Pages

Oct 23, 2013

ஒளி காட்டும் வழி!..

 கோட்டுச் சித்திரத்தில் என் மனதைக் கவர்ந்த 
மழலை இங்கு
 எனது க்விலிங் கைவேலையில்!...:)
≈≈≈≈≈

ஒளி காட்டும் வழி!.
 


இருளில் இருந்தால் இடர்மிகுந் தோங்கும்!
அருளிலா வாழ்வு  துயர்மிகுந் தேங்கும்!
பொருளைத் தேடினால் புலருமோ வாழ்வு!
மருளை நீக்கிட மதியொளி ஏற்றுவீர்!

உணர்வதோ தருவதோ ஒன்றுமே இல்லாது
திணறுவரோ போராடித் தினமும் சிதைந்து!
மலர்கின்ற யாவும் மணம் கொண்டதில்லை!
புலர்கின்ற கதிராய்ப் புறப்பட்டுச் செல்வீர்!

எண்ணிட வேண்டும் இல்லாமை உளதென்று
நண்ணிட நல்குவீர் நல்லுதவி இன்றே!
கல்வி ஒளியே கண்ணெனக் கருதியே
சொல்லித் தருவீர் சுடர்ந்திட வாழ்வே!

அடக்குமுறை அதிகாரம் ஆணவம் எம்மை
மடக்கியே மந்தையாய் மகிழ்வதைக் கடக்க
திடங்கொண்டு எழுவீர்! தீயவரை அழிப்பீர்!
இடங்கண்டு சேருவீர்! இன்னல் தீரவே!

அன்பொளி ஏற்றுக! அருளொளி ஏற்றுக!
பண்பொளி ஏற்றுக! பண்ணொளி ஏற்றுக!
இன்பவொளி ஏற்றுக! இதயத்துள் மின்ன!
துன்பகன்று ஓடும்! துணிவொளி யாலே!

தங்கத் தமிழொளி! எங்கள் உயிரொளி!
பொங்கும் மறவரால் பொலியும் புகழொளி!
நம்மின் தலைவன் நல்கிய பேரொளி!
எம்மினம் நிமிர இயம்பிடும் நல்வழியே!.

  

இக் கவிதையினை அன்புச் சகோதரர் ரூபனின் தீபாவளிக் கவிதைப் போட்டிக்கு அனுப்புகிறேன்.

போட்டியில் பங்குகொள்ளும் அளவிற்கு எனக்கு ஆற்றல் இல்லை...
ஆயினும் ரூபனின் இந்த நல்ல முயற்சிக்கு ஆதரவு கொடுக்கும் நோக்கமுடன் இதனை அவருக்கு அனுப்பி வைக்கின்றேன்!.
≈≈≈≈≈


நல்லவர்  நட்பைத் தேடி
நலம்பல பெறுவோம் நன்றே!
வல்லவர் அன்பை வேண்டி
வளம்பல காண்போம் இன்றே!
~~~~~~~~~உள்ளூறும் உன்னுணர்வு உறங்கிப் போமோ
உயிரூறும் என்னில் உறைந்து!..
 *********


பதிவோடு பகிரும் பதிவர்
~~~~~~~~


வலையுலகில் எனது அன்புக்குரிய சகோதரராகிய
 அ. பாண்டியன் அவர்களின் அரும்புகள் மலரட்டும்
என்னும் வலைப்பூவினை இம்முறை
பதிவோடு பகிரும் பதிவராக உங்களுடன் பகிர்ந்துகொள்வதில்
மிக்க மகிழ்வடைகிறேன்.
அரும்புகள் மலரட்டும்

http://pandianpandi.blogspot.com/

`வாழ்க்கைப் பயணத்தை ரசித்துக் கொண்டு நடக்கும் சாதாரண வழிபோக்கன் நான்` எனத் தன்னை அறிமுகப்படுத்தியிருக்கும் சகோதரர் பாண்டியன் தான் படித்த, அறிந்த, விடயங்களுடன் மொழி, கலை, கவிதை, இப்படிப் பலதரப்பட்ட விடயங்களையும் தனது வலைப்பூவில் பதிவாக்கி வருகிறார்.

சென்ற ஆகஸ்ட் மாதப் பதிவில் புதுக்கவிதையின் வடிவம்- ஓர் ஆய்வு  எனப் புதுக்கவிதை இயற்றலும் அதன் வடிவங்கள் பற்றியும் அருமையான விடயத்தைப் பதிவிட்டுள்ளார். புதுக்கவிதை எழுதுவதில் ஆர்வமுள்ளவர்கள் பயன் பெறக்கூடிய நல்ல பதிவு.

எழுத்துத் துறையில் நல்ல ஆர்வமுடன் தனது பதிவுகளோடு சக பதிவர்கள் வலைத் தளங்களுக்கும் சென்று சிறந்த நல்ல கருத்துகளைப் பகிர்வு செய்து அவர்களை ஊக்குவிக்கும் அன்பானவர் சகோதரர் பாண்டியன்!…

இவரின் வலைப்பூவினைப் பற்றி நான் அதிகம் உங்களுக்குச் சொல்வதைவிட நீங்களே அவர் வலைப்பூவிற்குச் சென்று பார்த்தால் மேலும் அறிந்துகொள்வீர்கள்!

பாண்டியன் அவர்களின் வலைப்பூவினைத் தெரியாதோர் இருக்கமாட்டார்கள். ஆயினும் இதுவரை அறியாதோர் இருப்பின் அவரின் தளத்திற்கும் சென்று அவரையும்  ஊக்குவிக்கலாமென இங்கு  இத்தரவுகளை உங்களோடு பகிர்ந்துகொள்வதில் மகிழ்வடைகின்றேன்!..

மிக்க நன்றி அன்பு உறவுகளே!
_()_
********************************************************************************

க்விலிங் - Quilling - ஓர் அறிமுகம்!.

கடந்த பதிவுகளில் எனது க்விலிங் வடிவங்களைப் பார்த்து
சில அன்புள்ளங்கள் கேட்டுக்கொண்டமைக்கு இணங்க
இங்கு அதனைப் பற்றி எனக்குத் தெரிந்ததைத் தொகுத்துத் தருகிறேன்!

தவறுகள் இருந்தால் மன்னிக்க வேண்டுகிறேன்!
********************************

வர்ணத் தாள் நாடாக்களினால் செய்யப்படும் ஓர் அழகிய கைப்பணியாகும்!.

மேலே படத்தில் நான் உபயோகப்படுத்தும் வர்ணத்தாள் நாடாக்கள், பசை, கத்தரிக்கோல், இரண்டு வகையான இடுக்கிகள், மூன்று வகையான க்விலிங் கருவிகள் ஆகியனவற்றைப் படமாக்கித் தந்துள்ளேன்.

இதற்குத் தேவையான அடிப்படைப் பொருட்கள்:

*3 மில்லிமீட்டர் அளவு பருமனில் நேர்த்தியாக வெட்டப் பட்ட பல வர்ணத்தாள் நாடாக்கள்.
நீளம் நீங்கள் செய்யும் வடிவங்களுக்கு ஏற்றவகையில் மாறுபடும்.

*தாளை உருட்ட- roll செய்ய – அதற்குரிய கருவி.
மிக மெல்லிய முனை கூராக அல்லாத தட்டையாக நடுவே ஒரு வெட்டு இடப்பட்டிருக்கும் உலோகத்தினால் ஆனது.

இதில் தாளின் முனைப் பகுதியை செருகி மெதுவாகத் தாள் நாடாவினை ஒரு கை விரலால் பிடித்து மறு கையால் அக்கருவியை உருட்ட தாள் நாடா அதில் உருண்டுகொள்ளும். பின்னர் மெதுவாக கருவியிலிருந்து சுருளை உருவி எடுத்து அதை இறுக்கமான சுருளாக வடிவமைத்தோ அல்லது சற்றுத் தளரவிட்ட சுருளில் வடிவங்களை அமைக்கவோ பயன்படுத்தலாம்…

*ஒட்டுவதற்குப் பசை: அதிக நீர்ப்பதமாயில்லாமலும் களி நிலையில் இல்லாததுமான இறுக்கமான பசை.

*வெட்டுவதற்கு முனை மிகக் கூரான கத்திரிக்கோல்

*இடுக்கி – Tweezers - நேரானது, மூக்கு வளைவானது.
சுருட்டிய சுருளை கையாள்வதற்கு உதவுவது இது.

இவையே அடிப்படித் தேவையானவை.

தாள் நாடாவைச் சுருட்ட பற்குத்தும் குச்சியை கூரான பாகத்தை அகற்றி எடுத்து அதன் நடுவே கத்தியால் சிறிதாக ஒரு வெட்டு வெட்டி அதில் தாள் முனையை செருகி உருட்டலாம்.
நான் இதற்கு பழைய போல்ட்பொயின்ற் - Bold point pen - பேனையின் கோதில் இக்குச்சியை செருகி வைத்து அதனாலும் செய்ததுண்டு.

ஆரம்பத்தில் கை பழகுவதற்கு அதிக பணம் செலவு செய்யாமல் இவற்றினாலே கைவசம் இருக்கும் தாளினை சீராக வெட்டிச் சுருட்டி ஒட்டிப் பல வடிவங்களைப் பயிலலாம்.


