Pages

Dec 17, 2013

அழகென்றால்...

ஒன்றரை வருடத்திற்கு முன்னர் செய்த எனது இரண்டாவது 
க்விலிங் கைவேலை இதுவாகும்.

ஆரம்ப காலத்தில் என்னிடம் இதற்குரிய டூல் - கருவிகள் ஏதும் இருக்கவில்லை. சிறிய பல்லுக் குத்தும் குச்சியில் கருவிபோல முனையில் வெட்டி அதனில் வெட்டிய தாள் நாடவை வைத்துச் செய்தேன்.

சரியாகச் செய்யப்படவில்லை என்றாலும் என்னை அதன் வடிவம் ஓரளவு திருப்திப்படுத்தியதால் உங்கள் பார்வைக்கும் தந்துள்ளேன்...

உங்கள் கருத்துகள் என்னை ஊக்குவிக்கும்! மிக்க நன்றி!..:)
~~~~~~

அழகென்றால்...
 
ஆடும் மயிலின் வனப்பெல்லாம்
அசத்தும் வண்ணத் தோகையிலே!
பாடும் குயிலின் கோலமதைப்
படைத்தான் அதனின் குரலினிலே!
ஏடும் காணும் எழில்மிகவே
ஏற்றும் பதிவுச் சுவைதனிலே!
கூடும் மாந்தர் அழகென்றால்
கொழிக்கும் உயர்ந்த குணம்தானே!
~~~~000~~~~

வளம்பெறச் செய்வீர்!...


வேடிக்கை கூத்தென வீணே புரிவதை 
வாடிக்கை தானாக்கி வாழாதீர்! - வாடி
நலமின்றிச் சோரும்! நமதுறவின் மேன்மை  
வளமின்றிப் போகும் வரண்டு!

வளம்பெறச் செய்வீர் வளரும் உலகை!
உளமுறச் செய்வீர் உழைப்பை! -  களம்பல
கண்ட தமிழ்மொழியைக் காப்பீர்! இழுக்கின்ற 
நண்டெனும் போக்கை நசித்து!
~~~~000~~~~


எண்ணமெலாம் நீயே எனக்குள் நிறைவாக
வண்ணமெலாம் காட்டு மலர்ந்து!
~~~~~~~~

பதிவோடு பகிரும் பதிவர்


வலையுலகில் சமீப காலமாக எனக்கு அறிமுகமான அன்புக்குரிய சகோதரர்களில் ஒருவராகிய
மது அவர்களின் மலர்த்தரு
 என்னும் வலைப்பூவினை இம்முறை
பதிவோடு பகிரும் பதிவராக உங்களுடன் பகிர்ந்து கொள்வதில்
மிக்க மகிழ்வடைகிறேன்.

சகோதரர் மது தனது வலைப்பூவிலேயே தன்னைப்பற்றி...
மது?
நான் வாசிப்பு மாற்றங்களை தரும் என்று நம்புகிற, பாடத்திற்கு வெளியிலும் வாசிக்கும் மாணவர்களை உருவாக்கும் ஒரு ஆசிரியன்.

ஜே.சி.ஐயின் மண்டலப் பயிற்சியாளர்களில் ஒருவன்.இராமநாதபுரத்தில் துவங்கி மன்னார்குடிவரை பல்வேறு நிலை மாணவர்களை சந்திக்கிற வாய்ப்பை எனக்கு தந்த இளைஞர் பேரியக்கம் ஜே.சி.ஐ.

அரசுப் பள்ளி மாணவர்களுக்கு வாழ்வியல் திறன்களை  இலவசமாக வழங்கிவரும் நிகில் நிறுவனத்தின் பயிற்சியாளர்களில் ஒருவன்....

என்று இவ்வாறு கூறியுள்ளார்.
 மது அவர்களின் வலைப்பூ அருமையான விடயங்கள் பலவற்றை உள்ளடக்கிய நல்லதொரு கதம்ப வலைத்தளம் ஆகும்.


வாசிப்புக்குப் போதிய நிறைய விடயங்கள் அங்கு இருப்பதைக் காண்கிறேன்.

உதாரணத்திற்கு... ஒரிரு தினங்களுக்கு முன்னர் அவர் தளத்தில் நான் மேய்ந்து கொண்டிருந்தபோது `நலம்’ என்னும் லேபிள் பதிவுகளில்
 ”மூக்குத்தி அணிவது ஏன்” என்ற பதிவில் மூக்கில் வலப்பக்கம், இடப்பக்கம் மூக்கு குத்துவது பற்றி இருந்த விடயம் - என்னவர் முன்பு என்னுடன் கூறிய பல சம்பவங்களை நினைவில் நிழலாட வைத்தன... அப்போதெல்லாம் அவருடன் நான் நீங்கள் கற்பனையில் கூறுகிறீர்கள் என்றெல்லாம் வாதிட்டிருக்கின்றேன். ஆனால் அதற்கெல்லாம் விஞ்ஞான ரீதியாகக் காரணங்களை மிகத் தெளிவாக மது அவர்கள் பதிவிட்டிருப்பதைப் படித்தேன்.

 இதுபோல் இன்னும் எத்தனையோ சுவாரஸ்யமான பதிவுகள் அவர் வலைத்தளத்தில் என்னை அசர வைத்தன. இவைகளையெல்லாம் நீங்களும் அவர் தளத்திற்குச் சென்று பார்த்துப் படித்து, ரசிப்பதுடன் அவரையும் ஊக்குவித்தால் மிகவும் சிறப்பாக இருக்குமென நான் எண்ணுகிறேன்.

