Pages

Jun 21, 2014

தோழமை தந்த தொடர்!..


என்னைத் தொடரெழுத இங்கிசைத்த தோழிகிரேஸ்!
இன்னிதய வாழ்த்துகளை ஈந்தேனே! - மண்ணில்
மனநலம்நாம் பேண வலைப்பூவிற் சீராய்த்
தினம்செய்வோம் சேவைதனைத் தேர்ந்து!
~~~~~~~~~~~~

தேன் மதுரத் தமிழ் வலைப் பதிவர் தோழி கிரேஸ் அவர்களின்
வேண்டுகோளிற்கு இணங்க இந்தக் கேள்விக் கணைகளுக்கு
நானும் விடையளித்துள்ளேன்.

தங்களின் கருத்தை இயம்பிட வேண்டுகிறேன்.
மிக்க நன்றி அன்புத் தோழி கிரேஸ்!
உறவுகளே! உங்களுக்கும் என் உளமார்ந்த இனிய நன்றி!
~~~~~~~~~~~


1. உங்களுடைய 100ஆவது பிறந்தநாளை எப்படிக்
கொண்டாட விரும்புகிறீர்கள்?

இருக்கும் அகவை இதுபோதும்! நுாறு
வெறுக்க எனைச்செய்யு மே!  

2. என்ன கற்றுக்கொள்ள விரும்புகிறீர்கள்?

கற்றிட வேண்டும் கனிவுடன் வாழ்வினில்
பெற்றிட வேண்டுமே பேறு!

3. கடைசியாக சிரித்தது எப்போது? எதற்காக?

சிரிப்பை மறந்தேதான் சென்றதென் வாழ்வே!
எரித்ததே என்விதி இங்கு!

4.  24மணி நேரம் பவர்கட் ஆனால் நீங்கள் செய்வது என்ன?

இங்கெமக்கே என்றும் இருந்திடும் மின்சாரம்!
தங்குதடை இல்லையெனச் சாற்று!

5.  உங்கள் குழந்தைகளின் திருமண நாளில் சொல்ல விரும்புவது என்ன?

உண்மையொடு நேர்மையும் ஊறில்லா வாழ்க்கையும்
மென்மையும் கொள்வீர் மிளிர்ந்து!

6. உலகத்தில் உள்ள பிரச்சனையில் உங்களால் தீர்க்கமுடியும்
என்றால் எந்த பிரச்சனையை தீர்க்க விரும்புகிறீர்கள்?

இல்லாமை என்பதை இல்லாது செய்தேநான்
வல்லமை கொள்வேன் வளர்ந்து!

7. நீங்கள் யாரிடம் அட்வைஸ் கேட்பீர்கள்?

என்நலம் காக்கும் இனியவர் கூறிடும்
நன்னெறி கேட்பேன் நயந்து!

8. உங்களைப் பற்றிய தவறான தகவல் பரப்பினால்
என்ன செய்வீர்கள்?

ஏற்றம் இறக்கம் இயல்பெனக் கொண்டேதான்
தேற்றுவேன் என்னைத் தெளிந்து!

9. உங்கள் நண்பரின் மனைவி இறந்தால் அவரிடம் என்ன சொல்வீர்கள்?

எளிதோ இழப்பு? மனமும் தெளிய
விளக்குவேன் வாழ்வை விரித்து!

10. உங்கள் வீட்டில் தனியாக இருந்தால் என்ன செய்வீர்கள்?

