Pages

Jul 7, 2014

வெந்தது விளைந்திடுமோ?...


வெந்தது மண்ணில் விளைந்திடுமோ? - பாரில்
விந்தையில்லை இதை உணர்ந்திடுவீர்!
தந்திடும் பாடங்கள் பலபலவே - நன்கு
புந்தியில் கொண்டிட நலன்மிகவே!
 
விறகான மரமும் துளிர்ப்பதில்லை! – மனது
துறவானால் வாழ்வும் இனிப்பதில்லை!
இறந்தாலே மீதம் இருப்பதில்லை! - இதனை
மறந்தாலும் மாண்டது மீள்வதில்லை!

கடந்திட்ட நேரம்தான் திரும்பிடுமோ? - கண்ணாடி
உடைந்திட்டால் பிம்பத்தைக் காட்டிடுமோ?
கிடைத்திட்ட வாழ்க்கையும் விரைகின்றதே! - நீயும்
படைத்திடு பலன்களைப் புவிகாணவே!

மறைந்தாலும் உன்பெயரை ஊர்சொல்லுமே! - உணர்வு
உறைந்தாலும் உன்பணிகள் உறவறியுமே!
பிறந்தோர்கள் இங்கேயே இருப்பதில்லையே! – உலகில்
சிறந்தோராய்த் திகழச்செய் மிகுநன்மையே!
~~~~~~~~~


ஊக்கம் கொண்ட நற்பணிகள்!
உன்னைக் காக்கும் நல்வழிகள்!
நோக்கம் சீராய்க் கொண்டிடுவீர்!
நுட்பம் அறிந்து செயற்படுவீர்!
ஆக்கம் சேர்க்கும் புத்துணர்வே!
அன்பால் ஈட்டும் சிறப்புக்கள்!
தேக்கம் ஏனோ தெளியுங்கள்!
தேர்ந்த வாழ்வும் ஓங்கிடவே!
~~~~~~~

பழுதுபடா நல்வாழ்வு பார்போற்றும்! எண்ணும்
பொழுதெலாம் ஏற்றும் புகழ்ந்து!
*****உள்ளாடும் உன்நினைவு ஊனினைத் தானுருக்கத்
தள்ளாடும் என்மனம் தான்!

__()__

57 comments:

 1. // வெந்தது மண்ணில் விளைந்திடுமோ? - பாரில்
  விந்தையில்லை இதை உணர்ந்திடுவீர்! //
  கவிதை அழகா ஆரம்பிக்கிறது. வாழ்க்கைத் தத்துவம் புரிய கவிதை நடக்கிறது. முத்தாய்ப்பாய் முடிகிறது. அருமை சகோதரி. நன்றி.

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் உமையாள் காயத்திரி!..

   அருமையாய் ரசித்து அழகாகக் கருத்திட்டீர்!
   பெருமை கொண்டேன் சகோதரி!..
   மிக்க நன்றியும் வாழ்த்துக்களும் உங்களுக்கும்!

   Delete
 2. தன்னம்பிக்கை தரும் வரிகள்! அழகான உவமைகள்! சிறப்பான கவிதை! வாழ்த்துக்கள்!

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் சகோதரர் சுரேஷ்!

   சிறப்பான ரசனை!..
   வரவும் வாழ்த்தும் தந்தது உவகை!

   உங்களுக்கும் உளமார்ந்த நன்றியுடன் வாழ்த்துக்களும்!

   Delete
 3. சிந்தனை வைக்க இளமதி யார்கவிதை
  சந்தம் நிறைவாகத் தந்துதிக்கும் - நொந்தமனக்
  கூட்டிலிசை மீட்டுமொரு பாட்டைவடி யாற்றலெனை
  மீட்டப்பின் னூட்டமெழு மே!
  நல்லிசைப் பாட்டைப் பகிர்ந்தமைக்கு நன்றி சகோதரி!

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் ஐயா!