சகோதரர் மது தனது தளத்தில் எழுதுவதுடன் சக பதிவர்கள் வலைப்பூகளுக்கும் சென்று கருத்திட்டு அவர்களையும் ஊக்குவிக்கும் நல்ல மனோ இயல் நிரம்பியவர்.

இவரின் வலைப்பூவினைப் பற்றி நான் அதிகம் உங்களுக்குச் சொல்வதைவிட நீங்களும் அவரின் வலைப்பூவிற்குச் சென்று பார்த்து மேலும் அறிந்து கொள்ளலாம்.
  
இவரின் வலைப்பூவினைத் தெரியாதோர் அவர் தளத்திற்கும் சென்று படித்துக் கருத்துப் பகிர்வு செய்து அவரையும் ஊக்குவிக்க வேண்டுமென அன்புடன் கேட்டுகொள்கின்றேன்.

மிக்க நன்றி அன்பு உறவுகளே!

_()_

88 comments:

 1. வணக்கம்
  சகோதரி
  க்விலிங் கைவேலை மிக அருமையாக உள்ளது. சிறப்பான கவிதையுடன் மிகச் சிறப்பான படங்களும்.. பதிவுக்கு ஒரு தனிச்சிறப்பு...வாழ்த்துக்கள்.
  சகோதரன் மது அவர்களின் வலைப்பூ பற்றிய அறிமுகம் சிறப்பாக உள்ளது.. சென்று வாழ்த்துகிறேன் தங்களின் இந்த சேவைக்கு.எனது பாராட்டுக்கள் சகோதரி....

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
  Replies
  1. [co="IndianRed"]வணக்கம் ரூபன்!..

   உங்களின் முதல் வருகையும் உளமார்ந்த இனிய கருத்தும் கண்டு மிகவும் மகிழ்ந்தேன்!

   அன்பார்ந்த வாழ்த்திற்கும் மிக்க மிக்க நன்றி சகோ!...[/co]

   Delete
 2. //எண்ணமெலாம் நீயே எனக்குள் நிறைவாக
  வண்ணமெலாம் காட்டு மலர்ந்து!//

  மிகவும் ரஸித்...........தேன் ! தேனாக இனிக்குது ! ;))))))))

  ReplyDelete
 3. அழகென்றால் அழகு ..... அப்படியொரு அழகு ....... அனைத்தும் அழகு !

  இளய நிலாவாக .... மூன்றாம் பிறையாக ....... அழகோ அழகு !

  மனம் நிறைந்த பாராட்டுக்கள்.

  அன்பான இனிய நல்வாழ்த்துகள்.

  பதிவுக்கும் பகிர்வுக்கும் நன்றிகள்.

  களியுடன் களிப்பூட்டும் திருவாதிரை நல்வாழ்த்துகளும். ;)

  ReplyDelete
  Replies
  1. [co="IndianRed"]வணக்கம் வைகோ. ஐயா!..

   உங்களின் அன்பு வரவிற்கும் இனிய நற்கருத்திற்கும்
   உளமார்ந்த வாழ்த்திற்கும் மனம் நிறைந்த நன்றி ஐயா!..

   உங்களுக்கும் திருவாதிரை திருநாள் வாழ்த்துக்கள்!.[/co]

   Delete
 4. எண்ணமெல்லாம் மகிழ வைத்த இதமான படைப்பு !!
  கவிதையும் காட்சிகளும் கண்டு உள்ளம் ஆனந்தக்
  கூத்தாடுகிறது தோழி .அருமை ! அருமையான இப்
  படைப்பிற்கு என் மனமார்ந்த பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் .
  இன்றைய அறிமுகப் பதிவருக்கும் என் வாழ்த்துக்கள் தோழி .

  ReplyDelete
  Replies
  1. [co="IndianRed"]வணக்கம் என் அன்புத் தோழி அம்பாளடியாளே!..

   ஆனந்தக்கூத்திடும் ஆடலரசன் அருளால் அடியேனின் படைப்பும் அம்பாளுக்கு இனித்திட்டது எனக்கு மகிழ்வே..:)

   கொப்பளிக்கும் எரிமலையென உணர்வுக் கவிதைகள்
   படைக்கும் உங்களின் ரசனையும் அற்புதம்!

   உங்களின் அன்பு வரவும் இனிய கருத்தும்
   வாழ்த்தும் தருகிறது மன நிறைவு!

   மிக்க மிக்க நன்றி தோழி!...[/co]

   Delete
 5. என் அன்புத் தோழியே.
  என்னை இப்படி அசரவைக்கிறையே.

  தோகை மயில் வனப்பெல்லாம்
  கோலமாய் கொண்டாய் உள்ளத்தே
  இனிமையாய் எண்ணங்கள் ஊறுதே
  வண்ணங்கள் கொள்வாய் வாழ்வில் ஏற்று மகிழ்!

  கவிதையும் கருத்தும் அபாரம்
  கண்ட தமிழ் மொழியைக் காப்பீர்! இழுக்கின்ற
  நண்டெனும் போக்கை நசித்து!

  அழகான க்விலிங் வேலை எவ்வளவு பொறுமை உங்களுக்கு பெருமையாய் இருக்கிறது..
  பதிவரை ஏற்கனவே தெரிந்தாலும் இவ்வளவு விபரம் தெரியாது.
  இனி சென்று பார்க்கிறேன்.
  என் மனம் நிறைந்த அன்பும் பாராட்டும்..!.
  நன்றி வாழ்த்துக்கள்....!

  ReplyDelete
  Replies
  1. [co="DarkMagenta"]வணக்கம் இனிய இனியா!..

   உங்கள் அன்பு மழையில் நனைந்து திக்குமுக்காடிப் போனேன்...:)

   உங்களின் அன்பு வரவோடு அழகிய கவிவரிகளால் ரசித்துப் பாராட்டியது பேருவகையைத் தருகிறது எனக்கு.