ஏகாந்தம் ஆயின் இனிமையே என்றனுக்கு!
பாகாகப் பாடுவேன் பா!
~~~~~~~~~


அன்புத் தோழர்களே!...
அழைக்கின்றேன் தொடரிதனைத் தொடர்கவென...

என் பக்கம்  அதிரா   http://gokisha.blogspot.de/

காகிதப் பூக்கள்  அஞ்சு   http://kaagidhapookal.blogspot.de/

இது இமாவின் உலகம்  இமா  http://imaasworld.blogspot.de/

பிரியசகி  அம்மு http://piriyasaki.blogspot.de/

மகி ஸ்பேஸ்  மகி   http://mahikitchen.blogspot.de/

என்னுயிரே  சீராளன் http://soumiyathesam.blogspot.com/  

ஊமைக்கனவுகள்  http://oomaikkanavugal.blogspot.de/

சித்ராஸ்ப்ளொக் சித்ராசுந்தர் http://chitrasundars.blogspot.de/

முத்துக்குவியல் மனோ சாமிநாதன் http://muthusidharal.blogspot.de/

சிட்டுக்குருவி  விமலன்   http://vimalann.blogspot.com/

மிக்க நன்றி அன்பு உறவுகளே!...
__()__

96 comments:

 1. அருமை.. வண்ணப் பூக்கோலமாக இனிய பதிவு!..
  வாழ்க .. வளர்க..

  இதே - கேள்விகளுக்கு நானும் விடையளித்துள்ளேன்..
  கலந்து கொள்ளுமாறு கனிவுடன் அழைக்கின்றேன்..

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் ஐயா! வாருங்கள்!..

   உங்கள் வரவு கண்டு மிகவே மகிழ்கின்றேன்.
   வருகிறேன் ஐயா கட்டாயம்...

   வரவிற்கும் வாழ்த்திற்கும் உளமார்ந்த என் நன்றி ஐயா!

   Delete
 2. என் அழைப்பை ஏற்று பதிவிட்டதற்கு நன்றி அன்புத்தோழி.

  பதில்கள் கவி வடிவில் அருமை தோழி, என்றாலும் சோகம் தெரிகிறதே..உங்கள் வாழ்வில் இருக்கும் சோதனைகள் விலகி மகிழ்ச்சி பூக்க விழைந்து இறைவனை வேண்டுகிறேன். வாழ்த்துகள் தோழி.

  ReplyDelete
  Replies
  1. வாங்கோ அன்பு கிரேஸ்!...:)

   கவிகளை ரசித்தீர்களா... மகிழ்ச்சி!
   சோகம் என்னுடன் இரண்டறக் கலந்துவிட்டதுவே... வெட்டிட முடியவில்லை... விலத்தவும் இயலுதில்லை...

   அன்பு வரவிற்கும் வாழ்த்திற்கும் இனிய நன்றிகள் தோழி!

   Delete
 3. கவிதையாய் பதில்கள்...
  அருமை...

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் குமார்!

   வரவிற்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றி!

   Delete
 4. வணக்கம் தோழி உங்களைக்காணமல் தவித்தது உள்ளம் .வருகைக்கு நன்றி.

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் கீதா!

   அன்புத் தேடலுடனான வரவிற்கும்
   வாழ்த்திற்கும் மிக்க நன்றி தோழி!

   Delete
 5. வணக்கம் சகோதரி
  தங்களின் அழகான பதில்கள் கண்டு மிக்க மகிழ்ச்சி. வாழ்க்கையின் ஆழம் உணர்ந்து வடிக்கப்பட்ட வார்த்தைகள். அதும் கவியால். மிகச்சிறப்பு. தொடருங்கள் சகோதரி. பகிர்வுக்கு நன்றிகள். என் பக்கத்திலும் இதற்கான பதில்கள் பகிர்ந்துள்ளேன். முடியும் போது பார்க்கவும்..

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் சகோ பாண்டியன்!

   பார்த்தேன் உங்கள் பக்கமும் சகோ! அருமையான பதில்கள் தந்துள்ளீர்கள். மகிழ்ச்சி!

   அன்பு வரவிற்கும் இனிய வாழ்த்திற்கும்
   மனமார்ந்த நன்றி சகோ!

   Delete
 6. வணக்கம்
  சகோதரி..

  தங்களின்பதிலை படித்துப்பார்த்த போது. மென்மையான சோகம் இளையோடியுள்ளது. நன்றாக பதில் சொல்லியுள்ளீர்கள்... வாழ்த்துக்கள் சகோதரி..