இங்கு சில இணையத்தள இணைப்புகள் தந்துள்ளேன்..
இவற்றில் எப்படி க்விலிங் செய்வது என்று விளக்கமாக உள்ளது.

மேலும் கூகிளில் Quilling என்று தேடினாலே பலபேரின் செயல்முறைப் பயிற்சிகள் இருக்கின்றன. நீங்களும் பார்த்துச் செய்து மகிழுங்கள்!.
ஏதாயினும் உதவி தேவைப்படின் இங்கு கேளுங்கள். 
உதவக் காத்திருக்கின்றேன்!
நன்றி!.


http://increations.blogspot.de/2008/07/quilling-basics.html 

http://www.littlecircles.net/quilling-shapes-tutorial 

http://www.youtube.com/watch?v=r1nI3CsZbCA

http://www.youtube.com/watch?v=Divi6a8z000 

123 comments:

 1. வணக்கம் தோழி.

  நல்வழி காட்டிடும் நல்லொளி பாடலால்
  செல்வழி என்றும் சிறந்திடும்! - நல்லவர்
  சொல்வழி நாளும் சுடர்வழி என்பதை
  நல்வழியில் சொன்னது நன்று!


  ReplyDelete
  Replies
  1. [co="DodgerBlue"]வணக்கம் அருணா செல்வம்!..
   வாருங்கள்!... நீண்ட காலங்களின் பின்பு இங்கு வருகை தந்துள்ளீர்கள்!..
   மட்டற்ற மகிழ்ச்சியாக உள்ளது தோழி!..

   அருமையான வெண்பாவினால் இனிய கருத்தினைப் பகிர்ந்தீர்கள்!

   உங்களின் அன்பான வரவுக்கும் இனிய வாழ்த்திற்கும்
   என் மனமார்ந்த நன்றி தோழி!..[/co]

   Delete

 2. நல்லவர் நட்பைத் தேடி
  நலம்பல பெறுவோம் நன்றே!
  வல்லவர் அன்பை வேண்டி
  வளம்பல காண்போம் இன்றே!//

  மிகவும் ரசித்தேன்....!

  ReplyDelete
  Replies
  1. [co="DodgerBlue"]வணக்கம் சகோ மனோ!..

   வாருங்கள்!... உங்களின் அன்பான வரவுக்கும் இனிய ரசனைக்கும்
   என் மனமார்ந்த நன்றிகள்!..[/co]

   Delete
 3. அருமையான கவிதை
  அற்புதமான பதிவர் அறிமுகம்
  அழகான அற்புதமான க்விலிங் படங்கள்
  விரிவாக எளிமையாகச்
  சொன்ன செய்முறை விளக்கம்
  மிக மிக அற்புதமான பல்சுவைப் பகிர்வுக்கு
  என் மனமார்ந்த நல்வாழ்த்துகள்

  ReplyDelete
  Replies
  1. [co="DodgerBlue"]வணக்கம் ரமணி ஐயா!..
   வாருங்கள்!... உங்களின் அழகான அருமையான ரசனை
   என்போருக்கு அத்தகைய உந்து சக்தி...

   உங்கள் அன்பான வரவு, நல்ல ரசனை மற்றும்
   இனிய வாழ்த்தினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள் ஐயா!..[/co]

   Delete
 4. வணக்கம்!

  சின்னக் குழந்தையின் சித்திரப் பேரழகை
  என்னெனச் சொல்வேன் இசைத்து!

  இன்றே இணைந்து தலைவன் வழிஏற்போம்
  நன்றே ஒளிர்ந்திடும் நாடு!

  உள்ளூறும் எண்ணத்தை ஓதும் குறட்பாவில்
  கள்ளூறும் போதை கமழ்ந்து!

  இன்று படைத்துள்ள இன்தேன் படைப்புக்கள்
  குன்றின் விளக்கெனக் கூறு!

  கவிஞா் இளமதியார் கன்னல்பா பாடிப்
  புவியில் பெறுக புகழ்!

  கவிஞா் கி. பாரதிதாசன்
  தலைவா்: கம்பன் கழகம் பிரான்சு

  ReplyDelete
  Replies
  1. [co="DodgerBlue"]வணக்கம் ஐயா!..

   எண்ண இனிக்கும் எழிற்கவிக் கவிஞரே!
   விண்ணதிரப் புகழ்ந்தீர் வியக்கின்றேன்! இன்னும்
   எழுதிட இதயம் ஏங்குதே உங்களைத்
   தொழுகிறேன் கற்றிடத் தொடர்ந்து!.

   உங்கள் வாழ்த்துக் குறள்கள் அத்தனையும்
   என்னை மகிழ்ச்சியில் ஆழ்த்துகிறது ஐயா!

   தேக்கிய என் சிந்தனைகளை சின்னவள் நான் சிதற விடுகிறேன்
   ஆக்கம் தரும் உங்கள் வாழ்த்து என்னை ஊக்குவிக்கும் அருமருந்து!

   அன்பான உங்கள் வருகைக்கும் அழகிய குறள் வாழ்த்துக்கும்
   மனம் நிறைந்த நன்றி ஐயா!...[/co]

   Delete
 5. அருமையான படம்
  அருமையான கவிதை
  பதிவர் திரு அ.பாண்டியன் அவர்களுக்கு
  வாழ்த்துக்கள்

  ReplyDelete
  Replies
  1. [co="DodgerBlue"]வணக்கம் கரந்தை ஜெயக்குமார் ஐயா!..

   வாருங்கள்!... உங்களின் அன்பான வரவுக்கும் ரசனைக்கும்
   இனிய வாழ்த்திற்கும் என் மனமார்ந்த நன்றிகள்!..[/co]

   Delete
  2. வாழ்த்துக்கு அன்பார்ந்த நன்றீங்க அய்யா.

   Delete
 6. கவிதை நன்றாக இருக்கிறது. வெற்றி பெற வாழ்த்துகள். க்வில்லிங் பற்றி அறியத் தந்தமைக்கும் நன்றி. சுவாரஸ்யமான, திறமையான பணியாக இருக்கும் என்று தெரிகிறது.

  ReplyDelete
  Replies
  1. [co="DodgerBlue"]வணக்கம் ஸ்ரீராம்!.. வாருங்கள்!...

   உங்களின் அன்பான வாழ்த்துக் கண்டு மகிழ்ந்தேன்...

   க்விலிங் ரசனையும் அருமை! முயன்று பாருங்கள்.
   முடியாதது ஒன்றும் இல்லை..:)
   வரவிற்கு மிக்க நன்றி சகோ!...[/co]

   Delete
 7. Quilling விளக்கம் மிகவும் உதவும்... நன்றி...

  தங்களின் கவிதையை நடுவர்களுக்கு அனுப்பி வைக்கிறேன்... போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள்...

  எனது இனிய நண்பர் அ. பாண்டியன் அவர்களை அறிமுகப்படுத்தி சிறப்பித்தமைக்கு பாராட்டுக்கள்... வாழ்த்துக்கள்... நன்றி...

  ReplyDelete
  Replies
  1. [co="DodgerBlue"]வணக்கம் சகோதரர் தனபாலன்!..

   வாருங்கள்!... உங்களின் அன்பான வரவுக்கும்
   இனிய ரசனை மற்றும் நல் வாழ்த்துக்கும்
   என் மனமார்ந்த நன்றிகள்!..[/co]

   Delete
  2. வணக்கம் சகோததரே!
   //இனிய நண்பர் அ. பாண்டியன் அவர்களை அறிமுகப்படுத்தி சிறப்பித்தமைக்கு பாராட்டுக்கள்... வாழ்த்துக்கள்... நன்றி...// இதைப் படித்தவுடன் மகிழ்ச்சியில் மெய்சிலிர்த்தேன். நன்றீங்க சகோ..

   Delete
 8. ஒரு கவிதையில் ஓராயிரம் உணர்வுகள்.
  சோகத்தை நீக்கிட,
  தாகத்தை போக்கிட,
  வேகமாக விருண்டெழுந்து
  வீரனாகச் செயல்பட்டு,

  மரித்தாலும் மனம் மகிழ்வேன்
  மண்ணின் மானத்தைக் காப்பேன் என
  பண் ஒன்று பாடி, பறவை இனம் கூட்டமைத்து
  போருக்கு புறப்பட்ட விந்தை என்ன விந்தை ...

  சுப்பு தாத்தா.
  உணர்வுகளின் ஆழத்தில் அமிழ்ந்துவிட்டேன்
  எழுந்ததும் பாடுகிறேன்.
  www.subbuthatha.blogspot.com

  ReplyDelete
  Replies
  1. [co="DodgerBlue"]வணக்கம் சுப்பு ஐயா!..

   வாருங்கள்!... உங்களின் அன்பான வரவும்
   ஆழமான ஆத்மார்த்தமான ரசனையும் கண்டு மனம் நெகிழ்ந்தேன்!..
   பேச்சிழந்தேன் ஐயா!