   உளமார்ந்த இனிய வாழ்த்திற்கும் மிக்க மிக்க நன்றி தோழி!...[/co]

   Delete
 6. நல்லா இ௫க்கு சகோ...!!

  ReplyDelete
  Replies
  1. [co="DarkMagenta"]வணக்கம் சகோதரரே!.. வாருங்கள்!

   நீண்ட நாட்களின் பின்பு இங்கு உங்களைக் கண்டது மிக்க மகிழ்ச்சி!

   உங்களின் அன்பு வரவிற்கும் கருத்திற்கும்
   வாழ்த்திற்கும் மிக்க நன்றி சகோ!...[/co]

   Delete
 7. அழகான க்வில்லிங். கவிதைகளும் அருமை தோழி.
  இன்று அறிமுகப் படுத்தப்பட்டுள்ள நண்பருக்கு இனிய வாழ்த்துகள்.

  ReplyDelete
  Replies
  1. [co="DarkMagenta"]வணக்கம் தமிழ்முகில் பிரகாசம்!..

   உங்களின் அன்பு வரவிற்கும் கருத்திற்கும்
   இனிய வாழ்த்திற்கும் மிக்க நன்றி தோழி!...[/co]

   Delete
 8. ரொம்ப அழகு இளமதி ..கலர் ரொம்ப பிடிச்சிருக்கு இதே நிறத்தில் முழு சிவப்பில் என் மகளது முதல் பெர்த்டே frock இன்னும் பத்திரமா வச்சிருக்கேன் :)

  //பல்லுக் குத்தும் குச்சியில் கருவிபோல முனையில் வெட்டி //

  பல் குத்தும் குச்சி தான் தி பெஸ்ட் :)
  reed குச்சி ரூம் சென்ட் பாட்டிலில் வருமே அதை சீவித்தான் நானும் பயன்படுத்துவேன்

  ReplyDelete
  Replies
  1. [co="DarkMagenta"]வணக்கம்! வாங்கோ அஞ்சு!..:)

   பார்த்தீங்களா நீங்களும் உங்க மகளின் சட்டையை பாதுகாப்பாக இன்னும் வைச்சிருக்கீங்களே.. அதுதான் நானும் என் சட்டையை இன்னும் பாதுகாப்பாக வைச்சிருக்கேன்...:)))

   ஆமா அஞ்சு இப்பவும் நான் டூல் இருந்தாலும் அப்பப்ப இந்தக் குச்சியாலும் செய்வதுண்டு. ஆரம்பத்தில் நிறையவே சொதப்பல் இருந்திச்சு... இப்பவும்தான் அப்பப்ப..;)

   உங்க செண்ட் பாட்டில் குச்சி ஐடியாவும் நான் முயன்று பார்க்கணும். நன்றி மா உங்க டிப்ஸ்க்கு...:)

   உங்க அன்பான வரவிற்கும் அருமையான கருத்திற்கும்
   வாழ்த்திற்கும் மிக்க நன்றி அஞ்சு!...[/co]

   Delete
  2. Nice frock... still remember that.

   Delete
  3. [co="DeepPink"]வணக்கம் ஆஷா போஸ்லே அதிரா...:)

   [im]https://encrypted-tbn3.gstatic.com/images?q=tbn:ANd9GcTrPlsL1rOMJ0D6tWWw7etn4ZEYZd9SfrGSP81AK7Dd0p12-S0f[/im]

   என்ன ஆச்சரியம் இது...;) வாங்கோ!....
   என்னால நம்பவே முடியல்லைய்ய்ய்ய்ய்..:))).

   கண்ணை மூடிக் கனடாவில் இருந்தாலும் என்னை மறக்கேலை...
   மிக்க நன்றி அதிரா!
   மீளா உங்கள் நினைப்பு எனக்கும்!..:)

   அங்கை அம்மா அப்பா எல்லாரும் சுகம்தானே!
   விசாரிச்சதாக சொல்லிவிடுங்கோ..!

   இங்கத்தையைவிட அங்கை ரொம்பக் குளிராமே...

   கவனம். சுகமா இருங்கோ!..:)
   மிக்க நன்றி அதிரா.. இனிய வரவிற்கும் கருத்திற்கும்! ..[/co]

   Delete

 9. வணக்கம்!

  ஆடும் மயிலழகைப் பாடும் குயிலழகைச்
  சூடும் கவியைச் சுவைத்திட்டேன்! - பாடும்
  நிலவே வணங்குகிறேன்! நேரிய பாக்கள்
  நிலமே மகிழும் நெகிழ்ந்து!

  உளமொன்றிப் போகும் உயா்வெண்பா பாடி
  வளமொன்றி வாழ்க மகிந்ந்து!

  எண்ணங்கள் மின்னும் இனிய குறட்பாவில்
  வண்ணங்கள் மின்னும் வளா்ந்து!

  மதுவின் அறிமுகம் கண்டு மகிழ்ந்தேன்!
  புதுமை மலா்த்தரு போற்று!

  கவிஞா் கி. பாரதிதாசன்
  தலைவா்: கம்பன் கழகம் பிரான்சு

  ReplyDelete
  Replies
  1. [co="DarkMagenta"]வணக்கம் ஐயா!..

   தேடியே வந்திங்கு தீட்டிய பாக்களால்
   கோடி மகிழ்வைக் குவித்திட்டீர்! - பாடியே
   இன்னும் படைத்திட எண்ணிப் பயில்வேனே!
   மின்னும் தமிழில் மிளிர்ந்து!

   உங்களின் அன்பான வரவொடு இனிய நல்ல கவி வாழ்த்தினைக் கண்டு உள்ளம் பூரித்தேன் ஐயா!

