Pages

Jun 18, 2014

சிறக்கட்டும்!..


இலட்சியங்கள் தமைநோக்கி எண்ணங்கள் பறக்கட்டும்!
இனியதமிழ் மொழிகாத்து  என்னினத்தார் சிறக்கட்டும்!
அலைத்தழிக்கும் அவலமெலாம் அடியோடு மறையட்டும்!
அன்பாலே உலகமதில் அமைதியொளி நிறையட்டும்!

இல்லையெனும் சொல்போக்கி இன்பத்துள் ஆழட்டும்!
இகவாழ்வில் அனைவருமே சுகவாழ்வு வாழட்டும்!
எல்லைகளை வகுப்பவர்தம் தொல்லைகளை உடைக்கட்டும்!
ஏதிலியாய் வாழாமல் இன்னுலகைப் படைக்கட்டும்!

ஒற்றுமையே எல்லோரின் உயிருக்குள் ஓங்கட்டும்!
ஓயாத பிணிபஞ்சம் நோயெல்லாம் நீங்கட்டும் !
அமைதிஅன்பு அறனதுவும் அறுகெனவே படரட்டும்!
ஆனந்த மலர்களையே அனைவருமே சூடட்டும்!.

முயற்சிகள் மூச்செனவே முன்னேற்றம் கொடுக்கட்டும்!
முட்பாதை இனியாவும் முல்லைகளாய் மலரட்டும்!
முடிவில்லாத் துயரழிந்து விடியலங்குப் பிறக்கட்டும்!
முடியணிந்து தமிழன்னை முழுமதியாய் ஒளிரட்டும்!
~~~~~0~~~~~


நேரமும் என்னுடன் நீங்காப் பகையோடு
தூரமாகப் போவதேன் சொல்!

வலையுலக நட்புக்களின் வலைப் பூக்களுக்கு வருவதற்கு
எனக்கு நேரம் மிக அரிதாக உள்ளதால் விளைந்த குறள்...
உங்களின் அன்பை உணர்ந்தவள். விரைவில் உங்களின்
வலைப் பூக்களுக்கும் வருவேன்!... தொடர்வேன்!.

மிக்க நன்றி அன்பு உறவுகளே!...
__()__

42 comments:

 1. எல்லாம் நடக்கட்டும்..உங்கள் வாழ்வும் செழிக்கட்டும்.
  அருமை தோழி, உங்கள் வருகை கண்டு மகிழ்ச்சி. வாழ்த்துக்கள்!

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் கிரேஸ்!

   உங்கள் உடனடி வருகையும் வாழ்த்தும் கண்டு மகிழ்ந்தேன்!

   மிக்க நன்றி தோழி!

   Delete
 2. அருமை
  ஒரு மெகா ஹிட் பாடலை கேட்டது போல் இருக்கிறது சகோதரி..
  தொடர்க
  வாழ்த்துக்கள்


  http://www.malartharu.org/2014/06/jci-training-jci-pudukkottai-central.html

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் சகோதரர் மது!

   உங்கள் ரசனை கண்டு உளம் மிக மகிழ்ந்தேன்!..

   வரவிற்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றி சகோ!

   Delete
 3. அருமையான பாமாலை நீண்ட நாட்களின் பின் அன்புத் தோழியின்
  நலம் அறியவும் ஆவலுடன் உள்ளேன் .பகிர்வுக்கு மிக்க நன்றி
  தங்களுக்கு நேரம் கிடைத்திருந்தால் நிட்சயம் எப் பகிர்வுகளையும்
  தவற விட மாட்டீர்கள் என்பதும் அனைவரும் அறிந்த உண்மையே
  கவலை வேண்டாம் .குறள் கண்டு வியந்தேன் வாழ்த்துக்கள் தோழி .

  ReplyDelete
  Replies
  1. அன்புத் தோழி அம்பாளடியாள்!
   நான் நலமே. உங்கள் நலம் எப்படி?

   என்னைப் பற்றிய உங்கள் புரிதல் கண்டு கண்கள் பனித்தன...
   நேரம் கிடைக்கும்போது நிச்சயம் தங்கள் வலைப்பக்கமும் வருவேன்.

   இனிய ரசனைக்கும் அன்பு வாழ்த்திற்கும்
