Pages

Oct 31, 2013

உணர்வெனும் தீபம்!..


உள்ளத் தாமரையில்
உணர்வோடு ஏற்றும் தீபமாகக்
க்விலிங் கைவேலையில்...
~O~O~O~


உணர்வெனும் தீபம்!
~~~~~~~~

அரக்கனை மாய்த்தாய்! அகிலத்தைக் காத்தாய்!
சுரக்கும் அருளைச் சொரிந்தாய்! - உரக்கவே
கூவி அழைக்கின்றேன் கோகுலத்து நற்கண்ணா!  
தாவித் தகர்ப்பாய் தடை!

அடிமைத் தனத்தை அகற்ற! நலமாய்க்
குடிமை உயர்ந்து கொழிக்க! - விடிவினை
நாடி விளைக்க நறுங்கண்ணா செய்கவே!
கூடி மகிழ்வோம் குளிர்ந்து!

பொல்லார் உயர்ந்து புவியைச் சிதைப்பதோ?
நல்லார் நலிந்து கிடப்பதோ? - இல்லார்
நலங்காண  நல்குவாய் நாரணா! ஏழை
உளங்குளிரச் செய்வாய் உவந்து!

ஆற்றும் கடமை அறிந்தே அருந்தமிழைப்
போற்றி மகிழ்ந்து புகழ்பெறுவீர்! - ஊற்றெனப்
பொங்கும் உணர்வால் பொலிந்திடும் நல்வாழ்வு!
தங்கும் இனிமை தழைத்து!

தாக்கும் வறுமையைத் தள்ளி மிதித்திடுக!
பூக்கும் இனிமை! புகழ்த்தமிழைக் - காக்கும்
உணர்வெனும் தீபம் உளத்துள் ஒளிர்ந்திட்டால்
மணம்பெறும் வாழ்வு மலர்ந்து!
~O~O~O~

நின்று மனத்துள் நெகிழ்கிறதே இன்பத்தை
என்று தருமோ இயம்பு!
~~~~~~~~

பதிவோடு பகிரும் பதிவர்
~~~~~~~~

வலையுலகில் எனது அன்புக்குரிய தோழியான
 பிரியா அவர்களின் மழைச்சாரல்
என்னும் வலைப்பூவினை இம்முறை
பதிவோடு பகிரும் பதிவராக உங்களுடன் பகிர்ந்துகொள்வதில்
மிக்க மகிழ்வடைகிறேன்.

மழைச்சாரல்

http://wordsofpriya.blogspot.com/

பிரியா தனது வலத்தள சுய விபரப்பதிவில் `எழுத்தை அதிகம் நேசிப்பவள்... மௌனத்தில் உறைந்து போயிருக்கும் என் எண்ணங்களை வெளிப்படுத்த எழுத்தை காட்டிலும் சிறந்த விஷயம் வேறு எதுவும் இருப்பதாக தெரியவில்லை..... எல்லைகளற்ற எண்ண வெளியில் என்னுடைய எண்ணங்கள் முழுவதுமாய் வெளிப்படுவது என் எழுத்துகளின் வடிவில்தான்... என் எழுதுகோலும் புத்தகமும் எப்பொழுதும் நான் எழுதும் எழுத்துகளை எதிர்ப்பதில்லை, என்னை நையாண்டி செய்வதில்லை, என் எண்ணங்களுக்கு தடை இடுவதும் இல்லை. ஏதொன்றையும் எழுதி முடிக்கையில் மனதில் எழும் அமைதி வேறு எந்த செயலினாலும் விளைவதில்லை அதனாலேயே எழுத்து எனக்கு மிகவும் நெருக்கமாகி போனது...பழமைக்கும் புதுமைக்கும் இடையே சிக்குண்டு எப்பக்கமும் முழுமையாய் சாயாமல் எண்ணச் சிக்கல்களில் நான் எழுதிய வரிகள் இங்கே.... உங்கள் கண்முன்... உங்களது கருத்துகளையும் ஊக்குவிப்பையும் எதிர் நோக்கி....` என்று தன் எண்ணத்தைத் தன்னைப் பற்றி அழகாக வெளிப்படுத்தியுள்ளார்.

பிரியா மிக அருமையான கற்பனைகளும் அதன் வெளிப்பாடான எழுத்து வல்லமையும் நிறைந்தவர்.
கவிதை, கதை, கட்டுரைகள் எனப் பலதரப்பட்ட விடயங்கள் பிரியாவின் வலைத்தளத்தில் பரந்து விரிந்து படைக்கப்பட்டிருப்பதைக் காணலாம்.

தோழியின் படைப்புகள் ஏராளம் இருந்தும் அண்மையில் அவரின் கவிதைப் படைப்பான தேநீரின் கதை என் மனதை மிகவும் நெருடியது!

எழுத்துத் துறையில் நல்ல ஆர்வமுடன் தனது பதிவுகளோடு சக பதிவர்கள் வலைத் தளங்களுக்கும் சென்று சிறந்த நல்ல கருத்துகளைப் பகிர்வு செய்து அவர்களை ஊக்குவிக்கும் அன்பானவர்.

இவரின் வலைப்பூவினைப் பற்றி நான் அதிகம் உங்களுக்குச் சொல்வதைவிட நீங்களே பிரியாவின் வலைப்பூவிற்குச் சென்று பார்த்தால் மேலும் அறிந்துகொள்வீர்கள்!

இவரின் வலைப்பூவினைத் தெரியாதோர் இருக்கமாட்டார்கள். ஆயினும் இதுவரை அறியாதோர் இருப்பின் அவரின் தளத்திற்கும் சென்று அவரையும்  ஊக்குவிக்கலாமென இங்கு  இத்தரவுகளை உங்களோடு பகிர்ந்துகொள்வதில் மகிழ்வடைகின்றேன்!..

மிக்க நன்றி அன்பு உறவுகளே!
~0~0~0~


அனைவருக்கும் தித்திக்கும் இனிய
தீபாவளி நல் வாழ்த்துக்கள்!.

_()_

100 comments:

 1. அனைத்தும் அருமை. பாராட்டுக்கள். இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்.

  ReplyDelete
  Replies
  1. [co="Fuchsia"]வணக்கம் ஐயா!