   அழகு கவி வாழ்த்திற்கு எனது உளம் நிறைந்த நன்றி ஐயா!...[/co]

   Delete
 10. கைவண்ணமும் கவிவண்ணமும்
  ஒரு சிறந்த பதிவரை
  மிகச் சிறப்பாக அறிமுகப்படுத்திய பாங்கும்
  மனம் கவர்ந்தது
  பகிர்வுக்கும் தொடரவும்
  மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

  ReplyDelete
  Replies
  1. [co="DarkMagenta"]வணக்கம் ரமணி ஐயா!..

   உங்களின் அன்பான வரவிற்கும் கருத்திற்கும்
   மனம் நிறைந்த மகிழ்வுடன் நன்றி ஐயா!

   உளமார்ந்த வாழ்த்திற்கும் மிக்க நன்றி!...[/co]

   Delete
 11. வேடிக்கை கூத்தென வீணே புரிவதை
  வாடிக்கை தானாக்கி வாழாதீர்! - //உண்மைதான் அதனால் யாருக்கு லாபம்?
  இன்றைய எனது பதிவில் நானும் இதைத்தான் சொல்லியுள்ளேன் http://kaviyazhi.blogspot.com/2013/12/blog-post_17.html

  ReplyDelete
 12. இவ்வளவு அழகான வேலைப்பாடுகளும் கவிநயமும் மற்றொருப் பதிவரைப் பாராட்டும் உங்களின் சமூக அக்கறையுமே உங்களை மகிழ்ச்சியாக இருக்க வைக்கும் என நம்புகிறேன்

  ReplyDelete
  Replies
  1. [co="DarkMagenta"]வணக்கம் சகோதரரே!..

   உங்களின் அன்பான வரவும் கருத்தும் கண்டு மகிழ்ந்தேன்...

   சேவை செய்வது மனதிற்குச் சாந்தியைத் தருமல்லவா...
   எனக்கு, என்னது என்று மட்டும் வாழாது கொஞ்சமாகிலும் அடுத்தவருக்கு உதவுவதில் ஆனந்தம் நிறையவே காணலாம்!

   உளமார்ந்த வாழ்த்திற்கும் மிக்க நன்றி சகோ!...[/co]

   Delete
 13. அருமை சகோதரி.. க்வளிங் மற்றும் கவிதைகள் இரண்டுமே நன்றாக இருந்தது..

  ReplyDelete
  Replies
  1. [co="DarkMagenta"]வணக்கம் சகோ !..

   உங்களின் அன்பு வரவிற்கும் இனிய கருத்திற்கும்
   உளமார்ந்த வாழ்த்திற்கும் மனம் நிறைந்த நன்றி!...[/co]

   Delete
 14. க்வ்லிங் குறித்து என் ஆத்துக்காரி நிறைய பேசுவார், ஒரு பல் குச்சியில் கூட கலைவடிக்க முடியுமா? ஆச்சர்யம்...
  // வேடிக்கை கூத்தென வீணே புரிவதை
  வாடிக்கை தானாக்கி வாழாதீர்! - வாடி//

  ரொம்ப நல்ல வரிகள் உங்களின் சில கவிதைகளை வகுப்பறையில் பகிரலாம், அதற்கான தக்க தருணத்தில் ....

  என்னை அறிமுகம் செய்ததற்கு நன்றிகள்... பல ..சகோதரி...

  ReplyDelete
  Replies
  1. [im]https://encrypted-tbn0.gstatic.com/images?q=tbn:ANd9GcS95rN-0Wv1JT3lYbL7WS8cv0WquDv0kLBOk1JK1HP4F4GLbxJq[/im]

   [co="DarkMagenta"]வணக்கம் _()_ வாருங்கள் சகோதரர் மது!...

   க்விலிங் கொஞ்சம் பொறுமையோடு பழகிவிட்டால் சுலபமே!
   கலை எதுவென்றாலும் பொறுமையும் கொஞ்சம் கற்பனையும் இருத்தல் அவசியம். இதற்கும் அப்படியேதான். ..:)

   மண் நிலத்தில் கைவிரலால் கோடுபோட்டுப் பழகி பின்னர் சிலேட்டு, பயிற்சிப் புத்தகம், கணினி என முன்னேறுவதுபோல பற்குச்சியில் இக்கலைதனை ஆரம்பித்தலும் இலகுதான் சகோ..:)

   உங்கள் வகுப்பறையில் பகிரும் அளவிற்கு என் கவிவரிகளா.... மகிழ்ச்சி!

   உங்களின் அறிமுகம் நான் சரியாகச் செய்தேனா தெரியவில்லை. ஏதும் தவறாகக் குறையாக எழுதியிருந்தால் பொறுத்துக்கொள்ளுங்கள்...

   உங்களின் அன்பான வரவுடன் இனிய கருத்துக்களையும் பகிர்ந்தமை மனதிற்கு மட்டற்ற மகிழ்வைத் தருகிறது. வாழ்த்திற்கும் மிக்க நன்றி சகோ!...[/co]

   Delete
 15. அருமையான கைவேலைப்பாடு.

  ReplyDelete
  Replies
  1. [co="DarkMagenta"]வணக்கம் ஸாதிகா !..

   உங்களின் அன்பு வரவிற்கும் இனிய நற்கருத்திற்கும்
   வாழ்த்திற்கும் மிக்க நன்றி!...[/co]

   Delete
 16. க்விலிங் மிகவும் அருமை...

  சிறப்பான வலைத்தளம் அறிமுகம்...

  வாழ்த்துக்கள்...

  ReplyDelete
  Replies
  1. [co="DarkMagenta"]வணக்கம் தனபாலன்!..