   மீட்டும்பின் னூட்டமாய் வெண்பா வழங்கியே
   ஊட்டமிக்க வாழ்த்து உவந்தீரே! - வாட்டம்
   இனியேது வல்லதமிழ் எம்முடனி ருக்கக்
   கனிவாய்ப் படைப்பேன் கலந்து!

   உங்கள் வெண்பா கண்டு என்னையோ இங்கு
   இவ்வாறு கூறுகிறீர்களென வியந்தேன் ஐயா!

   உங்களையும் ஈர்த்ததோ இப்பாடல்...
   என்ன சொல்லி என் நன்றியை உரைப்பேன்?

   அன்பு வருகைக்கும், ஆழ்ந்த ரசனைக்கும்,
   இனிய வெண்பா வாழ்த்திதற்கும்
   இதயங் கனிந்த நன்றியுடன் வாழ்த்துக்களும் ஐயா!

   Delete
 4. நம்பிக்கையூட்டிய கவி வார்தைகள்.

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் சகோதரர்!..

   நல்ல ரசனை!..
   வரவும் வாழ்த்தும் கண்டு உவகை கொண்டேன்!

   உங்களுக்கும் உளமார்ந்த நன்றியுடன் வாழ்த்துக்களும்!

   Delete
 5. பழுதுபடா நல்வாழ்வு பார்போற்றும்! எண்ணும்
  பொழுதெலாம் ஏற்றும் புகழ்ந்து!///

  அருமையான வரிகள்

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் சகோதரர் ராஜா!
   இங்கு உங்கள் முதல் வருகை கண்டு மகிழ்ந்தேன்!

   உங்கள் இனிய ரசனையும் வாழ்த்தும்
   பெருமிதமாக இருக்கிறது.
   அன்பு நன்றியுடன் வாழ்த்துக்களும் உங்களுக்கும் சகோ!

   Delete
 6. வணக்கம்
  சகோதரி
  வரிக்கு வரி சோகங்கள் இளையோடி
  படிக்கும்நெஞ்சங்களை கனக்கச் செய்யும் வரிகள்
  வாழ்க்கை கண்ணாடி போன்றது உடைந்தால் ஒட்டவும் முடியாது இது விம்பத்தையும் காட்டாது தொலைந்த வாழ்க்கை தொலைந்ததுதான். என்ன செய்வது எல்லாம் இறைவன் செயல். பகிர்வுக்கு நன்றி சகோதரி

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் ரூபன்!

   வாழ்வியல் அர்த்தங்கள் வார்த்தைக்குள் கூடுமோ?
   ஆழ்கடலும் அற்பமே ஆம்!

   அன்பான வரவும் ஆழ்ந்த கருத்துப் பகிர்வும் கண்டு நெகிழ்ந்தேன்...

   மிக்க நன்றியுடன் வாழ்த்துக்கள் உங்களுக்கும் சகோ!

   Delete
 7. வணக்கம்!

  வெந்தது மண்ணில் விளைந்திடுமோ? என்றிங்குத்
  தந்த தமிழ்ப்பாடல் செந்தேனே! - சொந்தமெனத்
  தங்கத் தமிழ்படைத்தார்! மங்கை இளமதியார்
  பொங்கும் கவிதைப் பொழில்!

  உள்ளாடும் உன்நினைவு ஓதும் குறளழகில்
  தள்ளாடும் என்மனம்! தண்டமிழ்ச் - சொல்லாடும்
  வண்ணக் கவியே! வளமதியே! எந்நாளும்
  எண்ணம் இனிக்க எழுது!

  கவிஞர் கி. பாரதிதாசன்
  தலைவர்: கம்பன் கழகம் பிரான்சு

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் ஐயா!

   எண்ணம் இனிதாக ஏடெழுத்துப் பாவெழுதக்
   கன்னல் கவிவழி காட்டுகவே! - இன்னல்
   வெருண்டோட எம்மினம் வீரமுறப் பாட
   அருளுக என்றனுக்கு ஆய்ந்து!

   மேலும்....