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் ரூபன்!

   இருக்கலாம். என்னால் அவ்வளவு எளிதாக அங்கிருந்து மீள முடியவில்லை...

   அன்பு வரவிற்கும் வாழ்த்திற்கும் இனிய நன்றி சகோ!

   Delete
 7. சிறப்பான பதில்கள். அதுவும் அழகான கவி வரிகளாய்..

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் ஆதி வெங்கட்!

   அன்பு வரவிற்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றி ஆதி!

   Delete
 8. மிக அழகா,நன்றாக இருவரியில் கவியாய் பதில்கள்.சிறப்பு.
  நீங்களுமா இளமதி!!! ஏற்கனவே ஒருவர் அழைத்தாகிவிட்டது. முயற்சிக்கிறேன். நன்றி.

  ReplyDelete
  Replies
  1. வாங்கோ அம்மு!

   ஒரு மாறுதலுக்காகவும் மனதிற்கு இது பிடித்தமையாலும்
   இப்படி எழுதினேன். இனிய ரசனை கண்டு மனம் நிறைந்தேன்..

   ம். எழுதுங்கள். எழுதுங்கள் என்ன எழுதிவிட்டீர்களே...:)
   அருமை! வாழ்த்துக்கள்!

   வரவிற்கும் மிக்க நன்றி அம்மு!

   Delete
 9. ஆவ்வ்வ்வ் கவிஞை இளமதி வாழ்க... இப்போ இளமதி பேசி நான் பார்த்ததேயில்லை எங்கும்.. ஒரே கவி மழைதான்... கவிதையில் பதில்கள் அழகு...

  ReplyDelete
  Replies
  1. ஓ... அதிரா!... இதென்னதிது... என்னைப் போய் கவிஞயோ.. அவ்வ்வ்.. இன்னும் நான் கவிஞை ஆகேலை...:)

   இதுவும் நல்லா இருக்குதானே.. அதுதான் ஒரு மாற்றமாய் இருக்க எழுதினேன்.
   என்னை மாற்ற வேணுமெண்டு சொன்னீங்க அதான்..:)

   மிக்க நன்றி அதிரா!..:)

   Delete
 10. என்னைப்போய்ய்...... தொதொதொதொ....டருக்கு.. ஏன்ன்..ஏன்ன்..? வை திஸ் கொலவெறி?:)).... ஓகே அதனாலென்ன தொடர்கிறேன்ன்.. எப்போ என்றுதான் வாக்குத் தரமாட்டேன்ன்ன்.. :).. உங்கட பொறியில 10 எலிஸ்ஸ் மாட்டியிருக்கே:).

  ReplyDelete
  Replies
  1. இது என்ன அப்புடீ பெரீய மாட்டரோ.. உங்களுக்கு..:)

   எழுதுங்கோ.. கெதியா...:)

   தேடுங்கோ மாட்டுவினம் ஆரும்..:)

   Delete
 11. கவிநயத்துடன் சிறந்தன பதில்கள்! வாழ்த்துக்கள்!

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் சுரேஷ்!

   உங்கள் வரவிற்கும் இனிய வாழ்த்திற்கும் மிக்க நன்றி!

   Delete
 12. தலைப்பே அசத்தல் தோழி ! நான் நினைத்தேன் கவிதை வடிவில் கொடுத்தால் நல்லது என்று நேரம் கிடைக்கவில்லை. பதிவை அவசரமாக இடவேண்டும் என்பதால். ஆனால் நீங்களோ குறள் வடிவில் இனிய பதில்களை மெய் சிலிர்க்கும் வகையில் தந்து என் உள்ளத்தை மேலும் கொள்ளை கொண்டு விட்டீர்கள். நன்றிம்மா!
  வாழ்த்துக்கள் ....!
  கவியரசியே குறள்களை கோணாது
  சிந்து என்றும் தொடர்ந்து !
  இது எப்படி ஹா ஹா நல்ல முயற்சி இல்ல தப்பு தப்பா.....

  ReplyDelete
  Replies
  1. வாங்கோ இனியா!..:)

   பார்த்தீங்களோ நீங்க நினைக்க நான் எழுதீட்டன். டெலிபதி எண்டு இதைத்தான் சொல்லுவினம்..:)

   உங்கள் ரசனைகண்டு நான் உள்ளம் சிலிர்த்தேன் தோழி!

   ம்.. உங்கள் முயற்சியும் நன்றாகத்தான் இருக்கு.
   குறள் எழுதும்போது சற்று இலக்கணமும் கவனிக்க வேண்டும். அதைக் கவனியுங்கள். அசத்துவீர்கள் நீங்கள்!

   அன்பு வருகையுடன் அட்டகாசமான இனிமையான கருத்துக்களும் வாழ்த்துக்களும் கண்டு மகிழ்ந்தேன்!
   மிக்க நன்றி தோழி!