   அன்பு வருகைக்கும் என் மனமார்ந்த நன்றிகள்!..[/co]

   Delete
 9. அன்பொளி ஏற்றுக! அருளொளி ஏற்றுக!
  பண்பொளி ஏற்றுக! பண்ணொளி ஏற்றுக!

  ஏற்றிவைத்த ஒளி மிகுந்த தீபத்திற்குப் பாராட்டுக்கள்..
  வாழ்த்துகள்..!

  ReplyDelete
  Replies
  1. [co="DodgerBlue"]வணக்கம் இராஜராஜேஸ்வரி!.. வாருங்கள்!...

   உங்களின் அன்பான வாழ்த்துக் கண்டு மகிழ்ந்தேன்.
   வரவிற்கும் மிக்க நன்றி சகோதரி!...[/co]

   Delete
 10. அரும்புகள் மலரட்டும்

  என அருமையான பதிவை அறிமுகப்படுத்தியதற்குப் பாராட்டுக்கள்..!

  ReplyDelete
  Replies
  1. [co="DodgerBlue"]பாராட்டுக்கும் இனிய நன்றி சகோதரி!...[/co]

   Delete
  2. பாராட்டுக்கு எனது நன்றிகளும் அம்மா.

   Delete
 11. அன்பு சகோதரிக்கு வணக்கம்,
  கோட்டோவியத்தை உயிரோட்டமாய் க்விலிங்-ல் வடித்தமைத்துள்ளது மனதைக் கவர்கிறது. படத்தை நன்றாக உற்றுப் பார்த்தால் உயிர்ப்பு பெற்றதாக தோன்றுகிறது. எனது அன்பு வாழ்த்துக்கள் சகோதரி.
  ====================
  கவிவரிகள் அனைத்தும் அருமையாய் வந்துள்ளது சகோதரி. போட்டியில் முதல் பரிசு பெற எனது வாழ்த்துக்கள். யார் சொன்னது கவிதைப் போட்டியில் பங்கு பெற ஆற்றல் தங்களுக்கு குறைவு என்று.. அப்படி நீங்கள் சொன்னால் அது உங்கள் தன்னடக்கம். தங்கள் ஆற்றல் எங்களுக்கு தெரியும் சகோதரி...
  ==================
  கற்ற கலையை மற்றவர்களுக்கும் கற்றுக் கொடுக்கும் உங்கள் நல்லெண்ணம், உயர்ந்த குணம் கண்டு நெகிழ்ச்சியடைகிறேன்.
  ==================
  என்னையும் உங்கள் அன்பு சகோததராக ஏற்று, இணைய நண்பர்களுக்கு அறிமுகப்படுத்துயிருப்பதற்கு எனது நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன். தங்களின் அறிமுகத்தால் இன்னும் நல்லவற்றை எழுத வேண்டும், அனைவருக்கும் பயன்படும் கருத்துக்களைப் படைப்புகளாகத் தர வேண்டும் எனும் ஆவல் மிகுந்துள்ளது. நன்றீங்க சகோதரி. கருத்துரையில் வாழ்த்திய அனைத்து உள்ளங்களுக்கும் எனது அன்பான நன்றிகள். பகிர்வுக்கும் அறிமுகத்திற்கும் மீண்டும் எனது நன்றிகள் சகோதரி.
  ===============

  ReplyDelete
  Replies
  1. [im]https://encrypted-tbn0.gstatic.com/images?q=tbn:ANd9GcSY0hgeMoMLj9ebbwn0Igfmcs-49aPxxlGNjVomvQIThC37rzj4[/im]

   [co="Brown"]வணக்கம் அன்புச் சகோதரர் பாண்டியன்!... வாருங்கள்!..

   அடடா... இத்தனை நுட்பமாக ஒவ்வொன்றாகக் கவனித்து ரசித்திருக்கின்றீர்கள்..

   க்விலிங்கில் இத்தனை மகிழ்வா..

   கவிதை எழுதுவதில் நான் இன்னும் கற்றுக்குட்டிதான் சகோ!..
   கற்க இன்னும் சரியாக ஆரம்பிக்கவே இல்லை..
   அதற்குள் ஆர்வம் பிடரியைப் பிடித்துத்தள்ள மனதில்
   தோன்றுவதை இங்கு எழுத ஆரம்பித்துவிட்டேன்..:)
   இப்படி என் நிலை இருக்கையில் போட்டிக்கு நான் செல்வது
   கொஞ்சம் அதிகப் பிரசங்கித்தனமாகாதோ... அதுதான் அப்படிச் சொன்னேன்..:)

   கற்ற கலையைச் சொல்லிக்கொடுப்பதில் தப்பே இல்லை என்பேன்.
   இறைக்கின்ற கிணறுதான் சுரக்கும் என்பார்கள்....:).
   தவிர க்விலிங் பற்றி எனக்குத் தெரிந்ததை இங்கு ஆர்வமாக
   என்னிடம் கேட்டவர்களுக்கு (கற்பிக்கின்றேன் என்பதைவிட)
   பகிர்ந்துகொள்கிறேன் என்பதே சரி...
   யாரென்றாலும் பயனடையட்டுமே...:)

   உங்கள் ரசனை மிக மிக அருமை சகோ!
   மிகவும் மகிழ்கிறேன் நான்...:)

   உங்களின் வலைத்தளப் பதிவுகளைகளைப் பற்றி
   எனக்குப் புரிந்தவரை எழுதியுள்ளேன்...
   ஏதும் தவறிருந்தால் மன்னித்துகொள்ளுங்கள்..:)

   இன்னும் வளரத்துடிக்கும் உங்கள் ஆர்வம் அருமை!
   வலையுலகு எமக்கு நல்ல சகோதரர்களையும் நண்பர்களையும் தந்துள்ளது!
   எல்லோரும் ஒரு குடும்பமாக உணர்கிறேன் .

   உங்கள் வரவிற்கும் இனிய ரசனை, கருத்துகள் மற்றும் வாழ்த்துகளுக்கும் என் மனமார்ந்த நன்றிகள் சகோ!.:)[/co]

   Delete
  2. மன்னிப்பா! என்னங்க சகோதரி இப்படி சொல்லீட்டுங்க? அசத்தலாக அறிமுகம் செய்து இருக்கிறீர்கள்.என்னை அன்பு சகோதரனாக அறிமுகம் செய்ததற்கு நன்றியைத் தவிர என்னிடம் வார்த்தையில்லை சகோதரி. ரொம்ப நன்றீங்க...

   Delete
 12. அன்பொளி ஏற்றுக! அருளொளி ஏற்றுக!
  பண்பொளி ஏற்றுக! பண்ணொளி ஏற்றுக!

  - அருமை!.. வாழ்க.. வளமுடன்!..

  சித்திரமும் கைப்பழக்கம்.. செந்தமிழும் நாப் பழக்கம்.. என்பதற்கு தங்களின் பதிவுகள் சிறந்த உதாரணம்.. மகிழ்ச்சி!..

  கவிதைப் போட்டியில் வெற்றிக் கனி பறிக்க வாழ்த்துக்கள்!..

  * தங்களிடம் க்விலிங் எப்ப்டிச் செய்வது என்று கேட்க எண்ணியிருந்த வேளியில் - தாங்களே அதைப் பதிவிட்டது அருமை. மழலையின் சித்திரம் மனங்கவர்கின்றது.

  நண்பர் பாண்டியனைப் பற்றிய அறிமுகம் நன்று!..

  ReplyDelete
  Replies
  1. வாழ்த்தியமைக்கு நன்றீங்க அய்யா.

   Delete
  2. [co="DodgerBlue"]வணக்கம் ஐயா!..

   வாருங்கள்!... உங்களின் அன்பான வரவும்
   ஆழமான ரசனையும் கண்டு மனம் மகிழ்ந்தேன்!..

   வாழ்த்திற்கும் என் மனமார்ந்த நன்றிகள் ஐயா!..[/co]

   Delete
 13. க்வில்லிங் கதை படிக்கும் பாப்பா வெகு அழகு.
  போட்டி தங்கள் வரவால் களை கட்டுகிறது.
  போட்டிக் கவிதையில் பண்ணொளி [ சந்த நயம் ] அருமை.
  வெண்பா போல நடை அருமை. கருத்தும் தெளிவு.
  ஆனால் தீபாவளியைப் பற்றி ஒன்றும் குறிப்பிடவில்லையே ஏன் ?
  திருத்தத்திற்கு இடம் உண்டெனில் ஓரிரு வாக்கியங்களாவது
  மீண்டும் சேர்த்து எழுதி அனுப்பவும். மனத்தில் பட்டதை ஒளிவுமறைவின்றி
  சொல்லி விட்டேன். தவறு எனில் மன்னிக்கவும்.
  பாண்டியன் சகோவின் தள அறிமுகத்திற்கும் வெற்றிக்கனி
  பறிக்கவும் என் வாழ்த்துக்கள்.
  க்வில்லிங்கைப் பார்த்து ரசிக்கும் அளவே என் பொறுமை எல்லாம்.
  எனினும் செய்முறை பகிரலுக்கு என் நன்றிகள் மதி.