   உங்களின் அன்பான வரவிற்கும் இனிய நற்கருத்திற்கும்
   உளமார்ந்த வாழ்த்திற்கும் மனம் நிறைந்த நன்றி சகோ!...[/co]

   Delete
 17. க்விலிங் அழகா இருக்கு.. ஆனாலும் அதை பத்தி எல்லாம் எனக்கு தெரியாது.
  உயர்ந்த குணமே மாந்தர்க்கு அழகு என்று சொன்ன கவிதை சிறப்பு! சிறப்பான வலைத்தளம்..!

  ReplyDelete
  Replies
  1. [co="DarkMagenta"]வணக்கம் உஷா அன்பரசு!.. வாங்கோ!

   நீண்ட காலத்திற்குப் பின்பு உங்களின் வரவுகண்டு மகிழ்ந்தேன் தோழி!..

   அன்பான இனிய நற் கருத்திற்கும் வாழ்த்திற்கும்
   மனம் நிறைந்த நன்றி!...[/co]

   Delete
 18. கை வண்ணமும், கவிதை வரிகளும் என எல்லாமே அழகு...

  ReplyDelete
  Replies
  1. [co="DarkMagenta"]வணக்கம் வாங்க ஆதி!..

   அன்பான வரவிற்கும் இனிய நற் கருத்திற்கும்
   உளமார்ந்த வாழ்த்திற்கும் மிக்க நன்றி ஆதி!...[/co]

   Delete
 19. க்விலிங் அருமை

  ReplyDelete
  Replies
  1. [co="DarkMagenta"]வணக்கம் சகோதரர் சரவணன்!..

   அன்பான உங்கள் வரவிற்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றி!..[/co]

   Delete
 20. அனைத்திலும் அழகு சொட்டுகிறது.
  அருமை மதி !

  ReplyDelete
  Replies
  1. [co="DarkMagenta"]வணக்கம் அன்பு ஸ்ரவாணி!..

   அன்பான உங்கள் வரவும் வாழ்த்துமே அழகு!
   மிக்க நன்றி தோழி!..[/co]

   Delete
 21. குவுளிங் வேலைப்பாடு அருமை... சிறப்பான அறமுகம்...

  ReplyDelete
  Replies
  1. [co="DarkMagenta"]வணக்கம் வெற்றிவேல்!..

   அன்பான உங்கள் வரவிற்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றி சகோ!..[/co]

   Delete
 22. க்வேளிங் நல்ல தேர்ச்சிக்குப்பின் செய்தது போலவே இருந்தது !
  பல்குச்சியும் வல்லவனுக்கு ஆயுதம் !!!!!!!!!
  அப்புறம் என் கணவர் மதுவின் வலைப்பூவை பகிர்ந்தமை
  மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது !நன்றி சகோதரி !

  ReplyDelete
  Replies
  1. [co="DarkMagenta"]வணக்கம் மைதிலி கஸ்தூரி ரெங்கன்!..

   //பல்குச்சியும் வல்லவனுக்கு ஆயுதம் !!!!!!!!!//

   ஓ.. வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் எங்கிறதை மாத்திட்டாங்களா.....எப்போ?.. சொல்லவே இல்லை...:)))

   ஆமா.. உங்களுக்கு ஒண்ணு சொல்லணும் தோழி!..
   இவங்க உங்க கணவர்ன்னு இவரை என் பதிவில இணைக்க வேண்டி அவங்க வலைத்தளத்தை பிரிச்சு மேய்ய்ஞ்சப்போதான் இந்த மாட்டரே எனக்கு தெரிஞ்சுது...:)
   என்ன பண்ணலாம்னு ஜோசிச்சு உங்களையும் சேர்த்தே போடவான்னு பதிவு எழுதீட்டேன்.. ஆனா சட்டுன்னு இன்னோர் யோசனை அதாவது பின்னொரு நேரம் உங்களை இங்கு என் பகிர்வில் இணைக்க ஒரு ஆளாச்சுன்னு அதை கைவிட்டுட்டேன்...:)
   ஆனா... கோவிச்சுக்கப் போறீங்களோன்னு கொஞ்சம் பயமும் இருந்திச்சு.. இப்போ இங்க உங்க கருத்தைக் கண்டதும் எல்லாம் சரியாச்சு..:) வருத்தமில்லைத்தானே..:)

   அன்பான உங்கள் வரவோடு இனிய கருத்தும்
   வாழ்த்துப் பகிர்தலுக்கும் மகிழ்ச்சி! மிக்க நன்றி தோழி!..[/co]

   Delete
 23. அருமையான கை வேலைபாடு. கவுன் தானே!

  எண்ணமெலாம் நீயே எனக்குள் நிறைவாக
  வண்ணமெலாம் காட்டு மலர்ந்து!//
  கவிதை அருமை.

  மது அவர்களின் வலைப்பூக்கு வாழ்த்துக்கள்.

  ReplyDelete
  Replies
  1. [co="DarkMagenta"]வணக்கம் சகோதரரி கோமதி அரசு!..

   ஊருக்கு வந்தாச்சா...:) மகிழ்ச்சி!.. நலம்தானே..!

   அன்பான உங்கள் வரவிற்கும் வாழ்த்திற்கும்
   மனம் நிறைந்த நன்றி சகோதரி!..[/co]

   Delete
 24. கைவினை அழகு.
  வரிகள் அழகு.
  அறிமுகம் அழகு.
  மனமார்ந்த வாழ்த்து.
  வேதா. இலங்காதிலகம்.

  ReplyDelete
  Replies
  1. [co="DarkMagenta"]வணக்கம் சகோதரி கோவைக்கவி!..