   Delete
 13. ஹா ஹா ஹா நானுமா என்னையும் கொழுவி விட்டாச்சா சந்தோசம் சகோ அதை விட சந்தோசம் முதல் பெயரே அதிராவாய் இருப்பது ....மியாவ் சும்மா கலக்கிடுவா இல்ல அதை பார்த்த பிறகுதான் நான் பதிவிடுவேன் அதுவரை மன்னிக்கவும் ..!

  அன்புள்ளம் கொண்டே அழைத்தநொடி வந்திடுவேன்
  என்னுள்ள ஆற்றல் எடுத்து !

  ReplyDelete
  Replies
  1. கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் :) இதை இப்போதான் பார்க்கிறேன் நான்... இது என்ன கொடுமை சாமீஈஈஈஈஈஈ.. இப்பூடிக் கோத்திட்டார்..:) சீராளனுக்கு தெரியும், அதிரா எங்கே எழுதப்போறா.. அவ 6 மாதத்தாலதான் அடுத்த பதிவு போடுவா என:) அந்த தைரியத்தில சொல்லிட்டார்ர்.. :) ஆனா பூஸோ கொக்கோ.. இப்பவே புறப்படுறேன்ன் போஸ்ட் போட:) எங்கிட்டயேவா??? ஆனா ஒண்ணு.. என் போஸ்ட் வெளிவந்த அரை மணிக்குள்.. சீராளனின் போஸ்ட் வெளிவரோணும் சொல்லிட்டேன்ன் :))... ஊசிக்குறிப்பு:
   நான் நினைச்சேன் இமாவும் அஞ்சுவும் போட்டபின், நான் போடலாம் என.. இது என்ன புது வம்பாக்கிடக்கூஊஊஊஊ:).

   Delete
  2. ஹா ஹா ஹா அரை மணி என்ன அரை நிமிடத்தில் பதிவு போடுகிறேன் முதல்ல சொன்னது போல செய்யுங்க மியாவ் ........! ( ரொம்ப கடுப்பாக்கிட்டேனோ )

   Delete
  3. வாங்கோ சீராளன்...:) உங்கள் வரவோடு சரவெடியாய் இங்கே அதிரா வெடியும் சேர்ந்தே.. நல்ல ரகளைதான்... :)

   என்னமோ.. இருவரும் ஒருவழியாய் சமாதானத்திற்கு வந்து பதிவைப் போடுங்க மக்கா...:)

   அருமையான குறட்பா கருத்தோடு வாழ்த்தியமைக்கு இனிய நன்றி சீராளன்!

   Delete
 14. தொடர் பதிவு,,,,,,?புரியவில்லை,

  ReplyDelete
  Replies
  1. வாங்கோ விமலன்!

   அங்கே உங்கள் வலையில் விளக்கம் தந்துவிட்டேன்.
   பதிவேற்றுங்கள்!

   Delete
 15. Replies
  1. வணக்கம் ஐயா!

   தங்களின் அன்பு வரவிற்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றி ஐயா!

   Delete
 16. நீளப் பிறக்கும் நெடுங்கேள்வி பத்தாக
  ஆளப் பறக்குமெல் லாவிடத்தும் - தாளத்தில்
  வாழ இளமதியார் ஆழக் குறள்பத்தும்
  தோழமை தந்த தொடர்.

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் சகோதரரே!

   உங்கள் வரவும் அழகிய வெண்பாக் கருத்தும் கண்டு
   உளம் மகிழ்ந்தேன்!

   தோழமை தானெமக்குத் தோள்தரும் ஆதலால்
   நாளுமே காப்போம் நலம்!

   வாழ்த்திற்கும் மிக்க நன்றி சகோதரரே!

   Delete

  2. வணக்கம்!

   ஊமைக்கனவுகள் வலைப்பதிவா் கவிஞா் சோசப் ஐயா
   எழுதிய வெண்பாவைப் படித்த மகிழ்வில் எழுதிய வெண்பா!

   தோழமை தந்த தொடரென்னும் வெண்பாவின்
   ஆழம் அளந்தே அளிக்கின்றேன்! - வாழையென
   வந்த தமிழ்மரபில் வாழும் கவி.சோசப்
   சந்தப் புலவரெனச் சாற்று!

   கவிஞர் கி. பாரதிதாசன்
   தலைவர்: கம்பன் கழகம் பிரான்சு

   Delete
  3. ஆமாம் ஐயா! ஊமைக்கனவுகள் ஐயாவின் ஆற்றலும் மிகப்பெரியது!
   அருமையான வெண்பாவால் அவர் பெருமை உரைத்தீர்கள்!
   மிக்க நன்றி ஐயா!

   Delete
 17. முதலில் நெடு நாட்கள் கழித்து மீண்டும் இளைய நிலா உதித்ததற்கு என் மகிழ்ச்சியைத்தெரிவித்துக்கொள்கிறேன்!

  தொடருக்கு அழைத்ததற்கு அன்பு நன்றி இள‌மதி! சுவாரஸ்யம் மிகுந்த கேள்விகள்! விரைவில் தொடர் எழுத முயற்சிக்கிறேன்!!