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் சகோதரி..
   சகோததரனாக என்னையும் வாழ்த்தியமைக்கு நன்றீங்க சகோ.

   Delete
  2. [co="DodgerBlue"]வணக்கம் ஸ்ரவாணி!.. வாருங்கள்!...

   உங்களின் அன்பான வரவும் அசத்தல் ரசனையும் கண்டு மிகவும் மகிழ்ந்தேன்..:)

   அட .. இதென்ன உங்கள் கருத்தைச் சொன்னதையிட்டு நான் இத்தனை உரிமையோடு சொல்லும் அன்புத்தோழி என்று உங்களை நினைக்க நீங்கள் மன்னிப்பு அது இதுன்னு சொல்லுறீங்களே..:)

   ஒளி! ஒளி !.. என்று வருகிறதுதானே என்று அப்படியே விட்டுவிட்டேன்.. தீபாவளியைப் பற்றி குறிப்பிடும் மனோ நிலையிலும் இல்லாததினால் இதைப் பெரிதாக நினைக்கவில்லை.. பரவாயில்லை இனித் திருத்திக் கொண்டிருப்பானேன்.. அவர்களே பார்த்து முடிவு செய்யட்டும்...:)

   உங்கள் மனந்திறந்த கருத்து எனக்கு மிக மகிழ்வினை தருகிறது...

   அன்பு வரவிற்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றி தோழி!...[/co]

   Delete
 14. நீங்கள் சொல்லும் அறிவுரை ஏற்றே
  பட்டியல் இட்டிருக்கும் ஒளி பல ஏற்றியே
  ஒளிமயமாய் வாழ்வோம் இங்கே
  களிப்புத் தரும் உங்கள் கவியே

  மிக மிக அருமை தோழி! முதல் பரிசு உங்களுக்குத்தான் :) இதில் ஆற்றல் இல்லை என்று வேறு..இது தான் முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைப்பது என்பதுவோ தோழி? :)
  நல்லவர் நட்பைத் தேடி - அருமை!
  உள்ளூரும் உன்னுணர்வு - படத்திலேயே தெரிகிறதே :) , அழகான படம் !
  அ.பாண்டியன் அவர்களுக்கு வாழ்த்துகள்! நானும் அவர் படைப்புகளைப் படித்து வருகிறேன்.
  க்விளிங் பற்றிய தகவல் தொகுப்பிற்கு நன்றி தோழி, உங்கள் தளம் பார்த்த நாளாய் செய்து பார்க்க ஆசை, கருவி வாங்க தள்ளிப் போட்டுக் கொண்டிருக்கிறேன், சோம்பேறி நான் :).
  அருமையான பதிவிற்கு நன்றி தோழி! நல்லதொரு அவியல் :)

  ReplyDelete
  Replies
  1. எனது அன்பார்ந்த நன்றிகள் கிரேஸ் சகோதரிக்கு..

   Delete
  2. [co="DodgerBlue"]வணக்கம் அன்பு கிரேஸ்!..

   வாருங்கள்!... உங்களின் அன்பான வரவும் இனிக்கும் கவி வரிகளும் மனதில் மட்டற்ற சந்தோஷத்தைத் தருகிறது!..

   அவ்வ்வ்வ்வ்... என்ன முழுப் பூசணிக்காயா எங்கே...
   எப்ப சோற்றில் மறைத்தேன்...:) நல்ல ஜோக்தான்...

   எனக்கே எனக்கா முதல் பரிசு.. ம் ம்... வரட்டும்..
   தரட்டும் அப்புறம் பார்த்துக்குவோம்...:)))

   எத்தனை வித்துவ மேதைகள் பங்குகொள்கிறார்களோ.. ஏன் நீங்களும் அனுப்பியிருக்கின்றீர்கள்தானே... உங்களுக்கே முதல் பரிசு கிடைக்கலாம்...

   க்விலிங் கருவி அங்கும் கிடைக்கும். கூகிளில் தேடிப் பாருங்கள்..
   விரைவில் வாங்கிச் செய்து காண்பியுங்கள்.!..

   உங்களின் இனிய ரசனை மற்றும் நல் வாழ்த்துகளுக்கும்
   என் மனமார்ந்த நன்றிகள் தோழி!..[/co]

   Delete
 15. ’ஒளி காட்டும் வழி’ யாக அனைத்துமே அருமை. பாராட்டுக்கள்..

  ReplyDelete
  Replies
  1. [co="DodgerBlue"]வணக்கம் ஐயா!..

   வாருங்கள்!... உங்களின் அன்பான வரவுக்கும் பாராட்டிற்கும்
   என் மனமார்ந்த நன்றிகள்!..[/co]

   Delete
 16. மழலை நிஜமோ என்று தோன்ற வைக்கிறது

  கவிதை ஓளி காட்டும் வழி போட்டி கவிதைக்கு வாழ்த்துக்கள்
  நான் கேட்டு கொண்டதற்காக கிவி லிங்க் பற்றிய தங்கள் பகிர்வுக்கு நன்றி
  இதை பற்றி என் தளத்திலும் குறிப்பிடலாம் என இருக்கிறேன்

  ReplyDelete
  Replies
  1. [co="DodgerBlue"]வணக்கம் சகோதரர் சரவணன்!..
   வாருங்கள்!... உங்களின் முதல் வருகை இங்கு!.. மகிழ்ச்சி!

   அழகியலில் உங்கள் ரசனையும் அருமை!..

   உங்களின் அன்பான வரவுக்கும் இனிய வாழ்த்திற்கும்
   என் மனமார்ந்த நன்றிகள் சகோ!..

   உங்களின் தளத்திலும் க்விலிங் பற்றி எழுதப் போகின்றீர்களா..
   ஓ.. அருமை!
   பதிவிடுங்கள்! வந்து பார்க்கின்றேன்!...[/co]

   Delete
 17. என் மனதையும் கோட்டுச்சித்திர க்விலிங் ல் பறிகொடுத்து விட்டேன் அவ்வளவு அழகு. வாழ்த்துக்கள் இளமதி.
  போட்டிக்கு அனுப்பும் கவிதையை மிக நன்றாக எழுதியிருக்கிறீங்க. இதில் நீங்கள் வெற்றி பெற என மனப்பூர்வமான வாழ்த்துக்கள்.
  " நல்லவர் நட்பைத் தேடி
  நலம்பல பெறுவோம் நன்றே!
  வல்லவர் அன்பை வேண்டி
  வளம்பல காண்போம் இன்றே!"// மிக ரசித்தகவிதை.

  சகோ.அ.பாண்டியன் அவருக்கு என் வாழ்த்துக்கள்.

  க்விலிங் செய்முறை பற்றிய அறிமுகம் மிக நன்றாக இருக்கு. தெரியாதவர்கள் புரிந்துகொள்ளும் வகையில் எழுதி, இணைப்புகளையும் தந்த உங்களுக்கு என் பாராட்டுக்கள்.
  அழகான க்விலிங், அருமையான கவிதைகள் இளமதி.நன்றிகள்.

  ReplyDelete
  Replies
  1. [co="DodgerBlue"]வணக்கம் அன்பு அம்மு!.. வாங்கோ...:)

   க்விலிங் எனக்கும் இம்முறை நல்ல திருப்தியே..
   நான் நினைத்தது போலவே செய்யமுடிந்தது பெரும் மன நிறைவு!.
   உங்களின் ரசனையும் எனக்கு இரட்டிப்புச் சந்தோஷமே!..:)

   உங்கள் கவிதை ரசிப்பும் மகிழ்ச்சியைத் தருகிறது!.
   போட்டியில் வெற்றி தோல்வியைவிட நாமும் பங்குபற்றி ரூபனை ஊக்குவிக்கின்றோமென்பதே மன நிறைவு!..

   அத்தனையையும் அவதானமாகப் பார்த்து ரசித்து நல்ல கருத்துப் பகிர்வு செய்தமைக்கும் நல் வாழ்த்துகளுக்கும்
   என் மனமார்ந்த நன்றிகள் தோழி!..[/co]

   Delete
  2. வாழ்த்துக்கு ரொம்ப நன்றீங்க சகோதரி..

   Delete
 18. குவிலிங் மிக அழகு! வாழ்த்து!.
  செய்வினை பறறிய விளக்கமும் , நன்றி.
  கவிதைகள் அனைத்தும் சிறப்பு.
  பாண்டியன் சகோதரனுக்கும்
  இனிய வாழ்த்து.
  வேதா. இலங்காதிலகம்.

  ReplyDelete
  Replies
  1. [co="DodgerBlue"]வணக்கம் சகோதரி கோவைக்கவி!..

   உங்களின் அன்பான வரவுக்கும்
   இனிய ரசனை மற்றும் நல் வாழ்த்துக்கும்
   என் மனமார்ந்த நன்றிகள்!..[/co]

   Delete
  2. சகோதரியின் வாழ்த்துக்கு எனது நெஞ்சார்ந்த நன்றிகள்..

   Delete
 19. போட்டியில் வெற்றிபெற வாழ்த்துக்கள் அக்கா...


  நல்ல கவிதை...

  ReplyDelete
  Replies
  1. [co="DodgerBlue"]வணக்கம் சகோதரர் வெற்றிவேல்!..

