Pages

Dec 1, 2013

இன்றோர் ஆண்டில்!...

இம்முறை பழங்களை க்விலிங் கைவேலையில்
முதன் முறையாக முயன்றுள்ளேன்...:)
~~~~~~~~

அன்பு உறவுகளுக்கு இனிய வணக்கம்!


கடந்த ஒரு வருடமாக இந்த இளையநிலாவின் வளர்ச்சிக்காக 
உங்கள் அன்பான ஆதரவுடன், இனிய நல்ல கருத்துக்களையும் வழங்கி என்னை ஊக்கப்படுத்திய உங்கள் அனைவருக்கும் 
என் இதயங்கனிந்த இனிய நன்றி!


இன்று மகிழ்வுடன் இரண்டாவது ஆண்டில் காலடியைப் பதிக்கின்றேன்!


வருங்காலத்திலும் இதேபோன்று உங்கள் ஆதரவினை நல்கி இவ் வலைப்பூ மேலும் சிறக்க உதவிடும்படி அன்புடன் கேட்டுகொள்கின்றேன்! மிக்க நன்றி!
0-0-0-0-0

இன்றோர் ஆண்டில்!...


தமிழ் உறவுகளே வணக்கம்! - அருந்
தமிழே நம்முயிர் இயக்கம்!

இன்றோர் ஆண்டில் இளையநிலா - உமக்கு
இனிதாய்த் தந்தேன் என்நன்றி!
என்றும் இதுபோல் உமதன்பு - எனக்கு
இருந்தால் பெறுவேன் மனத்தெம்பு!

நன்றே வலையை அமைத்தனளே - அதிரா
நற்றேன் சுவையைத் தந்தனளே!
இன்றே பலனும் கண்டனனே - அதனை
எண்ணி உவகை கொண்டனனே!

சிந்தை நிறைந்த ஆர்வமென - இருந்த
செம்மைத் தமிழை வளர்க்கின்றேன்!
சந்தக் கவிஞர் பாரதியின் - தாசன்
தயவால் கவிதை இசைக்கின்றேன்!

பொன்போல் மின்னும் கைவினையைக் - கற்றுப்
பொலிய அஞ்சு உதவினளே!
கண்போல் இருக்கும் நட்புகளே! - எந்தக்
கணமும் மறவேன் உம்உறவே!
~~~~~~~~~~


பிறப்பெல்லாம் உன்றனைப் போற்றிக் களிக்கச்
சிறப்பெல்லாம் கூடும் செழித்து!
~~~~~~~~~~~~~~

பதிவோடு பகிரும் பதிவர்

வலையுலகில் எனது அன்புக்குரியவர்களில் இன்னுமொரு தோழியான
இனியா அவர்களின் கவியாகவி - Kaviyakavi
 என்னும் வலைப்பூவினை இம்முறை
பதிவோடு பகிரும் பதிவராக உங்களுடன் பகிர்ந்து கொள்வதில்
மிக்க மகிழ்வடைகிறேன்.
 Kaviyakavi

http://kaviyakavi.blogspot.de/

தோழி இனியா தனது வலைப்பூவினை இந்த வருட ஆரம்பத்தில் தொடங்கித் தொடர்ந்து எழுதிவருகின்றார். தன் வலைப்பூவில் மிகுந்த ஆர்வமுடன் கவிதைகளை எழுதிப் பதிவு செய்து எம்முடன் பகிர்கின்றார்.

அழகான படங்களும் அவற்றுடன் இசைவான கவிதைகளையும் இணைத்து எழுதி எம்மை மகிழ்விக்கும் வலைப்பதிவாளர் தோழி இனியா ஆவார்.

தனது பதிவுகளோடு சக பதிவர்கள் வலைத் தளங்களுக்கும் சென்று சிறந்த நல்ல கருத்துகளைப் பகிர்வு செய்து அவர்களையும் ஊக்குவிக்கும் அன்பானவர்.

இவரின் வலைப்பூவினைப் பற்றி நான் அதிகம் உங்களுக்குச் சொல்வதைவிட நீங்களும் இனியா அவர்களின் வலைப்பூவிற்குச் சென்று பார்த்து மேலும் அறிந்து கொள்ளலாம்.
  
இனியா அவர்களின் வலைப்பூவினைத் தெரியாதோர் அவர் தளத்திற்கும் சென்று படித்துக் கருத்துப் பகிர்வு செய்து அவரையும் ஊக்குவிக்க வேண்டுமென அன்புடன் கேட்டுகொள்கின்றேன்.

அத்துடன் ஆரம்ப நிலையில் இருக்கும் இவரைப் போன்றோரை நாம் ஊக்குவிப்பதனால் அவர்கள் மேலும் மெருகேறி வளரப் பெரும் உதவியாக இருக்கும்.
இனியாவின் வலைத்தள வளர்ச்சிக்கு உதவும் எண்ணத்துடன் இங்கு  இத்தரவுகளை உங்களோடு பகிர்ந்து கொள்வதில் மிக்க மகிழ்வடைகின்றேன்!..

 அன்பு நன்றி உறவுகளே!
_()_

105 comments:

 1. பழங்களின் கைவண்ணத்தில் பலவிதமாய் எனை கவர்ந்தீர் தோழி. என்னே அழகு !
  அழகான கைவேலையுடன் அருமையான கவிதைகளுடன் பகிர்ந்து அனைவரின் மனதையும் ஈர்த்த இளையநிலா இரண்டாம் ஆண்டில் இன்னும் சிறப்பாக வலம் வர வாழ்த்துகிறேன். தோழி இனியாவிற்கும் வாழ்த்துக்கள்.

  ReplyDelete
  Replies
  1. [co="BlueViolet"]வணக்கம் தோழி சசிகலா!..

   உங்களின் அன்பான முதல் வருகை கண்டு மகிழ்ந்தேன்...
   உங்கள் அன்போடும் ஆதரவுடனும் இளையநிலா இன்னும் வளர்ந்திடும்...:)

   கைவேலை இன்னும் நன்றாக வந்திருக்க வேண்டும்...
   இப்படிப் புகழ்கின்றீர்கள்..:) நன்றி தோழி!

   இனிய ரசனைக்கும் உளமார்ந்த கருத்திற்கும்
   அன்பு வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி தோழி!...[/co]

   Delete
 2. சிறப்பான வலைப்பூ அறிமுகத்துடன்... இரண்டாவது ஆண்டில் மேலும் சிறப்பாக அமைய எனது மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்...

  ReplyDelete
  Replies
  1. [co="BlueViolet"]வணக்கம் தனபாலன்!..

   உங்களின் அன்பு வரவிற்கும் கருத்திற்கும்
   உளமார்ந்த வாழ்த்திற்கும் மிக்க நன்றி சகோ!...[/co]

   Delete
 3. இரண்டாவது ஆண்டு எனும் படிக்கட்டில் அடி எடுத்து இளமதி அவர்களுக்கு வாழ்த்துக்கள்.

  வெந்துயர் நம்மை எரித்திடினும்
  செந்தமிழே நமக்கிள நீராம்.