  ReplyDelete
  Replies
  1. வாங்கோ மனோ அக்கா!

   உங்களைக் கண்டதும் மனதில் அப்படி ஒரு மகிழ்ச்சிதான் எனக்கும்!

   ம். எழுதுங்கள் அக்கா!
   வருகிறேன் நானும்.

   வரவிற்கும் இனிய கருத்திற்கும் அன்பு நன்றி அக்கா!

   Delete
 18. மீளாத் துயரில் இருந்து இளைய நிலா மீண்டது சந்தோஸம் !அத்தோடு தொடர் பதிவில் அதிரா, அஞ்சு, இமா டீச்சர்,சீராளன், அம்மு. மகி, சட்டநாதன் ஐயா., விமலன் சார் போன்றோரின் கருத்தை அறிய ஆவலுடன் நான் மற்ற உறவு வலை இனித்தான் தொடரவேண்டும் பகிர்வுக்கு நன்றி!.

  ReplyDelete
  Replies
  1. வாங்கோ நேசன்!
   நீண்ட இடைவெளிக்குப் பின்னர் உங்களைக் காண்கிறேன்.

   உங்கள் ஆறுதல் வார்தைகளுக்கும் இனிய வரவிற்கும் உளமார்ந்த நன்றி சகோ!

   Delete
 19. குறள் வடிவில் பதில்கள்!!!
  புதிய முயற்சி !! விடைகளும் அருமையா வந்திருக்கு தோழி!! ஈடு செய்ய முடியாத இழப்பு தான் என்றாலும்
  நம்மை விட சிறிய வயதில் தாயை இழந்தவர்களை நினைத்துபாருங்கள் தோழி. தங்களது உற்சாக முகத்தை மறுபடி காண ஆவலோடு காத்திருக்கும் அன்பு தோழியின் வேண்டுகோள்.

  ReplyDelete
  Replies
  1. அன்புத்தோழி மைதிலி!

   இதோ நான் மெல்ல மெல்ல மாறி மாற்றி வருகிறேன் என்னை..:)

   உங்கள் உரிமை என்னை மெய்சிலிர்க்க வைக்கின்றது தோழி!..

   வரும் காலம்!. சிறக்கும் யாவும்!

   அன்பான வரவிற்கும் இனிமையான உறவிற்கும் அன்பு நன்றி தோழி!

   Delete
 20. // நன்னெறி கேட்பேன் நயந்து! // ஆகா...!

  வாழ்த்துக்கள்...

  ReplyDelete
  Replies
  1. வாங்கோ சகோதரர் தனபாலன்!

   மிக்க நன்றி வாழ்த்திற்கு!

   உங்கள் பதிவின் பலன் நானும் feedly. com இல் இணைந்து இப்போ நண்பர்களின் புதுப் பதிவுகளை உடனுக்குடன் காணக்கூடியதாக இருக்கின்றது.

   உதவிக்கு மிக்க நன்றி சகோதரரே!...

   Delete
 21. அழகாய்ப் பதில் கொடுத்திருக்கீங்க இளமதி!

  அழைப்பிற்கு நன்றி! நானும் மிஸ்.மியாவ் பதிவு போட்டபின்னர் எழுதலாம் என நினைக்கிறன். ஆனா அவுக பதிவு வந்த அரை மணீல எல்லாம் என்னால எழுத ஏலாது. ஒரு நாள் கழிச்சு எழுதிருவேன்! :)

  ReplyDelete
  Replies
  1. கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் :)

   Delete
  2. வாங்கோ மகி!..:)

   எழுதுங்கோ எழுதுங்கோ.. உங்களால் முடியாததா?
   பட்டையைக் கிளப்புவீங்களே.. :)
   காத்திருக்கிறேன்!..:)

   மிக்க நன்றி வரவிற்கும் வாழ்த்திற்கும் மகி!

   Delete
 22. அழைப்பிற்கு நன்றி இளமதி. :-)

  http://imaasworld.blogspot.co.nz/2014/06/blog-post_22.html

  ReplyDelete
 23. அழகாகப் பாடியே பதில் கொடுத்திருக்கிறீர்கள். வெகு அருமை இளமதி.

  ReplyDelete
  Replies
  1. மிக்க மிக்க நன்றி இமா!

   நீங்க.. நீங்களா அந்த கேள்வி பதில்கள் எழுதியது உங்க பக்கத்தில எண்டு இன்னமும் என்னால் நம்ப முடியேலை இமா!..:)

   ஒத்தவரி பதில் எழுதச் சொல்லுற ரீச்சர் எல்லோ.. நீங்களா.. பந்தி பந்தியா பதில் எழுதினது...:0

   ஆனா... அருமை இமா! பதில்கள் எல்லாம் மனதில் அப்படியே வந்து ஒட்டிக்கொண்டது!

   அருமை!

   Delete
 24. ஆகா இங்கும் குறளா...
