Pages

Jul 20, 2014

உயர் தானம்!..


உயர்தானம் ஒன்று 
ஒப்பற்றதென்று செய்ய 
உற்றேன் பேராவல் 
உறவுகளே வழி சொல்வீர்!

உதிரமும் உறுப்புகள் தானம்
உலகறியும் அதனருமை! 
உன்னுகிறேன் மேலாக
உயிர்த் தானம் செய்திடவே!
உற்றேன் பேராவல்
உறவுகளே வழி சொல்வீர்!

பயிராகும் முன்னே 
பதைபதைக்கச் சிறாரின்
உயிர்காவு வாங்குகிறான் 
ஒற்றன் கூற்றன்!
பாலகர் சிறந்தே வாழ
உயிர்த் தானம் செய்ய வேண்டும்
உளமார விரும்புகிறேன்
உறவுகளே வழி சொல்வீர்!

வயிறார உணவின்றி
வாடியே தினந்தினம்
சருகாகிச் செத்திடும்
ஏழையும் நீடு வாழ
உயிர்த் தானம் செய்ய வேண்டும்
உளமார விரும்புகிறேன்
உறவுகளே வழி சொல்வீர்!

உடற்பலம் குன்றி நலங்கெடப்
பாயிலே நோயொடு வீழ்ந்து
சேயதும் துடிதுடிக்க
வாய்பிளந்திடும் தாய் வாழ
உயிர்த் தானம் செய்ய வேண்டும்
உளமார விரும்புகிறேன்
உறவுகளே வழி சொல்வீர்!

நாடு மொழி இனம்காக்க
நலமெல்லாம் எமக்காகப்
போரிடுவார் தினமும்
போரினில் அவர்களுயிர்
போகாமல் நலம்வாழ நான்
உயிர்த் தானம் செய்ய வேண்டும்
உளமார விரும்புகிறேன்
உறவுகளே! வழி சொல்வீர்!

