Pages

Oct 6, 2013

வர்ண ஜாலம்!..

வானவில்லின் வர்ணத்தினையும் 
வானம் காட்டும் கோலத்தினையும் கற்பனையாக
க்விலிங்க் கைவேலையில் சிறு முயற்சி! 

சாதாரணப் பூக்கள், வடிவங்கள் செய்வதைவிட 
இது பார்வைக்கு மிக இலகுவானதாகத் தோன்றினாலும் 
செய்யும்போது அப்படியல்ல என உணர்ந்தேன்.
வானவில்லின் நிறங்கள் யாவற்றையும் சேர்த்து என் மனக்கணிப்பின்படி வளைத்து நிறுத்துவதிலிருந்து மேகக்கூட்டத்தை வானவில்லுடன்
இணைப்பதுங்கூடச் சிரமத்தைத் தந்தது..
அழகோ இல்லையோ உங்கள் கண்களுக்கும்
காட்சியாய் இங்கே... :)
********

வர்ண ஜாலம்!.
~~~~~~~~

நிறங்கள் எத்தனை வானவில்லே!
தரங்கள் தானுமுண்டோ கூறுவில்லே!
கரங்கள் கொட்டுதுதான் களித்துநன்றே!
சுரங்கள் மாறிடுதே சூழலிங்கே!...

வரமோ சாபமோ வாழ்வுமிங்கே!
திரமே இல்லையேநம் தீவிலங்கே!
உரமோ உறவோ உணர்வுமங்கே!
பரமனும் படைத்தான் வாழுஎன்றே!

உனக்குள்ளே காட்டிடும் வர்ணஜாலம்!
உலகினிலும் இருக்கிறதே உணரவேண்டும்!
உவகையோடு மானிடரும் உன்போல்தானோ!
உறுதியேதும் இல்லாமல் மாறுகின்றாரே!.
******

 

பாலம் இது!..
மழைக்கும் வெயிலுக்கும் மகத்தான பாலமிது!
அழைக்கும் எங்களின் ஆசையைப் பெருக்குவது!
தழைக்கும் என்ணங்கள் தாவியே பாய்கிறது!
விளைக்கும் வேட்கைமிக வேண்டுமே வேலியது!..
********

 
தாரகை..
உன்னை நினைக்கையில் ஒருதாரகை அங்கே
மின்னிடும் வானில் முளைத்திட வேண்டினேன்!
என்னவனே! எண்ணிப்பார் சிமிட்டும் வெள்ளிகளை!
எத்தனை தடவை எண்ணுகிறேன் உனையென்று!..
~~~~~~~~~~

பதிவோடு பகிரும் பதிவர்
~~~~~~~~
 


வலையுலகில் எனது அன்புக்குரிய நண்பியாகிய
 ஸ்ரவாணி அவர்களின் தமிழ்க் கவிதைகள் தங்கச் சுரங்கம்
என்னும் வலைப்பூவினை இம்முறை
பதிவோடு பகிரும் பதிவராக உங்களுடன் பகிர்ந்துகொள்வதில் 
மிக்க மகிழ்வடைகிறேன்.

 தமிழ்க் கவிதைகள் தங்கச் சுரங்கம்

 http://sravanitamilkavithaigal.blogspot.de/

தோழி ஸ்ரவாணி பல்கலைத் திறமையாளர். இவர் தனது வலைப்பூவில் கவிதைகளுக்கே முன்னுரிமை கொடுத்திருந்தாலும் பொது விடயங்களுக்கும், கட்டுரை, கதை, ஆரோக்கியம், அழகுக்கலை இவைகளுக்கும் இடம் ஒதுக்கியுள்ளார்.

இவர் நல்ல கலாரசிகர். இவரின் கவிதைப் படைப்புகளே இவர் எந்தளவில் ரசனைமிக்கவரெனப் பறைசாற்றும்.

எண்ணிலடங்கா விடயங்கள் இவர் வலைப்பூவில் கொட்டிக்கிடக்கின்றன. நானும் சமீப காலமாகவேதான் அவர் வலைப்பூவிற்கும் சென்று பார்த்துப் படித்து ரசித்து வருகின்றேன்.

ஸ்ரவாணியின் வலைப்பூவில் அவரின் அறிமுகப் பகுதியைப் பார்த்தாலே அவரைப் பற்றி அவர் சொல்லுகின்றவைகள் பற்றித் தெரிந்திடும்.
மேலும் இவரின் வலைப்பூவில் லேபில்கள் பகுதியில் ஹைக்கூ கவிதைகள், கலண்டர் கவிதைகள் என இவற்றுடன் யுவதி பக்கங்கள் என்னும் பகுதிக்குள் நுளைந்து பார்க்கும்போது என்னைப் பிரமிப்பில் ஆழ்த்தியுள்ளார் எமது தோழி ஸ்ரவாணி அவர்கள்!

இவரின் வலைப்பூவினைப் பற்றி நான் அதிகம் உங்களுக்குச் சொல்வதைவிட நீங்களே அவர் வலைப்பூவிற்குச் சென்று பார்த்தால் மேலும் அறிந்துகொள்வீர்கள்!

ஸ்ரவாணியின் வலைப்பூவினைத் தெரியாதோர் இருக்கமாட்டார்கள். இருந்தும் இதுவரை அறியாதோர் இருப்பின் அவரின் தளத்திற்கும் சென்று அவரையும்  ஊக்குவிக்கலாமென இவற்றை இங்கு மகிழ்வுடன் உங்களோடு பகிர்ந்துகொள்கின்றேன்!...

மிக்க நன்றி அன்பு உறவுகளே!
__()__

96 comments:

 1. பதிவு முழுவதுமே வானவில் போன்று வர்ண ஜாலமாக உள்ளது. மனம் நிறைந்த பாராட்டுக்கள். அன்பான இனிய நல்வாழ்த்துகள். பகிர்வுக்கு நன்றியோ நன்றிகள்.

  ReplyDelete
  Replies
  1. [co="Maroon"]வணக்கம் ஐயா!..

   தங்களின் உடனடி வருகைக்கைக்கும் அன்பான வாழ்த்துகளுக்கும் மகிழ்வுடன்
   மனமார்ந்த நன்றிகள்!...[/co]

   Delete
 2. நல்ல கிவிலிங் வேலைப்பாடு.வாழ்த்துக்கள்.

  ReplyDelete
  Replies
  1. [co="Maroon"]வணக்கம் விமலன்!..

   உங்களின் உடன் வருகையுடன் வாழ்த்தும் கண்டு மகிழ்ச்சி!..

   மிக்க நன்றி சகோதரரே!...[/co]

   Delete
 3. அழகான கிவிலிங்... பாராட்டுக்கள்...

  சிறந்த தளமும் அறிமுகம்... நன்றிகள்...

  வாழ்த்துக்கள்...

  ReplyDelete
  Replies
  1. [co="Maroon"]வணக்கம் சகோதரர் தனபாலன்!..

   உங்களின் அன்பான வருகைக்கைக்கும் இனிய நல் வாழ்த்துகளுக்கும் மனமார்ந்த நன்றிகள்!...[/co]

   Delete
 4. அழகு அழகு..கைவேலைப்பாடுடன் கவிதையும் அழகு.

  ReplyDelete
  Replies
  1. [co="Maroon"]வணக்கம் ஸாதிகா வாங்கோ!..

   உங்கள் அன்பான வரவும் ரசனையும்
   மிக்க மகிழ்வாயிருக்கு எனக்கு!...

   மனமார்ந்த நன்றிகள்!...[/co]

   Delete
 5. எங்களுக்கும் இந்த கைவேலைகளை எல்லாம் கொஞ்சம் சொல்லிக் கொடுங்களேன்..என் பள்ளியில் முயற்சிக்கிறேன்...

  ReplyDelete
  Replies
  1. [co="Maroon"]வணக்கம் கலியப் பெருமாள்!..

   இந்தக் கைவேலைகளை உங்களுக்குச் சொல்லித்தருவதா.. அதுவும் நான்.. :)).

   இருங்கள்!.. உங்களைப் போல முன்பும் இங்கு சிலர் என்னைக் கேட்டனர். அதற்குரிய வலை இணைப்பினைத் தேடித் தருகிறேன். பார்த்தாலே புரிந்து கொள்வீர்கள்...