  உங்கள் விசைப்பலகை என்ன பொங்குதமிழ் கடலில் மூழ்கிய முத்தா?
  அத்துணையும் அருமை
  மூன்று வலி
  நான்கு வயிதெரிச்சல்
  தமிழ் மகள் ஆசிர்வதித்த பதிவர் நீங்கள் ...
  வாழ்த்துக்கள் சகோதரி..

  ReplyDelete
  Replies
  1. அன்புச் சகோதரர் மது!

   //தமிழ் மகள் ஆசிர்வதித்த பதிவர் நீங்கள் ...// ... :)
   கேட்கும் போதே மனது பட்டாம்பூச்சியாய்ப் பறக்கின்றது...

   ஆர்வம் அதிகம். தேடி நாடுகிறேன். ஆயினும் நேரத்துடன்
   போரிட்டு தோற்கும் நிலை..:(

   உங்கள் இனிய ரசனைக்கும் அன்பு வாழ்த்திற்கும்
   மனமுவந்த நன்றி சகோ!

   Delete
 25. 'அப்பாடி, கேள்வி பதிலிலிருந்து வெளியே வந்துவிட்டோம்' என்ற என் பல வருட நிம்மதி இப்படி நொடியில் காணாமப் போச்சே ! சும்மா சொன்னேங்க‌. பதிவெழுத முயற்சிக்கிறேன். அழைப்புக்கும் நன்றி இளமதி.

  குறள் வெண்பாவிலான‌ பதில்கள் ...... ரசிக்க வைக்கிறது.

  ReplyDelete
  Replies
  1. வாங்கோ சித்ரா!..

   நீங்கள் பதிவு போட்டபின்பே உங்களுக்கு இங்கே பதில் கருத்திடக் காத்திருந்தேன்... :P
   இன்று உங்கள் பதிவு வந்துவிட்டதால் இங்கு
   உங்களுக்கு என் நன்றியுடன் வாழ்த்தும் சித்ரா!

   Delete
 26. ஆஹா இமா போட்டாச்சு இதோ நானும் இப்போ போடுவேன் ..அப்படீன்னா நீங்க உடனடியா பதிவை எழுதணும் ..
  ஆமா !!இதுக்கு முன்னாடி அதிரா நிறைய தொடர் பதிவு pending இருக்குன்னு நினைக்கிறேன் /
  என்னாலான உதவீஈஈஈ:)))))
  முதற் பதிவின் மகிழ்வென இதன் தொடரைஎன் ஆரம்ப கால அன்புத் தோழிகளான
  அதிரா..லிங்க் //

  http://ilayanila16.blogspot.co.uk/2013/08/blog-post.html

  ReplyDelete
  Replies
  1. கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:).. உசுப்பேத்தி உசுப்பேத்தியே என்னை பதிவை வாசிடுவாங்க என் கார்டியன்ஸ்ஸ் :)) ஹா..ஹா.. ஏனெனில் மீ பேபி ஆச்சே:)

   Delete
  2. அஞ்சு... இத்தனை ஞாபகமா உங்களுக்கு.. அருமை!
   நன்றி!

   Delete
 27. உங்களை போல என்னால் இவ்வளவு அழகா ஸ்வீட்டா இனிய குறள் போல அடிச்சாலும் எழுத வராதுஆள் விரைவில் எழுதுகிறேன் ..

  ReplyDelete
  Replies
  1. //அடிச்சாலும் எழுத வராது//
   அப்ப உதைச்சா எழுத வருமா?? ஹீ.ஹீ

   Delete
  2. ...:) இது அஞ்சுவுக்கு!

   //அப்ப உதைச்சா எழுத வருமா?? ஹீ.ஹீ//

   சூப்பர் அவர்கள் உண்மைகள் அவர்களே!...:)

   Delete
 28. . ஒரு ஸ்பெல்லிங் மிஸ்டேக் //ஆள் //..ஆனால்

  ReplyDelete
 29. Replies
  1. நன்றி சகோதரரே!..

   என்ன உங்களையும் நீண்ட காலமாகக் காணவே இல்லை...

   நலமாக இருக்கின்றீர்களா சகோ?..

   Delete
 30. அழகாய் சொல்லிய விடைகள் அருமை இளமதி.
  என்னையும் அம்பாளடியாள் அழைத்து இருக்கிறார்கள்.
  உங்களை போல இவ்வளவு அழகாய் விடை அளிக்க வருமா என்று தெரியவில்லை..வாழ்த்துக்கள் இளமதி.

  ReplyDelete
  Replies
  1. வாங்கோ சகோதரி!

   அன்பு வாழ்த்திற்கு மிக்க நன்றி சகோதரி!

   Delete
 31. திருவள்ளுவரின் வாரிசா நீங்கள் திருக்குறள் வடிவில் அழகாக பதில் சொல்லி இருக்கிறீங்க..... பாராட்டுக்கள் & வாழ்த்துக்கள் நான் ஆரம்பித்த விட்ட தொடர் இன்னும் தொடந்து கொண்டிருப்பதை கண்டு ஆச்சிரியம் & மகிழ்ச்சி அடைகிறேன்