   அன்புடன் இங்குற்று ஆழ்ந்த கருத்தோடு
   வெண்பாக்கள் தந்தீர் வியப்போடு! - என்நன்றி!
   உங்கள் கருணையால் ஊறும் கவிவண்ணம்!
   எங்கும் எதிலும் இனி!

   அனைத்திற்கும் என் உளமார்ந்த நன்றியுடன்
   அன்பு வாழ்த்துக்கள் உங்களுக்கும் ஐயா!

   Delete
 8. அருமையான வரிகள்....உங்களின் எழுத்துக்களும் வண்ணங்களாய்...நன்று .தோழி.

  ReplyDelete
  Replies
  1. அன்புத் தோழி!..

   வண்ணங்கள் என்றன் வரைவினில் காட்டியே
   எண்ணங்கள் இட்டேன் இணைத்து!

   அன்பு வரவிற்கும் வாழ்த்திற்கும்
   என் நன்றியும் வாழ்த்தும் உங்களுக்கும் தோழி!

   Delete
 9. அருமையான கவிதை. பாராட்டுகள்.

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் சகோதரரே!

   அன்பான வரவிற்கும் பாராட்டிற்கும்
   இனிய நன்றியும் வாழ்த்துக்களும்!

   Delete
 10. // கிடைத்திட்ட வாழ்க்கையும் விரைகின்றதே! - நீயும்
  படைத்திடு பலன்களைப் புவிகாணவே!//
  அருமை தோழி...மீண்டும் கவிபாட துவங்கியிருக்கும் உங்களுக்கு மகிழ்ச்சியுடன் வாழ்த்துகள்..

  ReplyDelete
  Replies
  1. வாருங்கள் கிரேஸ்!...

   புவிபாடும் பாட்டு புரட்டியெனை இங்கு
   கவிபாட வைத்ததே காண்!

   உங்கள் மகிழ்வே என்றனுக்கு நிறைவு!

   இனிய ரசனைக்கும் வாழ்த்திற்கும்
   இதயங் கனிந்த நன்றியும் வாழ்த்தும் தோழி!

   Delete
 11. தன்னம்பிக்கை தரும் வரிகள்...
  வாழ்த்துக்கள்.

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் சகோதரர் குமார்!

   உங்களின் அன்பு வருகைக்கும் வாழ்த்துக்கும்
   உளமார்ந்த நன்றியும் வாழ்த்தும் சகோ!

   Delete
 12. சிறப்பான வரிகள் ..

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் சகோதரர்!

   உங்களின் அன்பு வருகைக்கும் வாழ்த்துக்கும்
   உளமார்ந்த நன்றியும் வாழ்த்தும் சகோ!

   Delete
 13. சிறப்பான சிந்தனைகளைத் தாங்கி வந்த அருமையான கவிதை !
  வாழ்த்துக்கள் என் தோழியே .

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் தோழி அம்பாளடியாள்!

   உங்களின் அன்பு வருகையும் வாழ்த்தும் கண்டு மகிழ்ச்சி!
   உளமார்ந்த நன்றியும் அன்பு வாழ்த்துக்களும்
   உங்களுக்கும் தோழி!

   Delete
 14. உள்ளாடும் உன்நினைவு ஓதும் குறளழகில்
  தள்ளாடும் என்மனம்! தண்டமிழ்ச் - சொல்லாடும்
  வண்ணக் கவியே! வளமதியே! எந்நாளும்
  எண்ணம் இனிக்க எழுது! தொடர வாழ்த்துக்கள் ....!
  அருமை தோழி ! மீண்டும் கவிதையில் குளிப்பதை கண்டு மிக்க மகிழ்ச்சி அடைகிறேன் தோழி

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் தோழி இனியா!

   உங்கள் வரவும் ரசனையும் தருகிறது நல்ல ஊக்கம்.
   மட்டற்ற மகிழ்ச்சி தோழி!

   என் இனிய நன்றியுடன் வாழ்த்துக்களும் உங்களுக்கு!

   Delete
 15. "ஊக்கம் கொண்ட நற்பணிகள்!
  உன்னைக் காக்கும் நல்வழிகள்!"
  சிறந்த வழிகாட்டல்

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் ஐயா!