   சில நாட்கள் கால அவகாசம் தாருங்கள்.. ஆவன செய்கின்றேன்!

   உங்களின் அன்பான வருகைக்கைக்கும் கனிவான கருத்துகளுக்கும் மனமார்ந்த நன்றிகள் சகோ!...[/co]

   Delete
 6. இளமதி!உங்கள் கற்பனைத் திறனும் படைப்பாற்றலும் பிரமிப்பை ஏற்படுத்துகின்றன.பொருத்தமான கவிதைகளையும் படைத்தது அழகோ அழகு . வாழ்த்துக்கள்

  ReplyDelete
  Replies
  1. [co="Maroon"]வணக்கம் முரளிதரன்!.. வாருங்கள்...:)

   கற்பனையும் கலையும் கவிதையும் ஒன்றுடன் ஒன்று இணைந்தவைதானே.. நீங்கள் அறியாததா..:)
   என்ன.. சில சமயங்களில் அழகான படங்கள் கண்ணில் கண்டுவிட்டால் அதை வைத்துக் கவி வரிகள் இயற்றுவதுண்டு.
   அப்போது சில தடுமாற்றங்கள் எனக்கு வருவதும் உண்டு..:)

   அன்புடன் வருகை தந்து அழகிய நற் கருத்துடன் வாழ்த்தியமைக்கு மனமார்ந்த நன்றிகள் சகோ!...[/co]

   Delete
 7. வர்ணஜாலம் மனம் மயக்குகிறது ..அருமை..பாராட்டுக்கள்..!

  ReplyDelete
 8. தோழி ஸ்ரவாணி பல்கலைத் திறமையாளர்.

  ஸ்வர்ண வாணியாய் ஜொலிக்கவைத்த தங்கள்
  அறிமுகத்திற்கு வாழ்த்துகள்...!

  ReplyDelete
  Replies
  1. [co="Maroon"]வணக்கம் இராஜராஜேஸ்வரி!..

   அழகழகான படங்களும் பக்திப் பரவசமாகப் பதிவினைப் படைக்கும் உங்கள் படைப்பினில்தான் என் மனம் எப்பவும் மயங்கி இருக்கும்.. அப்படியிருக்க வர்ண ஜாலம் உங்களை மயக்கியது என் பாக்கியமே!..:)).

   தங்களின் அன்பான வருகைக்கைக்கும் இனிய ரசனை, மற்றும் வாழ்த்துகளுக்கும் என்
   மனமார்ந்த நன்றிகள் சகோதரி!...[/co]

   Delete
 9. வானவில் அழகு.
  தேனமுதானவரிகள்.
  ஸ்ரவாணிக்கும் இனிய வாழ்த்து.
  எனது வானவில்லையும் ரசியுங்கள்.
  இனிய வாழ்த்து.
  வேதா. இலங்காதிலகம்.

  http://kovaikkavi.wordpress.com/2011/11/09/17-%e0%ae%b5%e0%ae%a3%e0%af%8d%e0%ae%a3%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%be%e0%ae%a9%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d/

  ReplyDelete
  Replies
  1. [co="Maroon"]வணக்கம் சகோதரி கோவைக்கவி!..

   வானவில்லில் வந்த தேனமுதென வழங்கிய வாழ்த்து
   கானமுடன் தந்த நல்ல தானமாகக் கொண்டேன்!..

   உங்கள் அன்பிற்கும் வாழ்த்திற்கும் மனமார்ந்த நன்றி சகோதரி!

   தங்களின் வலையில் வானவில்லைக் காண
   விரைவில் வருகிறேன்..:).[/co]

   Delete
 10. http://www.youtube.com/watch?v=q5WZCPDzB2M

  subbu thatha sings this song click above.

  www.subbuthatha.blogspot.com

  ReplyDelete
  Replies
  1. [co="Crimson"]வணக்கம் ஐயா!..

   எப்படி இப்படி உங்களால் உடனேயே
   பாடிப் பதிந்து என்னைப் பரவசப் படுத்த முடிகிறது...
   ஆச்சரியத்தில் வாயடைத்து நிற்கின்றேன். என்னை ஊக்குவிக்கும் தங்களின் ஆர்வத்திற்கு மண்டியிட்டு உங்களை வணங்கி என் நன்றியினைக் கூறுகின்றேன்...

   [im]https://encrypted-tbn0.gstatic.com/images?q=tbn:ANd9GcTsEqfZASfgMJ6M8C4NKliUxB0CgzCbsZE6f0dR57qMILum9dro[/im]

   மிக மிக அழகாகப் பாடிக் காட்சிப் பதிவுடனும் பதிந்து தந்துள்ளீர்கள்!

   இந்த வயதிலும் இப்படி மூச்சுப் பிடித்து உச்சஸ்தாயிவரை பாடுகின்றீர்களே...

   அன்னை அபிராமி உங்களுக்கு மேலும் சிறந்த ஆரோக்கியத்தைத் தொடர்ந்தும் தந்திடப் பிரார்த்திக்கின்றேன்!....

   மனமார்ந்த நன்றியும் என் வணக்கமும் ஐயா!...[/co]

   Delete
  2. [co="Crimson"]ஐயா... தங்கள் குரலில் பாடிய இப்பாடலை
   இங்கு பதிவேற்றம் செய்துள்ளேன்!

   மீண்டும் என் அன்பு நன்றிகள் ஐயா!....[/co]

   Delete
 11. கவிதையும் கை வேலையும் மிக அழகு இள‌மதி!!

  ReplyDelete
  Replies
  1. [co="Maroon"]வணக்கம் மனோ அக்கா! வாங்கோ...:).

   உங்கள் ஒருவரியிலேயே என் மனம்
   அத்தனை உவகை கொள்கிறது அக்கா!

   தங்களின் அன்பான வருகைக்கும் இனிய ரசனை, மற்றும் வாழ்த்துக்கும் மனமார்ந்த நன்றி அக்கா!...[/co]

   Delete
 12. [co="Crimson"][im]https://encrypted-tbn1.gstatic.com/images?q=tbn:ANd9GcQBcEQCfFmE8TER9iQ6ZRA4bNt7YYGAdJuvaucACXfMHbgmv8Wpvg[/im]

  இங்கு வருகைதரும் எனது அன்பு உறவுகளே!..

  இங்கே எங்கள் சுப்பு ஐயா பாடித் தந்த இப்பதிவின் கவிப் பாடலையும் பதிவேற்றம் செய்துள்ளேன்.. (இங்கே வலையின் வலது பக்கமாக உள்ள பகுதியில்)
  அதனையும் கேட்டு உங்கள் அன்பினை ஐயாவுக்கு தெரிவித்தால் ஐயா மேலும் மகிழ்வுறுவார்!..

  சுப்பு ஐயாவின் முயற்சிக்கு எம்மால் இயன்ற ஊக்குவிப்பாகவும் இருக்கும்.

  மிக்க நன்றி அன்பு உறவுகளே!...[/co]

  ReplyDelete
 13. வானவில்லை அழகாய் க்விலிங்க் கைவேலையில் கொண்டு வந்து விட்டீர்கள். இங்கு மருமகள் அழகாய் க்விலிங்க் காதணிகள் செய்கிறாள்.
  வர்ணஜாலக் கவிதை அருமை.. வாழ்த்துக்கள்.
  தோழி ஸ்ரவாணி பல்கலைத் திறமையாளர்.//
  வாழ்த்துக்கள் ஸ்ரவாணிக்கு.

  ReplyDelete
  Replies
  1. [co="Maroon"]வணக்கம் சகோதரி கோமதி அரசு! வாங்கோ...:).

   உங்கள் மருமகள் க்விலிங்கில் காதணி செய்கின்றாரா..
   ஆஹா.. பார்க்கவேண்டுமே..
   அவருக்கும் வலைத்தளம் உண்டா.. தாருங்கள்.
   அல்லது அதை உங்கள் வலைத்தளத்தில் இடுங்கள்.
   ஓடிவந்து பார்க்கவேண்டுமென ஆவலாயுள்ளது...:)
   மருமகளுக்கும் என் அன்பு வாழ்த்தினைச் சொல்லிவிடுங்கள்!