  சொந்தங்கள் எல்லாம் சிதறியபின்னும் களிறின்
  தந்தங்கள் கொன்டே முன் செல்வீர்.


  சுப்பு தாத்தா.

  ReplyDelete
  Replies
  1. [co="BlueViolet"]வணக்கம் ஐயா!..

   உங்களின் அன்பான வரவிற்கும் உளப்பூர்வமான கருத்திற்கும்
   மகிழ்வோடு எனது நன்றியும் உங்களுக்கு ஐயா!

   சொந்தங்களாய்ச் சுற்றங்களாய் நண்பர்களாய் இங்கே இணையத்தளத்தில்
   இத்தனைபேர் என்னுடன் இருக்கையில் அதுவே நான் பெற்ற பெரும் பேறு.!
   இனிமையான ஆதரவான உங்கள் ஆசியும் வாழ்த்துமே மிகப் பெரியது ஐயா!

   மிக்க மிக்க நன்றி !...[/co]

   Delete
 4. சகோதரிக்கு வணக்கம்
  தங்களது க்விலிங் கைவேலையில் பழங்கள் அனைத்தும் கனிந்து தேன் சுரந்து சுவைக்க அழைக்கிறது. அருமையான கைவேலை. வழக்கம் போல் கலக்கியிருக்கீறீர்கள்.
  ======================
  இரண்டாமாண்டு துவக்கம் காணும் இந்நிலா இணைய வானில் என்றும் இளையநிலாவாக ஜொலிக்க எனது வாழ்த்துக்கள் சகோதரி. தங்களது வலைத்தளம் மற்றவர்களிடமிருந்து மாறுபட்டு காட்சியளிக்கிறது. இது தங்கள் சிறப்பு மற்றும் திறமையான சிந்தனைக்கு அடையாளம். இன்னும் பல படிகள் தாண்டி பல இலக்கியங்கள் படைக்க வேண்டுமென்பதே எனது விருப்பம்..
  ====================
  அன்பு சகோதரி இனியா அவர்களின் வலைத்தளம் அருமையாக இருக்கும். அவரைப் பற்றி அருமையாக பகிர்ந்துள்ளீர்கள். சகோதரிக்கு எனது அன்பான வாழ்த்துக்கள்.

  ReplyDelete
  Replies
  1. [co="BlueViolet"]வணக்கம் பாண்டியன்!..

   உங்களின் அன்பு வரவும் மனம் நிறைக்கும் கருத்தினைக் கண்டும்
   மிகவே மகிழ்ந்தேன். இயன்றவரை இங்கென் வலையில் பதிவிடுவதுடன்
   சக பதிவர்களின் வலைகளிலும் எனது பங்களிப்பு இருக்கும்.

   உங்களின் அன்பு வாழ்த்திற்கும் மனமார்ந்த நன்றி சகோ!...[/co]

   Delete
 5. வாழ்த்துக்கள் இளமதி.
  க்வீலிங்குயின்,கவியரசி இளமதி இன்னும் பல படைப்புகள் தருக. தொடரட்டும் கலையும் கவிதையும்

  ReplyDelete
  Replies
  1. [co="BlueViolet"]வணக்கம் முரளிதரன்!..

   உங்களின் அன்பு வரவிற்கும் இனிய கருத்திற்கும்
   வாழ்த்திற்கும் மிக்க நன்றி சகோ!...[/co]

   Delete
 6. இன்றோர் ஆண்டில் இளைய நிலா
  எடுத்தடி வைத்திடும் என் பிரிய நிலா
  வளர் பிறை போல் நீ வளர்ந்திடு நாளும்
  முழு மதியாக சிறந்திட வேணும்....!

  வண்ணத்தில் நீ ஒரு இளையநிலா
  எண்ணத்திலோ முதிய நிலா
  கண் என போற்றும் கவிதை நிலா நீ
  அன்பினை பொழியும் அற்புத நிலவே ,,,!

  வாழ்ந்திட வேணும் என்றும் வளமாக...!

  என்ன எழுதுவது என்றே எனக்கு தெரியவில்லை வாயடைத்து விட்டது. எப்படி நன்றி சொல்வது.வெறும் வார்த்தைகள் போதுமா?
  எப்படி இதை ஈடு செய்வது. இன்றைய பகிர்வு யார் பார்ப்போம் என்றால் அங்கே என் பெயர் என் மகிழ்ச்சிக்கு அளவேயில்லை தோழி இது விலைமதிப்பு அற்றவை எதனாலும் ஈடு செய்யமுடியாதவை. இந்த உள்ளம் எல்லோருக்கும் வந்து விடாது தோழி முற் பிறப்பில் எதோ புண்ணியம் செய்திருக்கிறேன். உங்கள் நட்பை பெற...! எம் நட்பு நான் இறக்கும் வரை தொடர வேண்டும் என்று ஆண்டவனை பிரார்த்திக்கிறேன். மிக்க மகிழ்ச்சி....! நன்றி தோழி ....!

  அழகாகன பழங்கள், கை வேலையில் அசத்திட்டீங்க, அழகான படங்களும் இணைத்திருகிறீர்கள் வாழ்த்துக்கள் தோழி ....!

  ReplyDelete
  Replies
  1. [im]http://www.wallpaperup.com/uploads/wallpapers/2013/03/07/49005//thumb_9b0434a6225b23a2df7b5f0d555dc3eb.jpg[/im]

   [co="BlueViolet"]வணக்கம் இனியா!. வாங்கோ!...
   நல்வரவு!...:)

   அட.. அட.. கவிதையாகவே பாடி என்னையும் வாழ்த்திவிட்டீர்களே...:)
   அருமை!.. இனிமை!..
   உங்கள் வாழ்த்துகளுக்கும் உளம் நிறைந்த
   என் நன்றி தோழி!

   என்ன இது இவ்வளவு உணர்ச்சிவசப்பட்டுவிட்டீர்கள்..:)
   இங்கு பதிவுடன் ஒரு பதிவரைப் பற்றி பகிர்ந்துகொள்வது என் வழக்கமே.
   அதில் இம்முறை நீங்கள். இதனால் உங்களுக்கும் பல வாசகர்கர்கள், நண்பர்கள்
   அறிமுகமாவார்கள்... தொடர்வார்கள்... இணையத்தளத்தில் உங்களை அறியாதவர்கள் அறிந்துகொள்வார்கள். அவ்வளவே!.

   உங்கள் வலைத்தளத்தைப் பற்றிச் சரியாக எழுதிப் பகிர்துள்ளேனா?...
   வேறேதாவது உங்கள் முயற்சி அங்கிருக்க எனக்குத்தெரியாமல் போய்விட்டதோன்னு
   பல தடவை பார்த்தேன்.. கண்டுபிடிக்கவில்லை.

   எங்கள் அன்பு அன்பு என்றென்றும் நிலைத்திருக்கும்! எனது வேண்டுதலும் அதுவேதான்..:).
   நீங்களும் இன்னும் இன்னும் எழுதி மெருகாகி மேன்மையுற
   உங்களையும் வாழ்த்துகிறேன் தோழி!