   பதிவிட்டவுடனே தங்கள் வரவும் வாழ்த்தும்கண்டு மகிழ்ச்சி!
   பாராட்டுக்கு மிக்க நன்றி ஐயா..!

   உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள்!.[/co]

   Delete
  2. //இளமதி 31 October, 2013 17:21 வணக்கம் ஐயா!

   பதிவிட்டவுடனே தங்கள் வரவும் வாழ்த்தும் கண்டு மகிழ்ச்சி!
   பாராட்டுக்கு மிக்க நன்றி ஐயா..!//

   இது ஏதோ தெய்வ சங்கல்ப்பமாக அதிசயமாகவே நிகழ்ந்துள்ளது.

   எனக்கும் இதில் மிகுந்த மகிழ்ச்சியே.

   தங்கள் நன்றிக்கு நன்றிகள்ம்மா.

   //உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள்!.//

   உங்கள் குடும்பம் எனப் பிரிக்காதீங்கோ, ப்ளீஸ்.

   நாம் எல்லோரும் ஒரே குடும்பமே !

   [பதிவர் குடும்பம் என்பதைத்தான் சொன்னேன்]

   Delete
 2. கவி வரிகள் அருமை தோழி. போட்டியில் வெற்றி பெற உளமார்ந்த நல்வாழ்த்துகள்.

  க்வில்லிங் மிக அருமை தோழி.

  சகோதரி பிரியாவிற்கும் எனது இனிய வாழ்த்துகள்.

  இனிய தீபாவளித் திருநாள் நல்வாழ்த்துகள் !!!

  ReplyDelete
  Replies
  1. [co="Fuchsia"]வணக்கம் தமிழ்முகில்!

   நீங்களும் பதிவிட்டவுடனே வந்து வாழ்த்துகிறீர்கள்!
   மிக்க மகிழ்ச்சி!

   இது போட்டிக்கான கவிதை அல்ல... தீபாவளியுடன் சேர்ந்த கவிதை!..:)
   உங்கள் அன்பான வரவிற்கும் இனிய வாழ்த்திற்கும் மனமார்ந்த நன்றி தோழி!..

   உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள்!.[/co]

   Delete
 3. க்விலிங் கைவேலை மிகவும் அருமை...

  உணர்வெனும் தீபம் பிரமாதம் சகோதரி...

  இனிய தீபத் திருவிழா நல்வாழ்த்துக்கள்...

  ReplyDelete
  Replies
  1. [co="Fuchsia"]வணக்கம் தனபாலன்!

   உங்கள் வரவும் வாழ்த்தும்கண்டு மகிழ்ச்சி!

   பாராட்டுக்கு மிக்க நன்றி!

   உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள்!.[/co]

   Delete
 4. உணர்வோடு ஏற்றும் க்விலிங் தீபம் அழகாக ஒளிர்கிறது...
  உணர்வெனும் தீபம் அருமை தோழி!
  //பொல்லார் உயர்ந்து புவியைச் சிதைப்பதோ?
  நல்லார் நலிந்து கிடப்பதோ? // சரியான கேள்வி...
  பிரியா அவர்களின் வலைத்தளம் பொய் பார்க்கிறேன், நன்றி!
  தீபாவளி வாழ்த்துகள் தோழி!

  ReplyDelete
  Replies
  1. [co="Fuchsia"]வணக்கம் கிரேஸ்!

   உங்கள் வரவும் வாழ்த்தும்கண்டு மகிழ்ச்சி!

   அழகான ரசனைக்கும் பாராட்டுக்கும் மிக்க நன்றி!

   உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள்!.[/co]

   Delete
 5. க்விளிங் வேலை அருமை... ப்ரியா நன்கு பழக்கமானவர்...

  இனிய தீபாவளி நல்வாழ்த்துகள் அக்கா...

  ReplyDelete
  Replies
  1. [co="Fuchsia"]வணக்கம் வாங்கோ வெற்றி வேல்!

   உங்கள் வரவும் வாழ்த்தும்கண்டு மகிழ்ச்சி!

   ரசனைக்கும் பாராட்டுக்கும் மிக்க நன்றி!

   உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள்!.[/co]

   Delete
 6. உள்ளத் தாமரையில்
  உணர்வோடு ஏற்றிய தீபம்
  உன்னதமாய் ஜொலிக்கிறது
  தமிழர்களின் உள்ளங்களிலும்
  இல்லங்களிலும்- இனிய
  சகோதரியின் அழகான்
  க்விலிங் கைவேலையில்...
  சிறப்பான வேலைப்பாடு சகோதரி. தங்களுக்கு வாழ்த்துக்களும் நன்றிகளும்..
  அழகான நேரிசை வெண்பாவிலான நேர்த்தியான கவியைத் தந்து தீப ஒளி திருநாளை சிறப்பித்தமைக்கு எனது உளம் கனிந்த நன்றிகள்..
  தங்களுக்கும் தங்கள் இல்லத்தாருக்கும் எனது அன்பு கலந்த தித்திக்கும் தீபாவளி நல்வாழ்த்துக்கள்...

  ReplyDelete
  Replies
  1. [co="Fuchsia"]வணக்கம் பாண்டியன்!..

   உங்கள் வரவும் வாழ்த்தும்கண்டு மிக்க மகிழ்ச்சி!

   அழகான ரசனை என்னை மேலும் ஊக்குவிக்கின்றது சகோ! பாராட்டுக்கும் மிக்க நன்றி!

   உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள்!.[/co]

   Delete
 7. இனிய தீபாவளி வாழ்த்துக்கள் ..இளமதி குடும்பத்தார் மற்றும் இங்கு உள்ள அனைவருக்கும் .
  எப்பவும் தவறாம கார்ட் செய்வேன் இம்முறை ரொம்ப பிசி ...grrrrr
  அழகிய quilling ....கவிதை அருமை !!

  ReplyDelete
  Replies
  1. [co="Fuchsia"]வணக்கம் அஞ்சு வாங்க!..:)

   உங்கள் வரவுகண்டு மிக்க மகிழ்ச்சி!

   அருமையான ரசனைக்கும் பாராட்டுக்கும் மிக்க நன்றி!

   உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள்!.[/co]

   Delete
 8. கவிதை கேற்ற க்வில்லிங் ...