   உங்கள் அன்பான வருகைக்கும் நல்ல ரசனைக்கும்
   வாழ்த்துகளுக்கும் மனமார்ந்த நன்றிகள் சகோதரி!..[/co]

   Delete
 14. கிவிலிங்க் கை வண்ணமும் வானவில் கவிதையும் மிக அழகு! ஸ்ரவாணியின் வலைப்பக்கம் நான் தொடரும் வலைப்பக்கம்! நல்ல திறமைமையான பன்முக எழுத்தாளார்! உங்களை தொடர்பவர்களுக்கு அறிமுகம் செய்து வைத்தமைக்கு பாராட்டுக்கள்!

  ReplyDelete
  Replies
  1. [co="Maroon"]வணக்கம் சுரேஷ்!..

   உங்கள் அன்பான வருகைக்கும் நல்ல ரசனைக்கும்
   வாழ்த்துகளுக்கும் மனமார்ந்த நன்றி சகோ!...[/co]

   Delete

 15. காற்றில் கரையா வானவில்லின்
  கண்கவர் கைவேலை அழகுதர
  ஏற்றம் காணும் உம்வரிகள்
  என்னையும் மகிழ வைக்கிறதே ...!

  வாழ்க்கை கூட வர்ணஜாலம்
  வாழ்வது சொல்லும் வரிகளுடன்
  போற்றுங் காதல் நினைவினிலே
  பொழியும் கவிதை இனிக்கிறதே,,,!

  அறிமுக பதிவர் வலைப்பக்கம்
  அடிக்கடி நானும் போகின்றேன்
  அழகாய் கவிதை பாடுகின்றார்
  ஆன்மா திறந்து ரசிக்கின்றேன் ...!

  அத்தனை பதிவும் முத்தாக
  ஆனந்தம் சேர்த்து எழுதியதால்
  இத்தனை அழகும் வெளிக்காட்டி
  இயற்கை அழகை வெல்கிறதே..!

  அனைத்தும் அருமை சகோ ரசித்தேன்,மகிழ்ந்தேன்

  வாழ்த்துக்கள் வாழ்கவளமுடன்

  ReplyDelete
  Replies
  1. [co="Maroon"]வணக்கம் அன்புச் சீராளன்! ...:).

   ஆற்றல் உன்றன் அளவிடக்கூடுமோ?..
   போற்றல் செய்கிறாய் புகழ்கிறாயென்னை
   மாற்றும் வழிஇதுவெனக் கண்டதால்
   காற்றில் அசைவதைக் காட்டுகிறேனிங்கே!

   உமது அன்பான வரவுக்கும்
   இதமான இனிக்கும் கவிதைக் கருத்துப் பகிர்தலுக்கும்
   இனிய வாழ்த்திற்கும் மனமார்ந்த நன்றிகள் உறவே!..[/co]

   Delete
 16. சகோதரி!.. அன்பின் வணக்கம்!.. தங்கள் பதிவிற்கு வராமல் இருந்தது பிழைதான் . பொறுத்தருள்க.

  தாங்கள் வடித்த கவிதைகள் சில கண்டேன். மனம் தடுமாறுகின்றது. எழுத்துக்குள் பொதிந்திருக்கும் அழுத்தம் கண்டு நெகிழ்ந்தேன்.

  வானவில்லை கைத்திறமையால் கண் முன் கொண்டு வந்திருக்கின்றீர்கள். அழகு.

  வெளியின் ஊடாக நீர்த் திவலைகள் இருக்கும் வரை தான் வான வில். நம்பிக்கை எனும் சூரியன் மேகத்திலிருந்து வெளி வந்து விட்டால் வான வில் போவது எங்கே!..

  கவிதாயினியாகிய தங்களுக்குப் புரிந்திருக்கும் என எண்ணுகின்றேன்.

  நம்பிக்கையை இழக்காதவரை - நாம் எதையும் இழந்தவர்களாக மாட்டோம்!..

  பகையும் காலில் மிதிபட மிதிபட
  வெல்வோம்!..வெல்வோம்!..
  பாரில் வாழ்பவர் பார்த்து வியந்திட
  வெல்வோம்!..வெல்வோம்!..
  நிச்சயம் வெல்வோம்!..

  ReplyDelete
  Replies
  1. [co="Maroon"]வணக்கம் ஐயா துரை செல்வராஜூ!.
   வாருங்கள்! தங்களின் முதல் வருகை இங்கு!..மகிழ்ச்சி!
   பிழை இங்கேது ஐயா... உங்கள் வரவால்
   நான்தான் அகம் மிக மகிழ்கின்றேன்.

   தங்களின் நுண்ணிய ஆழ்ந்த ரசனை எனக்கு மிகவும்
   உற்சாகத்தை ஊக்கத்தினைத் தருகிறது.

   நீர்த்திவலை இருப்பதால்தான் வானவில்லின் இத்த அழகு!..
   வாழ்க்கையும் அன்பு ஆதரவு என்ற ஈர்ப்பு ஈரப்பசை இல்லாமல் வரண்டால் அழகிழந்துவிடும்...
   எல்லாமே மிகமிகச் சில காலமே...:)

   உத்வேகமூட்டும் நம்பிக்கை வரிகள் தந்தீர்கள் ஐயா!
   வெல்வோம் நிச்சயம். இது நடக்கும்!

   உங்கள் அன்பான வரவும் அற்புதமான ஆழ்ந்த ரசனையுங்கண்டு மட்டற்ற மகிழ்ச்சி!

   வாழ்த்துக்களுக்கும் இதயம் நிறைந்த இனிய நன்றிகள் ஐயா!..[/co]

   Delete
 17. கிவிலிங் வேலைப்பாடும்
  அதனைத் தொடர்ந்த கவிதையும்
  நான் விரும்பித் தொடரும் அருமையான
  பதிவர் ஸ்ரவாணி அவர்களை
  அறிமுகப் படுத்திய விதமும்
  மனம் மகிழ்வு தந்தது
  பகிர்வுக்கும் தொடரவும்
  மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

  ReplyDelete
  Replies
  1. [co="Maroon"]வணக்கம் ரமணி ஐயா!..

   உங்களின் அன்பான வருகைக்கும் இனிய நல்ல ரசனைக்கும்
   மனமார்ந்த வாழ்த்துகளுக்கும் என் அன்பான நன்றிகள் ஐயா!...[/co]

   Delete
 18. அன்பு வணக்கங்கள் சகோதரி, க்விலிங் வேலைப்பாடில் கைதேர்ந்த தங்களின் படைப்பும் ஜொலிக்கிறது. கவிதைகளை படக் காட்சியிலும் பதிந்திருப்பது சிறப்பு. தங்களின் ஆர்வமும் ரசனையும் சிந்தைக்குள் விந்தை செய்வதில் ஆச்சர்யம் ஒன்றும் இல்லை..வலைப்பூவின் வடிவமைப்பு அழகு. அருமையான கவிதை வரிகளையும், காட்சிகளையும் தந்தமைக்கு நன்றிகள் சகோதரி.

  ReplyDelete
  Replies
  1. [co="Maroon"]வணக்கம் பாண்டியன்!..

   இத்தனை இயல்பாய் ரசிக்கும் உங்கள் அன்பினை நான் ரசிக்கின்றேன் சகோ!..
   ஆர்வமாய் அத்தனையையும் பார்த்துக் கருத்தெழுதுவது எனக்கும் பிடித்தமானது.
   அதனையே நீங்களும் இங்கு கண்டு எழுதியுள்ளீர்கள்.

   வலையமைப்பு என் விருப்பத்திற்கேற்ப என் அன்புத்தோழி அதிரா!... இதோ உங்களுக்கு அடுத்ததாகக் கருத்துப் பகிர்வு செய்துள்ளாரே அவர் செய்து கொடுத்தது...:) ஆக அதற்குரிய கிரெடிட் அவருக்கே சேரும்..:)

   அன்பான உங்கள் வரவிற்கும் அழகிய ரசனைக்கும் இனிய வாழ்த்துகளுக்கும் என் மனமார்ந்த நன்றிகள் சகோ!...[/co]

   Delete
 19. ஆஹா இம்முறை வானவில் வாரமோ? மிக அருமையான சிந்தனை.. குயில் வேலை நல்லா இருக்கு... அந்த முகிலை கொஞ்சம் முழுவதும் அடைப்பாக செய்திருக்கலாமோ எனவும் தோணுது..

  ReplyDelete
  Replies
  1. [co="Maroon"]வணக்கம் அன்பு அதிரா!..:) வாங்கோ!...

