Pages

Jul 23, 2014

என்னடா தூக்கம் எழு!!..

* பெங்களூருவில் பள்ளியின் உடற்பயிற்சி ஆசிரியர் பள்ளி நேரத்தில் பள்ளி வளாகத்தில் ஒன்றாம் வகுப்பு மாணவியை பாலியல் பலாத்காரம் செய்திருக்கிறார்...

இவை முகப்புத்தகத்தில் கிடைத்த செய்திகள்...

வணக்கம் உறவுகளே!..

கடந்த சில தினங்களாக காணுமிடமெல்லாம் கிடைக்கும் இச் செய்தி மனதைப் பிசைகிறது. கேடு கெட்டோரின் ஈனச்செயல்களால் எனக்குள் தோன்றியவற்றை பாக்களாகப் பதிவிட்டுள்ளேன்!


மேலும்... வலைப்பதிவரும் என் நண்பியுமானஅஞ்சலின் - அஞ்சு அவர்களின் காகிதப்பூக்கள் வலைத்தளத்திலும் இந்தச் செய்தி தொடர்பான இரண்டு பதிவுகளைக் காணலாம்.

உங்களுடன் இங்கு இவற்றைப் பகிரத் தோன்றியது !.. 
எழுதிவிட்டேன்!... நன்றி!
 ~~~~

 

பூமுகம் தன்னைப் பொசுக்கும், பெரும்பாவி
காமுகன் கண்ணைக் கழற்று!

கேவலமாய்க் காமுகன் கேடு பெருகிட
மாவுலகம் போகும் மடிந்து!

பாலகர் பாவையர் பாரில் பதைப்பதோ?
காவலர் இல்லையோ காண்!

சின்னப்பூ மண்ணிலே செய்திட்ட பாவமென்ன?
என்னடா தூக்கம் எழு! 

மண்ணில் பிறந்திட்ட மங்கையர் வாழ்க்கையில்
கண்ணீரே ஆகும் கடல்!

பொங்கிடுவீர்! போக்கிரியைப் போட்டுடைத்துத் தாக்கிடுவீர்!
தொங்க விடுகவே தூக்கு!

சின்னஞ் சிறுமியைச் சீரழித்த காமுகனை
இன்னே நெருப்பினில் ஏற்று!

கற்கும் இடத்தினில் காம விளையாட்டு!
பெற்றவள் செய்த பிழை!

கொஞ்சும் மழலையை நெஞ்சம் துடிதுடிக்க
வஞ்சகன் செய்தான் வதை!

பொறுப்பும் உளதென்றால்!  பொல்லாக் கயவன்
உறுப்பை அறுப்பீர் உடன்!

 ********


பெண்ணின் பிறப்புப் பெரும்பாவம் என்றெண்ணிக்
கண்ணீர் பெருகுவதோ? காப்பார்யார்? - மண்ணெங்கும்
உற்ற அடிமைநிலை முற்றும் அழியாதோ?
நற்றவ நாதா நவில்!

~~~~~

37 comments:

 1. உங்கள் உள்ளக்குமுறலை வெளிப்படுத்துகிறது கவிதை ..
  எனக்கே தாங்க முடியலை அவ்வளவு கோபம் அந்த செய்தியை பார்த்ததில் இருந்து ..
  போராட்டம் ,தண்டனை எல்லாவற்றுக்கும் மேல் ..அந்த குழந்தை பாவம் அதன் நிலை ..இனி அது யாரை நம்பும் ?
  இடைவிடா பணிசுமைகளுக்கு மத்தியிலும் உங்கள் மனக்குமுறலை எழுதி பகிர்ந்ததற்கு நன்றி இளமதி ..

  ReplyDelete
  Replies
  1. வாங்க அஞ்சு...

   மனக்குமுறல் இன்னும் இருக்கு. இதுவே போதும்னு விட்டுட்டேன்.

   உடன் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றிமா!

   Delete
 2. எதைக் கூற!.... மகாபாவியர்.
  மனது கொந்தளிக்கிறதே.
  நல்லதே நடக்க வேண்டும்.
  வேறு எதைத்தான் கூற முடியும்.
  (Elamathy. nalam thaanea?)
  வேதா. இலங்காதிலகம்.