  க்வில்லிங்க்கு ஏற்ற கவிதை ..
  இரண்டும் சுடர் விட்டுப் பிரகாசிக்கிறது ...
  தேநீரில் கரைந்தேன் . இணைந்தேன் தோழி.
  தீபாவளி வாழ்த்துக்கள் ! கொண்டாடிடுவீர் மகிழ்வுடன்
  எங்கிருந்தாலும் நம் மண்ணை நினைத்து .....

  ReplyDelete
  Replies
  1. [co="Fuchsia"]வணக்கம் ஸ்ரவாணி!

   உங்கள் வரவும் இனிய நற் கருத்தும்கண்டு மிக்க மகிழ்ச்சி!
   அருமையான கருத்துப்பகிர்வு... மிகவும் ரசித்தேன்...:)

   வாழ்த்திற்கும் மிக்க நன்றி தோழி!..[/co]

   Delete
 9. ஆவ்வ்வ்வ்வ்வ்வ் கைவண்ணத்தில் கலக்கிட்டீங்க போங்க... மிக நேர்த்தியா.. சூப்பரா இருக்கு. மீயும் ஒரு பப்பி செய்கிறேன் செய்கிறேன்ன்.. ரண்டு வாரமாகப் போகுது இன்னும் கால் பாக்கியிருக்கு முடிக்க..மீ லெக்கைச் சொன்னேனாக்கும்:).

  ReplyDelete
  Replies
  1. [co="Fuchsia"]வணக்கம் வாங்க அதிரா...:)

   என்ன.. பப்பியா.. வரப்போகுது.. மெத்தச் சந்தோஷம்..:)

   நாள் அதிகமானாலும் பப்பி வரும்போது வலுதிறமாய்த்தானே வரும்..:) வரட்டும்.. பொறுமையா நாலு காலோட கூட்டி வாங்கோ.. பாவம் பிறகு நொண்டும்...:))).[/co]

   Delete
 10. கவிதையில் கலக்கிட்டீங்க... தமிழ் துள்ளி விழையாடுதே...

  ReplyDelete
 11. //பிரியா அவர்களின் மழைச்சாரல் ... /// மீ இதுவரை போனதில்லை.. பார்க்கிறேன்ன்ன்.. பிரியாவின் மழைச்சாரல் அறிமுகத்துக்கு வாழ்த்துக்கள்.. நேற்றும் இன்றும் எங்களுக்கு இங்கு மழையோஓஓஓஓஓஓ மழை:)

  ReplyDelete
 12. ஓவ்வ்வ்வ் மறந்தே போனேன்ன்... இன்பம் பொங்கும் இன்பத் தீபாவளி வாழ்த்துக்கள்...

  ReplyDelete
  Replies
  1. [co="Fuchsia"]எனது கவிதை ரசிப்புக்கும் மிக்க மகிழ்ச்சி அதிரா..!

   நேரங்கிடைக்கும் போது பிரியா வலைக்கும்போய் ஊக்குவியுங்கோ.. சந்தோஷப்படுவினம்..:)

   வழமைபோல கலகலப்பான உங்கள் வரவுக்கும்
   வாழ்த்துகளுக்கும் மிக்க மிக்க நன்றி அதிரா!..:).[/co]

   Delete
 13. தகர்ப்பாய் தடை!
  க்வில்லிங்க் கவிதை வரிகள் சிறப்பு .
  இனிய தீபாவளி நல்வாழ்த்து.
  வேதா. இலங்காதிலகம்.

  ReplyDelete
  Replies
  1. [co="Fuchsia"]வணக்கம் சகோதரி கோவைக்கவி!..

   உங்கள் வரவும் இனிய நற் கருத்தும்கண்டு மிக்க மகிழ்ச்சி!

   வாழ்த்திற்கும் மிக்க நன்றி சகோதரி!..[/co]

   Delete
 14. இளமதியின் இன்பக் கவிமழையைப் போற்ற
  உளமதிலே வேண்டும் உரம்!

  வாழ்த்துக்கள் தோழி.

  வெண்பா அனைத்தும் அருமை.

  (உரம்- ஞானம், திண்ணம்)

  ReplyDelete
  Replies
  1. [co="Fuchsia"]வணக்கம் அருணா!

   உங்கள் அன்பான வரவும் இனிய நற் குறள் வாழ்த்தும் கண்டு மிக மிக மகிழ்ந்தேன்!

   உளமார்ந்த நன்றி தோழி!..[/co]

   Delete
 15. சிறப்பான பகிர்வு !இனிய தீபாவளி வாழ்த்துக்கள் தோழி உங்களுக்கும்
  உங்கள் உறவினர்கள் நண்பர்கள் அனைவருக்கும் .

  ReplyDelete
  Replies
  1. [co="Fuchsia"]வணக்கம் அம்பாளடியாள்!

   உங்கள் வரவும் இனிய நற் கருத்தும்கண்டு மிக்க மகிழ்ச்சி!

   வாழ்த்திற்கும் மிக்க நன்றி தோழி!..[/co]

   Delete
 16. //பொல்லார் உயர்ந்து புவியைச் சிதைப்பதோ?நல்லார் நலிந்து கிடப்பதோ? - //
  இந்த வரிகள் எனக்கு பாரதியாரின் "மேலோர்கள் வீழ்ந்து கிடப்பதையும் நூலோர்கள் செக்கடியில் நோவதையும் காண்கிலையோ" வரிகளை நினைவூட்டின! கவிதையை(யும்) ரசித்தேன்.


  ReplyDelete
  Replies
  1. [co="Fuchsia"]வணக்கம் சகோதரர் ஸ்ரீராம்!

   உங்கள் வரவும் இனிய நற் கருத்தும்கண்டு மிக்க மகிழ்ச்சி!

   வாழ்த்திற்கும் மிக்க நன்றி சகோ!..[/co]

   Delete
 17. அற்புத வரிகள்
  அழகிய கலைகள்
  அனைத்தும் குளிர்வித்தது

  வாழ்த்துக்கள் தோழி.

  ReplyDelete
  Replies
  1. [co="Fuchsia"]வணக்கம் சகோதரர் இராஜ முகுந்தன்!