   உளமார்ந்த நன்றி தோழி!

   Delete

 4. வணக்கம்!

  எண்ணம் சிறக்கட்டும்! இன்பத் தமிழ்பாடும்
  வண்ணம் சிறக்கட்டும்! வாழ்த்துகிறேன்! - விண்மதியே!
  அன்னைத் தமிழாள! அன்பே உலகாள!
  பொன்னைப் பொழியும் புகழ்!

  இன்பால் சுரக்கும் இனிய குறள்கண்டேன்!
  அன்பால் அதனை அணிந்து!

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் ஐயா!

   தங்கத் தமிழ்வாழ இன்பம் மிகச்சூழ
   உங்களின் வாழ்த்தும் உரம்!

   எனக்கு என் எழுத்துக்களை அறியவும் உணரவும் உதவியவரல்வா தாங்கள்!
   தங்களின் ரசனையும் வாழ்த்துமே
   எனக்கும் என் தமிழிற்கும் துணை!

   என் பணிவான வணக்கமுடன் அன்பு நன்றியும் ஐயா!

   Delete
 5. வணக்கம் சகோதரி
  காலை வழிபாட்டில் உலக அமைதிக்காக பாடும் பாடலுக்கேற்ற அழகிய வரிகள். தங்கள் எண்ணங்கள் நினைத்து மிகவும் பெருமைப்படுகிறேன். தங்கள் வருகை எங்கெளுக்கெல்லாம் புது தெம்பு கிடைத்தது போல உணர்வு ஏற்பட்டுள்ளது. காலத்தை வென்று கணினியில் (விசைப்பலகையில்) கரம் பதிக்க வேண்டுமென்பதே எனது விருப்பமும். தொடர்க. அழகான பகிர்வுக்கு நன்றிகள் சகோதரி.

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் சகோதரா!

   உங்கள் அன்பான வேண்டுகோளை சிரம்தாழ்த்தி ஏற்றுக்கொள்கிறேன்... ஆனாலும் அவ்வப்போது நேரம் முரண்டு பிடித்து அதிவேகமாக ஓடியே தொலைகிறது. அதுதான் ஒரே ஆதங்கம்.
   இருப்பினும் உங்களைப் போன்றோரின் இத்தனை நெஞ்சங்களின் அன்பிற்கும் நான் கட்டுப்பட்டவள்.
   வருவேன்!... தொடர்வேன்!... மகிழ்வேன்!

   உங்கள் இனிய ரசனைக்கு உளமார்ந்த நன்றி சகோ!

   Delete
 6. ஆஹா வந்தவுடனேயே அசத்துகிறீர்களே தோழி. நீண்ட நாட்களின் பின் தங்கள் அருமையான பாக்கள் கண்டு பெரும் திருப்தி. திரும்பவும் தங்கள் வருகை கண்டு மட்டற்ற மகிழ்ச்சி, வார்த்தையால் விபாரிக்க முடியாத அளவுக்கு.
  பறவாயில்லை தோழி நேரம் கிடைக்கும் போது வந்தால் போதும். நேரம் கிடைக்கா விட்டால் பரவாய் இல்லை. ஆனால் துயரத்தோடு மூழ்கி இருந்தால், தனித்து வேதனைப்படாமல் தயவு செய்து வலைக்கு வாருங்கள் அது நிச்சயம் ஆறுதல் தரும் தோழி. மிக்க நன்றி பதிவுக்கும் வருகைக்கும்.
  நீ துணிவு பெறவேண்டும்
  உன் துன்பம் எல்லாம் தூசாக வேண்டும் என வாழ்த்துகிறேன்....!

  ReplyDelete
  Replies
  1. அன்புத் தோழி இனியா!

   இனிமையான உங்கள் வார்த்தைகள் இன்னல்களையெல்லாம் இல்லாமல் செய்துவிடுமன்றோ!..

   உடனிருக்க நீயும் உறவாகா இன்னல்!
   கடகடவென் றோடும் கலைந்து!

   அன்பு வரவிற்கும் இனிய வாழ்த்திற்கும்
   உளமார்ந்த நன்றி தோழி!

   Delete
 7. ஆகா...! பிரமாதம்... வாழ்த்துக்கள்...

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் சகோதரர் தனபாலன்!