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் சகோதரி!

   உணர்வுமிக்க உங்கள் கருத்திற்கு
   உளமார்ந்த நன்றி!

   Delete

 3. வணக்கம்!

  நடுத்தெருவில் வைத்தவனை நாற்றுண்டாய் வெட்டி
  இடும்வரையில் இக்கொடுமை தீரா! - படுபாவி!
  பொல்லாப் பொறுக்கி! புழுவன்!அவன் எப்பிறப்பும்
  கல்லாய்க் கிடப்பான் கனத்து!

  கவிஞர் கி. பாரதிதாசன்
  தலைவர்: கம்பன் கழகம் பிரான்சு

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் ஐயா!

   வருமொரு காலமவன் வாழ்வே சிதையத்
   தருமொரு தண்டனையுந் தான்!

   உணர்வுமிக்க கவிக்கருத்தினைக் கண்டேன்.
   உளமார்ந்த நன்றி ஐயா!

   Delete
 4. உள்ளக் குமுறல் கவிதையாய் வெளிப்பட்டு சுட்டெடுக்கிறது! அருமையான படைப்பு! இந்த மாதிரி காமுகர்களுக்கு நீங்கள் கடைசியாக சொன்ன குறள் தான் தண்டனை!

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் சகோதரரே!

   உணர்வுமிக்க உங்கள் கருத்திற்கு
   உளமார்ந்த நன்றி!

   Delete
 5. உணர்வுகளை கொட்டி
  உண்மையை வெளிப்படுத்திய
  சிறந்த கவிதை!

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் ஐயா!

   உணர்வுமிக்க உங்கள் கருத்திற்கு
   உளமார்ந்த நன்றி!

   Delete
 6. ஏற்கன்வே அறிந்த செய்தியின் தாக்கமும் வேதனையும் இன்னும் மனதை விட்டு அகலாத நிலையில் உங்கள் குமுறல் மேலும் மனதை கனக்க வைக்கிறது! உங்கள் கவிதை கூறும் தண்டனையும் ஐயா பாரதிதாசன் அவர்களது சாபமும் இந்த மாதிரி கயவர்களை சுட்டெரிக்காதா என்ன?

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் அக்கா!

   உணர்வுமிக்க உங்கள் கருத்திற்கு
   உளமார்ந்த நன்றி!

   Delete
 7. பொறுப்பும் உளதென்றால்! பொல்லாக் கயவன்
  உறுப்பை அறுப்பீர் உடன்!
  இதை மனப்பூர்வமாக வழிமொழிகிறேன்.
  தங்களின் மனக்குமுறலை வெளிப்படுத்தியது கவிதை.

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் சகோதரரே!

   உணர்வுமிக்க உங்கள் கருத்திற்கு
   உளமார்ந்த நன்றி!

   Delete
 8. Replies
  1. வணக்கம் தோழி!

   உணர்வு மிக்க போராட்டத்தில்
   உங்கள் பங்கினை அறிந்தேன்.
   காலம் பதில் தரும்...

   Delete
  2. வணக்கம் தோழி..
   நீதியும் உண்மையும் தான் ஒளிந்துகொண்டு கண்ணாமூச்சி ஆடுகின்றன.. காலம் பதில் தரும் என்ற நம்பிக்கையில் தான்...

   Delete
 9. அந்த மாநிலத்தின் முதல்வர் கொதித்து எழுந்திருக்கின்றார்!..
  நீதி கேட்டு போராட்டம் நடத்தும் மக்களைக் கண்டு!..

  பேய்கள் ஆட்சி செய்தால் -
  பிணம் தின்னும் சாத்திரங்கள்!..
  - மகாகவியின் வாக்கு!..

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் ஐயா!

   உணர்வு மிக்க உங்கள் கருத்திற்கு
   உளமார்ந்த நன்றி!

   Delete
 10. அடக்கடவுளே.....

  ஒன்றாம் வகுப்பு குழந்தை என்றால் ஆறு வயது இருக்குமா.....?
  ஐயோ.... அந்தக்குழந்தையையா....சே. மனுஷனா அவன்!

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் தோழி!