   உங்கள் வரவும் இனிய நற் கருத்தும்கண்டு மிக்க மகிழ்ச்சி!

   வாழ்த்திற்கும் மிக்க நன்றி!..[/co]

   Delete
 18. சகோதரி ஒவ்வொரு வரிகளையும் ரசித்தேன்,.அருமையான கை வண்ணமும் ரசித்தேன்.....! வார்த்தை பிரயோகங்களும் எண்ண ஒட்டங்களும் பிரமாதம். தொடரவாழ்த்துக்கள்....!

  எத்துணை நல்ல எண்ணம் தினமும் அறிமுகங்கள் உங்கள் வலைத் தளத்தில் உண்மையில் பெரியமனது உங்களுக்கு.
  நல் இதயங்களை தேடி காணாமல், சீ என்ன உலகம் என்று வெறுத்து நிற்கும் போது தான், வலை தளத்தில் வைரங்கள் எல்லாம் ஜொலிக்கின்றன உன் விருப்பப்படி போய்பார் என்று தான் கவிதை தந்து என்னை அனுப்பி வைத்திருக்கிறான் போல் அந்த ஆண்டவன்.
  வாழ்க வளமுடன்....!

  ReplyDelete
  Replies
  1. [co="Fuchsia"]வணக்கம்! வாருங்கள் இனியா!..

   இங்கு உங்கள் முதல் வரவுகண்டு மிக்க மகிழ்ச்சி!

   ரொம்பவும் புகழ்கின்றீர்கள் என்னை... :)
   நான் எனது என்று மட்டும் வாழாமல் நாம் என்று வாழ்வதில் அத்தனை மன நிறைவு... அதுபோல எல்லோரையும் ஆதரித்து அனுசரிப்பதும் நல்லதுதானே.. அதுதான் இந்த ”பதிவோடு பகிரும் பதிவர்”..

   உங்கள் வரவும் மனந்திறந்த கருத்துக்களும்
   மிக்க மகிழ்வைத்தருகிறது தோழி!

   வாழ்த்திற்கும் இனிய நன்றி தோழி!..[/co]

   Delete
 19. கை வேலையும், கவிதையும் என அனைத்தையும் ரசித்தேன்....

  இனிய தீபத் திருநாள் வாழ்த்துகள்.

  ReplyDelete
  Replies
  1. [co="Fuchsia"]வணக்கம்!.. வாங்கோ ஆதி!..:)

   இங்கு உங்கள் முதல் வருகை! மிக்க மகிழ்ச்சி!

   அன்பு வரவும் இனிய நற் கருத்தும்கண்டு உவகை கொண்டேன்...!

   வாழ்த்திற்கும் மிக்க நன்றி தோழி!..[/co]

   Delete
 20. கிவி லிங்க் வேலை மற்றும் கவிதை ரசித்தோம் இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள்

  ReplyDelete
  Replies
  1. [co="Fuchsia"]வணக்கம் சகோதரர் சரவணன்!..:)

   உங்கள் வரவும் இனிய நற் கருத்தும்கண்டு மிக்க மகிழ்ச்சி!

   வாழ்த்திற்கும் மிக்க நன்றி!..[/co]

   Delete
 21. தீபாவளி நல் வாழ்த்துக்கள்.


  சுப்பு தாத்தா.
  subbuthatha72.blogspot.com

  ReplyDelete
  Replies
  1. [co="Fuchsia"]வணக்கம்! வாங்கோ ஐயா!

   உங்கள் அனபான வரவுக்கும்
   இனிய வாழ்த்திற்கும் மிக்க நன்றி ஐயா!..[/co]

   Delete
 22. அற்புதமான கவிதை. வாழ்த்துக்கள். இனி, மனம் கனிந்த தீபாவளி வாழ்த்துக்கள். - இராய செல்லப்பா (இமயத்தலைவன்)

  ReplyDelete
  Replies
  1. [co="Fuchsia"]வணக்கம் ஐயா!.. வாருங்கள்..
   உங்கள் முதல் வருகை இங்கு... மிக்க மகிழ்ச்சி ஐயா!

   உங்கள் வரவிற்கும் இனிய நற் கருத்துக்கும்

   அன்பான வாழ்த்திற்கும் மனமார்ந்த நன்றி ஐயா!..[/co]

   Delete
 23. வணக்கம்
  சகோதரி

  கவிதையில் பொருட்சுவை சொற்சுவை நயம் ததும்பிய கவிதை இது கவிதையின் ஒரு புரட்சி வடிவம் என்றுதான் என்னால் சொல்லமுடியும் அவ்வளவு அழகாக எழுதியுள்ளிர்கள் முதலில் வாழ்த்துக்கள்......

  ---------------------------------------------------------------------------------------------------------------------

  மழைச்சாரல் என்ற வலைப்பூவின் சொந்தக்காரர் (பிரியா பற்றிய அறிமுகம் நன்று.. அறிமுகப்படுத்திய வலைப்பூ எப்போதும் பின்னூட்டம் இடுவதுதான்..நான். நீங்கள் சொல்வது போல நல்ல திறமைசாலிதான்... பிரியா....
  ------------------------------------------------------------------------------------------------------------------

  ஒரு வேண்டு கோள்.. கருத்திடும் பதிவர்கள் பிரியாவின் வலைப்பூவிற்கு சென்று உங்களின் கருத்து மடல்மூலம் ஊக்கப்படுத்தவும்...

  இனிய தீபாவளி வாழ்த்துக்கள்(சகோதரி))

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்

  ------------------------------------------01/11/2013-------------------------------------------------------


  ReplyDelete
  Replies
  1. உங்கள் வாழ்த்திர்க்கும் ஊக்கத்திற்க்கும் மிக்க நன்றி சகோ...:)

   Delete
  2. [co="Fuchsia"]வணக்கம் சகோதரர் ரூபன்!

   உங்களின் அன்பு வரவுடன் அருமையான நல்ல கருத்துகளையும் கண்டு மனம் மிக மகிழ்ந்தேன்!

   வாழ்த்திற்கும் மிக்க மிக்க நன்றி சகோ!..[/co]

   Delete
 24. க்விலிங் கைவேலை பார்ப்பதற்கு மிகவும் எளிமையாக இருப்பது போல் உள்ளது..ஆனால் செய்ய முயற்சிக்கும்போதுதான் மிகவும் போறுமை வேண்டும் என அறிய முடிகிறது...இனிய திகட்டாத தீபாவளி வாழ்த்துக்கள் தோழி...

