DarkGreen"]வணக்கம் மனோ அக்கா!. வாங்கோ!

   இங்கு உங்கள் வரவு மட்டில்லா மகிழ்வினைத் தருகிறது அக்கா!..

   அழகிய ரசனை எனக்கு அதி உன்னத ஊக்குவிப்பாக இருக்கிறதே...
   அன்பு நிறைந்த வாழ்த்துக்கும் என் மனமார்ந்த நன்றி அக்கா!..[/co]

   Delete
 33. இளமதி,

  காமாக்ஷிமாவின் இடுகையிலுள்ள பின்னூட்டத்தைப் பார்த்து மனம் கலங்கிவிட்டது.இனியாவது சோககீதங்கள் எல்லாம் சந்தோஷ கீதங்களாக மாற இறைவன் அருள்புரிய வேண்டும்.

  குட்டிப் பாப்பாவிற்கான க்விலிங் வேலைப்பாடும்,கவிதையும் அருமையா இருக்கு.பதிவருக்கும்,பதிவரைப் பகிர்ந்தவருக்கும் வாழ்த்துகள்.

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் சித்ராசுந்தர்!.

   அன்பான உங்கள் வரவும் ஆறுதல் வார்த்தைகளும்
   மனதிற்கு தெம்பினைத்தருகின்றன.

   உளமார்ந்த வாழ்த்துக்கும்
   என் மகிழ்ச்சியும் நன்றியும் சகோதரி!..

   Delete
 34. ஓ! 80 கருத்துகள் விழுந்தும் நான் வராது இருந்துள்ளேன்.
  அருமை அறிமுகம், கைவேலையும் கவிதைவரிகளும்.
  இனிய வாழ்த்து சகோதரி.
  மகிக்கும் வாழ்த்தகள் உரியதாகட்டம்.
  வேதா. இலங்காதிலகம்.

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் கோவைக்கவி!.

   அன்பான உங்கள் வரவுக்கும் நல்ல ரசனைக்கும்
   உளமார்ந்த வாழ்த்துக்கும்
   என் மனமார்ந்த நன்றிகள் சகோதரி!..

   Delete
 35. உண்மையாகவே க்விலிங் கலக்கல் .என்ன வார்த்தையில் சொன்னாலும் என் மகிழ்ச்சியை சொல்லவே முடியவில்லை.அந்த குழந்தை கொடுத்துவைத்தவள்

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் மகிவதனா!...

   இங்கு உங்கள் முதல் வருகை!.. வாருங்கள்!...

   க்விலிங்கை ரொம்பவே ரசித்து வாழ்த்தியுள்ளீர்கள்..
   மிக மிக மகிழ்வாக உள்ளது...:)

   உங்கள் வருகைக்கும் இனிய ரசனைக்கும் வாழ்த்திற்கும்
   என் அன்பான நன்றிகள் தோழி!

   Delete
 36. குடியரசு தின நல்வாழ்த்துக்கள்...

  உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

  மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2014/01/blog-post_26.html) சென்று பார்க்கவும்... நன்றி...

  ReplyDelete
 37. வணக்கம். குடியரசு தின நல்வாழ்த்துக்கள்.
  இன்றைய வலைச்சரத்தில் தங்கள் தளம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. நன்றி.
  http://blogintamil.blogspot.com.au/2014/01/blog-post_26.html

  ReplyDelete

உங்களின் அன்பான வரவிற்கும் ஊக்கந்தரும்
இனிய கருத்திற்கும் என் உளமார்ந்த நன்றி! _()_