   மிக்க நன்றி உங்கள் வரவிற்கும் அன்பு வாழ்த்திற்கும்!...

   Delete
 8. முயற்சிகள் மூச்செனவே முன்னேற்றம் கொடுக்கட்டும்
  முட்பாதை இனியாவும் முல்லைகளாய் மலரட்டும்
  முடிவில்லாத் துயரழிந்து விடியலங்குப் பிறக்கட்டும்
  முடியணிந்து தமிழன்னை முழுமதியாய் ஒளிரட்டும்!..

  - அற்புதமாக இருக்கின்றது. நல்வாழ்த்துக்கள்..

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் ஐயா!

   உங்கள் வரவும் இனிய ரசனையுமே
   எனக்கு ஒரு நல்ல ’டானிக்’.

   வாழ்த்திற்கும் மிக்க நன்றி ஐயா!

   Delete
 9. என்ன ஒரு அதிசயம் நானும் பல நாட்களுக்கு பிறகு தங்களை தேடி வந்தேன். என் நம்பிக்கை பொய்யாகாமல் சிறப்பானதொரு பகிர்வு. நலம் தானே தோழி. இனி எல்லாம் நலமாக வேண்டுகிறேன்.

  ReplyDelete
  Replies
  1. அன்புத் தோழி தென்றல்!

   நானிங்கு இல்லாத சமயம் தென்றலும் வீசவில்லையாமே... :)
   எது எப்படியோ நிலவைக் கண்டதும் தென்றலும் சேர்ந்தே வந்தது மகிழ்வாயிருக்கிறது...:)

   உங்கள் அன்பிற்கும் மனமார்ந்த நன்றி தோழி!

   Delete
 10. மன ஆழத்தில் இருக்கும் ஆதங்கங்களின் வெளிப்பாடு கனத்த கவிதையாக. வாழ்த்துக்கள்.

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் வாருங்கள் ஐயா!

   உங்கள் ஆக்கங்களுக்கு முன் எனது படைப்பு மிகச் சிறியது.

   ஆழ்ந்த அன்புக் கருத்துரைக்கும் வாழ்த்திற்கும்
   உளமார்ந்த நன்றி ஐயா!

   Delete
 11. கவிதைக்கு உயிர்கொடுக்க,
  இகவாழ்வில் அனைவருமே சுகவாழ்வு வாழட்டும்!
  என்னும் வரி ஒன்று போதுமே சகோதரி,!

  “வலையின் நட்பிருக்க வாய்மூடும் காலங்கள்
  தொலையும் நிழலாய்த் தொடர்ந்து!“
  நன்றி

  ReplyDelete
  Replies
  1. “வலையின் துணையிருக்க வாய்மூடும் காலம்
   தொலையும் நிழலாய்த் தொடர்ந்து“
   என்றால்தானே தவறில்லாமல் இருக்கும் சகோதரி?
   நீங்களாவது திருத்தச் சொல்லி இருக்கலாமே?
   தவறினுக்கு வருந்துகிறேன்!

   Delete
  2. அன்புச் சகோதரரே!

   தங்கள் அன்பான குறட்பா கண்டு உள்ளம் களித்தேன்!

   முதலில் நீங்கள் அனுப்பியதை அப்படியே இங்கு பிரசுரிக்க அனுமதித்தேனே தவிர அதனை ஆழ்ந்து ஆராய்ந்திருக்கவில்லை. இன்றுதான் பதில் கருத்திட வந்த சமயம் நீங்களாகவே அதில் திருத்தத்தையும் தந்திருக்க அதன் பின்பே முதலில் நீங்கள் இட்டதை ஆராய்ந்தேன்.

   சகோ.. நான் கற்றுக்குட்டிதானே. சட்டென யாரென்றாலும் இங்கு எனக்குத் தரும் பதிலுரைக் கருத்துக் கவி இலக்கணத்தை ஆராயமாட்டேன். தவிரவும் ஏதும் காணப்பட்டாலும் எளிதில் கூறவும் மிகவே தயங்குவேன்...

   அதிலும் உங்களைப் போன்ற ஜாம்பவான்களின் கவிகளை ரசிப்பதோடு மட்டுமே என் பங்கு இருக்கும். அதிகப் பிரசங்கித்தனமாக ஆராயப் போகும் சுபாவம் இல்லாதவள். அவ்வளவே...:)