  ReplyDelete
  Replies
  1. [co="Fuchsia"]வணக்கம் சகோதரர் கலியப்பெருமாள்!

   ஆமாம்.. சகோ.. நல்ல முயற்சியும் பயிற்சியும் இருந்தால் செய்வது சுலபம்...:)

   உங்கள் வரவும் இனிய நற் கருத்தும்கண்டு மிக்க மகிழ்ச்சி!

   வாழ்த்திற்கும் மிக்க நன்றி சகோ!..[/co]

   Delete
 25. http://www.youtube.com/watch?v=qG0gf8o-h5M
  Listen to your Diwali song here:
  Deepavali Greetings.

  meenakshi paatti.
  subbu thatha.
  www.subbuthatha.72.blogspot.com

  ReplyDelete
  Replies
  1. [co="Chocolate"]வணக்கம் ஐயா!

   உள்ளத்தை உருக்கும் மெட்டும் அதன் பாவமும்
   உங்கள் குரலில் பாடல் மிகமிக அருமையாக இருக்கின்றது...
   அற்புதம்! மிக்க மிக்க நன்றி ஐயா!

   [co="red"][ce]இதோ இங்கேயே உங்கள் பாடல்கள்
   சேர்க்கப்படும் இடத்தில் சேர்த்துவிட்டேன்!.[/ce][/co]

   அனைவருக்கும் வாழ்வில் இருள் நீங்கி ஒளிமிக்க நல்ல எதிகாலம் அமைய வேண்டுகிறேன்!

   ஐயா!.. உங்கள் ஆசியை வேண்டும் அதே சமயம்
   உங்கள் குடும்பத்தில் அனைவருக்கும் இனிய தீபாவளி நல் வாழ்த்துக்களையும் கூறிக்கொள்கிறேன்!..[/co]

   Delete
 26. இதயம் கனிந்த தீபத் திருநாள் நல்வாழ்த்துக்கள்

  ReplyDelete
  Replies
  1. [co="Fuchsia"]வணக்கம் ஐயா!

   உங்கள் வரவிற்கும் இனிய வாழ்த்திற்கும் மிக்க நன்றி ஐயா!..[/co]

   Delete
 27. விடிவினை
  நாடி விளைக்க நறுங்கண்ணா செய்கவே!
  கூடி மகிழ்வோம் குளிர்ந்து!

  இனிய தீபாவளி வாழ்த்துகள் !

  ReplyDelete
  Replies
  1. [co="Fuchsia"]வணக்கம் சகோதரர் ரிஷபன்!
   வாருங்கள்.. உங்களின் முதல் வருகை இங்கு.. மட்டற்ற மகிழ்ச்சி சகோதரரே!...

   உங்கள் வரவும் இனிய நற் கருத்தும்கண்டு உவகை கொண்டேன்!..

   வாழ்த்திற்கும் மிக்க மிக்க நன்றி!..[/co]

   Delete
 28. உங்களுக்கும் உங்கள் குடும்பத்தார் அனைவருக்கும் என்
  இனிய தீப ஒளித்திருநாள் நல்வாழ்த்துக்கள்... சகோதரி..

  அலர்மேல் மங்கை அமரும்
  அழகான தாமரை கைவண்ணம்
  அழுத்திய என் விழியை
  நகர்த்திட மறுக்கிறது....

  ஆயர்பாடி மன்னவனிடம்
  தித்திக்கும் தீப ஒளித்திருநாள்
  சிறந்திட வேண்டியவை யாவும்
  நிர்மலமாக நெஞ்சில்
  பனிமூட்டம் கொண்டது...

  கவிதைகளில் உணர்வுகளை
  இனிதாக தொட்டுச்செல்லும்
  சோதரி பிரியாவின்
  வலைத்தளம் இனிது
  அதனினும் இனிது
  உங்கள் கையால்
  அவர்களின் அறிமுகம்...

  ReplyDelete
  Replies
  1. [co="Fuchsia"]வணக்கம் சகோதரர் மகேந்திரன்!

   உங்கள் அழகான ரசனை வரிகள்கண்டு மனம் மிக மிக மகிழ்வுறுகிறேன்..
   கமலக்கண்ணன் கடைக்கண் பார்வைகிட்ட கலைத்திடும் துயரமெலாம் என வேண்டுகிறேன் நானும்...

   உங்கள் வரவும் இனிய நற் கருத்தும்கண்டு மிக்க மகிழ்ச்சி!

   அன்பான வாழ்த்திற்கும் மிக்க நன்றி சகோ!..[/co]

   Delete
 29. வணக்கம்!

  உள்ளமெனும் தாமரையில் நல்லொளி ஏற்றினால்
  பள்ளமெனும் பாதை அகன்றிடுமே! - வெள்ளமெனும்
  வண்ணம் விளைந்த வளா்கவிதை எப்பொழுதும்
  எண்ணம் இனிக்கும் இருந்து!

  சொல்லிக் கொடுத்த சுடா்த்தமிழ் யாப்பழகில்
  அள்ளி அளித்த அரும்பாக்கள் - நெல்லிச்
  சுவையாய் நிலைத்திருக்கும்! துாய மலா்க்கண்ணன்
  அவையுள் இருப்பான் அமா்ந்து!

  நின்று மனத்துள் நெகிழ்கின்ற இன்றமிழை
  இன்று படைத்த இளமதியே! - என்றென்றும்
  வல்ல தமிழுலகம் வாழ்த்திப் புகழ்பாட
  நல்ல கவிகளை நல்கு!

  கவிஞா் கி. பாரதிதாசன்
  தலைவா்: கம்பன் கழகம் பிரான்சு

  ReplyDelete
  Replies
  1. [co="Fuchsia"]வணக்கம் ஐயா!

   உங்கள் அன்பான வரவும் வாழ்த்து வெண்பாக்களும் கண்டு
   மிக மிக மனம் மகிழ்ந்தேன்.
   மகிழ்ச்சியில் எழுத முடியாமல் வார்த்தைகளைத் தேடுகின்றேன் ஐயா!...