   இப்ப மழைச் சீசனெல்லோ இடையிடையே வெயிலும் வரேகை இவர் தலையைக் காட்டுறார்.. கண்டதும் கைக்குள் அடக்கிவிட்டேன்...:)

   ஓம் நீங்க சொல்லுறது போல முகிலை அடைச்சிருக்கலாம்தான்...
   இன்னொருமுறை வேறை செய்யேக்கை இப்படியும் செய்து பார்க்கிறேன்...:)..[/co]

   Delete
 20. இப்பவெல்லாம் கவிதையே பதிவா மின்னுது.. கலக்குறீங்க கவிதை வடித்து. வாழ்த்துக்கள்.

  ஸ்வரராணி உண்மையில் எனக்கு புது அறிமுகம்.. இப்படி ஒரு பெயரை இங்கால எங்கட வட்டத்துள் கண்டதாக நினைவில்லை எனக்கு... அறிமுகப் பதிவருக்கு வாழ்த்துக்கள். நேரம் கிடைக்கையில் சென்று பார்க்கிறேன்.

  ReplyDelete
  Replies
  1. [co="Maroon"]கவிதையில மின்னுதோ... ஓ.. ஓ.. அதை அங்கை மின்னினதைச் சொல்லுறீங்களோ..
   அது சும்மா அப்பிடியே வார்த்தை வந்து விழுந்தது..:)

   //ஸ்வரராணி உண்மையில் எனக்கு புது அறிமுகம்..//
   அப்பாடி உங்களுக்கெண்டாலும் புதுசா அவவை இங்கு அறிமுகப் பகிர்வு செய்திட்டன்... பெருமையா இருக்கு...:))
   நேரங்கிடைக்கேக்கை போய்ப் பாருங்க.. உங்களுக்கு ரொம்பப் பிடிக்கும் அவவை..;)

   ம்.. உங்க அன்பான வருகையும் கலக்கல் ரசிப்பும் சந்தோஷமா இருக்கு அதிரா!

   வாழ்த்துக்களுக்கும் மிக்க நன்றி!..[/co]

   Delete
 21. பதிவும் வர்ணஜாலம் காட்டுதே...
  அருமை.

  ReplyDelete
  Replies
  1. [co="Maroon"]வணக்கம் குமார்!..

   வானவில்லின் வர்ணமென்பதால் பதிவும் அப்பிடியே ஆகீட்டுது...:)))

   உங்களின் அன்பான வருகைக்கும்
   இனிய நல் வாழ்த்துகளுக்கும்
   மனமார்ந்த நன்றி சகோ!...[/co]

   Delete

 22. வணக்கம்!

  வான வில்லின் எழிற்கண்டு
  வடிக்கும் கவிதை! வாழ்த்துகிறேன்!
  ஊன உலகைத் திருத்துகிற
  உயா்ந்த கருத்தைப் படைத்துள்ளாய்!
  மான மூட்டும் நம்மொழியின்
  மரபை உயிராய்க் காக்கின்றாய்!
  ஞானத் தமிழின் திருவருளால்
  நன்றே வளா்க இளமதியே!

  கவிஞா் கி. பாரதிதாசன்
  தலைவா்: கம்பன் கழகம் பிரான்சு

  ReplyDelete
  Replies
  1. [co="Maroon"]வணக்கம் கவிஞர் ஐயா! வாருங்கள்!
   உங்கள் வரவினால் உள்ளம் உவகை கொண்டேன்!..

   வானமும் வையமும் வாழென வாழ்துமே!
   ஞானம் முழுதும் நம்தமிழ் ஓங்குமே!
   கானம் பாடக் குயில்களும் கூடுமே!
   தானம் தவமெனக் காத்திடும் உங்களால்!..

   தங்களின் அன்பான வரவும் இனிய நற் கருத்துக் கவி வாழ்த்தினாலும் மனம் மிக மகிழ்ந்தேன்.
   மிக்க நன்றி ஐயா!..[/co]

   Delete
 23. தேசம் தேடிச் சென்றுவரும்
  நேசமிக்க வானவில்லே
  நேசமிகு இளமதிக்கு என்றும்
  பாசம் மாறா மனம்கொடு

  ReplyDelete
  Replies
  1. [co="Maroon"]வணக்கம் சகோதரர் கவியாழி கண்ணதாசன்!..

   தேசம் ஆயிரம் போனாலும்
   நேசம் மாறுவதில்லையே
   பாசம் பரிவு வலையிலென்றே
   வேசமில்லா வாழ்வு கண்டேன்!..

   உங்கள் அன்பிற்கு மனமார்ந்த என் நன்றிகள் சகோ!..[/co]

   Delete
 24. உன்னை நினைக்கையில் ஒருதாரகை அங்கே
  மின்னிடும் வானில் முளைத்திட வேண்டினேன்!
  என்னவனே! எண்ணிப்பார் சிமிட்டும் வெள்ளிகளை!
  எத்தனை தடவை எண்ணுகிறேன் உனையென்று!..//

  மிகவும் ரசித்தேன்....அருமை.....

  ReplyDelete
  Replies
  1. [co="Maroon"]வணக்கம் நாஞ்சில் மனோ!..

   உங்களின் அன்பான வருகைக்கும் இனிய நல்ல ரசனைக்கும்
   மனமார்ந்த வாழ்த்துகளுக்கும் என் அன்பான நன்றிகளும் சகோ!...[/co]

   Delete
 25. எனையும் உங்க சீடரா ஏற்று கைவேலையை கற்றுத்தாங்களேன்.. தாங்கள் மட்டும் இங்கு பக்கத்தில் இருந்தால் ஓடி வந்திருப்பேன். மனதை இழுக்கும் வரிகளும் தங்கள் படைப்பும். அழகுங்க.

  ReplyDelete
  Replies
  1. [co="Maroon"]வணக்கம் சசிகலா!..

   என்னதூஊஊஊ.... உங்களையும் சீடரா.. அதுசரி...
   நடக்கிற வேலையைப் பார்க்கணும்.. :).
   நான் ஒண்ணும் அந்தளவுக்கு இதில எக்ஸ்பேட் இல்லைங்க.. சுயமான தேடலோடு இன்னும் கற்றுக்கொள்ளும் நிலயில்தான்...:)

   சரி சரி... உங்க ஆர்வம் புரிகிறது தோழி... இருங்கள்
   விரைவில் இதற்கான வலைத்தள இணைப்பைத் தேடித்தருகிறேன்...:)

   அன்பான வருகைக்கும் இனிய நல்ல ரசனைக்கும்
   மனமார்ந்த வாழ்த்துகளுக்கும் என் அன்பான நன்றிகள் தோழி!...[/co]

   Delete
 26. அன்பு இளமதி ,

  முதலில் என் தாமத வருகைக்குக் காரணம் சொல்லி
  வருத்தமுடன் மன்னிப்பு வேண்டுகிறேன்.

  என் விளக்கத்திற்கு முன் உங்கள் பதிவை பற்றிய
  விமர்சனம். க்வில்லிங்கில் சூரியன் ஒரு அழகானக்
  கோலம் போல மிளிர்கிறார். நீட் வொர்க்.
  அதை விட தாரகை என் மனத்தில் இன்னும் சிமிட்டிக் கொண்டு
  இருக்கிறது. அழகான கற்பனை & வெளிப்பாடு.
  ரசித்து உணர்ந்து வடித்து இருக்கிறீர்கள். வர்ண ஜாலக் கவி
  கண்டு கரங்கள் கொட்டு திங்கே . அகங்கள் துள்ளுதிங்கே !

  நேற்று பதிவு இட்ட சிறிது நேரத்திற்கெல்லாம்
  ஒரு விழாவிற்காக வெளியே சென்று விட்டோம். மீண்டும்
  வந்து பார்த்து விஷயம் கண்டு அனைவரும் உங்கள் தளத்தில்
  வலைச்சர அறிமுகத்திற்கு ஈடான என் அறிமுகம் பற்றி சொல்லி இருந்தது கண்டு
  உள்ளம் பூரித்து போனேன்.உங்கள் அழகான க்வில்லிங்
  வேலைப்பாடுகளுடன் மனம் மயக்கும் கவிவரிகளுடன்
  என் தளத்தையும் அறிமுகப்படுத்தி இன்ப அதிர்ச்சி அளித்து விட்டீர்கள்.
  மேலும் பலரும் வருகை தந்து கருத்திட்டு இணைந்தனர்.