   உங்களின் அன்பான வரவுக்கும் வாழ்த்துக்கும்
   என் மனமார்ந்த நன்றி சகோ!..[/co]

   Delete
 20. கோட்டுச் சித்திரத்தில் என் மனதைக் கவர்ந்த
  மழலை இங்கு
  எனது க்விலிங் கைவேலையில்!...:/
  உங்கள் கைவேலையில் மழலை என்னையும் கவர்ந்தாள்.
  அன்பொளி ஏற்றுக! அருளொளி ஏற்றுக!
  பண்பொளி ஏற்றுக! பண்ணொளி ஏற்றுக!
  இன்பவொளி ஏற்றுக! இதயத்துள் மின்ன!
  துன்பகன்று ஓடும்! துணிவொளி யாலே!//

  கவிதை ஒளி அருமை.

  அன்பும், பண்பும் இன்பத்தை தரும். கவிதையில் வெற்றிபெற வாழ்த்துக்கள்.
  நல்லவர் நட்பு கவிதையும் மிக அருமை.

  //எழுத்துத் துறையில் நல்ல ஆர்வமுடன் தனது பதிவுகளோடு சக பதிவர்கள் வலைத் தளங்களுக்கும் சென்று சிறந்த நல்ல கருத்துகளைப் பகிர்வு செய்து அவர்களை ஊக்குவிக்கும் அன்பானவர் சகோதரர் பாண்டியன்!//
  நீங்கள் சொல்வது உண்மை..


  அரும்புகள் மலரட்டும் வலைத்தளம் வைத்து இருக்கும் பாண்டியன் அவர்கள் வலைத்தளம் சென்று படித்து வருகிறேன்.
  பாண்டியன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.


  க்விலிங் செய்முறை பற்றிய அறிமுகம் மிக நன்றாக இருக்கிறது.
  வாழ்த்துக்கள் இளையநிலா.

  ReplyDelete
  Replies
  1. [co="DodgerBlue"]வணக்கம் சகோதரி கோமதி அரசு!..

   வாருங்கள்!... உங்களின் அன்பான வரவும்
   இனிய அக்கறையான ரசனை மற்றும் நல்ல கருத்துகளும்
   என்னை மிகவும் மகிழ்ச்சிப்படுத்துகின்றன.

   அன்பான வாழ்த்துகளுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்!..[/co]

   Delete
  2. வணக்கம் அம்மா, தங்களிடமிருந்து வாழ்த்து பெற்றதில் மிக்க மகிழ்ச்சி. நன்றி.

   Delete
 21. தீப ஒளிக் கவிதை மிகவும் அருமை! வெற்றிபெறவாழ்த்துக்கள்! க்விலிங்க் வேலைப்பாடு அழகு! அதை எப்படி செய்வது என்ற விளக்கமும் சிறப்பு! அறிமுக பதிவர் பாண்டியனின் வலைதளத்தை தொடர்ந்து படித்துவருகிறேன்! சிறப்பான தளம்! நன்றி!

  ReplyDelete
  Replies
  1. [co="DodgerBlue"]வணக்கம் சகோதரர் சுரேஷ்!..

   வாருங்கள்!... உங்களின் வரவுக்கும்
   இனிய ரசனை மற்றும் நல் வாழ்த்துகளுக்கும்
   என் மனமார்ந்த நன்றிகள்!..[/co]

   Delete
  2. சகோதரரின் வாழ்த்துக்கும் கருத்துக்கும் எனது அன்பு நன்றிகள்

   Delete
 22. [co="red purple"] அடடா குயிலிங் சொல்லி வேலையில்லை, சூப்பரோ சூப்பர். பிரிண்ட் எடுத்தா செய்தீங்க? [/co]

  ReplyDelete
  Replies
  1. [co="DodgerBlue"]வணக்கம் ..:) வாங்க அதிரா!..

   நன்றி! நன்றி!..

   ஓம். கறுப்பு வெள்ளையில் பிறிண்ட் எடுத்துட்டு
   பின்பு க்விலிங் செய்யப்போகிற மட்டையில் இதனை வைத்து றேஸ் பன்னினால் மட்டையில பேனை, பென்சிலால கீறாம அடையாளம் மட்டும் வரும்.. அதில க்விலிங் செய்து ஒட்டவேண்டியதுதான்..:)..[/co]

   Delete
 23. ஆயினும் ரூபனின் இந்த நல்ல முயற்சிக்கு ஆதரவு கொடுக்கும் நோக்கமுடன் இதனை அவருக்கு அனுப்பி வைக்கின்றேன்!.//

  [co="red purple"]ஆவ்வ்வ்வ்வ்வ்வ் போட்டியில் கலந்து கொள்றீங்களோ நல்ல விஷயம்.. பரிசு கிடைக்க வாழ்த்துக்கள்... போட்டியில் வெல்லாவிட்டாலும் பங்குபற்றுவதே சந்தோசம்தானே.. [/co]

  ReplyDelete
  Replies
  1. [co="DodgerBlue"]அதுதான் அதிரா.. போட்டியெண்டு சொல்லி
   அதில பங்குபற்ற இன்னும் எனக்கு கவிதையில் தேர்ச்சி
   போதாதெல்லோ.. பங்களிப்பு, ஊக்குவிப்பு, உற்சாகம் இதுமட்டுமே..:).
   அதனாலேயே தெரிஞ்ச மட்டில் எழுதி அவருக்கும் அனுப்பிவிட்டிருக்கிறேன்...[/co]

   Delete
 24. [co="red purple"] பாண்டியனின் வலைப்பூ அறிமுகத்துக்கு வாழ்த்துக்கள், நானும் சமீபத்தில்தான் அவரின் வலைப்பூ தெரிந்து கொண்டேன்.[/co]

  ReplyDelete
  Replies
  1. வாழ்த்துக்கு எனது அன்பான நன்றிகள் சகோதரி.

   Delete
 25. [co="red purple"] ஆஹா குயில் பற்றி உவ்ளோ விளக்கமா? ஆனா என்னிடம் உதில் ஒன்றுகூட இல்லை:) இருப்பினும் மீயும் குயிலிங் செய்கிறனாக்கும்:))... கண்ணில காணக் கிடைக்குதில்ல, கிடைத்ததும் வாங்கிடுவேன். ஒவ்வொரு லிங்காக நேரம் கிடைக்கும்போது போய்ப் பார்க்கிறேன், எனக்கு இப்படியான குயிலிங் லிங்குகளில் போய்ப் பார்ப்பதென்பது, விருப்பமான பொழுதுபோக்கு.[/co]

  ReplyDelete
  Replies
  1. [co="DodgerBlue"]க்விலிங்.. பெருங் கடலெல்லோ..
   இறங்கீட்டா கரையே தெரியாது... நீந்திக்கொண்டே இருக்கலாம்..:) இதுவே பெரீய விளக்கமெண்டா.. அவ்வ்வ்..:)

   ம்.தேடுங்கோ நீங்களும்..
   பாருங்கோ.. அதோட நிக்காம செய்து உங்க தளத்திலயும் போடுங்கோ..:)

   ரொம்ப மகிழ்ச்சி அதிரா.. :)
   அன்பான வரவுக்கும் நல்ல கருத்துகளுக்கும் வாழ்த்துகளுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்!..[/co]

   Delete
 26. எங்களுடைய வேண்டுகோளை ஏற்று எங்கள் விருப்பத்திற்காக க்விலிங் கைவேலையை அறிமுகப்படுத்தியமைக்கு நன்றி தோழி...

  ReplyDelete
  Replies
  1. [co="DodgerBlue"]வணக்கம் சகோதரர் கலியப்பெருமாள்!..

   வாருங்கள்!.. உங்களின் விருப்பத்தையும் நிறைவேற்றியதில்
   மிகுந்த மன நிறைவு எனக்கும்...[/co]

   Delete
 27. படத்திலேயே உங்கள் கைவண்ணம் அழகாய் தெரிகிறது ,நேரில் 3 D படம் போல் இன்னும் அழகாய்த்தான் இருக்கும் !

  ReplyDelete
  Replies
  1. [co="DodgerBlue"]வணக்கம் சகோதரர் பகவான்ஜி!..

   வாருங்கள்!.. உங்களின் முதல் வருகை இங்கு.. மிக்க மகிழ்ச்சி!

   உங்களின் மிகுந்த ரசனை கண்டு வியந்தேன்.
   நேரில் பார்ப்பதைவிட போட்டோவில் அதன் அழகு மேல் என்பது என் கருத்து.
   சில காட்சிகள் அப்படித்தான் இருக்கும்...:)

   உங்கள் அன்பான வரவிற்கும் நற் கருத்திற்கும் மனமார்ந்த நன்றி சகோ!..[/co]

   Delete
 28. கதம்பமாய் ஒரு பதிவு! எல்லாப்பகிர்வுகளும் அருமை! கோட்டுச் சித்திரத்தில் மழலை மிக இயல்பாக இருக்கே..கலக்கீட்டீங்க இளமதி! அந்தச் சுட்டியின் கண்மணிகளிரண்டும் மிக அழகு!