   உங்கள் அன்பான வரவும் வாழ்த்துமே அழகோ அழகு!

   மனம் நிறைந்த நன்றி சோதரி!..[/co]

   Delete
 25. இனிய விருத்தம் இன்னிசை வெண்பா
  ஈரடி குறளுடன் எழில்மிகு கைவினை
  அன்பாய் இன்றும் அடுத்தொரு அறிமுகம்
  அழகென்றால் இதுபோல் வேண்டும்..!

  எல்லாமே அழகு வாழ்த்துக்கள் சகோ

  வாழ்கவளமுடன் இனிய விருத்தம் இன்னிசை வெண்பா
  ஈரடி குறளுடன் எழில்மிகு கைவினை
  அன்பாய் இன்றும் அடுத்தொரு அறிமுகம்
  அழகென்றால் இதுபோல் வேண்டும்..!

  எல்லாமே அழகு வாழ்த்துக்கள் சகோ

  வாழ்கவளமுடன்

  ReplyDelete
  Replies
  1. [co="DarkMagenta"]வணக்கம் அன்புச் சீராளா!..

   இனிதாய் இருந்ததே இவ்வாழ்த்து! கன்னல்
   கனிதான் எனக்கிது காண்!

   அன்பான உமது வரவோடு அழகிய கவி வாழ்த்துக் கண்டு
   மனம் மகிழ்ந்தேன்!
   என் வளர்ச்சிக்கு இறையருளும் குரு அருளும்தான் என்பேன்!
   இன்னும் கற்ற வேண்டும். காலம் கைகொடுக்க வேண்டும்!..

   வரவிற்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றி சகோ!.[/co]

   Delete
 26. Card is bright n beautiful! Kavithaikal ellam arumai ! Nice introduction of a blogger..good post Ilamathy.

  ReplyDelete
  Replies
  1. [co="DarkMagenta"]வணக்கம் மகிம்மா...:)

   நலமா?... குட்டித்தேவதையும் நலமா?

   உண்மையில் இந்தச்சட்டையை உங்க தேவதைக்குன்னு போட நினைச்சுட்டு ம்ஹூம் ரொம்பப் பழசு அத்தோட பெரீசு.. வேணாம். அப்புறமா புதூ சட்டை செஞ்சு தரலாம்னு விட்டுட்டேன்..:)

   அன்பான உங்கள் வரவிற்கும் அருமையான ரசனையும்
   வாழ்த்துகளுக்கும் இதயம் நிறைந்த நன்றி மகி!..[/co]

   Delete
 27. நல்ல க்விலிங் வேலைப்பாடு.வாழ்த்துக்கள்.மலர்தருவை கண்டிப்பாக படித்து விடுகிறேன்.நன்றி வணக்கம்.

  ReplyDelete
  Replies
  1. [co="DarkMagenta"]வணக்கம் விமலன்!..

   அன்பான உங்கள் வரவிற்கும் அருமையான கருத்திற்கும்
   இனிய வாழ்த்துகளுக்கும் உளமார்ந்த நன்றி சகோ!..[/co]

   Delete
 28. வழக்கம்போல கைவேலை மிக அழகு! அதுவும் சரியான கருவிகள் இல்லாமல் உருவாக்கப்பட்டதால் அது இரட்டிப்பு மதிப்பையும் வாழ்த்தையும் பெறுகிறது!

  'அழகென்றால்' கவிதை அருமை! சின்ன வயதில் ஒரு ஆசிரியர் ஆட்டோகிராபில் ' அன்பும் உண்மையும் தான் அழகு. அழகும் அன்பும் தான் உண்மையானது. உண்மையும் அழகும் பூரண‌மாய் நிறைந்தது தான் அன்பு!" என்று எழுதியிருந்தது இப்போது நினைவுக்கு வருகிறது!

  நிலவை எப்படி மறக்க முடியும்?

  தஞ்சைக்கும் துபாய்க்கும் அலைந்து கொண்டிருப்பதால் வலைத்தளங்கள் பக்கம் அடிக்கடி செல்வதும் வாரா வாரம் பதிவிடுவதும் நெருக்கடியாகி விடுகிறது! இன்னும் 1 மாதத்தில் நிலைமை சரியாகி விடுமென்று நினைக்கிறேன்.

  இருந்தாலும் நிலவின் அழகை ரசிக்க மறந்தது குற்றம் தான்!

  ReplyDelete
  Replies
  1. [co="DarkMagenta"]வணக்கம் அக்கா!..

   ஆமா அக்கா. அதுதான் ஆரம்பத்தில் செய்த கைவேலைன்னாலும் தூக்கிப் போட மனசில்லை. அதிலும் அழகு இருக்கத்தான் செய்கிறது. உங்க ஆசிரியர் சொன்னது 100 வீதம் உண்மையே!
   அதனால்தான் நானும் உங்க அன்பிற்காக காணலியேன்னு ஏக்கமுடன் ஓடி வந்து கேட்டிட்டேன்.. என்னமோ தெரியல அக்கா உங்களையும் உங்க நல்லது கெட்டதுன்னு சொல்லுற வார்த்தையிலும் எனக்கு அத்தனை மதிப்பு இருக்கு...:)

   அன்பான உங்கள் வரவிற்கும் அருமையான அழகான கருத்திற்கும் உளமார்ந்த இந்த வாழ்த்துகளுக்கும் இதயம் நிறைந்த நன்றி அக்கா!..[/co]

   Delete
 29. ஒன்று சொல்ல மறந்து விட்டேன் இளமதி! சிகப்புக் கலரில் எழுதுவது கொஞ்சம் கண்ணை உறுத்துவதாய் இருக்கிறது!

  ReplyDelete
  Replies
  1. This comment has been removed by the author.