   வேறொன்றும் இல்லை சகோதரரே!

   மிக்க நன்றி இத்தனை உரிமையாக என்னிடம் கேட்டமைக்கு...
   இனி வருங்காலங்களில் உங்கள் எழுத்துக்களில் என் கவனமும் இருக்கும்படி என்னைத் தயார் நிலையில் வைத்திருப்பேன். இப்போ சரியாகிப் போச்சா...:)

   உங்கள் அன்பிற்கு மிக்க மிக்க நன்றி சகோதரரே!

   Delete
 12. வேண்டும் வரங்கள் விரையட்டும் உம்முளத்தை
  தீண்டும் துயரம் களைந்து !

  அழகான கனிவிருத்தம் சகோ
  வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

  ReplyDelete
  Replies
  1. அன்புச் சகோதரரே சீராளா!..

   உறவென என்றுமே உங்கள் துணையே!
   பறந்திடுமே துன்பமும் பார்த்து!

   உளத்திற்கு உரமூட்டும் உன்னத குறட்பா தந்தீர்!
   வருகைக்கும் வாழ்த்திற்கும் மனமார்ந்த நன்றி சீராளா!

   Delete
 13. https://www.youtube.com/watch?v=MgcIvzvuHKk

  subbu thatha
  www.subbuthatha72.blogspot.com
  www.subbuthatha.blogspot.com

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் ஐயா!

   நீண்ட காலத்தின் பின்பு மீண்டும்
   உங்கள் குரலில் எனது பாடல்...

   கேட்கும் போது கண்களில் நீர் மல்கிறது.
   உங்களின் அன்பிற்கு என்ன கைம்மாறு செய்வேன்...

   என் உளமார்ந்த நன்றி ஐயா!

   Delete
  2. ஐயா... பாடலை மீண்டும் மீண்டும் கேட்டுப் பார்த்தேன். உங்களின் ஒலிப்பதிவின் போது ஏதோ தடங்கல் ஏற்பட்டுள்ளதோ...
   இடையிடையே உங்கள் குரல் விட்டு விட்டு ஒலிக்கிறது.
   இருப்பினும் பாடலை உரிய இடத்தில் பதிவேற்றியுள்ளேன்.

   வேறு யாரும் கேட்கும் போது அவர்களுக்கும் அவ்வாறோ என யாரும் கூறினால் பார்ப்போம்.

   உங்களின் முயற்சிக்கு இறையருள் என்றும் துணையாக இருக்க வேண்டுகிறேன். மிக்க நன்றி ஐயா!

   Delete
 14. சிறப்பான கவிதை! வாழ்த்துக்கள்!

  ReplyDelete
  Replies
  1. தங்கள் வரவிற்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றி சகோதரரே!..

   Delete
 15. வாருங்கள் விரைவில்.உங்களின்வரவு நல் வரவாகட்டும்.தவிர கடக்கும் பாதை முட்களாய் இருந்தால் புது அனுபவமும்,தெளிவும் தேடலும் கிடைக்கும்.

  ReplyDelete
  Replies
  1. உண்மைதான் சகோ!...

   தங்கள் வரவிற்கும் அன்பு வாழ்த்திற்கும் மிக்க நன்றி சகோ!

   Delete
 16. மனத்தின் வலிமை பெருகட்டும். கனவுகள் யாவும் பலிக்கட்டும். தொய்ந்துகிடக்கும் மனங்களைத் தூக்கிநிறுத்தும் அழகிய கவிப்பா... பாராட்டுகள் இளமதி.

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் கீத மஞ்சரி!

   தங்களின் ரசனையும் மிக அற்புதமே!

   வரவிற்கும் இனிய வாழ்த்திற்கும் உளமார்ந்த நன்றி தோழி!

   Delete