   உங்கள் அன்பான வழிகாட்டுதலினால்தான் நானும் தரமாகக்
   கவி எழுத அடியெடுத்து வைக்கின்றேன்..
   நிச்சயம் மேலும் நல்ல நிலைக்கு உயர்ந்து
   உங்கள் பெயரினைக் காப்பாற்றுவேன்.

   உங்கள் அன்பான வரவிற்கும் வாழ்த்திற்கும் மிக்க மகிழ்ச்சியுடன் என் மனமார்ந்த நன்றியும் ஐயா!.[/co]

   Delete
 30. தாக்கும் வறுமையைத் தள்ளி மிதித்திடுக!
  பூக்கும் இனிமை! புகழ்த்தமிழைக் - காக்கும்
  உணர்வெனும் தீபம் உளத்துள் ஒளிர்ந்திட்டால்
  மணம்பெறும் வாழ்வு மலர்ந்து!

  நிலவாய் ஜொலிக்கும் வரிகள்..
  இனிய தீபாவளித்திருநாள் வாழ்த்துகள்..!

  ReplyDelete
  Replies
  1. [co="Fuchsia"]வணக்கம் இராஜராஜேஸ்வரி!

   உங்கள் வரவிற்கும் நல்ல ரசனைக்கும்
   இனிய வாழ்த்திற்கும் மிக்க நன்றி சகோதரி!..[/co]

   Delete
 31. தாக்கும் வறுமையைத் தள்ளி மிதித்திடுக!
  பூக்கும் இனிமை! புகழ்த்தமிழைக் - காக்கும்
  உணர்வெனும் தீபம் உளத்துள் ஒளிர்ந்திட்டால்
  மணம்பெறும் வாழ்வு மலர்ந்து!// சிறப்பான முத்தாய்ப்பான வரிகள்! கிவிலிங்க் வேலைப்பாடு அழகு! மழைச்சாரலை நான் ஏற்கனவே அறிவேன்! நல்லதொரு அறிமுகம்! நன்றி!

  ReplyDelete
  Replies
  1. [co="Fuchsia"]வணக்கம் சுரேஷ்!

   உங்கள் வரவிற்கும் நல்ல ரசனைக்கும்
   இனிய வாழ்த்திற்கும் மிக்க நன்றி சகோ!..[/co]

   Delete
 32. புகழ்த்தமிழைக் - காக்கும்
  உணர்வெனும் தீபம் உளத்துள் ஒளிர்ந்திட்டால்
  மணம்பெறும் வாழ்வு மலர்ந்து!//உண்மைதான் சகோ.
  தீபாவளி நல் வாழ்த்துக்கள்

  ReplyDelete
  Replies
  1. [co="Fuchsia"]வணக்கம் கண்ணதாசன்!..

   உங்கள் வரவிற்கும் நல்ல ரசனைக்கும்
   இனிய வாழ்த்திற்கும் மிக்க நன்றி சகோ!..[/co]

   Delete
 33. ப்ரியாவின் தளம் என் மனதிற்கும் மிகப் பிடித்தமானது சிஸ்டர்! தீபஒளித் திருநாளில் கண்ணனைப் பாடும் அழகுக் கவிதையுடன் உங்கள் க்விலிங்கையும் மிக ரசித்தேன்! அருமை! உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் என் இதயம் நிறைந்த இனிய தீபஒளித் திருநாள் நல்வாழ்த்துகள்!

  ReplyDelete
  Replies
  1. [co="Fuchsia"]வணக்கம் சகோதரர் பாலகணேஷ்!..

   உங்கள் வரவிங்கு ஆச்சரியமாகவும் மகிழ்வையும் தருகிறது!..:)
   நல்ல ரசனைக்கும் இனிய வாழ்த்திற்கும் மிக்க நன்றி பிறதர்!..:)[/co]

   Delete
 34. தாமரைத் தீபம்!! அழகு.

  இப்போது கொஞ்சம் நேரம் குறைவாகவே கிடைக்கிறது. சர்ந்தர்ப்பம் கிடைக்கும் போது நீங்கள் அறிமுகப் படுத்துவோர் அனைவரையும் சென்று காண்கிறேன்.

  இனிய தீபாவளி வாழ்த்துக்கள் இளமதி.

  ReplyDelete
  Replies
  1. [co="Fuchsia"]வணக்கம் இமா!..:) வாங்கோ!

   உங்கள் கடமைகளுக்கு மத்தியிலும்
   இங்கு வந்தமைகண்டு மகிழ்ந்தேன்!..

   உங்கள் வரவிற்கும் நல்ல ரசனைக்கும்
   இனிய வாழ்த்திற்கும் மிக்க நன்றி இமா!..[/co]

   Delete
 35. அழகான தாமரைப்பூ க்விலிங் இளமதி. மிக அழகாக செய்திருக்கிறீங்க.
  அற்புதமான கவிவரிகளில் கவிதையை எழுதியிருக்கிறீங்க.
  இருவரிக்கவியும் நன்றாக இருக்கு.வாழ்த்துக்கள்.
  தீபத்திருநாளுக்கு நல்ல ஒரு பதிவு.

  பதிவர் பிரியாவிற்கு என் வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 36. உங்க குடும்பத்தினருக்கு என் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்.

  ReplyDelete
  Replies
  1. [co="Fuchsia"]வணக்கம் அம்மு! வாங்கோ...
   நான்தான் இம்முறை இவ்வளவு லேட்டா வந்து பதில் எழுதுறன்
   ஸொறி...:(

   உங்கள் அன்பு வரவிற்கும் நல்ல ரசனைக்கும்
   இனிய வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி அம்மு!..[/co]

   Delete
 37. எப்படித்தான் இப்படி பொறுமையை செய்கிறீர்களோ !
  ஒவ்வொரு முறையும் அசத்துகிறீர்கள் தோழி !
  வாழ்த்துக்கள்!!!!!!!!!!

  ReplyDelete
  Replies
  1. [co="Fuchsia"]வணக்கம் மகிவதானா!

   //எப்படித்தான் இப்படி பொறுமையை செய்கிறீர்களோ !//...