   உங்களின் அன்பு வரவிற்கும் இனிய கருத்துக் கவிதைகளுக்கும்
   வாழ்த்திற்கும் மிக்க மிக்க நன்றி தோழி!...[/co]

   Delete
  2. பொன்னை புடம் போட்டு மின்னும் அணிகலனாய் ஆக்க உதவிய மூவருக்கும் மிக்க நன்றி....! (அதிரா, அஞ்சு, கவிஞர் பாரதிதாசன் அவர்களுக்கும்). உங்களுடைய அன்பான முயற்சியையும், நேரத்தையும் நான் மதிக்க வேண்டு மல்லவா தோழி மகத்தான எண்ணத்தை போற்ற வேண்டும் அல்லவா எத்தனை பேர் இப்படி எண்ணுவார்கள் சொல்லுங்கள் தோழி. வழமையாக செய்வதானாலும் இது புதுமை தானே.
   அதற்கேற்ப கவிதை அழகாக எழுதுகிறீர்கள் தோழி.
   மேன் மேலும் வளர வேண்டும் என வாழ்த்துகிறேன்.
   அத்துடன் நீங்கள் என்னைப் பற்றி விபரித்தவை சரியே போதுமானவை தான். வேறு தெரிய வேண்டுமானால் ஆரம்ப காலத்தில் எழுதிய சில கவிதைகள் எனக்கு பிடித்தவை உங்களுக்கும் சில சமயம் பிடிக்கலாம். அவை
   அழகான முருகன் (நீதி கேட்டு) ஆறுமுகன் ஆனைமுகன்,
   கடல் அலையே (சுனாமிக்காக சாடி ) அம்மாவுக்காக என்று எழுதியிருக்கிறேன். உயிரே என்று ஒன்று இப்படி நிறைய சொல்லலாம். கண்ணா அன்பென்ற நதி இவை நன்றாகவும்
   இருக்கும் என்று நம்புகிறேன். எப்படி இருப்பினும் முடிந்தால் பாருங்கள் எனக்கு தெரிவித்தால் நான் சரியான பாதையில் பயணிக்கிறேனா? என்பதை அறிந்து கொள்ள முடியும். மிக்க நன்றி தோழி....!
   வாழ்க நலமுடன்...!

   Delete
 7. இன்னும் பற்பல படைப்புகளுடன் -
  பல்லாண்டு பொலிந்து விளங்கிட
  அன்புடன் வாழ்த்துகின்றேன்!..
  வாழ்க.. வளமுடன்!..

  ReplyDelete
  Replies
  1. [co="BlueViolet"]வணக்கம் ஐயா!..

   உங்களின் அன்பு வரவிற்கும் இனிய கருத்திற்கும்
   வாழ்த்திற்கும் மனமார்ந்த நன்றி!...[/co]

   Delete
 8. Happy anniversary n happy blogging Ilamathy! Nice quilling&poems!

  ReplyDelete
  Replies
  1. [co="BlueViolet"]வணக்கம் வாங்கோ மகி!..

   உங்கள் வரவுகண்டு மிக்க மகிழ்ச்சி! உங்கள் குட்டித்தேவதை என்ன செய்கின்றாள்...:)

   உடல் நலனில் அக்கறை கொள்ளுங்கள். உங்களுக்கும் என் வாழ்த்துக்கள் மகி!

   உங்களின் அன்பு வரவிற்கும் இனிய கருத்திற்கும்
   வாழ்த்திற்கும் மிக்க மிக்க நன்றி மகி!...[/co]

   Delete
 9. இரண்டாம் ஆண்டு இளையநிலா மேலும் அழகாக கவிதை, க்விலிங் என்று அசத்த என் வாழ்த்துக்கள்.

  சற்று வேலை அதிகம் இப்போது. மெதுவாக ஆனால் நிச்சயம் வருவேன் இனியாவின் பக்கம்.

  ReplyDelete
  Replies
  1. [co="BlueViolet"]வணக்கம்!.. வாங்கோ இமா...:)..

   உங்களின் பாடசாலை நெருக்கடியான இந்த நேரத்திலும் ஓடிவந்து இங்கு வாழ்த்துத் தெரிவித்திருக்கிறீங்களே!.. ரொம்பவும் சந்தோசமாக இருக்கு இமா!

   அன்பான வரவிற்கும் இனிய கருத்திற்கும்
   வாழ்த்திற்கும் மிக்க நன்றி இமா!...[/co]

   Delete
 10. பழங்களை க்விலிங் கைவேலையில் ! மிக அருமை. முதன் முதலில் செய்யும் போதே அழகாய் செய்து விட்டீர்கள் இளமதி.

  இரண்டாவது ஆண்டுக்கு வாழ்த்துக்கள்.
  அஞ்சு, அதிராவுக்கும் வாழ்த்துக்கள்.
  இனிய அவர்களின் வலைப்பூக்கு வாழ்த்துக்கள்.

  ReplyDelete
  Replies
  1. [co="BlueViolet"]வணக்கம் சகோதரி!..

   உங்களின் அன்பு வரவிற்கும் இனிய கருத்திற்கும் மனமார்ந்த நன்றி!
   க்விலிங்க் இன்னும் மெருகாக்க இடமுண்டு. முயற்சிதான். உங்கள் ரசனை என்னை ஊக்குவிக்கின்றது சகோதரி!

   அன்பு வாழ்த்திற்கும் மிக்க நன்றி!...[/co]

   Delete
 11. வாழ்த்துக்கள் தோழி .கலைகளில் சிறந்து விளங்கிடும் மனம் இது
  நிலைபெற வேண்டும் உலகினில் என்றும் புகழுடனுன் பெருமையுடனும் ஈராண்டு என்ன பல நூறாண்டு கடந்து .உங்களை ஊக்குவித்தவர்களுக்கும்
  இங்கே நீங்கள் இன்று அறிமுகம் செய்து வைத்த வலைத்தள பதிவருக்கும் என் நன்றி கலந்த வாழ்த்துக்கள் உரித்தாகட்டும் தோழி .கை வண்ணம் மெய் சிலிர்க்க வைக்கிறது .புதிய இம் முயற்சி புதுமைகள் படைக்கட்டும் தொடர்ந்தும் .

  ReplyDelete
  Replies
  1. [co="BlueViolet"]வணக்கம் அம்பாளடியாள்!..

   இத்தனை அன்பாக வந்து வாழ்த்தியுள்ளீர்களே..
   அசந்துவிட்டேன் நான்.! மிக்க மகிழ்ச்சி!

   உங்களின் அன்பு வரவிற்கும் இனிய கருத்திற்கும்
   வாழ்த்திற்கும் மனமார்ந்த நன்றி தோழி!...[/co]

   Delete
 12. ஓராண்டு நிறைந்த பாப்பாவுக்கு அன்பான பாராட்டுக்கள், இனிய நல்வாழ்த்துகள்.

  மிகச்சிறப்பான இந்தப்பதிவுக்கும், பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றிகள்.

  ReplyDelete
  Replies
  1. [co="BlueViolet"]வணக்கம் ஐயா!..