 17. எல்லாரும் ஏதோ குறள் வடிவில் எல்லாம் கருத்து சொல்லிருக்காங்க. நான் அவ்ளோ பெரிய அப்படக்கர்லாம் கெடயாது.so எனக்கு இந்த பாடல் ரொம்ப பிடிச்சிருந்தது, ஆனாலும் உங்க க்வேல்லிங்கை மிஸ் பண்ணுறேன். டைம் கிடைக்கையில் பண்ணுங்க, உங்களுக்கும் மனசு ரிலாக்ஸ் ஆகும்ல. தப்பா சொல்லிருந்தா கோச்சுகாதீங்க:)

  ReplyDelete
  Replies
  1. வாங்க மைதிலி...:)

   அப்டீல்லாம் ஒண்ணுமில்லை. உங்களாலும் முடியும். எழுதித்தான் பாருங்களேன்...

   க்விலிங்க் செய்யணும்தான். எல்லாம் பெட்டில போட்டு பூட்டி வைச்சிருக்கேன். பார்ப்போம்.
   கேட்டதில என்னங்க தப்பு... எத்தினை உரிமையாக் கேக்குறீங்களேன்னு ரொம்ப மகிழ்வா இருக்கு..:)

   அன்பான வரவிற்கும் வாழ்த்திற்கும் மிக்க மகிழ்சியும் என் நன்றியும் தோழி!

   Delete
 18. ''..முடியணிந்து தமிழன்னை முழுமதியாய் ஒளிரட்டும்!..''
  நல்ல வரிகள்.
  இனிய வாழ்த்து.
  சுகமாக இருக்கிறீர்களா?
  என் கணனியும் பழுதாகி மௌனமாகி எழுந்துள்ளேன்.
  மீண்டும் சந்திப்போம்.
  வேதா. இலங்காதிலகம்.

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் சகோதரி!
   நானும் நலமே. தங்களின் நலனும் எப்படி?
   நானும் நீண்ட இடைவெளியின் பின்னரே இங்கு வந்துள்ளேன்.

   உங்கள் அன்பு வருகையுடன் வாழ்த்திற்கும் என் மனமார்ந்த நன்றி சகோதரி!

   Delete

 19. "முயற்சிகள் மூச்செனவே முன்னேற்றம் கொடுக்கட்டும்!
  முட்பாதை இனியாவும் முல்லைகளாய் மலரட்டும்!
  முடிவில்லாத் துயரழிந்து விடியலங்குப் பிறக்கட்டும்!
  முடியணிந்து தமிழன்னை முழுமதியாய் ஒளிரட்டும்!" என்ற
  எல்லாமே இடம்பெற வேண்டும்!

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் ஐயா!

   உங்கள் அனபான வரவிற்கும் வாழ்த்திற்கும்
   உளமார்ந்த நன்றி ஐயா!

   Delete
 20. முயற்சிகள் மூச்செனவே முன்னேற்றம் கொடுக்கட்டும்!
  முட்பாதை இனியாவும் முல்லைகளாய் மலரட்டும்!
  முடிவில்லாத் துயரழிந்து விடியலங்குப் பிறக்கட்டும்!
  முடியணிந்து தமிழன்னை முழுமதியாய் ஒளிரட்டும்!//

  நம்பிக்கை அளிக்கும் அருமையான வரிகள்.
  நினைவு நல்லது வேண்டும் என்று பாரதி சொன்னது போல் உங்கள் நல்ல எண்ணம் பலிக்கட்டும் இளமதி.
  வாழ்த்துக்கள். நானும் இணையம் தொடர்ந்து வர இயலவில்லை சில பொறுப்புகளால் நீங்களும் சில மாதங்கள் இல்லையே!
  ~~~~~0~~~~~

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் சகோதரி!

   உங்கள் வரவும் வாழ்த்தும் எனக்கு மிகுந்த உற்சாகத்தைத் தருகிறது.
   பரவாயில்லை. நேரம் கிடைக்கும்போது வாருங்கள்!
   என்நிலையும் அத்தகையதே...

   அன்பு வாழ்த்திற்கு உளமார்ந்த நன்றி சகோதரி!

   Delete

உங்களின் அன்பான வரவிற்கும் ஊக்கந்தரும்
இனிய கருத்திற்கும் என் உளமார்ந்த நன்றி! _()_