   உங்கள் வரவும் ரசனையும் கண்டு மிக்க மகிழ்ச்சி!

   என் இனிய நன்றியுடன் வாழ்த்துக்களும் உங்களுக்கு ஐயா!

   Delete
 16. கருத்துள்ள வரிகள்... வாழ்த்துக்கள்...

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் சகோதரர்!

   உங்கள் வரவும் வாழ்த்தும் காண்பதும் மட்டற்ற மகிழ்ச்சியே!

   என் அன்பு நன்றியுடன் வாழ்த்துக்களும் உங்களுக்கு!

   Delete
 17. சிறப்பான நம்பிக்கை வரிகள்

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் ஐயா!

   உங்கள் ரசனையும் எனக்குத் தருகிறது நல்ல ஊக்கம்.
   வரவு கண்டு மட்டற்ற மகிழ்ச்சி ஐயா!

   என் அன்பு நன்றியுடன் வாழ்த்துக்களும் உங்களுக்கு!

   Delete
 18. யதார்தமாகவும்,சிந்திக்க வைக்கும் விதமாக கவிவரிகளை உருவாக்கி கவிதைதனை படைத்திருக்கும் உங்களை பாராட்ட வார்த்தையில்லை.
  எல்லாக்கவிகளும் மிக நன்றாக எழுதியிருக்கிறீங்க இளமதி.வாழ்த்துக்கள்

  ReplyDelete
  Replies
  1. வாங்கோ அம்மு!..:)

   இப்படி நீங்களெல்லாம் ரசிப்பதைப் பார்க்க எனக்கும் கொஞ்சம் தைரியமாக இருக்கு தொடர்ந்து எழுத...:)

   அன்பான வரவிற்கும் வாழ்த்திற்கும்
   உளமார்ந்த நன்றியும் வாழ்த்துக்களும் உங்களுக்கு அம்மு!

   Delete
 19. Replies
  1. வணக்கம் சகோதரரே!

   கருத்துப் பகிர்ந்தேன் அங்கு!

   Delete
 20. தோழி உங்கள் வரிகளில் உங்கள் இயல்பான மனத்திண்மை வெளிப்பட்டிருக்கிறது. இப்படி ஒரு பாடலை இளமதி பாடியபின் இனி துயர் ஏது?!இனி எல்லாம் சுகமே!!

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் தோழி!

   இயல்புகள் எல்லாவற்றையும் வெளிக்கொணர முடியாது. ஆயினும் தொடர்ந்து என் ஆக்கங்கள் ஒரு வட்டத்திற்குள்ளேயே இருப்பதால் இப்படி மாற்றி எழுதிப் பார்த்தேன் தோழி!..

   அகப்பட்ட என் சூழல் அத்தகையது... மாற்றமாக எழுத இயலுமா முயல்கிறேன்...

   உங்கள் வரவும் ரசனையும் நல்ல ஊக்க டானிக்காக உள்ளது...:)
   மட்டற்ற மகிழ்ச்சி தோழி!

   என் இனிய நன்றியுடன் வாழ்த்துக்களும் உங்களுக்கு!

   Delete
 21. வாழ்க்கையின் தத்துவத்தை மிக அழகாகவும் எளிமையாகவும் கவிதையாகியிருக்கிறீர்கள்.

  வாழ்த்துக்கள் சகோதரி.

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் சகோதரர்!

   உங்கள் வரவும் வாழ்த்தும் காண்பதும் மட்டற்ற மகிழ்ச்சியே!

   என் அன்பு நன்றியுடன் வாழ்த்துக்களும் உங்களுக்கு!

   Delete
 22. நல்ல தத்துவ வரிகள்,ஆனால் இவைகளையெல்லாம் பார்த்த பின்புதான்அல்லது உணர்ந்த பின்புதான் வாழ்க்கையே புடிபடுகிறது

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் சகோதரர் விமலன்!

   உணர்ந்தால்தானே அனுபவமும் கிட்டுகிறது!