   உங்களின் அன்பு வரவிற்கும் இனிய கருத்திற்கும்
   வாழ்த்திற்கும் மனமார்ந்த நன்றி!...[/co]

   Delete
 13. இரண்டாம் ஆண்டில் அடியெடுத்து வைப்பதற்கு வாழ்த்துக்கள்...
  தொடர்ந்து எழுதுங்கள்..

  ReplyDelete
  Replies
  1. [co="BlueViolet"]வணக்கம் குமார்!..

   உங்களின் அன்பு வரவிற்கும் இனிய கருத்திற்கும்
   வாழ்த்திற்கும் மனமார்ந்த நன்றி சகோ!...[/co]

   Delete
 14. வாழ்த்துக்கள் சகோதரி ஆண்டுகள் பல கடக்க இனிய வாழ்த்துக்கள்;;

  ReplyDelete
  Replies
  1. [co="BlueViolet"]வணக்கம் சகோதரரே!..

   உங்களின் அன்பு வரவிற்கும் இனிய கருத்திற்கும் குறிப்பாக
   பல ஆண்டுகள் கடக்கச் சொன்னதற்கும்..:)
   வாழ்த்திற்கும் மனமார்ந்த நன்றி!...[/co]

   Delete
 15. Congrats::) happy birth day..lovely gorgeous quilling.

  ReplyDelete
  Replies
  1. This comment has been removed by the author.

   Delete
  2. நேற்று அவசரமாக போனில் டைப் செய்தேன் ...
   தாய் மொழியாம் இனிய தேன்மொழியில் வாழ்த்துவதை போன்ற இன்பம் வேறில்லை :)
   அழகிய க்விலிங்க் அற்புதமான கவிதை எல்லாமே அருமை :)
   கொஞ்சம் நாள் முன்பு ஒன்று சொன்னேனே நினைவிருக்கா :)..சமையலையும் ஒரு குறிப்பு இவற்றுடன் சேர்த்து .இனி வரும் நாளில் .பகிர வேண்டுகிறேன் .
   மீண்டும் இரண்டாம் பிறந்த நாளுக்கு வாழ்த்துக்கள் ,

   Delete
  3. [co="BlueViolet"]வணக்கம் அஞ்சு!.. வாங்கோ!..:)

   கண்டவுடன் வந்து வாழ்த்தியுள்ளீர்களே
   அதுவே மகிழ்வுதான். அதைவிட தேன்மொழியாம்
   எங்கள் தமிழ்மொழியிலும் மீண்டும் வந்து
   ரசித்து மனம் நிறைந்த கருத்துக்களைப்
   பகிர்ந்துள்ளமையும் மட்டற்ற மகிழ்ச்சிதான்.

   உங்கள் வேண்டுகோளை நிறைவேற்ற முடியுமா பார்க்கின்றேன்...:)
   இங்கு வருபவர்கள் அதோடு நின்றுவிடக்கூடும்.
   அதுதான் யோசிக்கின்றேன்..:)))

   உங்களின் அன்பான வரவிற்கும் இனிய கருத்துகளுக்கும்
   வாழ்த்திற்கும் மனமார்ந்த நன்றி அஞ்சு!...[/co]

   Delete
 16. வாழ்த்துக்கள் சகோதரியாரே.

  ReplyDelete
  Replies
  1. [co="BlueViolet"]வணக்கம் ஐயா!..

   உங்களின் அன்பு வரவிற்கும் இனிய கருத்திற்கும்
   வாழ்த்திற்கும் மனமார்ந்த நன்றி!...[/co]

   Delete
 17. இரண்டாவது ஆண்டில் அடியெடுத்து வைத்தமைக்கு வாழ்த்துக்கள்! க்விலிங் வேலை மிக அழகு! தொடர்ந்து சிறப்பாக படைப்புக்களை வழங்குங்கள்! புதிய அறிமுக தளத்திற்கு சென்று பார்க்கிறேன்! நன்றி!

  ReplyDelete
  Replies
  1. [co="BlueViolet"]வணக்கம் சுரேஷ்!..

   உங்களின் அன்பு வரவிற்கும் இனிய கருத்திற்கும்
   வாழ்த்திற்கும் மனமார்ந்த நன்றி சகோ!...[/co]

   Delete
 18. பழ்ங்கள் அழகு.. இரண்டாம் ஆண்டில் அடி எடுத்து வைப்பதற்கு மனமார்ந்த வாழ்த்துகள்.

  ReplyDelete
  Replies
  1. [co="BlueViolet"]வணக்கம் சகோதரர் வெங்கட் நாகராஜ்!..

   உங்களின் அன்பு வரவிற்கும் இனிய கருத்திற்கும்
   வாழ்த்திற்கும் மனமார்ந்த நன்றி!...[/co]

   Delete
 19. பழங்கள் க்விலிங்கிலும் விளையுமா என்ன?விளைந்திருக்கிறதே தங்கள் கைவண்னத்தில்.நன்றாக இருக்கிறது வாழ்த்துக்கள் மேடம்.

  ReplyDelete
  Replies
  1. [co="BlueViolet"]வணக்கம் விமலன்!..

   உங்களின் அன்பு வரவிற்கும் இனிய கருத்திற்கும்
   வாழ்த்திற்கும் மனமார்ந்த நன்றி!..
   மீண்டும் அந்த மேடத்தையும் கூட்டி வந்துவிட்டீர்களே சகோ...:).[/co]

   Delete
  2. பழக்க தோஷம் .மாற்றிக்கொள்கிறேன்.

   Delete
 20. இனியா அவர்களின் வலைத்தளம் ஏற்கனவே அறிமுகமானதுவே.இன்னும் படிக்கிறேன் நன்றி வணக்கம்/

  ReplyDelete
  Replies
  1. [co="BlueViolet"]மிக்க நன்றி!...[/co]

   Delete
 21. அடுத்த ஆண்டிலும் வெற்றிநடை போட வாழ்த்துகள்.

  ReplyDelete
  Replies
  1. [co="BlueViolet"]வணக்கம் ஐயா!..

   உங்களின் அன்பு வரவிற்கும் இனிய கருத்திற்கும்
   வாழ்த்திற்கும் மனமார்ந்த நன்றி!...[/co]

   Delete
 22. வாழ்த்துக்கள் சகோதரி... பல வருடங்கள் தொடர்ந்து எழுத வேண்டும்...

  ReplyDelete
  Replies
  1. [co="BlueViolet"]வணக்கம் ஸ்கூல் பையன்!..
   வாங்கோ! இங்கு உங்கள் முதல் வரவு!

   உங்களின் அன்பான வரவும்
   இனிய கருத்தும் கண்டு மிக்க மகிழ்ச்சி!

   வாழ்த்திற்கும் மனமார்ந்த நன்றி!...[/co]

   Delete
 23. தேன் கனிகள் இனித்ததடி
  தேன் கவிகளும் சுவைத்ததடி
  இனியாவின் வலையும் இன்பமாய்
  என்னிடம் இணைந்ததடி
  இரண்டாம் ஆண்டும் இனிதே சிறக்க
  என் இனிய வாழ்த்துக்களடி தோழி !