  தீபாவளிக்கவிதை நன்றாக இருக்கிறது, போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள்! நான்குவரிக்கவிதையும் நச்சென்று இருக்கு! :)

  பாண்டியன் அவர்களின் வலைப்பகிர்வுக்கு வாழ்த்துக்கள். நேரம் கிடைப்பது சற்றே கடினமாகிக்கொண்டிருக்கிறது. சந்தர்ப்பம் கிடைக்கையில் கட்டாயம் சென்று பார்க்கிறேன்.

  க்வில்லிங் பற்றிய விளக்கங்கள் ஆர்வமுள்ளோருக்குப் பயன் தரும் என்பதில் ஐயமில்லை, தொடருங்கள்!

  ReplyDelete
  Replies
  1. [co="DodgerBlue"]வணக்கம் மகி!..

   வாங்க... :) நீங்க நேரத்துக்கு வந்தும் நான்தான் பதில்தர
   இம்முறை தாமதம்..:(

   அந்த மழலையின் கண்முழி பெருத்துப் போச்சுன்னு இங்கே
   வீட்டில சொன்னாங்க... உங்களுக்கு அதுவே அழகாக
   இருந்திச்சு என்று கேட்டு மகிழ்ச்சி..:)

   உங்க அன்பான ரசனைகள், நல்ல கருத்துக்கள்
   இனிய வாழ்த்துக்கள் அனைத்திற்கும்
   என் மனமார்ந்த நன்றி மகி!..[/co]

   Delete
  2. வாழ்த்துக்கு மிக்க நன்றீங்க சகோதரி..

   Delete
 29. கவிதை ஒரு பரிசினை பெரும் என்றே நினைக்கிறன்..ரொம்ப நல்லா இருக்கு..

  அருமை... க்வ்லிங் குறித்து தாங்கள் எழுதியது நலம் என் வீட்டில் ரொம்ப நாளாக என்ன என்று தெரிந்து கொள்ள விரும்பினார்கள்..

  ஒரு நல்ல பதிவரை அறிமுகம் செய்தது நிறைவு...

  நன்றி சகோதரி..

  ReplyDelete
  Replies
  1. [co="DodgerBlue"]வணக்கம் மது கஸ்தூரி ரெங்கன்!..

   உங்களின் அன்பான வரவுக்கும் நல்ல கருத்துகளுக்கும்
   இனிய வாழ்த்துக்கும் என் மனமார்ந்த நன்றி!..[/co]

   Delete
  2. வாழ்த்துக்கு நன்றி சகோதரரே..

   Delete
 30. சிறப்பான கவிதையுடன் சிறப்பித்த அ பாண்டியன்
  சீர்மிகு வேலைப்பாடும் அருமை

  Typed with Panini Keypad

  ReplyDelete
  Replies
  1. [co="DodgerBlue"]வணக்கம் சகோதரர் கவியாழி கண்ணதாசன்!..

   உங்களின் அன்பான வரவுக்கும் வாழ்த்துக்கும்
   என் மனமார்ந்த நன்றி சகோ!..[/co]

   Delete
  2. கருத்துக்கும் வாழ்த்துக்கும் நன்றீங்க சகோதரரே..

   Delete
 31. அன்பு தோழமையே,
  என்வலைதளத்துக்கு வந்து கைதட்டியது யார் என்று பார்க்க
  இங்கு வந்தேன்..................
  அதிர்ச்சி.......
  இன்பதிர்ச்சி.......
  என்ன கைவேலைப்பாடு
  அதும் சாதாரணமாக எல்லாரும் செய்யும் quilling இங்கு வேரு மாதிரியாய்............ரசிக்கும்படியாக..........
  நெஞ்சில் புகுந்து உதடில் புனகையை வருத்திய கவிதைகள்............
  வருவேன் மீண்டும் மீண்டும்...............
  அன்புடன் விஜி

  ReplyDelete
  Replies
  1. [co="DodgerBlue"]வணக்கம் விஜி!..
   இங்கு உங்கள் முதல் வருகை. வாருங்கள்!

   உங்களின் அன்பான வரவும் அசத்தலான ரசனையையும் கண்டு
   மிக்க மகிழ்ச்சி தோழி!

   மேலும் இனிய நல்ல கருத்திற்கும் உளமார்ந்த வாழ்த்துக்கும்
   என் அன்பார்ந்த நன்றி! வாருங்கள் தொடர்ந்து..
   ஆவலுடன் இருப்பேன்....[/co]

   Delete
 32. வணக்கம்
  சகோதரி
  தங்களின் மின்னஞ்சல் சுமந்த கவிதை வந்து கிடைத்து விட்டது மிக்க மகிழ்ச்சியாக உள்ளது போட்டிக்கான கவிதை நடுவர்களின் பரிசீலனையில் உள்ளது என்பதை தங்களுக்கு மகிழ்ச்சியுடன் அறியத்தருகிறேன்….
  --------------------------------------------------------------------------------------------------

  கவிதை அருமையாக உள்ளது போட்டியில் வெற்றிபெற எனது வாழ்த்துக்கள்…க்விலிங் படங்கள் கண்னைக்கவரும் வகையில் உள்ளது

  ------------------------------------------------------------------------------------------------------------------
  சகோதரன் பாண்டியன் அவருடைய வலைப்பூ அறிமுகம் கண்டு மிக்க மகிழ்ச்சியடைந்தேன்.. அவருடன் நான் பல தடவை பேசியபோது அறிவுக்கு விருந்தாக பல நல்ல வியடங்களை புகட்டும் வல்லமை மிக்கவர்தான் சகோதர் (பாண்டியண்).......
  வலைப்பூ அறிமுகத்திற்கு வாழ்த்துக்கள்....

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  -----------------------------------------25/10/2013----------------------------------------

  ReplyDelete
  Replies
  1. [co="DodgerBlue"]வணக்கம் ரூபன்!..

   உங்களின் அன்பான வரவும் இனிய கருத்துகளும் கண்டு மகிழ்ந்தேன்!

   வாழ்த்துகளுக்கும் என் மனமார்ந்த நன்றி சகோ!..[/co]

   Delete
  2. ஆகா! கருத்துக்கும் வாழ்த்துக்கும் அன்பு நன்றிகள் சகோதரரே..

   Delete
 33. பல விஷயங்கள் ஒரே பதிவில் எழுதி உள்ளீர்கள்..... மிக்க மகிழ்ச்சி.

  கவிதைப் போட்டியில் வெற்றி பெற வாழ்த்துகள்.

  ReplyDelete
  Replies
  1. [co="DodgerBlue"]வணக்கம் சகோதரர் வெங்கட் நாகராஜ்!..

   வாருங்கள்! நீங்களெல்லாம் என் தளத்திற்கு வரமாட்டீர்களா எனக் காத்திருந்தேன்..
   உங்களின் அன்பான வரவு கண்டு மிக்க மகிழ்ச்சி!

   இனிய நல்ல கருத்திற்கும் வாழ்த்துக்கும்
   என் மனமார்ந்த நன்றி சகோ!..[/co]

   Delete
 34. இனிய வணக்கம் சகோதரி...
  அழகான குழந்தை ஓவியம் உங்கள் கைவண்ணத்தில்
  மிளிர்கிறது..
  காண்பதை அப்படியே உரு ஓவியமாக செய்வதில்
  வல்லவர் நீங்கள். இங்கே மறுபடியும் உறுதியாகிறது.
  ==
  ஒளி காட்டும் வழி..
  அற்புதமான சகோதரி.
  இலகுவான சொற்செரிவுடன்
  இனிதே இயற்றப்பட்ட கவிதை.
  வாழ்த்துக்கள் சகோதரி....
  ==
  நண்பர் பாண்டியன் அவர்களின் தளத்துக்கு நாட்கள் முன்புதான் சென்றேன்.
  அவரின் சிந்தனைகளும் எழுத்துக்களும் அற்புதமானவை.
  உங்கள் தளத்தில் அவரின் அறிமுகம் மிகவும் அழகு.
  நண்பருக்கு வாழ்த்துக்களும் உங்களுக்கு நன்றிகளும்.

  ReplyDelete
  Replies
  1. [co="DodgerBlue"]வணக்கம் சகோதரர் மகேந்திரன்!..

   உங்கள் ரசனையும் எனக்கு மிகவும் ஊக்கம் தரும் ஓர் அரிய சக்தியாகும். அக்கறையாக ரசித்துக் கருத்துப் பகிர்வது
   மகிழ்வைத் தருகிறது சகோ!

   உங்களின் அன்பான வரவுக்கும் வாழ்த்துக்கும்
   என் மனமார்ந்த நன்றி சகோ!..[/co]

   Delete
  2. கருத்துக்கும் தங்களது வாழ்த்துக்கும் அன்பான நன்றிகள் நண்பரே..

   Delete
 35. ரூபனின் கவிதைப் போட்டியில் வெற்றிபெற வாழ்த்துக்கள்...
  பதிவர் பாண்டியன் பற்றிய அறிமுகம் நன்று...
  மற்ற பகிர்வுகளும் அருமை..

  ReplyDelete
  Replies
  1. [co="DodgerBlue"]வணக்கம் சகோதரர் குமார்!..