  வானில் மிதப்பது போன்ற உல்லாசம் கொண்டேன்.
  ஆம். நீங்கள் சொல்லி இருப்பது போன்று ரசனை தான்
  கவிஞர்களின் இதயத் துடிப்பு. திரைப்படத்தில் ஹீரோவுடன்
  வில்லனைக் கூட சேர்ந்தே ரசிப்பேன். [ ஹீரோ பில்டப் என்றும் வில்லனே நிஜம் & இயல்பு என்றும் எனது எண்ணம் ] . நேரம் கிடைக்கும் போது என் தளத்திலுள்ள
  மற்ற படைப்புகளையும் ஒரு பார்வையிடவும் . அதில் எனக்கு மிகவும் பிடித்தது
  ' எந்திர உயிர்ப்பு ' என்ற கவிதைக் கதையே . படித்துப் பாருங்கள் உங்களுக்கும் மிகவும் பிடிக்கும்.

  என் தளத்திற்கு மிகச் சிறந்ததொரு சரியான பொருள் புரிந்து
  அழகான முன்னுரையிட்டு அருமையாக அறிமுகப்படுத்தியதற்கு
  என் நெஞ்சார்ந்த நன்றியினைப் பணிவன்புடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
  உங்களின் அரிய இப்பணி மேன்மேலும் தொடர்ந்திட வாழ்த்துக்கள்
  சொல்லி என் மகிழ்ச்சியை தெரிவித்துக் கொள்கிறேன். நன்றி !
  வணக்கம் இளமதி !

  ReplyDelete
  Replies
  1. [co="Crimson"]வணக்கம் _()_ வாருங்கள் ஸ்வராணி!..

   [im]https://encrypted-tbn1.gstatic.com/images?q=tbn:ANd9GcSSyqpnozf9iaCy_z2Km2pSNpoa2Grc0sWb7oQhPt-ZHDexO3tmRw[/im]

   உங்கள் வரவு நல்வரவாகுக!...:)...[/co]

   Delete
  2. [co="Maroon"]அட.. இதற்கெதற்கு இத்தனை மன்னிப்பு.. எல்லோரும் ஏதோ அவரவர் வேலையாக ஓடிக்கொண்டிருக்கின்றோம்..
   இது ஒரு மகிழ்வு, மாற்று... அவ்வளவே..:)

   நல்ல நல்ல உறவுகளை நாம் இப்படி இங்கு கண்டு சேர்ந்து மகிழ்கின்றோமே அதுவே என்னைப் பொறுத்த மட்டில் பெரிய விடயம்.

   உங்கள் திறமைகளை முழுதும் என்னால் ஆராயவோ
   எழுதிடவோ முடியவில்லை. அங்கு நானுணர்ந்ததில்
   சிலதை இங்கு பகிர்ந்தேன்.. அவ்வளவே..:)

   நீங்கள் குறிப்பிட்டதும் இன்னும் இன்னும் இருக்கின்ற பல
   பதிவுகள் உங்கள் வலையில் நான் படிக்க உண்டு. வருவேன்..

   மிக்க நன்றி உங்கள் மகிழ்ச்சியே என் மகிழ்ச்சியும்...

   உங்கள் அன்பான வருகைக்கும் இனிய ரசனைக்கும்
   நல் வாழ்த்திற்கும் மனமார்ந்த நன்றி தோழி!..[/co]

   Delete
 27. இங்கு என்னைப் பாராட்டி வாழ்த்து சொன்ன
  அனைத்து அன்புள்ளங்களுக்கும் என் மனர்மார்ந்த
  நன்றிகள் !

  ReplyDelete


 28. இன்னொன்றும் சொல்ல விருப்பம் .
  நான் என் தளத்திற்கு பெயர் வைக்கையில்
  சற்று குழம்பிப் போனேன்.
  நீங்கள் இங்கு எழுதி இருப்பது போல
  தமிழ் கவிதைகள் தங்கச் சுரங்கத்தில்
  தமிழுக்குப் பின் ' க் ' என்ற மெய்யெழுத்து வர வேண்டும். [ இல்லையா ?]
  ஆனால் தேடலில் யாராவது தமிழ் என்று தட்டினால்
  என் தளமும் வரக் கூடுமே என்ற நப்பாசையில் அவ்வாறு
  வைத்து விட்டேன். இப்போதாவது சரியாக மாற்றிக் கொள்ளலாமா
  என்று சொல் மதி .

  ReplyDelete
  Replies
  1. [co="Maroon"]ஹாஆ.. நீங்கள் சொல்வது சரிதான்... க் வருவதே இலக்கணப்படி சரியானது...

   நான் உங்கள் உங்கள் பக்கத்தில் இருந்ததைப் பார்த்துவிட்டு
   இங்கு எழுதும்போது என்னையுமறியாமல் க் இணைத்தே
   தட்டச்சுச் செய்துவிட்டேன்...:)

   இத்தனை ஜாம்பவான்கள் தமிழ் மேதைகள் உலவுமிடத்தில்
   நான் யாருக்கும் சொல்லப் போகமாட்டேன்..
   என்னைக்கேட்கும்போது நான் படிக்கும்போது படித்ததை
   தெரிந்ததைச் சொல்வேன்..

   முடிந்தால் மாற்றுங்கள். மிகச் சரியானதும் அழகானதும் அது.
   நன்றி ஸ்ரவாணி!..[/co]

   Delete
 29. //உனக்குள்ளே காட்டிடும் வர்ணஜாலம்!
  உலகினிலும் இருக்கிறதே உணரவேண்டும்!
  உவகையோடு மானிடரும் உன்போல்தானோ!
  உறுதியேதும் இல்லாமல் மாறுகின்றாரே!//
  "வர்ணஜாலம்" கவிதையில் ரசித்த வரிகள்.

  //உன்னை நினைக்கையில் ஒருதாரகை அங்கே
  மின்னிடும் வானில் முளைத்திட வேண்டினேன்!
  என்னவனே! எண்ணிப்பார் சிமிட்டும் வெள்ளிகளை!
  எத்தனை தடவை எண்ணுகிறேன் உனையென்று!..//
  திரும்பத்திரும்ப வாசிக்க வைத்த வரிகள் இளமதி.அழகாக எழுதியிருக்கிறீங்க.
  "பாலம் இது" கவிதையும் நன்றாக இருக்கு.
  க்விலிங் ல் வானவில் (கை)வண்ணம் அருமையாக இருக்கு. அழகாகவே
  செய்திருக்கிறீங்க.வாழ்த்துக்கள்.

  அறிமுகப்படுத்திய பதிவர் ஸ்ரவாணிக்கு என் வாழ்த்துக்கள்.

  ReplyDelete
  Replies
  1. [co="Maroon"]வணக்கம் வாங்கோ அம்மு!..

   அணுவணுவாக ரசிக்கின்ற ரசனையை நான் ரசிக்கின்றேன் அம்மு!..:).
   எழுதும்போது நானே சில சொற்களில் சிக்கி நின்றதுண்டு..:) அதையே நீங்களும் ரசித்திருக்கின்றீர்கள்!

   அன்பான உங்கள் வருகையும் அசத்தலான ரசனையும் மனதை நிறைத்தது!.
   மனமார்ந்த வாழ்த்துகளுக்கும் என் அன்பான நன்றிகள் அம்மு!...[/co]

   Delete
 30. உங்கள் ஆலோசனைப் படி மாற்றி விட்டேன் தோழி.
  மிக்க நன்றி மதி !

  ReplyDelete
  Replies
  1. [co="Maroon"]”அழகு”!...:))) [/co]

   Delete
 31. //அழகோ இல்லையோ //
  ஐயமே வேண்டாம்
  ஐயமின்றி சொல்வேன்
  ஐ! ஐ ! அழகு என்று!

  //என்னவனே! எண்ணிப்பார் சிமிட்டும் வெள்ளிகளை!
  எத்தனை தடவை எண்ணுகிறேன் உனையென்று!..//
  எத்துனை அருமை உங்கள் எண்ணம்!

  தோழி ஸ்ரவாணி அவர்களின் தளம் அறிமுகத்திற்கு நன்றி, அவர்களின் கருத்துகள் பிற தளங்களில் படிக்கும்போது போய் பார்க்க வேண்டும் என்று நினைத்து சோம்பிக் கிடந்த என்னைப் போக வைத்ததற்கு நன்றி :)

  ReplyDelete
  Replies
  1. [co="Maroon"]வணக்கம் கிரேஸ்!..