  ReplyDelete
  Replies
  1. [co="BlueViolet"]வணக்கம் ஸ்ரவாணி!..வா வா நீ!..:)
   வரும்போதே தேனோடு வந்து இனிக்க இனிக்கக்
   கவிதை பாடி வாழ்த்தியுள்ளீர்கள்!
   தேனுக்குள் விழுந்த எறும்பாகத் தித்திப்பில்
   திக்குமுக்காடிப்போனேன் நான்..:)


   உங்களின் அன்பான வரவிற்கும் இனிய கருத்திற்கும்
   வாழ்த்திற்கும் மனமார்ந்த நன்றி தோழி!...[/co]

   Delete
 24. வணக்கம்
  சகோதரி
  க்விலிங் கைவேலையில் பழங்கள் அமைத்த முறை மிக அழககு
  அத்தோடு இனியா அவர்களின் வலைப்பூவை அறிமுகம் செய்துள்ளிர்கள் வாழ்த்துக்கள் சகோதரி
  வலைத்தள உறவுகளே.. இனியாவின் வலைப்பூ பக்கம் சென்று கருத்துக்கள் மூலம் ஊக்கப்படுத்துங்கள்
  -----------------------------------------------------------------------------
  உன் வீடறிய உன் ஊர்அறிய
  உமைப் பெற்று எடுத்த- தாய்
  பத்து மாதம் வயிற்றில் சுமந்தாள்
  பார் எங்கும் மாந்தர்கள் -போற்றிடவே
  உன் அறிவு ஆற்றலை -பெருக்கிடவே
  உன் வாழ்வில் நீ சுமந்தாய் வலைப்- பூ………
  சுமந்த காலங்கள் இன்றுடன்
  ஈராண்டு நிறைவை-கொண்டாடும்
  சகோதரி இளையநிலா-உன் வாழ்வில்
  என்றென்றும் அறிவு வசந்தம் வீசட்டும்
  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
  Replies
  1. [co="BlueViolet"]வணக்கம் ரூபன்!..

   பாரினில் வந்து பிறந்தபலன்
   நீர்கூறக் கேட்டுள்ளம் சிலிர்த்தேனே!
   யாருக்கும் தீங்கிலா வாழ்வோடு
   ஊருக்கும் நல்லதுசெய விழைந்தேனே!

   சகோ! உங்களைப் போன்றோரின் அன்பும் ஆதரவும்
   இருந்தாலே எம்மால் அடுத்தவருக்கு என்ன நன்மையெலாம்
   செய்ய முடியுமோ அதனைச் செய்திட முடியும்.

   உங்களின் அன்பான வரவுடன் அருமையான கருத்திற்கும்
   இனிய வாழ்த்திற்கும் மனமார்ந்த நன்றி சகோ!...[/co]

   Delete
 25. Many more happy returns of the day to "ILAYANILA"
  [im]http://www.rozite.info/wp-content/uploads/2013/02/cat-red-rose-animals-cute-flowers.jpg [/im]

  ReplyDelete
  Replies
  1. [co="BlueViolet"]வணக்கம் அதிரா!.. வாங்கோ..:)

   அச்சோ!.. பாவம்!... பூஸ் குட்டியின் காலில ரோசாப்பூ தண்டின் முள்ளு குத்தப்போகுது....:)))

   வாழ்த்திற்கும் அச்சா பூஸும் ரோஸும் படத்துக்கும்
   மிக்க நன்றி அதிரா!..:).[/co]

   Delete
 26. குயில் வேலை.. சொல்லத்தேவையில்லை.. அப்படி ஒரு அழகு.. அப்படி ஒரு நீற்... கலக்கலா இருக்கு.

  இப்போதான் ஆரம்பித்ததுபோல இருக்கு, அதற்குள் ஒருவருடமாகி விட்டதோ?.. நம்பவே முடியவில்லை, அனைத்தும் கண்ணில் நிக்குது... அழகாக நடாத்திக் கொண்டு வாறீங்க.. தொடர்ந்து இப்படியே நடாத்த வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 27. இனியாவின் வலைப்பூ அறிமுகத்துக்கும் வாழ்த்துக்கள்.

  ReplyDelete
  Replies
  1. [co="BlueViolet"]க்விலிங்.. இதுவும் எனக்கு இன்னும் நல்லா வந்திருக்கோணுமெண்டு இருக்கு. மற்ற வேலைகளைவிட
   இதில கூட மினக்கெடவேண்டி இருந்தது. ஓரளவுக்குமேல்
   எனக்கும் முடியவில்லை.. அப்படியே ஒட்டி முடிச்சாச்சு..:)

   உண்மைதான் அதிரா..
   போன வருசம் இந்த ப்ளொக் தொடங்க முன்னம் நான் பயந்ததுபோல ஒருக்காலும் இல்லை.என்ன ஆகுமோ.. தொடர்ந்து இதை நடத்துவனோ.. க்விலிங், கவிதை எல்லாம் எனக்கும் வருமோ... இப்படி எக்கச்சக்க பயமயம்..;)

   இப்பவும் பயம் நிறைய இருக்கு. ஒவ்வொரு பதிவு ஏத்தமுன்னமும் பிள்ளயாரை காப்பாத்து சாமி என வேண்டிக்கொண்டுதான் பதிவேத்துவன்..:)
   யாரேனும் வந்து ஏதாகிலும் ஏசிப்போடுவினமோ எண்டு மெத்தப் பயம்...
   இருந்தாலும் கொஞ்சம் தைரியமும் வந்துதானிருக்கு இப்ப..:)

   அன்பான உங்கள் வரவிற்கும் இனிய மீளும் நினைவுகளுக்கும்
   வாழ்த்திற்கும் மனமார்ந்த நன்றி அதிரா!..;).[/co]

   Delete
 28. வெற்றிகரமா 2ம் ஆண்டில் காலடி எடுத்து வைத்திருக்கிறீங்க. வாழ்த்துக்கள்.
  பழங்களை அழகாக க்விலிங் ல் செய்திருக்கிறீங்க இளமதி. கவிதையும் மிக அருமையாக எழுதியிருக்கிறீங்க.
  இனியா அவர்களின் வலைப்பூ அறிமுகத்திற்கு வாழ்த்துக்கள்.

  ReplyDelete
  Replies
  1. [co="BlueViolet"]வணக்கம் அம்மு!. வாங்கோ..:)

   ஏதோ ஒருமாதிரி என்னை நானே இழுத்துக்கொண்டு
   ஒரு வருசத்தை முடிச்சிட்டேன். நினைத்தபோது பெரிய மலைப்பாக இருந்தது.
   இப்பவும்தான்...
   பார்ப்போம் அடுத்த வருடத்தையும் இதேபோல் ந(க)டத்திடுவனோ என்று ...:))

   உங்களின் அன்பான வரவிற்கும் கருத்திற்கும்
   இனிய வாழ்த்திற்கும் மிக்க நன்றி அம்மு!...[/co]

   Delete
 29. இரண்டாம் ஆண்டில் நுழையும் உங்களுக்கும் உங்கள் தளத்திற்கும் வாழ்த்துகள் தோழி!