   உங்களின் அன்பான வரவுக்கும் வாழ்த்துக்கும்
   என் மனமார்ந்த நன்றி சகோ!..[/co]

   Delete
  2. வாழ்த்துக்கு நன்றிகள் சகோதரரே.. தங்கள் என்னைப் பற்றிப் பேச வாய்ப்பு தந்த சகோதரிக்கே எனது நன்றிகள்..

   Delete
 36. கவிதை வரிகள் அருமை தோழி. போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள்.
  யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்... என்பதாய் க்ளிவிங் வேலைப்பாடு பகிர்வு சிறப்புங்க. நானும் முயற்சிக்கிறேன். குட்டிப்பாப்பா கைவேலை மிகவும் அழகு மிக மிக ரசித்தேன். மனதிற்கு இதமான தங்கள் பகிர்வை கண்டு மகிழ்ந்தேன். தொடருங்கள்.

  ReplyDelete
  Replies
  1. [co="DodgerBlue"]வணக்கம் சசிகலா!..

   வரும்போது எப்படி வந்தமோ அதுபோல போகும்போதும்
   கொண்டுபோவது ஏதுமில்லை.. இடையில் இருப்பதைக் கிடைப்பதை பகிர்ந்து வாழ்தலே பெரிய மகிழ்வுதானே...:)

   ’க்விலிங்’ முயற்சி செய்யுங்க.. எல்லாம் முடியும்..:)

   உங்களின் அன்பான வரவுக்கும் வாழ்த்துக்கும்
   என் மனமார்ந்த நன்றி தோழி!..[/co]

   Delete
 37. நல்ல கிவிலிங் வேலைப்பாடு/வாழ்த்துக்கள்.நல்ல கவிதை.பாண்டியன் அவர்களின் வலைத்தளம் சிறக்க வாழ்த்துக்கள்.

  ReplyDelete
  Replies
  1. [co="DodgerBlue"]வணக்கம் சகோ விமலன்!..

   உங்களின் அன்பான வரவும் இனிய கருத்துகளும் கண்டு மகிழ்ந்தேன்!
   வாழ்த்துகளுக்கும் என் மனமார்ந்த நன்றி சகோ!..[/co]

   Delete
  2. வாழ்த்துக்களுக்கு அன்பான எனது நன்றிகள் சகோதரரே..

   Delete
 38. அழகிய கவிதையில் ஆழ்ந்தேன்
  அமிர்த வாசனை நுகர்ந்தேன்
  புலமை எட்டிய வரிகள்
  பூத்தது மலராய் இங்கே ..!

  கவிதை அழகு ,அறிமுகப்பதிவர் அறிந்தவர்தான்
  எல்லாவற்றையும் விட தாங்கள் அறிந்த கலையை அடுத்தவர்களுக்கும் பகிர்ந்து கொண்டமை இன்னும் நன்றே

  தங்கள் கவிதை போட்டியில் தெரிவாக வாழ்த்துக்கள் சகோ
  இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்

  வாழ்கவளமுடன்

  ReplyDelete
  Replies
  1. [co="DodgerBlue"]வணக்கம் அன்புத் தம்பி சீராளன்!..

   உமது
   அன்பு வரவில் மகிழ்ந்தேன்!
   அழகிய கவியில் மிதந்தேன்!
   மின்னிடும் கருத்தில் மிளிர்ந்தேன்!
   மேவிய அன்பில் வியந்தேன்...:)

   உங்களின் அன்பான வரவும் இனிய கருத்துகளும் கண்டு மிகவும் மகிழ்ந்தேன்!
   வாழ்த்துகளுக்கும் என் மனமார்ந்த நன்றி உறவே!..[/co]

   Delete
 39. உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

  மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2013/10/blog-post_27.html) சென்று பார்க்கவும்... நன்றி...

  ReplyDelete
  Replies
  1. [co="Green"]வணக்கம் சகோதரர் தனபாலன்!..

   உங்களின் அன்பான செய்திப் பகிர்விற்கும்
   இனிய வாழ்த்திற்கும் மனமார்ந்த நன்றி!..[/co]

   Delete
 40. தங்களின் வலைத் தளம் வலைச்சரத்தில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
  http://blogintamil.blogspot.com/2013/10/blog-post_27.html

  அன்பின் நல்வாழ்த்துக்கள்!..

  ReplyDelete
  Replies
  1. [co="Green"]வணக்கம் ஐயா துரை செல்வராஜூ!..

   உங்களின் அன்பான செய்திப் பகிர்விற்கும்
   இனிய வாழ்த்திற்கும் மனமார்ந்த நன்றி!..[/co]

   Delete
 41. அருமையான கைவேலை ,அதற்கு சற்றும் குறையாத கவிதை வேலை போங்க இளமதி இவ்வளவு திறமை கண்படபோகிறதே என்று நினைக்க விடாமல் தன கலையை வேறு சொல்லிகொடுகிரீர்கள் .கிரேட் .வாழ்த்துக்கள்

  ReplyDelete
  Replies
  1. [co="DodgerBlue"]வணக்கம் மகிவதனா!..

   தெரிந்ததைப் பகிர்வதில் தப்பில்லையே..:)

   உங்களின் அன்பான வரவும் இனிய கருத்துகளும் கண்டு மனம் மகிழ்ந்தேன்!
   வாழ்த்துகளுக்கும் என் மனமார்ந்த நன்றி!..[/co]

   Delete
 42. எனக்கு அப்டேட் வரவே மாட்டுதாம். சும்மா எட்டிப் பார்த்தால் போஸ்ட் இருக்குது.

  கவிதை அருமை இளமதி. க்வில்லிங் விளக்கமும் நன்றாக இருக்கிறது.
  பாண்டியன் பக்கம் விரைவில் செல்கிறேன்.

  ReplyDelete
  Replies
  1. [co="DodgerBlue"]வணக்கம் இமா..
   வாங்க.... ம்.. என்ன செய்ய சில நேரம் எனக்கும் இதே பிரச்சனை இருக்கு.
   சில நல்ல பதிவர்களின் பதிவுகளை நேரத்துக்குப் பார்த்து
   கருத்துப்போடாமல் விடுபட்டிருக்கு...

   உங்களின் அன்பான வரவும் இனிய கருத்துகளும் கண்டு மகிழ்ச்சி இமா!
   வாழ்த்துகளுக்கும் என் மனமார்ந்த நன்றி..[/co]

   Delete
 43. அழகான க்வில்லிங் குழந்தை! அதன் கண்ணழகிலிருந்து கண்ணை எடுக்கவே முடியவில்லை. மிகவும் தத்ரூபமாக செய்திருக்கிறீர்கள். பாராட்டுகள் இளமதி. ஆர்வமுள்ள பலருக்கும் பயன்படும் வகையில் க்வில்லிங் கலையைக் கற்றுத்தரும் நேர்த்தியான செய்முறைகளுக்கும் அது தொடர்பான தளங்களின் அறிமுகத்துக்கும் நன்றி. ஆர்வம் இருந்தாலும் செய்வதற்கான பொறுமை இப்போது என்னிடம் இல்லை. காலம் கூடிவரும்போது நிச்சயம் முயல்வேன்.
  ஒளி காட்டும் வழி கவிதையின் கருத்துக்கள் அனைத்தும் அருமை. வாழ்க்கையிருளை ஓட்டக்கூடிய ஒளிவிளக்குகளாய் அன்பும், பண்பும் அறமும் கருணையும் துணிவும் திறனும் விளங்கும் என்பதை அழகிய தமிழால் அகம் குளிர வழங்கிய கவித்திறனுக்கு மனம் நிறைந்த பாராட்டுகள். போட்டியில் வெற்றிபெற இனிதே வாழ்த்துகிறேன் தோழி.
  பாண்டியன் அவர்களது வலைப்பூ அறிமுகமும் பதிவுகளின் அறிமுகமும் சிறப்பு. இன்றே அவர் தளத்தில் இணைந்துவிட்டேன். நன்றி இளமதி.

  ReplyDelete
  Replies
  1. [co="DodgerBlue"]வணக்கம்! வாங்க கீத மஞ்சரி!..

   நீண்ட நாளாக் காணவில்லையேன்னு இருக்க இங்க வந்து
   கருத்தெழுதிப் போயிருக்கிறீங்கள்... மிக்க மகிழ்ச்சி!...

   க்விலிங் ரசனையும் கவிதை ரசனையும் என்னை
   மேலும் சிறப்பாக ஈடுபட வைக்கிறது..
   நேரம் கிடைக்கும்போது க்விலிங் செய்து பாருங்க.

   உங்களின் அன்பான வரவும் இனிய கருத்துகளும்
   கண்டு ரொம்பவே மகிழ்ந்தேன்!
   வாழ்த்துகளுக்கும் என் மனமார்ந்த நன்றி கீதமஞ்சரி!..[/co]

   Delete
 44. வணக்கம் சகோதரி..
  வலைச்சர அறிமுகத்திற்கு எனது அன்பான வாழ்த்துக்கள். தங்கள் பணிச்சிறக்க என்றும் எனது இறைவேண்டலும் இருக்கும். நன்றி..