   உணர்வு மிக்க உங்கள் கருத்திற்கு
   உளமார்ந்த நன்றி!

   Delete
 11. கயவர்களுக்கு உடனடித் தண்டனை வழங்கப் பட வேண்டும்
  அதுவும் அதிக பட்சத் தண்டனை

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் ஐயா!

   உணர்வு மிக்க உங்கள் கருத்திற்கு
   உளமார்ந்த நன்றி!

   Delete
 12. நீங்கள் சொன்னது போல் தான் செய்ய வேண்டும்... பாவிகள்... விலங்குகளை விட கேவலமானவர்கள்...

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் சகோதரரே!

   உணர்வு மிக்க உங்கள் கருத்திற்கு
   உளமார்ந்த நன்றி!

   Delete
 13. வணக்கம்
  சகோதரி
  தாங்கள் சொல்வது உண்மைதான்.. அன்றாடம் தலைப்புச்செய்தியாக வரும்.. பார்த்தவுடன் மனசு துடிக்கும் .... இப்படியான கமுக்கர்களை தூக்கில் போட வேண்டும் .. கவிதை வடிவில் மிக அருமையாக சொல்லியுள்ளீர்கள் வாழ்த்துக்கள்
  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் சகோதரரே!

   உணர்வு மிக்க உங்கள் கருத்திற்கு
   உளமார்ந்த நன்றி!

   Delete
 14. மிகவும் வருந்ததக்க செயல். சின்னபூவை கசக்கி எறிய மனம்வந்த கயவன் வதைக்கப்படவேண்டியவன் தான். தண்டனை உடனே கொடுக்கவேண்டும் அப்போதுதான் மற்ற கயவர்களுக்கும் பாடமாக அமையும்.

  யாரைத்தான் நம்புவது உலகத்தில் ? குரு தப்பு செய்தால் என்ன செய்வது., படித்தவன் பாவம் செய்தால் ஐயோ என்று போவன் என்று பாரதி சொன்னது படிக்கவில்லையா?

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் சகோதரி!

   உணர்வு மிக்க உங்கள் கருத்திற்கு
   உளமார்ந்த நன்றி!

   Delete
 15. ஆம்...இச்செய்தியை படித்ததில் இருந்து ஆத்திரமும், கோபமுமாக வருகிறது.

  நச் நச் என்று கவிதை
  நச் நச் என குறள்கள் குத்திற்று.

  நன்றி.

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் சகோதரி!

   உணர்வு மிக்க உங்கள் கருத்திற்கு
   உளமார்ந்த நன்றி!

   Delete
 16. அறம் பாடுதல் என்று தமிழில் ஒரு மரபு உண்டு இல்லையா?
  நல்ல தமிழ் புலவர் நீங்கள் , அறம் பாடி இருக்கிறீர்! இத்தகைய நாசகாரர்கள் அழிந்தால் சரி! கவிதை அருமை!

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் தோழி!

   உணர்வு மிக்க உங்கள் கருத்திற்கு
   உளமார்ந்த நன்றி!

   Delete
 17. மிகவும் வருத்தமிக்க, கேவலமான செயல்! டீச்சர்களையே நம்பமுடியாமல் போகின்றது! விலங்குகள் மனிதர்களைவிட மேலானவையே!

  பொறுப்பும் உளதென்றால்! பொல்லாக் கயவன்
  உறுப்பை அறுப்பீர் உடன்!// யார் பூனைக்கு மணி கட்டுவது! மிக ற்புதமான வரிகள் கொண்ட பதிவு!

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் சகோதரரே!

   உணர்வு மிக்க உங்கள் கருத்திற்கு
   உளமார்ந்த நன்றி!

   Delete
 18. காம வெறி பிடித்த மிருகங்களிடையே இன்று பெண் குழந்தைகள் வாழும் நிலை..மிகவும் கவலையாக உள்ளதம்மா..

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் சகோதரி!

   உணர்வு மிக்க உங்கள் கருத்திற்கு
   உளமார்ந்த நன்றி!

   Delete

உங்களின் அன்பான வரவிற்கும் ஊக்கந்தரும்
இனிய கருத்திற்கும் என் உளமார்ந்த நன்றி! _()_