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் வாங்கோ சகோதரரே!

   உங்கள் முதல் வருகை இங்கு. மகிழ்ச்சி!

   நான் அப்படி வாரிசு ஆகமுடியுமா?.. இப்போதுதான் கற்கின்றேன் சகோ!

   அன்பான வரவிற்கும் இனிய ரசனைக்கும் வாழ்த்திற்கும் உளமார்ந்த நன்றி!

   Delete
 32. இளமதி உன்னுடைய பதில்களில் உன்னைக் கற்பனை செய்து பார்த்தேன். எவ்வளவுஅழகான பதில்கள். அதுவும் குறள் வடிவத்தில்..
  நான் மும்பை வந்திருக்கிறேன். அகஸ்மாத்தாக உன்னைப் பார்ப்போம் என்று வந்தேன். பார்த்தேன். இனி உன்னைப் பர்க்க முடியும். ஸந்தோஷம்.. அன்புடன்

  ReplyDelete
  Replies
  1. அம்மா வாருங்கள்!

   உங்கள் வருகையும் என்னை மிக்க மகிழ்வில் ஆழ்த்துகிறது!

   கற்பனையில் எனக்கோர் வடிவம் அமைத்துவிட்டீர்களோ..:)
   நன்றி அம்மா!
   மீண்டும் நேர நெருக்கடியில் சிக்கிக் கொண்டேன்.
   விரைவில் எல்லோரிடமும் வர வேண்டும். வருவேன் அம்மா!

   அன்பு வரவிற்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றி அம்மா!

   Delete
 33. கவித்துவமாய்...பதில்கள். தலைப்பு அழகு.

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் சகோதரி வாருங்கள்!..

   உங்களின் முதல் வருகை இங்கு. மட்டற்ற மகிழ்ச்சி கொண்டேன்!..

   அன்பு வருகைக்கும் ரசனைக்கும் உளமார்ந்த நன்றி சகோதரி!

   Delete
 34. பத்துக்கும் பதில் பற்றுடன் பறைய
  பரவச பக்தி பெற்றேன்.

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் சகோதரரே! வாருங்கள்!

   உங்களின் முதல் வருகை இங்கு கண்டு மகிழ்ந்தேன்!..

   வரும்போதே நல்லதொரு அழகிய வரிகள் கொண்டு வந்து பதிந்துள்ளீர்கள்.. அருமை!

   அன்பு நன்றியுடன் வாழ்த்துக்கள் சகோ!

   Delete
 35. அழகிய கருத்தாழமிக்க குறள் வெண்பாக்களால் பதில் அளித்து அசத்திவிட்டீர்கள் இளமதி. அந்தக் குறள்கள் போலவே இந்தக் குறள்களுக்குள்ளும் எத்தனை எத்தனை ஆழமான விஷயங்கள் பொதிந்துள்ளன. அருமை. பாராட்டுகள் தோழி.

  ReplyDelete
  Replies
  1. வாருங்கள் கீதமஞ்சரி!..

   உங்கள் ஆழ்ந்த ரசனை இங்கும் என்னைப்
   புளகாங்கிதமடைய வைக்கின்றது தோழி!..

   அன்பு வாழ்த்துக்கும் மிக்க நன்றி!

   Delete

 36. வணக்கம்!

  பத்துக் குறள்களும் முத்தாய் ஒளிா்ந்தனவே!
  கொத்து மலரழகைக் கொடுத்தனவே! - சித்தமெலாம்
  வண்ணத் தமிழேந்தி மின்னும் இளையநிலா
  எண்ணம் அனைத்தும் இனிப்பு!

  கவிஞர் கி. பாரதிதாசன்
  தலைவர்: கம்பன் கழகம் பிரான்சு

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் ஐயா!..

   சித்தங் குளிரச் சிறப்பான வாழ்த்துரைத்தீர்!
   எத்திக்கும் கேட்கும் இனி!

   மிக்க மகிழ்வெய்தினேன் உங்கள் வரவும் வாழ்த்தும் கண்டு!

   உளமார்ந்த நன்றி ஐயா!

   Delete
 37. பதில்கள் அனைத்தும் நேர்த்தியாய் ரசிக்கும்படி இருந்தது சகோ!

  ReplyDelete
  Replies
  1. வாங்கோ ராஜி!

   அன்பு வரவிற்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றி சகோதரி!

   Delete
 38. வணக்கம்!

  தோழமை தந்த தொடரென்னும் நற்றலைப்பு!
  ஆழலை கண்ணன் அருளியதோ? - வாழியவே
  இன்தேன் சுரக்க எழுதும் இளையநிலா