  ReplyDelete
  Replies
  1. [co="DodgerBlue"]வணக்கம் சகோ!

   தங்கள் அன்பிற்கும் வாழ்த்திற்கும்
   இனிய நன்றி சகோ!.[/co]

   Delete
 45. கவிதை அருமை... (இப்பல்லாம் யாரு மரபுக் கவிதை அலலது ஓசையில் எழுதுறாங்க?) ஆனா “க்விலிங்“ செய்து பார்க்கும் பொறுமைஇல்லை.. நீங்க காட்டின படம் நல்லாருக்கு. வாழ்த்துகள்

  ReplyDelete
  Replies
  1. [co="DodgerBlue"]வணக்கம் ஐயா முத்து நிலவன் அவர்களே!..
   தங்களின் முதல் வருகை இங்கு! வாருங்கள்!..
   மிக்க மகிழ்ச்சி ஐயா!..

   உங்களின் அன்பான வரவு கண்டு வியப்புற்றேன்..
   இன்னும் ஆச்சரியத்திலிருந்து நான் மீளவில்லை!..

   மரபுக் கவிதை கற்கவும் எழுதவும் இப்போதுதான்
   அடியெடுத்து வைத்துள்ளேன் ஐயா!
   பிரான்ஸிலுள்ள கவிஞர் பாரதிதாசன் ஐயாவிடம்
   அவ்வப்போது சந்தேகம் மட்டும் கேட்கின்றேன்..
   முறையாக இன்னும் பயில ஆரம்பிக்கவில்லை.
   ஏதோ கொஞ்சம் தெரிந்ததை அறிந்ததை வைத்து எழுதுகிறேன் ஐயா!

   தங்களின் பாராட்டும் வாழ்த்தும் என்னை ஊக்குவிக்கின்றது!
   இனிய கருத்துகளும் கண்டு மகிழ்ந்தேன்!
   அனைத்திற்கும் என் உளமார்ந்த அன்பு நன்றி ஐயா!..[/co]

   Delete
 46. Happy Deepavali.
  Vetha.Elangathilakam.

  ReplyDelete
  Replies
  1. [co="DodgerBlue"]வணக்கம் சகோதரி!

   தங்கள் அன்பு வாழ்த்திற்கு மிக்க நன்றி!
   உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள்!.[/co]

   Delete
 47. கவிதையில் தமிழ்மணம் கமழ்கிறது ! என் போன்ற அரைகுறைத் தமிழ்கவிஞனெல்லாம் உங்கள் கவிதையில் இருந்து கற்றுக்கொள்ள பாடங்கள் நிறையவே உள்ளன தோழி ! அருமை !

  ReplyDelete
 48. போட்டியில் வெற்றிபெற வாழ்த்துக்கள்

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் சகோதரரே!..

   உங்கள் அன்பு வருகை கண்டு மகிழ்ச்சி!
   உங்களை இப்படித் தாழ்த்திச் சொல்வது முறையல்ல. நல்ல சிந்தனையும் அற்புத எழுத்தாற்றலும் உங்களிடமும் உண்டு!

   நானும் இப்போதுதான் கற்கின்றேன்.
   இனிய நற்கருத்துகளுக்கும் நல் வாழ்த்திற்கும்
   உளமார்ந்த நன்றி சகோ!

   Delete
 49. ஆஹா அருமை அருமை ...!

  நற் கவிதை தந்து எமை ஆட்கொண்டீர்
  வெண்பாவில் நன்கு விந்தை செய்தீர்
  wow இளமதி....!

  அறிமுகங்கள் பல செய்து அன்பும் செய்தீர்
  கவிதை போட்டியிலும் வெற்றி ஈட்டுவீர் நீரே...!
  வாழ்த்துக்கள்...! அத்தனையும் அருமையான வெண்பாக்கள் மிகவும் நன்றாக ரசித்தேன் ,மகிழ்ந்தேன், பெருமையும் கொண்டேன் தோழி.

  உங்கள் புல் நுனி பனிக்கு இட்ட கருத்து பார்தீர்களா?

  ReplyDelete
  Replies
  1. ஆஹா... வணக்கம் வாங்கோ இனியா..:)

   என்ன இது ஒரே பனிப்பொழிவாக இருக்கிறது இங்கு...:)

   ரொம்பவே புகழ்கின்றீர்கள்..
   அன்பு வாழ்த்திற்கும் இனிய கருத்திற்கும் மிக்க நன்றி தோழி!.

   புல் நுனிப் பனியை இதோ பார்க்கின்றேன்...;)

   Delete
 50. கவிதை நல்லா வந்திருக்கு. வெற்றி பெற வாழ்த்துகள் சகோ..

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றி வாழ்த்திற்கு சகோ!..:)

   Delete
 51. //உள்ளூறும் உன்னுணர்வு உறங்கிப் போமோ
  உயிரூறும் என்னில் உறைந்து!..//

  மிக அருமை !
  குறளுக்கு குறளால் ஒரு குட்டிப்பரிசு
  -------------------------------------------
  குறள்கொண்ட கவிகண்டு மனமெங்கும் பூச்செண்டு
  தரவந்தேன் அதையிங்கு நான்.


  *அதை இங்கு - கமெண்டில் அந்த பூச்செண்டை என அர்த்தம் புரிக ! :)


  ReplyDelete
  Replies
  1. வாங்கோ விஜயன்...:)
   வருகை கண்டு உவகை கொண்டேன் நான்.

   உங்கள் அன்பிற்கு மிக்க மிக்க நன்றி!

   நீங்கள் தந்த குறள்(தாழிசை) மிக அருமையாக உள்ளது.
   பொருள் புரிந்துகொண்டேன். உளமார்ந்த இனிய நன்றி உங்களுக்கு!

   சகோ...
   நான் எழுதியது சாதாரண ஈரடிக் கவியே.
   சரியான குறள் இலக்கண வாய்பாட்டில் அடங்கவில்லை.
   குறட்டாழிசை என்று அதனைக் கூறுவர்.

   கூகிளில் ....
   //குறள்வெண்பா எழுதும் போது வெண்டளை அல்லாத
   வேற்றுத்தளை கலந்து, செப்பலோசை சிதைந்துவிடுமாயின்
   அது குறள்வெண்பா ஆகாது. அதனைக் குறட்டாழிசையுள்
   அடக்குவர்.//. என்று யாப்பெருங்கலக் காரிகையில் உள்ளது எனக் கூறியுள்ளனர்.

   உங்கள் முயற்சியும் அருமை. நீங்களும் குறள்பா இலக்கணக் கட்டுக்குள் முயலுங்கள்.. மேலும் மேன்மையடைவீர்கள்.

   உங்கள் முயற்சிக்கு மனம் நிறைந்த பாராட்டுக்கள் விஜயன்.!
   மீண்டும் அன்பு நன்றி!

   Delete
  2. சகோதரரே... நானும் கவி எழுதுவதில் இன்னும் கற்றுக்குட்டிதான்..:)

   கவிஞர் ஐயா பாரதிதாசன் அவர்களிடம்தான் அவ்வப்போது சந்தேகங்களைக் கேட்டுத் தெளிந்து எழுதிவருகிறேன்.
   அவரே என் குரு.

   நீங்களும் அவர் வலைத்தளத்திற்கு வந்து பாருங்கள். அறிந்துகொள்ளலாம்.

   கவிஞர் ஐயாவின் வலைத்தளம் இதுதான்:

   http://bharathidasanfrance.blogspot.de/

   Delete
  3. கட்டாயம் ஐயாவின் வலைத்தளத்தை பார்வை இடுகிறேன்

   Delete
  4. //குறள்வெண்பா எழுதும் போது வெண்டளை அல்லாத
   வேற்றுத்தளை கலந்து, செப்பலோசை சிதைந்துவிடுமாயின்
   அது குறள்வெண்பா ஆகாது. அதனைக் குறட்டாழிசையுள்
   அடக்குவர்.//. என்று யாப்பெருங்கலக் காரிகையில் உள்ளது எனக் கூறியுள்ளனர்...
   :)
   //உங்கள் முயற்சியும் அருமை. நீங்களும் குறள்பா இலக்கணக் கட்டுக்குள் முயலுங்கள்..மேலும் மேன்மையடைவீர்கள்.//
   கண்டிப்பாக முயல்கிறேன் அக்கா !
   எனக்கு குறள் வெண்பா மீது தனிப்பட்ட பாசம் உள்ளது :) நீங்க சொல்வதுபடி பார்த்தால் குறள் எழுதனும் னா இலக்கணம் கற்றுக்கொண்டால் தான் இலக்கு தொட முடியும் :) போல.
   நன்றி அக்கா !

   Delete
 52. அருமையான கலை இன்று என்ன புதிதாய் என ஆவலுடன் பார்க்கிறேன்.அழகிய கவிதை புதிதாய் எழுதுவது போல் இல்லையே வாழ்த்துக்கள் தோழி.

  ReplyDelete

உங்களின் அன்பான வரவிற்கும் ஊக்கந்தரும்
இனிய கருத்திற்கும் என் உளமார்ந்த நன்றி! _()_