  க்விளிங் பழங்கள் சாப்பிடத் தூண்டுகின்றன..கொஞ்சம் எடுத்துக்கொண்டேன்..நன்றி! :)
  உதவியவர்களை நினைவு கூர்ந்து படைத்த கவிதை அருமை! மேலும் பல ஆண்டுகள் வெற்றிகரமாக பதிவிட அன்பான வாழ்த்துகள் தோழி!

  ReplyDelete
  Replies
  1. [co="BlueViolet"]வணக்கம் கிரேஸ்!..
   ஹா.. ஹா.. உங்களுக்கில்லாத பழமோ.. கொஞ்சமென்ன வேண்டியதை எடுங்கோ..:)

   உங்களின் இனிய வரவிற்கும் அருமையான கருத்திற்கும்
   வாழ்த்திற்கும் மனமார்ந்த நன்றி தோழி!...[/co]

   Delete
 30. இன்னும் பல ஆண்டுகள் இதே போல் மகிழ்சியுடனும் இனிய கவிதைகளுடனும் கலந்து செல்ல என்னுடைய வாழ்த்துக்கள்... கை வேலைப்பாடு மிகவு அருமை... :)

  ReplyDelete
  Replies
  1. [co="BlueViolet"]வணக்கம் பிரியா!..

   உங்களின் அன்பு வரவிற்கும் கருத்திற்கும்
   உளமார்ந்த வாழ்த்திற்கும் மிக்க நன்றி!...[/co]

   Delete
 31. இரண்டாமாண்டுத் துவக்கத்துக்கு இனிய வாழ்த்துக்கள் இளமதி. தெளிந்த நீரோடையின் குளுமை போன்ற அழகுத் தெளிதமிழ்ப் பாக்களுக்கும் மனதிற்கு இதம் தரும் அற்புத க்வில்லிங் கலைநயத்துக்கும், சகபதிவரை அறிமுகப்படுத்தி ஊக்குவிக்கும் அன்புக்கும் பிற பதிவர்களின் தளத்தில் நேர்த்தியாய் பின்னூட்டமிடும் சிறப்புக்கும் எல்லோரையும் அன்பால் கனிவாய்க் கவரும் மாண்புக்கும் மனமார்ந்த பாராட்டுகள் இளமதி.

  ReplyDelete
  Replies
  1. [co="BlueViolet"]வணக்கம் கீத மஞ்சரி!..

   உங்களின் அன்பான வரவுடன் அழகிய கருத்துகளால் என் மனம் நிறைத்தீர்கள்!
   மிகுந்த மகிழ்வாயிருக்கிறது கீதமஞ்சரி!..

   உளமார்ந்த வாழ்த்திற்கும் மிக்க மிக்க நன்றி!...[/co]

   Delete

 32. வணக்கம்!

  வில்லாண்ட மன்னன் இராமன் வியனருளால்
  மல்லாண்ட மண்ணின் மணமாண்டு! - நல்லாண்ட
  சொல்லாண்டு! துாய சுவையாண்டு! மின்னிலா
  பல்லாண்டு வாழ்க படா்ந்து.

  கவிஞா் கி. பாரதிதாசன்
  தலைவா்: கம்பன் கழகம் பிரான்சு

  ReplyDelete
  Replies
  1. [co="BlueViolet"]வணக்கம் ஐயா!..

   தங்களின் வரவுகண்டு உள்ளம் மகிழ்ந்தேன்!

   எனது இந்த வளர்ச்சிக்கு உங்களின் பங்கும் முக்கியமானது. எனக்கிருந்த மொழிப்பற்றுடன் கவிதை வடிக்கும் ஆவலுக்கு உரமிட்டு அதனை வளமாக வளர்ப்பதில் உங்கள் உதவியும் இருந்தது. இருக்கிறதே.

   இன்னும் கற்றுத்தெளியவும் தேறவும் வேண்டும் ஐயா!

   காலம் கிட்டட்டும். காத்திருக்கின்றேன் நானும்!

   உங்களின் அன்பு வாழ்த்துக் கவிதைக்கு மனமார்ந்த நன்றி ஐயா!..[/co]

   Delete
 33. இரண்டம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் உங்களுக்கு வாழ்த்துக்கள்.

  ReplyDelete
  Replies
  1. [co="BlueViolet"]வணக்கம் ஸாதிகா!..

   உங்களின் அன்பு வரவிற்கும்
   உளமார்ந்த வாழ்த்திற்கும் மிக்க நன்றி!...[/co]

   Delete
 34. இன்று மகிழ்வுடன் இரண்டாவது ஆண்டில் காலடியைப் பதிக்கும் இளைய நிலாவுக்கு இனிய வாழ்த்துகள்..!

  ReplyDelete
  Replies
  1. [co="BlueViolet"]வணக்கம் இராஜராஜேஸ்வரி!..

   உங்களின் அன்பான வரவிற்கும்
   உளமார்ந்த வாழ்த்திற்கும் மிக்க நன்றி சகோதரி!...[/co]

   Delete
 35. இனியாவின் வலைப்பூ அறிமுகத்துக்கு
  இனிய் வாழ்த்துக்கள்.

  ReplyDelete
  Replies
  1. [co="BlueViolet"]மிக்க நன்றி!..[/co]

   Delete
 36. பழங்கள் பசியை தூண்டின .
  பயணம் பல்லாண்டு
  இனிதே,வெற்றியோடு தொடர
  வைத்தும் உங்கள் தோழி

  ReplyDelete
  Replies
  1. [co="BlueViolet"]வணக்கம் மைதிலி கஸ்தூரி ரெங்கன்!..

   உங்களின் அன்பு வரவிற்கும் இனிய கருத்திற்கும்
   உளமார்ந்த வாழ்த்திற்கும் மிக்க நன்றி!...[/co]

   Delete
 37. நல்ல முன்னேற்றம்தான் க்விலிங் வேலையிலும் சரி விருப்பமான கவிதையிலும் லயித்து வருகிறீர்கள் .வாழத்துக்களுடன் அன்பான பாராட்டுக்களும்

  ReplyDelete
 38. எப்போதுமே இதுபோல மகிழ்வாய் இருக்க வாழ்த்துகிறேன்

  ReplyDelete
  Replies
  1. [co="BlueViolet"]வணக்கம் சகோதரர் கவியாழி கண்ணதாசன்!..

   உங்களின் அன்பு வரவிற்கும் கருத்திற்கும்
   உளமார்ந்த வாழ்த்திற்கும் மிக்க நன்றி சகோ!...[/co]

   Delete
 39. உற்சாகமும் செழிப்பும் சிறப்புமாக ஓராண்டு நிறைந்துவிட்டது.
  வாழ்த்துக்கள்.
  இனி வரும் ஆண்டுகளிலும் உங்கள் இலக்கிய தாகமும் படைப்பாண்மையும் மேலும் ஓங்க வாழ்த்துகிறேன்.