   இதுதான் சீக்ரெட்...:) இந்தப் பொறுமையைத் தேடிக் கண்டு பிடிச்சிட்டால்
   எல்லாம் நம் வசம்...:)

   உங்கள் அன்பான வரவிற்கும் நல்ல ரசனைக்கும்
   இனிய வாழ்த்திற்கும் மிக்க நன்றி!..[/co]

   Delete
 38. சிறந்த பதிவிது.
  தங்களுக்குத் தீபாவளி வாழ்த்துகள் உரித்தாகட்டும்!

  ReplyDelete
  Replies
  1. [co="Fuchsia"]வணக்கம் ஐயா!

   உங்கள் அன்பான வரவிற்கும் நல்ல ரசனைக்கும்
   இனிய வாழ்த்திற்கும் மனமார்ந்த நன்றி!..[/co]

   Delete

 39. இனிக்கும் தீபாவளி வாழ்த்துக்கள்

  தூய தமிழ்மணக்க! நேய மனங்கமழ!
  ஆய கலைகள் அணிந்தொளிர! - மாயவனே!
  இன்பத் திருநாளாய் என்றும் இனித்திருக்க!
  அன்பாம் அமுதை அளி!

  கவிஞா் கி. பாரதிதாசன்
  தலைவா்: கம்பன் கழகம் பிரான்சு

  ReplyDelete
  Replies
  1. [co="Fuchsia"]வணக்கம் ஐயா!

   இனிய கவி வாழ்த்திற்கு மிக்க நன்றி!..[/co]

   Delete
 40. அன்புள்ள சகோதரிக்கு வணக்கம்.இன்று தான் உங்கள் வலைக்கு வந்தேன்.வீழ்ந்தேன் எழ மனமின்றி.சித்திரங்களைப் பாராட்டுவதா,சொற்சித்திரங்களைப் பாராட்டுவதா,அருமை,அருமை.கண்கள் மகிழ்வையும் இனிமையையும் ஒரே நேரத்தில் உணர்கின்றன.பதிவர் அறிமுகமும் வித்தியாசம் .வாழ்த்துக்கள்.

  ReplyDelete
  Replies
  1. [co="Fuchsia"]வணக்கம் கீதா!

   இங்கு உங்கள் முதல் வருகை... வாங்கோ!..:)

   ரொம்பவே புகழ்கின்றீர்கள்...:)
   உங்கள் ரசனை கண்டு மிகவும் மகிழ்ந்தேன்..:)

   உங்கள் அன்பு வரவிற்கும் ஆழ்ந்த நல்ல ரசனைக்கும்
   இனிய வாழ்த்திற்கும் மனமார்ந்த நன்றி தோழி!..[/co]

   Delete
 41. க்விலிங்க் வேலைப்பாட்டை இரசித்து விட்டு, வெண்பாவின் சுவையில் மூழ்கி எழுந்து அறிமுகம் யாரென்று காண சென்றால்... அட என்னுடைய தளம்... என்ன ஒரு இன்ப அதிர்ச்சி... மிக மிக மிக நன்றி சகோதரி தங்களுக்கு... நான் எழுதிய சுய அறிமுகமே இன்று உங்கள் பதிவில் படித்திடும் பொழுது மிகவும் அழகாக தெரிகிறது.. (ஒரு வேளை தளத்தின் மகிமையோ)... வழக்கம் போல் அனைத்தும் அருமை சகோ...

  ReplyDelete
  Replies
  1. [im]http://media-cache-ak0.pinimg.com/736x/09/13/45/09134543bf87b7b21beab81af8507676.jpg[/im]

   [co="HotPink"]வணக்கம் வாங்கோ பிரியா!...:)

   உங்களை பதிவரோடு பகிரும் பதிவராக்கியபின் காணவில்லையே.. என்று மிகுந்த யோசனையாய் இருந்தேன்.. ஆனால் நீங்கள் வந்த சமயம் நானிங்கு இல்லாமல் போய்விட்டேன்..:)
   நாட்கள் இரண்டு கடந்தாலும்... இனிய தீபாவளி வாழ்த்துக்கள் பிரியா!.

   உங்களைப் பற்றி எழுதுவதற்காய்ப் பார்த்த போது நீங்களே உங்கள் சுய அறிமுகமாக அங்கு எழுத்தியிருப்தே நன்றாக இருந்ததால் அதை அப்படியே தூக்கிவந்து இங்கு போட்டுவிட்டேன்...:)

   அதுவே உங்களைத் திருப்திப் படுத்தியது எனக்கும் மகிழ்வே!...

   உங்கள் அன்பான வரவும் இனிய நற்கருத்துகளும் மனதிற்கு மிக்க மகிழ்வாயிருக்கிறது எனக்கும்!..

   வாழ்த்திற்கும் மனம் நிறைந்த நன்றி பிரியா!.[/co]

   Delete
 42. சகோதரி இளமதியின் மூலம் என் தளத்திர்க்கு வந்து என்னை வாழ்த்திய அனைத்து உள்ளங்களுக்கும் என் நன்றிகள்... :)

  ReplyDelete
 43. க்வலிங் சிறப்பு

  கவிதைகள் ரொம்ப அருமை...

  வாழ்த்துக்கள் ...
  //தாக்கும் வறுமையைத் தள்ளி மிதித்திடுக!
  பூக்கும் இனிமை! புகழ்த்தமிழைக் - காக்கும்//நல்ல வரிகள்

  ReplyDelete
  Replies
  1. [co="Fuchsia"]வணக்கம் மது கஸ்தூரி ரெங்கன்!

   உங்கள் வரவும் இனிய நல்ல ரசனையும்கண்டு
   மிகவும் மகிழ்கின்றேன்...

   இனிய வாழ்த்திற்கும் மிக்க நன்றி!..[/co]

   Delete
 44. வெண்பா கவிதைகள் நன்றாக உள்ளன, இதை வாசிக்கும்போது எனக்கும் இப்படி மரபுக்கவிதை வடிவில் புதுக்கவிதை எழுத ஆசை வருகிறது! குறள் வெண்பா வடிவக் கவிதை மிகவும் சூப்பர் !.நான் ப்ரியா அக்கா வலைப்பூவில் இருந்து உங்கள் வலைப்பூவிற்கு வருகிறேன் :)

  ReplyDelete
  Replies
  1. [co="Fuchsia"]வணக்கம் விஜயன்!..