எத்தனையோ சாதனைகள்
இயற்ற எம்மால் முடிகிறதே!
இத்தரை மீதிலே.. இதையும்
எண்ணியே பார்த்தேன்!
ஏதும் வழி சொல்வீரா? இல்லை
ஏளனம்தான் செய்வீரா?

~~~~~~~~~~~பாரினில் பிறந்தோம் நன்றே!
பாரமாய் இருத்தல் வீணே!
வேரினை மறந்தே மண்ணில்
வாழ்ந்திடும்  மரமும் உண்டோ!
ஊரிலெம் உறவோ வாட
எம்நலம் தனைக்காப் போமோ?
சீரினை உணர்ந்தே சேவை
செய்யவே சிறப்பார் இன்றே!

*******


தித்திக்கத் தித்திக்கச் சேர்த்த கனவுகள்!
சித்திக்க வேண்டும் சிறந்து!

__()__

29 comments:

 1. வணக்கம்
  சகோதரி.

  அழகு கவியில் சந்தம் வந்து சிந்து பாட
  பாரில் உள்ள மாந்தர்களுக்கு
  பறை சாற்றும் வரியாக
  ”பா”புனைந்த விதம் கண்டு மகிழ்நதேன்.

  எல்லோரும் உணருவார்கள் என்றால் நிச்சயம் விடியல் பிறக்கும்
  நன்றாக உள்ளது கவிதை பகிர்வுக்கு நன்றி

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் சகோதரர் ரூபன்!

   உங்களின் உணர்வு பூர்வமான ரசனையும் கருத்தும் கண்டு
   உள்ளம் மகிழ்ந்தேன்!

   அன்பு வரவிற்கும் நற்கருத்திற்கும் உளமார்ந்த நன்றி சகோ!

   Delete

 2. வணக்கம்!

  உயர்தானம் பா..படித்தேன்! உள்ளம் உடைந்து
  துயர்வானம் தொட்டுத் துடித்தேன்! - உயிர்த்தானம்
  என்னெனச் சொல்வேன்! இளமதி எண்ணத்தைப்
  பொன்னெனச் சொல்வேன் புகழ்ந்து!

  கவிஞர் கி. பாரதிதாசன்
  தலைவர்: கம்பன் கழகம் பிரான்சு

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் ஐயா!

   ஒப்பற்ற வாழ்த்து உரைத்தீர் நனிநன்றி!
   இப்புவியில் ஏதிதற்கு ஈடு!

   அன்பான வருகையுடன் உணர்வு நிறைந்த
   வெண்பா வாழ்த்திற்கும் உளமார்ந்த நன்றி ஐயா!

   Delete
 3. தங்கள் கருத்தை விரும்புகிறேன்
  சிறந்த பகிர்வு

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் ஐயா!

   தங்களின் அன்பு வரவிற்கும் வாழ்த்திற்கும்
   உளமார்ந்த நன்றி!

   Delete
 4. Replies
  1. வணக்கம் ஐயா!

   தங்களின் அன்பு வரவிற்கும் வாழ்த்திற்கும்
   உளமார்ந்த நன்றி!

   Delete
 5. நெஞ்சை பிழிந்த வாக்கியக்கவிதை அருமை வாழ்த்துக்கள்.

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் சகோதரரே!

   தங்களின் அன்பு வரவிற்கும் கருத்திற்கும்
   இனிய வாழ்த்திற்கும் உளமார்ந்த நன்றி!

   Delete
 6. சிறப்பான சிந்தனைகள்...

  வாழ்த்துக்கள்...

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் சகோதரரே!

   தங்களின் அன்பு வரவிற்கும் வாழ்த்திற்கும்
   உளமார்ந்த நன்றி!

   Delete
 7. நெஞ்சை வாட்டிடும் வரிகள் தோய்ந்த கவிதை! சகோதரி!

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் சகோதரரே!.. வாருங்கள்!
   தங்களின் முதல் வருகை இங்கு கண்டு மிக்க மகிழ்ச்சி!..

   அன்பு வரவிற்கும் வாழ்த்திற்கும்
   உளமார்ந்த நன்றி!

   Delete
 8. தானமும் தவமும் நம்மை உயர்நிலைக்கு இட்டுச் செல்லும் என்பது ஆன்றோர் வாக்கு..

  சிந்திக்க வைக்கும் இனிய கவிதை. வாழ்க நலம்..

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் ஐயா!

   தங்களின் அன்பு வரவிற்கும் வாழ்த்திற்கும்
   உளமார்ந்த நன்றி ஐயா!

   Delete
 9. உயர் தானம்! உடல் உறுப்புக்கள் தானம் பற்றிய விழிப்புணர்வு பெருகி வரும் வேளையில் உயிர் தானம் செய்ய சொல்லிவந்த கவிதை நெஞ்சை பிளந்தது! அருமையான படைப்பு! வாழ்த்துக்கள்!

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் சகோதரர் சுரேஷ்!

   தங்களின் அன்பு வரவிற்கும் வாழ்த்திற்கும்
   உளமார்ந்த நன்றி!

   Delete
 10. உயிர்தான மல்லால் உயர்தான மொன்று
  பயின்றன்றோ வாழ்ந்தார் தமிழர்? - அயர்விலார்
  பொன்னுடல் வீழப் புகழுயி ரால்வாழ்வார்!
  கொன்றுண்டும் தோற்கின்ற கூற்று!

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் ஐயா!

   எம்மவர் ஈகைக்கு ஈடுளதோ அன்னவர்
   அம்புவியின் ஆண்டவரே ஆம்!

   தங்களின் அன்பு வரவுடன் அருமையான நல்ல
   கருத்தாழம் மிக்க கவிதையும் உள்ளத்தில் இடம் பிடித்தது

   அன்பிற்கு உளமார்ந்த நன்றி ஐயா!

   Delete
 11. ஒப்பற்ற தானம் உயர்தானம் பற்றிய கவிதை பற்றி என்னே சொல்வேன். மிகவும் அருமையாக,நன்றாக எழுதியிருக்கிறீங்க விழிப்புணர்வு கவிதையை.
  //"தித்திக்கத் தித்திக்கச் சேர்த்த கனவுகள்
  சித்திக்க வேண்டும் சிறந்து"// நிச்சயம் சிறக்கும்.
  நல்சிந்தனை, சிறப்பான சிந்தனைக்கு வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 12. உயிர் தானம் உதவாது. உயிர் போனபின் உடல் தானம் செய்ய வேண்டலாம். அதுவும் நம்கையில் இருக்காது. உயிர் இருக்கும் போது உயிர் வாழ அன்னதானம் செய்யலாம். வாழ்வில் சிறக்கக் கல்விதானம் செய்யலாம் இவை நம் கையில் உள்ளவை. நல்லெண்ணத்துக்கு வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 13. உன்னதமான சிந்தனை சகோதரி..
  அத்துணைபேருக்கும் கொடுக்கிற அளவு உயிர் உங்களிடம் இருக்கட்டும்...
  http://www.malartharu.org/2012/12/blog-post_5724.html

  ReplyDelete
 14. அருமைத் தோழியே !

  உயிர் சேதம் இன்றி
  உயர் தானம் செய்
  கல்விக் கண்களை திற
  அன்னையாய் ஆகி ஆதரி
  அன்னதானம் செய்!
  உடல் உறுப்புகளை உயிர்
  போன பின் தானம் செய் ! நெஞ்சை உலுக்கும் இவ்வெண்ணம் உகந்ததல்ல என் இனிய தோழியே !

  ReplyDelete
 15. உயர் தானம்..
  உள்ளத்தை ஆக்கிரமித்தது..

  நன்றி சகோதரி.

  ReplyDelete
 16. உங்களுக்கு உரிமையான ஒன்றைத்தானே நீங்கள் தானம் கொடுக்க முடியும்? உயிர் என்பதை நீங்கள் கண்டதே இல்லையே? அது உங்கள் கட்டுப்பாட்டில் இல்லையே! ...(2) நல்ல கவிதை.!

  ReplyDelete
 17. அருமையான கவிதை இளமதி! வாழ்த்துக்கள்!!

  ReplyDelete
 18. சட்டப்படியும், தர்மப்படியும் உயிர்தானம் சரியில்லையே!

  ReplyDelete
 19. நல்ல கவிதை
  சகோதரி.

  ReplyDelete

உங்களின் அன்பான வரவிற்கும் ஊக்கந்தரும்
இனிய கருத்திற்கும் என் உளமார்ந்த நன்றி! _()_