  ReplyDelete
  Replies
  1. [co="BlueViolet"]வணக்கம் வைத்தியர் ஐயா!..

   உங்களின் அன்பு வரவிற்கும் கருத்திற்கும்
   உளமார்ந்த நல் வாழ்த்திற்கும் மிக்க மிக்க நன்றி ஐயா!...[/co]

   Delete
 40. இனிய குவிலிங்.
  அருமைக்கவி வரிகள். ஆண்டுநிறைவு வாழ்த்து.
  மேலும் பயணம் தொடர இறையருள் நிறையட்டும்
  இனிய வாழ்த்து.
  வேதா. இலங்காதிலகம்.
  http://kovaikkavi.wordpress.com/2013/12/03/62-%e0%ae%95%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%a4%e0%af%88-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b0%e0%af%81%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8dphotopoem/

  ReplyDelete
  Replies
  1. [co="BlueViolet"]வணக்கம் சகோதரி கோவைக்கவி!..

   உங்களின் அன்பும் வரவும் கண்டு மகிழ்ச்சி! இனிய கருத்திற்கும்
   உளமார்ந்த வாழ்த்திற்கும் மிக்க நன்றி!.
   விரைவில் உங்கள் தளத்திற்கும் வருகிறேன்..[/co]

   Delete
 41. இரண்டாவது ஆண்டில் எடுத்தடிவைத்த இளைய நிலா என்றும் வாழ்க வாழ்கவே என்று வாழ்த்துகிறேன். கொஞ்சம் தாமதமா நான்.
  எப்படியானாலும் வாழ்த்த வந்துவிட்டேன் பெண்ணே. ஆசிகளும்,அன்புடனும்

  ReplyDelete
  Replies
  1. [co="BlueViolet"]வணக்கம் அம்மா!.. வாங்கோ!

   உங்களின் அன்பு வரவும் ஆசிக் கருத்துமே எனக்கு பெரும் ஊக்கம்தான்!
   உளமார்ந்த வாழ்த்திற்கும் மிக்க நன்றி அம்மா!...[/co]

   Delete
 42. This comment has been removed by the author.

  ReplyDelete
  Replies
  1. அன்பால் உலகை அளந்தீரே – இரண்டாம்
   ஆண்டைத் தொட்டு நடந்தீரே!
   பண்பால் நன்றி படைத்தீரே! – குறள்
   பாவால் படைப்பை முடித்தீரே!
   என்போல் அண்ணன் பலருண்டு – உம்
   இனிய(யா) தோழியர் பலருண்டு
   மண்பால் மலைபோல் நிலைகொண்டு –நீர்
   மாண்புறத் தந்தேன் பூச்செண்டு!
   --அன்பின் அண்ணன், நா.முத்துநிலவன்,
   புதுக்கோட்டை --http://valarumkavithai.blogspot.in/
   (2,4,6,8ஆம் வரிகள் உள்ளடங்கித் தொடங்க வேண்டும். முந்திய என் பின்னூட்டத்தில் 4அடிப் பாடல் <8வரியாக வரவேண்டியது> 8அடிபோலவே வந்திருந்தது. எனவே, அதை நான்தான் நீக்கினேன் தவறாக நினைக்கவேண்டாம்)

   Delete
  2. மீண்டும் அப்படியே தான் வந்திருக்கிறது... இந்தத் தொழில்நுட்பம் தெரியவில்லையே...!

   Delete
  3. [co="BlueViolet"]வணக்கம் ஐயா!.. உங்கள் வரவுகண்டு மகிழ்ச்சி!

   ஆமாம் ஐயா.. அன்பு ஒன்றினால்தான் அனைத்தையும் அளக்கலாம்...ஆளலாம்!
   அங்குதானே நாம் முடிசூடா மன்னர்களாகிறோம்...
   உங்களைப் போன்றோரின் இனிய வரவும் இந்த வாழ்த்துக்களுமே என்போன்ற ஆரம்ப நிலையினருக்கு மிகுந்த ஊட்டச் சக்தி!
   தமிழ்மேல் கொண்ட காதலால் கற்கின்றேன் பாடமாய் கவிதையை!
   உங்களின் அன்பு வரவிற்கும் அருமையான கவி வாழ்த்திற்கும் மிக்க நன்றி ஐயா!
   ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

   ** ஐயா!..
   கருத்துப் பகிர்வில் நாம் பதிவில் இடுவதுபோல் கவிகளை விருத்தப் பா வடிவில் இடுவதற்கு எனக்கும் தொழில் நுட்பம் தெரியாதுதான்...
   ஆனாலும் சிலர்...

   அன்பால் உலகை அளந்தீரே – இரண்டாம்
   ......ஆண்டைத் தொட்டு நடந்தீரே!
   பண்பால் நன்றி படைத்தீரே! – குறள்
   ......பாவால் படைப்பை முடித்தீரே!
   என்போல் அண்ணன் பலருண்டு – உம்
   ......இனிய(யா) தோழியர் பலருண்டு
   மண்பால் மலைபோல் நிலைகொண்டு –நீர்
   ......மாண்புறத் தந்தேன் பூச்செண்டு!

   இப்படிக் குற்றுகளை இட்டு எழுதியுள்ளதைப் பார்த்திருக்கின்றேன்.

   உங்களின் மீள் வரவிற்கும் முயற்சிக்கும் மிக்க நன்றி ஐயா!...[/co]

   Delete
  4. நன்றி சகோதரி. சின்ன விஷயம்தான். ஆனால் இத்தனை நாளாக இதை நான் தெரிந்துகொள்ளாமல் இருந்திருக்கிறேன். பாதிவெற்றி என்றாலும் இது தற்போதைக்கு உதவும். உங்களுக்கும் தெரிந்திருக்கும்- 4அடி கொண்ட அறுசீர், எண்சீர் விருத்தங்களை வரி மடக்கி 8வரியாகக் கணினியில் போடும்போது இந்தத் தலைவலி தீராமல் இருந்தது. இப்போது தற்காலிகத் தீர்வு நன்றி ம்மா.

   Delete
 43. இனிய வணக்கம் சகோதரி.....
  சுவையான பழங்களை கைவண்ணத்தில்
  தருவித்தது தேன் கலந்த தினைமாவு போல
  தித்திக்கிறது. அழகான வடிவமைப்பு.
  ===
  இரண்டாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும்
  உங்கள் வலைப் பயணத்திற்கு என்
  மனமார்ந்த வாழ்த்துக்கள்.
  சிறந்த படைப்புகளைக் கொடுக்கும்
  உங்கள் தூரிகை இன்னுமின்னும்
  பளபளக்கும் வைரமாய் மின்னட்டும்.
  ===
  தமிழ்ப் பெருந்தகை ஐயா பாரதிதாசன்
  அவர்களால் உங்கள் சொல்வண்ணம்
  பட்டைதீட்டிய வைரமாக ஜொலிக்கிறது.
  மேலும் மெருகூட்டுங்கள்.
  ===
  அறிமுக பதிவர் சகோதரி இனியாவுக்கு என்
  மனமார்ந்த வாழ்த்துக்கள்.