   உங்களின் முதல் வருகை இங்கு... வாங்கோ!..:)

   உங்கள் ஆழ்ந்த ரசனை கண்டு இன்னும் இப்படி எழுதவேண்டுமென ஆவல் வருகிறது!..:)

   தோழி பிரியாவிடமிருந்து இங்கு வருகிறீர்களா... மகிழ்ச்சி!

   உங்கள் அன்பான வரவிற்கும் ஆழ்ந்த நல்ல ரசனைக்கும்
   இனிய வாழ்த்திற்கும் மனமார்ந்த நன்றி சகோ!..[/co]

   Delete
 45. [im]https://encrypted-tbn3.gstatic.com/images?q=tbn:ANd9GcTK_2mcPOrELlm_wDttLmcCQCjde3rL-mIXkOZbJBBNG7RKUsr8[/im]

  [co="red"]அன்பு உறவுகளுக்கு....

  என் உடல்நிலை சிறிது சரியில்லாத காரணத்தால் உங்களுக்கு
  உரிய நேரத்தில் பதில் - கருத்தெழுதத் தாமதமாகிறது..
  விரைவில் வந்து தனித்தனியே பதில் எழுதுவேன்...
  பொறுத்தருள்க.. மிக்க நன்றி!.[/co]

  ReplyDelete
 46. கவிதை எவ்வளவு அருமை. நான்தான் மிகவும் தாமதம். எப்போதும் உன்னை வாழ்த்திக் கொண்டே இருக்கும் நான் இங்கு வர வெகு தாமதம்.
  சூப்பர் எல்லாம். அன்பு ஆசிகள். அன்புடன்

  ReplyDelete
  Replies
  1. [co="Fuchsia"]வணக்கம்! வாங்கோ அம்மா!...

   இங்கு உங்கள் வருகைகண்டு ரொம்பவே மகிழ்வாயிருக்கு எனக்கு..:)
   நீங்கள் இங்கு வந்ததே மகிழ்வுதானே
   இதில் தாமதமென்று ஒன்றுமில்லை..வருத்தமுமில்லை.

   உங்கள் ரசனையும் வாழ்த்தும் என்னை எப்பவுமே ஊக்குவிக்கும் மருந்தம்மா.

   உங்கள் அன்பு வரவிற்கும் இனிய வாழ்த்திற்கும் மனமார்ந்த நன்றிமா!..[/co]

   Delete
 47. உங்கள் பதிவின் தகவல் எனக்கு கிடைக்காமல் போனது எப்படி என்று தெரியவில்லை. மிக மிக தாமதமாகவே இப்பதிவைப் படித்தேன்.
  ''பொல்லார் உயர்ந்து புவியைச் சிதைப்பதோ?
  நல்லார் நலிந்து கிடப்பதோ? '' அருமையான கேள்விகள் . ''இல்லார்
  நலங்காண நல்குவாய் நாரணா! ஏழை உளங்குளிரச் செய்வாய் உவந்து!'' உங்கள் நியாயமான வேண்டுகோளுக்கு நாராயணன் செவி சாய்க்க வேண்டுகிறேன்.

  ReplyDelete
  Replies
  1. [co="Fuchsia"]வணக்கம் ஐயா!

   உங்கள் வருகை கண்டு மிகவும் மகிழ்ந்தேன்.
   தாமதம் என்பதெல்லாம் இல்லை. வந்ததே மகிழ்வுதான்.

   அன்பான உங்கள் வரவிற்கும் நல்ல ரசனைக்கும்
   உளமார்ந்த கருத்திற்கும் மனமார்ந்த நன்றி ஐயா!..[/co]

   Delete
 48. வாழ்த்துகள் சகோ.. தோழி பிரியாவுக்கும் என் வாழ்த்துகளை சேர்த்திடுங்க..

  ReplyDelete
  Replies
  1. [co="Fuchsia"]வணக்கம் சகோதரர் ஆ..வி!...:)!

   உங்கள் அன்பான வரவும் மனதிற்கு மிக்க மகிழ்வே!

   இனிய வாழ்த்திற்கும் உளமார்ந்த நன்றி சகோ!..[/co]

   Delete
 49. Replies
  1. [co="Fuchsia"]வணக்கம் சகோதரர்!
   உங்களின் முதல் வருகை இங்கு வாருங்கள்!

   உங்கள் அன்பான வரவிற்கும் வாழ்த்திற்கும்
   மிக்க மகிழ்ச்சியும் நன்றியும் சகோ!..[/co]

   Delete
 50. மிக அழகிய கைவேலை! அதற்கு அழகான பார்டர் கட்டியிருப்பது இன்னும் மெருகு கூட்டுகிறது.

  ஓவியம் மிக‌ அழகு. எங்கிருந்து உங்களுக்கு இத்தனை அழகாய் ஓவியங்கள் கிடைக்கின்றது?

  ReplyDelete
  Replies
  1. [co="Fuchsia"]வணக்கம் மனோ அக்கா!

   உங்கள் அன்பான வரவும் மனதிற்கு மகிழ்ச்சிதான் அக்கா...:)

   ஓவியங்கள் கூகிளில் தேடினால் கிடைக்கிறது.
   பல்வேறுபட்ட சொற்களைக்கொண்டு தேடல்தான்..
   கிடைக்கும்...:)

   இனிய கருத்திற்கும் வாழ்த்திற்கும் உளமார்ந்த நன்றி அக்கா!..[/co]

   Delete
 51. http://kovaikkavi.wordpress.com/2013/11/10/12-%e0%ae%a4%e0%af%81%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%b5%e0%ae%b0%e0%af%8d/

  ReplyDelete
  Replies
  1. நன்றி சகோதரி... வந்தேன் கருத்தும் தந்தேன்...:)

   Delete
 52. உள்ளத் தாமரையில்
  உணர்வோடு ஏற்றும் தீபமாகக்
  க்விலிங் கைவேலையில்...//
  என் உள்ளத்திலும் இடம் பெற்றது தீபம்.அருமையான கைவேலை.
  பிரியாவிற்கு வாழ்த்துக்கள்.

  ReplyDelete

உங்களின் அன்பான வரவிற்கும் ஊக்கந்தரும்
இனிய கருத்திற்கும் என் உளமார்ந்த நன்றி! _()_