  பொன்னோ் வளங்கள் புனைந்து!

  கவிஞர் கி. பாரதிதாசன்
  தலைவர்: கம்பன் கழகம் பிரான்சு

  ReplyDelete
  Replies
  1. ஐயா!...

   இன்தேன் சுவையெலாம் ஏற்றது உம்தயவால்!
   செந்தேன் மொழிதந்த சீர்!

   மீண்டும் என் பணிவான வணக்கமும் நன்றியும் ஐயா!

   Delete
 39. ''குறள்'' வடிவில் ''குரல்'' கொடுத்தது அருமை சகோதரி... நானும் கொடுத்திருக்கிறேன் ''கொராழ்'' காணவும்.

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் சகோதரர்! இங்கு உங்கள் முதல் வருகை! வாருங்கள்!

   ரசனைமிக்க கருத்துரை கண்டு மிக்க மகிழ்ச்சியுடன் உளமார்ந்த நன்றியும் சகோ!
   விரைவில் உங்கள் வலைத்தளத்திற்கும் வருகிறேன்!
   நன்றி!

   Delete
 40. கிரேஸ் அவர்களின் பதிவைப் படித்து விட்டு இங்கே அவருகிறேன் அதற்க்கு முன் சீரளன் அண்ணாவின் பதிவைப் படித்தேன்.. அட அட உங்களுக்கும் அண்ணாவிற்க்கும் தான் எத்தனை ஒற்றுமை... பாக்கள் அத்தனையும் அருமை இனிமை

  ReplyDelete
  Replies
  1. வாங்கோ பிரியா!

   கவிஞர் சீராளன் என் அன்புத் தம்பி!
   ஆனால் அவரின் கவித்திறமைக்கு முன் நான் ஒன்றுமே இல்லை...:)

   அன்பான வரவிற்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றி தோழி!

   Delete
 41. ஈரடிப் பாவடிகளில்
  இணையற்ற பதிலடிகள்
  சிந்திக்க வைக்கின்றன

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் ஐயா!

   அன்பான வரவிற்கும் வாழ்த்திற்கும் உளமார்ந்த நன்றி ஐயா!

   Delete
 42. வணக்கம் யங் மூன் அக்கா (அதிரா அக்காவிட பாசையிலே ),நலம் தானே .... எல்லா பதில்களுமே அருமை ...இம்புட்டு சீரியஸ் ஆ நீங்க எழுதுவீங்களா ....அவ்வவ் (அஞ்சு அக்கா க்கு அறிவாளி பிள்ளக லாம் friend ஆஅ இருக்காகளே எப்புடி ....) தொடர்ந்து கும்மி அடிப்போம் அக்கா ....நன்றி

  ReplyDelete
  Replies
  1. வாங்கோ கலை..:)
   இங்கு உங்கள் முதல் வரவு கண்டு மிக்க மகிழ்ச்சி!

   என்ன.. அறிவாளியோ ஆரைச் சொல்றீங்க.. என்னையோ ..:0
   புல்லரிக்க வைச்சிட்டீங்க கலை..:)
   ஏதோ மனசில தோன்றுவதை இப்படி எழுதிவிடுகிறேன்..
   ரசிக்கின்றீர்களே நீங்கள்! இதுவே எனக்குப் போதும் கலை!

   நீங்களும் வாங்கோ நேரம் கிடக்கும்போது தொடர்ந்தும்...
   அன்பு வரவிற்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றி கலை...:)

   Delete
 43. ஒவ்வொரு கேள்விக்கும் குறள் வடிவில் பதில்கள் - சிறப்பாய் இருந்தது. பாராட்டுகள்.

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் சகோதரர்!

   அன்பு வாழ்த்திற்கு மிக்க நன்றி!

   Delete
 44. அழகான இளைய நிலவின் பதிலகள் அருமை..

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் சகோதரி!

   அன்பு வரவிற்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றி!

   Delete
 45. இனிய பதில்கள்.
  அன்புடன் வேதா. இலங்காதிலகம்.

  ReplyDelete
 46. மிக அருமை. பகிர்வினிற்கு நன்றி..!

  நண்பர்கள் தின வாழ்த்து அட்டைகள், வாழ்த்துகள், எஸ்.எம்.எஸ்.களுக்கு:
  Happy Friendship Day 2014 Images

  ReplyDelete

உங்களின் அன்பான வரவிற்கும் ஊக்கந்தரும்
இனிய கருத்திற்கும் என் உளமார்ந்த நன்றி! _()_