  ReplyDelete
  Replies
  1. [co="BlueViolet"]வணக்கம் சகோதரர் மகேந்திரன்!..

   உங்களின் அன்பு வரவோடு ஆர்வந்தரும் அழகிய கருத்துகள்
   என்னை வெகுவாகக் கவர்கின்றன...:)
   மிக்க மிக்க மகிழ்ச்சி சகோ!..

   உங்கள் அனைவரின் ஆதரவுடன்
   இளையநிலா மேலும் வளரும்... வலைவானில் வலம்வரும்!..

   உங்களின் உளமார்ந்த இனிய வாழ்த்திற்கும்
   எனது அன்பான நன்றி சகோ!...[/co]

   Delete
 44. இரண்டாம் ஆண்டின் துவக்கத்தில்
  இதயம் நெகிழும் இளையநிலா
  நன்றி சொல்லும் கவிதையிலே
  நானும் மகிழ்ந்தேன் இதமாக..!

  ஆருயிர் நண்பி அஞ்சுவுடன்
  அன்பின் உச்சம் அதிராவும்
  அழகாய் வலையும் கைவினையும்
  அறிய வைத்த அரும்பொருள்கள்..!

  அமிழ்த மொழியில் அழகாக
  தமிழ் பா பூக்கும் தாசருன்னை
  மகிழ்வாய் இலக்கண நீரூற்றி
  முகிழ வைத்தார் கவியாக ..!

  கைவினை கவிதை குறள்பாவும்
  கண்ணிம் கொண்ட அறிமுகமும்
  காலம் உள்ள காலம்வரைக்கும்
  காக்கும் உன்னை வலையுலகில்..!

  எல்லாம் அருமை சகோ வாழ்த்துக்கள் வாழ்கவளமுடன்

  அறிமுகப்பதிவரும் என்னுடன்பிறப்புத்தான்
  சென்றேன் பார்த்தேன் கருத்திட்டேன் நன்றி..!

  ReplyDelete
  Replies
  1. [co="BlueViolet"]வணக்கம் சீராளா!..

   உமது அன்புக் கவிக் கருத்துக்கள் கண்டு கண்கள் கசிந்தன...

   காலதாமதமாய் நன்றி கூறுகிறேன். மிக்க மிக்க நன்றி!

   ஆர்வமான உமது வரவிற்கும் உளமார்ந்த வாழ்த்திற்கும்
   இதயம் நிறைந்த மகிழ்வோடு நன்றி உறவே!..[/co]

   Delete
 45. இனிதே இரண்டாம் ஆண்டில்
  அடியெடுத்து வைக்கும் தங்கள் வலைப்பூ
  இதே செழுமையுடன் சிறப்புடன்
  ஆண்டு பல கடக்க வேண்டிக் கொள்கிறேன்

  நானும் பதிவர் இனியா அவர்களின்
  வலைத்தள பரம ரசிகன்
  அவரை மிகச் சிறப்பாக அறிமுகம் செய்தமைக்கு
  மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

  ReplyDelete
  Replies
  1. [co="BlueViolet"]வணக்கம் ரமணி ஐயா!... வாருங்கள்!..

   உங்களின் இனிய வரவுகண்டு மிக்க மகிழ்வுகொண்டேன்.
   என் தளத்திலும் உங்கள் வரவு கிடக்காதா என எண்ணவைக்கிறது எங்கும் காணும் உங்கள் அன்பு!...
   வரவிற்காய்க் காத்திருப்பது வழமையாகிறது ஐயா!

   இனிய கருத்து என்னை ஊக்குவிக்கின்றது.
   உளமார்ந்த வாழ்த்திற்கும் இதயம் நிறைந்த
   அன்பு நன்றி ஐயா!...[/co]

   Delete
 46. இன்றைய 15/12/2013 வலைச்சரத்தில் தங்களைப் பாராட்டி, மிகவும் பெருமைப்படுத்தியுள்ளார்கள். கண்டேன். பெருமகிழ்ச்சி கொண்டேன். இது ஓர் தகவலுக்காக மட்டுமே. வாழ்த்துகள். ;))))))))))))))))))))))))))))))))))

  ReplyDelete
  Replies
  1. மிக்க மகிழ்ச்சி!
   தகவல் தந்தமைக்கும் வாழ்த்திற்கும் மனமார்ந்த நன்றி ஐயா!

   Delete
  2. தங்களை எங்குமே காணுமே என மிகவும் கவலைப்பட்டேன். ;(

   பதில் அளித்துள்ளது மகிழ்ச்சியாக உள்ளது.

   நாம் நல்லதே நினைப்போம். நல்லதே நடக்கட்டும். நன்றிம்மா.

   Delete
 47. உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

  மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2013/12/blog-post_15.html) சென்று பார்க்கவும்... நன்றி...

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றி தனபாலன்!
   உங்கள் வாழ்த்திற்கும் தகவலுக்கும்
   உளமார்ந்த நன்றி!
   இதோ சென்று பார்க்கின்றேன்....:)

   Delete
 48. மகிழ்ச்சி எங்கும் நிறையட்டும் இந்த கிருஸ்த்துமஸ் பெருநாளில் ...
  உங்கள் படைப்புகள் ஜனவரிக்கு பின்னர் தான் பார்க்க முடியும் என்று நினைகிரேன்...
  வாழ்த்துக்கள் உங்களுக்கும் குடும்பத்தினருக்கும்..

  ReplyDelete
  Replies
  1. [co="BlueViolet"]வணக்கம் சகோதரரே!..

   உங்களின் அன்பு வரவிற்கும் உளமார்ந்த வாழ்த்திற்கும் மிக்க நன்றி!...
   வீட்டில் சிறிது உடல் நலக்குன்றல். அதனால் வலையுலகில் என் வரவு மந்தமாகியது...
   இதோ மெல்ல மெல்ல வெளியே வந்துகொண்டிருகின்றேன். விரைவில் அடுத்த பதிவுடன்...

   உங்களுக்கும் இனிய நத்தார் திருநாள் வாழ்த்துக்கள்!
   அன்புத் தேடலுக்கு மனமார்ந்த நன்றி சகோ!...[/co]

   Delete
 49. வலைச்சர அறிமுகத்திற்கு வாழ்த்துகள்..!

  ReplyDelete
 50. ஆண்டிரண்டு கடந்து அழகுநடைபோடும் இளையநிலாவுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் ! தாங்கள் சொற்செறிவும்,பொருட்செறிவும் கொண்ட பல கவிகள் படைக்க அந்த கவிதேவதையின் அருள் வாய்க்கட்டும் என வாழ்த்துகிறேன்.

  ReplyDelete
 51. வாழ்த்துக்கள் இளமதி, ஏஞ்சல் சொல்வது போல் இனி சமையல் குறிப்பும் பகிருங்கள்.

  ReplyDelete

உங்களின் அன்பான வரவிற்கும் ஊக்கந்தரும்
இனிய கருத்திற்கும் என் உளமார்ந்த நன்றி! _()_