   உங்கள் வரவும் வாழ்த்தும் எனக்கு மட்டற்ற மகிழ்ச்சியே!

   என் அன்பு நன்றியுடன் வாழ்த்துக்களும் உங்களுக்கு!

   Delete
 23. சிறப்பான சிந்தனைகளைக் கொண்ட கவிதை. சந்தம் சுண்டி இழுக்கிறது

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் சகோதரரே!

   இனிய ரசனை கண்டு உள்ளம் துள்ளுகிறது!
   உங்கள் வரவும் வாழ்த்துமே மகிழ்ச்சிதான் எனக்கும்!

   மிக்க நன்றியுடன் வாழ்த்துக்களும் உங்களுக்கு!

   Delete
 24. அருமையான கவிதைப் பகிர்வுகள்..!! வாழ்த்துக்கள் தோழி

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் சகோதரி! வாருங்கள்!
   முதல் வருகை இங்கு!

   அன்பு வாழ்த்தும் கண்டு மட்டற்ற மகிழ்ச்சி!

   இனிய வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி சகோதரி!
   உங்களுக்கும் வாழ்த்துக்கள்!

   Delete
 25. சந்த அழகும் சிந்தனைக் கருத்துக்களும் கொண்டு எண்ணமெலாம் நிறைக்கும் இன்தமிழ்ப்பாக்கள் மனம் கொள்ளை கொள்ளும் வசீகரம். மனம் நிறைந்த பாராட்டுகள் தோழி.

  ReplyDelete
  Replies
  1. வாங்கோ கீதமஞ்சரி!

   பனிமழையில் நனைந்த சுகம்
   உங்கள் ரசனையைப் பார்க்கும்போது!..:)

   உளம் நிறைந்த நன்றியுடன் வாழ்த்துக்களும் உங்களுக்கு!

   Delete
 26. நல் வரிகள் படங்கள்.
  அன்புடன் வேதா. இலங்காதிலகம்.

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் சகோதரி!

   அன்பு வரவிற்கும் இனிய கருத்திற்கும்
   உளமார்ந்த நன்றியுடன் வாழ்த்துக்களும்!

   Delete
 27. மறைந்தாலும் உன்பெயரை ஊர்சொல்லுமே! - உணர்வு
  உறைந்தாலும் உன்பணிகள் உறவறியுமே!
  பிறந்தோர்கள் இங்கேயே இருப்பதில்லையே! – உலகில்
  சிறந்தோராய்த் திகழச்செய் மிகுநன்மையே!//
  அருமையான் கவிதை.
  வாழ்க்கையை புரிந்து கொள்ள உதவும் உங்கள் கவிதை இளமதி.

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் இனிய சகோதரி!

   உங்களின் ரசனையும் எனக்கு எப்பவும் ரொம்பப் பிடிக்கும்...

   நான்தான் இன்னும் உங்கள் பக்கம் வரவில்லை. வருவேன் விரைவில்...

   அன்பு வரவிற்கும் இனிய நற்கருத்திற்கும்
   உளமார்ந்த நன்றியுடன் வாழ்த்துக்களும் சகோதரி!

   Delete
 28. அர்த்தம் நிறைந்த வரிகள். அழகான, சிந்திக்க வைக்கும் கவிதைகள். படங்களும் அழகு. பாராட்டுக்கள் இளமதி.

  ReplyDelete
 29. இன்னக்குத்தான் உங்க பக்கம் வந்தேன். அருமையான கவிதை படித்து ரசித்தேன்.

  ReplyDelete
 30. எல்லாக் கவியும் எனக்குள்ளே கேள்விகளாய்
  மெல்லக் குடைந்தது மெய் !

  என்னே ஒரு வரிகள் அர்த்தம் நிறைந்த பாடல்கள் அத்தனையும் அருமை சகோ வாழ்க வளமுடன்

  ReplyDelete

உங்களின் அன்பான வரவிற்கும் ஊக்கந்தரும்
இனிய கருத்திற்கும் என் உளமார்ந்த நன்றி! _()_