   ஐ! ஐ! ரசிக்கும் அழகும் ஐ! ஐ! ..:)

   அது... என்னவனை மின்னும் வெள்ளிகளை
   எண்ணச் சொல்லித் திட்டினேனாக்கும்..:)
   நினைப்பதை பின்னே எப்படிப் புரியவைப்பதாம்.. அதுதான்..:))

   ஒருபடியா உங்க சோம்பலுக்கு முடிவு வந்தாச்சு.. சீக்கிரம் எழுந்து ஒவ்வோர் வீடாகப் போய்ப் பாருங்கள். ..;)
   ஐயோ எங்கே புறப்படுறீங்க.. இருங்க...
   நாஆஆ...ன் வலைத் தளங்களை வீடெனச் சொன்னேன்...:))).

   உங்களின் அன்பான வருகையும் ரசனையும் கண்டதும்
   எனக்கும் உற்சாகமாய் இருக்கிறது தோழி!

   அன்பிற்கு என் மனமார்ந்த நன்றிகள்!...[/co]

   Delete
 32. வர்ண ஜாலம் க்வில்லிங்,(பாராட்டுக்கள்) கவிதைகள் பகிர்வு மிக அருமை இளமதி !

  ReplyDelete
  Replies
  1. [co="Maroon"]வணக்கம் ஆசியா!..
   வாங்கோ.. எப்ப பார்த்தாலும் உள்ளே காலை வைத்தவுடனேயே 2 வரியிலயே முடிச்சிட்டு ஓட்டமாய்த் திரும்ப ஓடிடுறீங்க...:)))

   உங்களின் அன்பான வருகைக்கும் பாராட்டிற்கும் மிக்க நன்றி ஆசியா!..[/co]

   Delete
 33. வணக்கம்
  இளமதி(சகோதரி)

  உங்கள் பெரில் கூட இளமதி( நிலா)
  நிலாவானது தனது குளிர்மை மிக்க ஒளியை
  உலகுக்கு பரப்பி குளிர்ச்சியூட்டுவது போல
  வாசக உள்ளங்களுக்கு மனதுக்கு விருந்தாக
  அழகான கவிமாலை படைக்கு இளமதி உங்கள் கவிக்கு-நான்
  ஒருகனம் தலைசாய்த்து வணங்குகிறேன்...... உங்களின் இந்த கவிதை மட்டும் மல்ல பல கவிதைகள் மிக திறமையாக சொல் ஆழம் மிக்க வரிகளுடன் உங்கள் வலைப்பூவில் வியாபித்து நிக்கிறது மேலும் பல கவிதைகள் வலைப்பூவில் மலர எனது வாழ்த்துக்கள் நான் உங்கள் தளத்துக்கு பல தடவை வந்து பார்த்திருக்கேன்...... கருத்தும் சொல்லிருக்கேன்
  கவிதை அருமை.......படங்களும் மனதை கவர்ந்தது.....
  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
  Replies
  1. [co="Maroon"]வணக்கம் வாருங்கள் ரூபன்!..

   அடடா... வந்ததும் நிலவுக்கே ஐஸ் வைத்து நிலவு உறையும்படி செய்கின்றீர்களே சகோ...:)))

   உங்களின் நுணுக்கமான ரசனை கண்டு மனம் மகிழ்வில் பூரிக்கின்றது...:)

   கவிதை ஏதோ எழுதுகிறேன். இன்னும் நன்கு படிக்க ஆசை. .. பார்க்கலாம்.
   உங்களைப் போன்றோரின் இனிய ரசனை என்னை இன்னும் எழுதத் தூண்டுகிறது.
   முடிந்தவரை முயல்கிறேன். படைப்புகளைத் தருவேன்!.

   அன்பான உங்கள் வருகைக்கும் இனிய நல்ல ரசனைக்கும்
   மனமார்ந்த வாழ்த்துகளுக்கும் என் அன்பான நன்றிகளும் சகோ!...[/co]

   Delete
 34. வானவில்லும் கவிதைகளும் மிக அருமை இளமதி! பகிர்ந்த வலைப்பதிவரின் வலைப்பூவும் நன்று.

  தாரகை உள்ளத்தைக் கொள்ளை கொள்கிறது. :)

  ReplyDelete
  Replies
  1. [co="Maroon"]வணக்கம் மகி!..

   அட... நீங்களுமா 2 வரி ரசனையில்...:) சரி சரி வந்ததே மகிழ்வுதான்..:)

   தாரகை உங்களையும் கொள்ளை அடித்தாளோ...;) ம் ம்..:)

   உங்களின் அன்பிற்கும் ஆதரவிற்கும் இனிய நன்றிகள் மகி!...[/co]

   Delete
 35. வழக்கமாய் செய்யும் க்வில்லிங்கோடு ஒப்பிடுகையில் இன்றைய க்வில்லிங் மிகவும் எளிமையானதொன்றாக இருக்கிறதே என்று நினைத்தபடியே மேலும் தொடர்ந்தேன். என் மனத்தில் நினைத்ததை மிகச் சரியாகக் கணித்ததுபோல் க்வில்லிங்கில் இருந்த சிரமத்தைச் சொல்லியுள்ளீர்கள். என் கணிப்பை எண்ணி வருந்துகிறேன். மனமார்ந்த பாராட்டுகள் இளமதி.

  கண்கவரும் வானவில்லின் வண்ணங்களோடு போட்டிபோடும் கவிவண்ணம் கருத்தைக் கவர்கிறது. சுப்புத்தாத்தா அவர்களால் பாடல் மேலும் சிறப்புறுகிறது. அவருக்கு நம் நன்றி உரித்தாகட்டும்.

  தமிழ்க்கவிதைகள் தங்கச்சுரங்கம் பற்றிய அழகான முன்னுரையோடு அறிமுகம் அசத்தல். சகலகலாவல்லி தோழி ஸ்ரவாணிக்கு இனிய பாராட்டுகள். பகிர்வுக்கு நன்றி இளமதி.

  ReplyDelete
  Replies
  1. [co="Maroon"]வணக்கம் கீதமஞ்சரி!.. வாங்கோ...:)

   க்விலிங்கில் என் கூற்றை நீங்கள் உணர்ந்த விதம்கண்டு மனம் மிக மகிழ்ந்தேன் தோழி!
   உண்மையில் மெல்லித தாள் நாடாக்களை எமது ரசனை, வடிவத்துக்கேற்ப வளைத்து நெளிவாக்கிச் செய்யும் போது அவை சிலவேளை அமையாது, சிலவேளை கசங்கி எமது கற்பனைக்கேற்றவகையில் வடிவம் பெறாது.. அப்படி இதில் முகில் வளைவுகள் சிலவும் முகிலையும் வானவில்லையும் தொடுக்கும்போதும் சில சிரமங்களை நானுணர்ந்தேன்..
   அதன் கருத்து என்னவெனில் நான் இன்னும்
   கற்க உள்ளது அதுதான்..:)

   ஆமாம் சுப்புத் தாத்தா அவரின் வயதுடன் பார்க்கும் போது எத்துனை திறமைசாலி அவர்!..
   அருமையாகப் பாடுகின்றார்! நிச்சயம் இங்கு உங்களின் வாழ்த்துக்கண்டு மனம் மகிழ்வார் அவர்!

   தோழி!.. அன்பான உங்கள் வருகையும் அழகிய ஆழ்ந்த
   ரசனையும் எனக்கு மட்டில்லா மகிழ்வாக உள்ளது!
   அத்துடன் சிறந்த நற் கருத்துகளும் வாழ்த்துகளுங்கூட
   மன மகிழ்ச்சியைப் பெருக்குகின்றது!

   அனைத்திற்கும் மிக்க மிக்க நன்றி தோழி!..[/co]

   Delete
 36. நிறப்பிரிகை எனும் அறிவியலின் ஆசான்...
  வெள்ளொளிக் கற்றை ஒன்று ஏழு நிறம்
  காட்டமுடியும் என்ற தத்துவத்தின் அடிப்படை...
  ==
  இக்கரு உங்கள் கவி எண்ணத்தில் உருவான விதம்
  மிகவும் அழகு..
  ஏழு வண்ணங்களுடன் எட்டாம் வண்ணமாக
  மிளிர்கிறது கவிதை..