   Delete
  2. [co="DarkMagenta"]வணக்கம் மனோ அக்கா!..:)
   சொன்னவுடன் தஞ்சையிலிருந்து - துபாயிலிருந்து ஜேர்மனிக்கு தாவி ஓடி வந்தமைக்கு மிக்க நன்றி அக்கா!

   விபரமான பதில் பின்னர் இடுகிறேன்.
   மிக்க மிக்க நன்றி வரவிற்கும் வாழ்த்திற்கும்!

   ஹாஆ.. இதோ இனி அந்த நிறத்தை இங்கே பாவிக்காமல்
   விட்டுவிடுகிறேன். கருத்திற்கு நன்றி அக்கா...:).[/co]

   Delete
 30. அழகான ப்ராக் கை எடுத்து பார்க்க மனம் விழைகிறது.அருமையான கவி வரிகள் .வாழ்த்துக்கள் தோழி

  ReplyDelete
  Replies
  1. [co="DarkMagenta"]வணக்கம் கீதா!..

   ஹாஆ... டேண்ட் டச்..:))) நான் சட்டையைச் சொன்னேன்..:)
   அழகு ரசனை.. ரசித்தேன்!..

   அன்பான உங்கள் வரவிற்கும் அருமையான கருத்திற்கும்
   இனிய நல் வாழ்த்திற்கும் இதயம் நிறைந்த நன்றி தோழி!..[/co]

   Delete
 31. ஆடும் மயிலின் வனப்பெல்லாம் அசத்தும் வண்ணத் தோகையிலே.... என்ன ஒரு எதிர்பாரா நிகழ்வு. கவிதை எழுதலாமே எனும் அழைப்பும் மயில் குறித்த கவிதை எழுதத்தானே... எழுதி அசத்தியதற்கு நன்றி.

  ReplyDelete
  Replies
  1. [co="OrangeRed"]வணக்கம் ஐயா!..வாருங்கள்!..

   இங்கு தங்களின் முதல் வருகை.. மட்டில்லா மகிழ்வு கொள்கின்றேன்!..

   ஆமாம் ஐயா முருகனின் மயிவாகனம் ஏதோ மாயம் செய்ததுபோலும்.. ஒரே நேரத்தில் எம்மிடம் காரணமின்றி ஒரேவகையான சிந்தனை தோன்றியுள்ளது... ஆச்சரியம்தான்!

   எல்லாம் நல்லதற்கேதான்! உங்கள் வரவும் இனிய ரசனையும் எனக்கு ஊக்கம் தரும்! தொடர்ந்து வாருங்கள் ஐயா!

   அன்பாக வந்து கருத்திட்டு வாழ்த்தியமைக்கு உளமார்ந்த நன்றி ஐயா!..[/co]

   Delete
 32. உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

  மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2013/12/blog-post_20.html) சென்று பார்க்கவும்... நன்றி...

  ReplyDelete
  Replies
  1. [co="DarkMagenta"]வணக்கம் சகோ!..

   அன்பான உங்கள் தகவலுக்கும்
   வாழ்த்திற்கும் மிக்க நன்றி!...[/co]

   Delete
 33. ".. வளம்பெறச் செய்வீர் வளரும் உலகை!
  உளமுறச் செய்வீர் உழைப்பை!.." உழைப்பின் மேன்மையை நன்றாகச் சொன்னீர்கள். அருமை

  ReplyDelete
  Replies
  1. [co="OrangeRed"]வணக்கம் வைத்தியர் ஐயா!..

   அன்பான வரவுடன் அருமையான கருத்தினையும் கண்டு மகிழ்ந்தேன்...

   இனிய நல் வாழ்த்திற்கும் உளமார்ந்த நன்றி ஐயா!..[/co]

   Delete
 34. கைவண்ணம் அழகு...

  கவிவண்ணம் அற்புதம்..

  அருமையாய் பகிர்ந்தமைக்குப் பாராட்டுக்கள்..

  பதிவோடு பகிர்ந்த பதிவருக்கு வாழ்த்துகள்...!!

  ReplyDelete
  Replies
  1. [co="OrangeRed"]வணக்கம் இராஜராஜேஸ்வரி!..

   அன்பான உங்கள் வரவிற்கும் இனிய நல் வாழ்த்துகளுக்கும்
   இதயம் நிறைந்த நன்றி!..

   என் முந்தைய பதிவில் வலைச்சர வாழ்த்தும் கண்டேன்..
   மிக்க மகிழ்ச்சியும் நன்றியும் சகோதரி!..[/co]

   Delete
 35. இன்று 20.12.2013 மீண்டும் வலைச்சரத்தில் ‘மூன்றாம் பிறை’யாக இளமதி தோன்றியுள்ளதில் மட்டில்லா மகிழ்ச்சியடைந்தோம்.

  மனம் நிறைந்த இனிய பாராட்டுக்கள், நல்வாழ்த்துகள்.;) வாழ்க ! வளர்க !!

  ReplyDelete
  Replies
  1. [co="OrangeRed"]வணக்கம் ஐயா!..

   இனிய நல் வாழ்த்துகளுக்கு உளமார்ந்த நன்றி!..[/co]

   Delete
 36. மிக அழகு கிராஃப்ட் வேலை.பகிர்வுக்கும் அறிமுகத்திற்கும் நன்றி.

  ReplyDelete
  Replies
  1. [co="DarkMagenta"]வணக்கம் ஆசியா!.. வாங்க..:)

   அன்பான உங்கள் வரவிற்கும் இனிய வாழ்த்திற்கும்
   இதயம் நிறைந்த நன்றி ஆசியா!..[/co]

   Delete
 37. க்விலிங் சட்டை மிக அழகாக இருக்கு."அழகென்றால், வளம்பெறச்செய்வீர்" இரண்டு கவியும் மிகவும் அருமை.இருவரிக்கவியும் நன்றாக இருக்கு இளமதி.வாழ்த்துக்கள்.
  அறிமுக பதிவர் மதுவுக்கு என் வாழ்த்துக்கள்.