  ==
  சகோதரி ஸ்ரவாணி நான் நன்கு அறிந்தவர்..
  யதார்த்த வரிகளால் எமைக் கட்டிப்போட்டவர்...
  அழகிய கவி புனைவதில் வல்லவர்...
  அவரின் அறிமுகம் இங்கே உங்கள் தளத்தில்..
  மனம் மகிழ்விக்கும் ஒன்று...
  சகோதரி ஸ்ரவானிக்கு வாழ்த்துக்கள்...

  ReplyDelete
  Replies
  1. [co="Maroon"]வணக்கம் சகோதரர் மகி!.. வாருங்கள்.._()_
   நீண்ட இடைவெளியின் பின்னே இங்கு உங்கள் வருகை போல தோன்றுமிறது எனக்கு!
   நலமோ சகோ!

   ஏதோ என் எண்ணத்தின் கோலத்தினை வண்ணமாக இங்கே தந்தேன்...:)
   உங்கள் ரசனை அதனை இன்னும் உயர்த்துகிறது...:).

   வந்ததும் ரசித்ததும் வாழ்த்தியதும் மனதில் நிறைந்த மகிழ்வைத்தருகிறது சகோ!

   அனைத்திற்கும் என் மனமார்ந்த நன்றிகள்!..[/co]

   Delete
 37. தங்களின் எழுத்துத்திறன் பாராட்டும் அளவு தமிழறியேன் தோழி...கண்டு பிரமித்து ஒரு பார்வையாளனாக மட்டுமே இருக்க முடிகிறது.

  எழுத்துத்திறம் மட்டுமல்ல கைவண்ணத்திலும் கலக்குவேன் என அவ்வப்பொழுது தங்கள் க்விலிங் வேலைப்பாடு அதுவும் அற்புதம். (இந்த வேலைப்பாடு தங்கள் தளத்தில் கண்டபிறகே அறிந்தேன். நானும் முயற்சித்துப்பார்க்கிறேன்.)

  எழுத்து, கைவண்ணத்தில் மட்டுமல்ல நான் குணத்திலும் எட்டமுடியாதவள் என முத்தாய்ப்பாய் தங்கள் நட்புகளைப்பற்றிய அறிமுகம் பிறரைப்பாராட்டும் கலை(மனதார) அனைவருக்கும் கைவந்தக் கலையாக அமைவது கிடையாது. தங்களுக்கு கலைமகள் அதிலும் குறைவைக்கவில்லை. மிகச்சிறப்பு. தங்கள் தோழமைகளுக்கும் எமது மனமார்ந்த பாராட்டுகள். தொடருங்கள். தமிழன்னை தங்களுக்கு நீண்ட ஆயுளும், உடல் ஆரோக்கியமும் கொடுத்து தங்கள் எழுத்துப்பணி இனிதே தொடர அருளட்டும். வாழ்க வளமுடன்.

  நேரப்பற்றாக்குறை காரணமாக அதிகம் வலைத்தளங்கள் வர முடிவதில்லை. இதுபோன்ற அற்புதப்பதிவுகளை தவறவிடநேர்கிறது. :(
  நேரம் இருப்பின் தோழமைகள் எமது அறக்கட்டளைப் பக்கத்தில் இணைந்து அறக்கட்டளை செயல்பாடுகளைத் தொடர்ந்திட அழைக்கிறேன்.

  http://tamilkkudil.blogspot.in/

  ReplyDelete
  Replies
  1. [co="Maroon"]வணக்கம் கவிக்காயத்ரி!..
   வாருங்கள்... உங்கள் முதல் வருகை இங்கென நினைக்கின்றேன்..
   நல்வரவு தோழி!!!...

   நான் நீங்கள் கூறுமளவிற்கு அப்படியொன்றும் அவ்வளவு தமிழ்ப் புலமையில் தேர்ந்தவளில்லை...
   இன்னும் மாணவிதான் நான். கற்க நிறைய உண்டு!
   கடலல்லவோ தமிழறிவு.. இன்னும் கரையிலேயே நிற்கின்றேன்..
   கடலிற்குள் இறங்கப் பயந்துகொண்டு....:)

   உங்கள் புகழுரைகண்டு நான் எனக்கு இறக்கை முளைத்து
   எங்கோ பறப்பதுபோல உணருகிறேன்...:) அத்தனை புகழ்ச்சி உங்களது!...
   மிக்க மகிழ்ச்சி!
   உங்களைப் போன்றோரின் அற்புத ரசனையே என்னை ஊக்குவிக்கும் ஒரு அரிய மாமருந்து.
   கிடுகிடுவென வளர்ந்திடுவேன்... ;).

   எமக்காக வாழ்வதில் என்ன உண்டு.. தாங்கள் அறியாததா...
   நான் ஏறவில்லை என்றாலும், என் படைப்புகள்
   மற்றவர்களுக்கு திருப்தி இல்லை என்றாலும்
   என்னால் முடிந்தவரை என் பயணகாலத்தில்
   மிகமிக அற்புதமான சக பதிவர்களை அவர்களின்
   திறமைகளை அனைவரும் கண்டிட இப்படிச் செய்வதில் ஒரு
   மகிழ்வைக் காண்கின்றேன். ஏதோ என்னால் முடிந்தது...:).

   இன்றுபோல் உங்களுக்கும் நேரங்கிடக்கும்போது இங்கும் வாருங்கள்..
   இன்று வந்ததும் மகிழ்ந்ததும் ரசித்து வாழ்த்தியதுமே எனக்குப் பெரீய பரிசுதான்!.
   அனைத்திற்கும் உளமார்ந்த இனிய நன்றிகள் தோழி!..

   தமிழ்க்குடிலுக்கு அவசியம் வருகிறேன்..
   இணைப்பிற்கு மிக்க நன்றி! ..[/co]

   Delete
 38. வித்தியாசமான முயற்சி! பாராட்டுக்கள். தமிழ்க் கவிதைகள் தங்கச்சுரங்கம் ஸ்ரவாணி' ஏற்கனவே அறிமுகமானவர்தான். அவ்வப்போது அவரது வைப்பக்கம் எட்டிப் பார்ப்பதுண்டு. ஒரு காலத்தில் என் தளத்திற்கு தவறாமல் வருவதும் கருத்துரையிடுவதுமாக இருந்தார். இப்போது ஏனோ வருவதில்லை. அதைப்பற்றி கவலைப்பட நேரமும் இல்லை.

  ReplyDelete
  Replies
  1. [co="Maroon"]வணக்கம் கவிப்ரியன்!..
   தங்களின் முதல் வருகை இங்கு. வாருங்கள்!..

   உங்களின் அன்பான வருகைக்கும் பாராட்டிற்கும்
   இனிய நன்றிகள்!...[/co]

   Delete
 39. வர்ணஜாலம் அருமை.

  நான் விரும்பிப் படிக்கும் சகோதரி ஸ்ரவாணி அவர்களின் வலைப்பூ பற்றிய அறிமுகம் சிறப்பு.

  சகோதரிக்கு வாழ்த்துக்கள்.

  ReplyDelete
  Replies
  1. [co="Maroon"]வணக்கம் குமார்!..

   உங்களின் அன்பான வருகைக்கும் வாழ்த்துகளுக்கும்
   என் அன்பான நன்றிகள் சகோ!...[/co]

   Delete
 40. வர்ணஜாலம்... ஜாலம்தான்.
  //சிறு முயற்சி!// பெரும் முயற்சி. அழகு. அருமை. ஐடியா சூப்பர். //பார்வைக்கு மிக இலகுவானதாகத் தோன்றினாலும்
  செய்யும்போது அப்படியல்ல// ஆனால் அழகு.
  ~~~~~~~~~~~~
  //மானிடரும் உன்போல்தானோ!// :-)
  ஸ்வரங்கள், வானவில் நிறங்கள் இரண்டும் 7 மனித மனத்தின் நிறங்கள் எண்ணிலடங்கா.
  ~~~~~~~~~~~
  'பாலம்' 'தாரகை' உவமைகள் அருமை இளமதி.
  ~~~~~~~~~~~
  படங்கள் எல்லாம் அவ்வளவு வடிவு. தேடிப் பிடிக்க நிறைய நேரம் செலவளிச்சிருப்பீங்கள் போல.
  ~~~~~~~~~~~
  ஸ்ரவாணி பக்கம் விரைவில் செல்வேன். அறிமுகத்துக்கு நன்றி.

  ReplyDelete
  Replies
  1. [co="Maroon"]வணக்கம் இமா!.. வாங்கோ...:)
   நலமோ..:)

   அக்குவேறு ஆணிவேறாகப் பிரித்து அத்தனை ஆழமாக ரசிச்சிருக்கிறீங்க...:)

   படங்கள் இதுக்கெனத்தேடுவதும் உண்டு.. வேறு ஏதாவது தேடும்போது சிக்குவதை சேமித்து பொருத்தமானதை இங்கு போடுவதும் உண்டு..
   படங்களை எங்கு கண்டாலும் கொத்திக் கொண்டு வந்திடுவன்...:))

   ம். ம்.. ஸ்ரவாணியின் பக்கத்துக்குப் போய்ப் பாருங்க..
   உங்களுக்கும் பிடிக்கும்...:)

   அன்பான வருகைக்கும் இனிய நல்ல ரசனைக்கும்
   என் மனமார்ந்த நன்றிகள் இமா!..[/co]

   Delete
 41. ஒவ்வொரு பதிவிற்கும் எவ்வளவு உழைக்கிறீர்கள்.
  எழுதுவதற்கும் அழகுபடுத்துவதற்கும்
  கவ்லிங் வேலைகள் என
  ஆச்சரியமாக இருக்கிறது.
  ஏனோ தானோ என எதையாவது கிறுக்கி
  சில நிமிடங்களில் ஏற்றும்
  என்னை நினைக்க வெட்கமாக இருக்கிறது.

  " தழைக்கும் என்ணங்கள் தாவியே பாய்கிறது!
  விளைக்கும் வேட்கைமிக வேண்டுமே .."
  வரிகளை மிகவும் ரசித்தேன்.

  ReplyDelete
  Replies
  1. [co="Maroon"]வணக்கம் வைத்தியர் ஐயா.. வாங்கோ...:)

   ஆமாம் ஐயா இந்த வலைப்பூ எனக்கு என் வீட்டுக்குச் சமம்.
   இங்கு நான் பதிவிடும் அனைத்தும் அழகாய்க் கருத்துமிக்கதாய் அனைவருக்கும் விரும்பத்தகதாகவும் இருக்கவேண்டுமென்பதில் என் கவனம் அதிகம்தான்...

   அதற்காக உங்களை ஏன் நீங்கள் இப்படிச் சொல்கின்றீர்கள்!...
   இல்லவே இல்லை ஐயா நீங்கள் தரும் படங்களும் கருத்தும் குறிப்புகளுமே எனக்கு மிகவும் பிடித்தமானவையே...:)

   உங்கள் அழகான ரசனை என்னை இன்னும் ஊக்குவிக்கின்றது..

   அன்பான வருகைக்கும் இனிய நல்ல ரசனைக்கும்
   என் மனமார்ந்த நன்றிகள் ஐயா!..[/co]

   Delete
 42. நாம் கல்லாதது உலகளவு என்பதை உங்கள் பதிவுகளை பார்த்து மீண்டும் தெரிந்து கொண்டேன்.இவ்வளவு நாள் க்வளிங் பற்றி அறியாமல் இருந்துவிட்டேனே?அருமை தோழி தாங்கள் என் blog வருகை புரிந்ததற்கும் நன்றி

  ReplyDelete
  Replies
  1. [co="Maroon"]வணக்கம் மகிவதனா!..
   சென்ற பதிவில் உங்கள் வரவு கண்டேன்.. மகிழ்ச்சி!

   என்னை அதிகமாகப் புகழ்கின்றீர்கள் தோழி!..
   நானும் இன்னும் கற்கும் நிலையில்தான் இருக்கின்றேன்...:)

   உங்களின் அன்பான வருகைக்கும் இனிய நல்ல ரசனைக்கும்
   என் அன்பான நன்றிகள் தோழி!...[/co]

   Delete
 43. மேக வர்ணம் பூத்துக்காட்ட அருகில் நின்று கைகொடுக்கும் நிலாவும்,படர்ந்து நிற்கிற மேகங்களுமாய் நல்ல குவிலிங் வேலைப்பாடு/வாழ்த்துக்கள்.

  ReplyDelete
  Replies
  1. [co="Maroon"]வணக்கம் விமலன்!..

   மீண்டும் வந்து ரசித்து வாழ்த்துகிறீர்கள்..
   உங்களின் அன்பான வருகைக்கும் இனிய ரசனைக்கும்
   மகிழ்வான வாழ்த்துக்கும் என் அன்பு நன்றிகள் சகோ!...[/co]

   Delete
 44. விஜய தசமி நல்வாழ்த்துக்கள்

  ReplyDelete
  Replies
  1. [co="Maroon"]வணக்கம் இராஜராஜேஸ்வரி!..

   மிக்க நன்றி!..
   உங்களுக்கும் இனிய விஜயதசமி நல் வாழ்த்துக்கள்!.[/co]

   Delete
 45. உவகையோடு மானிடரும் உன்போல்தானோ!
  உறுதியேதும் இல்லாமல் மாறுகின்றாரே!//ஒவ்வொரு வரியும் ரசிக்கும் படியாக அருமையாக உள்ளன.
  ''இளமை மேலும் துள்ளிக்குதிக்கும்
  இனிய கனவை கண்டு களிக்கும்
  விடியல் கூட சேர்ந்து சிரிக்கும்
  வீசும் தென்றல் தழுவி சிலிர்க்கும்''
  எந்த வரியைச் சொல்வது? அனைத்துமே அருமை!

  ReplyDelete
  Replies
  1. [co="OrangeRed"]வணக்கம் ஐயா வியபதி!..

   உங்களின் அன்பான வரவுக்கும் அழகிய ரசனைக்கும்
   இனிய வாழ்த்திற்கும் என் மனமார்ந்த நன்றிகள்!..[/co]

   Delete
 46. வணக்கம் இளமதி. பிரபல பதிவர் போல? பதிவு அருமை. உங்கள் வேலைப்பாடும் கவிதைகளும் அருமை. பதிவர் அறிமுகம் அசர வைக்கிறது. அவர் தளம் சென்று பார்க்கிறேன். எனது தளத்தின் பக்கமும் கொஞ்சம் வரலாமே?

  http://newsigaram.blogspot.com/

  ReplyDelete
  Replies
  1. [co="Maroon"]வணக்கம் சிகரம் பாரதி!..
   இங்கு உங்களின் முதல் வருகை... மிக்க மகிழ்ச்சி!
   //பிரபல பதிவர் போல?..// நான் அப்படி எண்ணவில்லை என்னை...:)
   இப்பொழுதுதான் கற்றுவருகிறேன் அனைத்தையும்...:)

   உங்களின் அன்பான வருகைக்கும் இனிய ரசனைக்கும்
   மகிழ்வான வாழ்த்துக்கும் என் அன்புகலந்த நன்றிகள் சகோ!.

   கட்டாயம் உங்கள் தளத்திற்கும் வருவேன்... மிக்க நன்றி மீண்டும்..[/co]

   Delete
 47. வானவில்லாக உங்கள் பதிவு!
  அறிமுகம் அருமை!

  kbjana.blogspot.com

  ReplyDelete
  Replies
  1. [co="OrangeRed"]வணக்கம் சகோதரர் கே.பி. ஜனா!..

   முதல் வருகை இங்கே... நல்வரவு!..

   உங்களின் அன்பான வரவும் அழகிய ரசனையும் கண்டு மகிழ்ந்தேன்!

   இனிய வாழ்த்திற்கும் என் மனமார்ந்த நன்றி!..

   உங்கள் தளம்காண வருகிறேன்...[/co]

   Delete
 48. இன்றைய வலைச்சர அறிமுகத்திற்கு பாராட்டுக்கள்!
  http://blogintamil.blogspot.in/2013/10/blog-post_18.html

  ReplyDelete
  Replies
  1. [co="OrangeRed"]வணக்கம் சகோதரி ரஞ்சனி நாராயணன்!..

   உங்களின் இனிய வாழ்த்திற்கு என் மனமார்ந்த நன்றிகள்!..[/co]

   Delete
 49. அழகான கிவிலிங்.. நல் வாழ்த்துகள்!.

  ReplyDelete

உங்களின் அன்பான வரவிற்கும் ஊக்கந்தரும்
இனிய கருத்திற்கும் என் உளமார்ந்த நன்றி! _()_