  ReplyDelete
  Replies
  1. [co="DarkMagenta"]வணக்கம் அம்மு! வாங்கோ..:)

   நலமா?.. என்ன காணலியேன்னு பார்த்தேன்..:)
   நத்தார் வெளியீடு ஒண்ணும் செய்யலியா... காத்திருக்கிறேன்.
   அழகாய்ச் செய்து பதிவு போடுங்கோ.. வந்து பார்க்கின்றேன்..:)

   அன்பான உங்கள் வரவிற்கும் இனிய கருத்திற்கும்
   நல் வாழ்த்துகளுக்கும் இதயம் நிறைந்த நன்றி அம்மு!..[/co]

   Delete
 38. படங்களும் கவிதைகளும் மனக்கண் முன் தோகை விரித்து ஆடுகின்றன. பதிவோடு பகிரும் பதிவர் – ஒரு புதிய யுக்தி. புதுமைப் பெண்ணுக்கு வாழ்த்துக்கள்!

  ReplyDelete
  Replies
  1. [co="DarkMagenta"]வணக்கம்! வாங்கோ ஐயா!..

   உங்கள் முதல் வருகை இங்கு! மிக்க மகிழ்சியாயிருக்கு ஐயா!

   கலை நயமுடன் உங்கள் ரசனை அற்புதம்!.

   அன்பான உங்கள் வரவோடு அருமையான கருத்தும் பகிர்ந்தீர்கள் மிக்க மகிர்ச்சி!

   இனிய நல் வாழ்த்துகளுக்கும்
   இதயம் நிறைந்த நன்றி ஐயா!..[/co]

   Delete
 39. "களம்பல கண்ட தமிழ்மொழியைக் காப்பீர்! இழுக்கின்ற நண்டெனும் போக்கை நசித்து" என்பது அற்புதமான வரிகள். வாழ்த்துக்கள்!

  ReplyDelete
  Replies
  1. [co="DarkMagenta"]வணக்கம் ஐயா!..

   அன்பான வரவோடு ஆழமான அருமையான ரசனைப் பகிர்வு கண்டு மகிழ்ந்தேன் ஐயா!

   இனிய நல் வாழ்த்துகளுக்கும்
   இதயம் நிறைந்த நன்றி ஐயா!..[/co]

   Delete
 40. க்வீலிங் என்றால் என்ன என்பதை உங்கள் மூலமாகாவே அறிந்தேன். பொதுவாக பெண்கள் அழகுணர்ச்சியும்(அழுகை உணர்ச்சியும்) கலை நயமும் உடையவர்கள்.நீங்கள் கைவண்ணத்துடன் கவி நயமும் கொண்டு அசத்துகிறீர்கள் . வாழ்த்துக்கள் குவீலிங் குயின்

  ReplyDelete
  Replies
  1. [co="OrangeRed"]வணக்கம் முரளிதரன்!..

   அன்பான வரவுடன்...
   //பொதுவாக பெண்கள் அழகுணர்ச்சியும்(அழுகை உணர்ச்சியும்) கலை நயமும் உடையவர்கள்.//...
   வித்தியாசமான உங்கள் கருத்தினையும் தந்துள்ளீர்கள்!...:)

   இனிய நல் வாழ்த்திற்கும் உளமார்ந்த நன்றி சகோ!..[/co]

   Delete
 41. கை வேலை, கவிதைகள் அழகு... அறிமுகப் பதிவருக்கு வாழ்த்துக்கள்.

  ReplyDelete
  Replies
  1. [co="OrangeRed"]வணக்கம் குமார்!..

   உங்கள் அன்பான வரவுடன் அருமையான கருத்தினையும் கண்டு மகிழ்ந்தேன்...

   இனிய நல் வாழ்த்திற்கும் உளமார்ந்த நன்றி சகோ!..[/co]

   Delete
 42. அருமையாக க்விலிங்......

  மயில் படமும் அதற்கான கவிதையும் மிகச் சிறப்பு.

  பாராட்டுகள்.....

  ReplyDelete
  Replies
  1. [co="OrangeRed"]வணக்கம் சகோதரர் வெங்கட் நாகராஜ்!..

   அன்பான வரவுடன் அருமையான கருத்தினையும்

   இனிய வாழ்த்தினையும் கண்டு மகிழ்ந்தேன்!
   உளமார்ந்த நன்றி சகோ!..[/co]

   Delete
 43. சகோதரிக்கு வணக்கம்
  தங்களது இரண்டாவது கைவண்ணம் என்றே தெரியாத வகையிம் வேலைபாடு அமைந்துள்ளது சிறப்பு. கவிதையும் மிக அழகாக நானும் தகுந்த வேலையில் தங்களது கவிதை மாணவர்களோடு வகுப்பறையில் பகிர்ந்து கொள்வேன். மிக அழகான கவிதையைத் தந்தமைக்கு அன்பான நன்றிகள்..
  ---------
  எனது அன்பு சகோதரர் மது அவர்களின் வலைத்தளம் பற்றியும் அவரைப் பற்றியும் அழகாக பகிர்ந்து விட்டீர்கள் தங்களுக்கு நன்றிகள் சகோதரருக்கு வாழ்த்துகள்..

  ReplyDelete

உங்களின் அன்பான வரவிற்கும் ஊக்கந்தரும்
இனிய கருத்திற்கும் என் உளமார்ந்த நன்றி! _()_