Pages

Sep 18, 2014

நானும் கவிஞரா?.!..


வணக்கம்!

பல்கும் விருதுகள் பாவையுனைத் தேடி!சீர்
மல்கும் கவிதையுள் மகிழ்ந்தாடி! - நல்குகிறேன்
வல்ல கவிஞர் எனும்பட்டம்! வாழ்கவே
நல்ல தமிழ்காத்து நன்கு!


கவிஞர் இளமதி கட்டுகின்ற பாக்கள்
புவியைப் புரட்டும்!சீர் போற்றும்! - செவியினிக்கப்
பேசும் உரைத்திறனும் பேணும் கலைத்திறனும்
வாசம் வழங்கும் வளர்ந்து!

கவிஞர் கி. பாரதிதாசன்
தலைவர்: கம்பன் கழகம் பிரான்சு
18.09.2014


வணக்கம் அன்பான வலைப்பூ உறவுகளே!..

எனது முன்பதிவில் வந்து கருத்திட்ட கவிஞர் ஐயா எனக்குக்
“ கவிஞர் ” என்னும் பட்டம் வழங்கிச் சிறப்பித்துள்ளார்!

ஆனந்தக் கடலில் அடியவள் மூழ்கித் தவிக்கின்றேன்!
என்ன எழுதுவது எனத் தெரியாமல் உள்ளம் மகிழ்ச்சியில் திளைக்கின்றது. இருப்பினும், இன்னும் கற்க வேண்டுமே என்ற எண்ணம் என் மனத்துள் ஓங்கித் துடிக்கிறது!

உடனேயே ஐயாவுக்கு நான் எழுதிய மடலையும்
ஐயா அவர்கள் எனக்கு எழுதிய மடலையும் இங்கு பதிவு செய்கிறேன்.

உங்கள் பார்வைக்கு!...
**************

வணக்கம் ஐயா!

அதிர்ச்சியாக இருக்கின்றது ஐயா! ஆனந்தப்பட்டுக் குதிக்க முடியாமல் பயத்தில் நடுங்குகின்றேன்!...
  
அதிகாலையிலிருந்து  நிலை குலைந்து  செய்யக் கூடாது 
ஏதோ செய்தது  போல மனம் படபடத்து மருகுகின்றேன்!
  
” கவிஞர் இளமதி ” எனப் பட்டம் தந்துவிட்டீர்கள்! 
கிடைத்தையிட்டு மகிழ்ந்தாலும் மனது பயந்து மறுகுகின்றது. 

என்னை இன்னும் வளர்க்க வேண்டும். 
கால நேரமும் கருத்துச் செறிவும் சொல் வளமும் 
எனக்கு மேலும் வேண்டும் ஐயா!...

ஒரு வெண்பா எழுத எவ்வளவு நேரம் ஆழ்ந்து பயணிக்கின்றேன் நான்…! 

இப்பொழுதுகூட அங்கு எப்படி என் நன்றியை, அதிர்ச்சியை எழுதுவது 
எனத் தவிக்கின்றேன் ஐயா!

என்ன செய்வேன்!... எப்படி எழுதுவேன்!.....................

ஐயா! கவிஞராக்கிவிட்டீர்கள் என்னை! எதிர்பாராத மகிழ்ச்சி எனக்கு!
எனது மகிழ்ச்சியையும் நன்றியையும் 
எப்படி உங்களுக்குச் சொல்லுவேன்?... செலுத்துவேன்?... 
கண்கள் கரைய உங்கள் கால்களைத் தொட்டு வணங்குகின்றேன்!

அன்புடன்
என்றும் உங்கள் மாணவி
இளமதி
18.09.2014
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

தொடர்ந்து ஐயா வரைந்த மடல்!....


கவிஞர் இளமதி அவர்களுக்கு வணக்கம்!

நலம். நலமே நண்ணுக! உங்கள் மடல் கண்டேன். தமிழ்ப் பற்றாளர்களையும், தமிழினத் தொண்டர்களையும், நம்மொழியில் வல்லமை படைத்தவர்களையும், தமிழ்மொழியைக் கற்க பேராசை கொண்டவர்களையும் ஒன்றிணைப்பதும், அவர்கள் பணிக்குத் துணையிருப்பதும், ஓங்கச் செய்வதும், பாராட்டுவதும், வழிநடத்துவதும் என் பணிபாகக் கொண்டுள்ளேன்.

மொழிப்பற்றும், இனப்பற்றும், கவிதைக்கலை மீது தீராத காதல் உடைய உங்களை வாழ்த்துவதும், மேலும் வளரத் துணைசெய்வதும் என் கடமையாகும்.

கவிதையின் நுட்பங்களை மிக நுண்ணிமுறையில் புரிந்துகொண்டு கருத்துச் செறிவுடைய ஆக்கங்களைப் தொடர்ந்து படைத்து வருகிறீர். அதைவிட மொழிமீதும், தாய்நாட்டின் மீதும் தீராத் தாகத்தைக் கொண்டுள்ளீர்!

உங்கள் திறனை அறிந்தே "கவிஞர்" பட்டம் வழங்கியுள்ளேன். தொடர்து உங்கள் பணி சிறந்தோங்கவும், உங்கள் வழியாக மின்னும் நூல்களைத் தமிழன்னை அணிந்து மகிழவும் வாழ்த்தி மகிழ்கிறேன்.முக்கனிச் சாறாய் மொழியழகை நீ..பருகச்
சொக்கனின் நல்லருள் சூழ்ந்ததுவே! - மக்களினி
ஈடில் "கவிஞர் இளமதி" என்றுரைக்கப்
பாடிக் களிப்பாய் பறந்து!

நட்புடன்
கவிஞர் கி. பாரதிதாசன்
18.09.2014
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

ஐயாவுக்கு என் உள்ளத்து உணர்வினை
நன்றியைக் கூறிட வடித்த வெண்பாக்கள் இவை!.


பாவேந்தர் இன்றெனக்குப் பட்டம் அளித்துள்ளார்!
தேவே! திகைப்பில் திணறுகிறேன்! - நாவேந்தர்
நற்சபையில் நங்கையிவள்! நானுயர நன்றாகக்
கற்றிட வேண்டும் கவி!

என்னைத் தொலைத்தேன்! இயல்பினைத் தான்மறந்தேன்!
கண்ணைத் திறந்திருந்தும் காட்சியிலை! - சின்னத்
தலையினில் சேர்த்தீர் தனிமகுடம்! ஐயா!
சிலைக்குச் செயலுண்டோ சொல்!

பண்ணும் கவிதைகள் பாவேந்தே நின்னருள்!
எண்ணம் முழுவதும் எந்தமிழே! - கண்ணெனக்
காப்பேன் அளித்த கவிஞரெனும் பட்டத்தை!
பூப்பேன் உலகில் பொலிந்து!


என்னைக் கவியென் றியம்பிய சொல்கேட்டு
முன்னைத் தமிழ்த்தாளில் முத்தமிட்டேன்! - என்னுள்ளே  
மன்னும் மகிழ்வை வடிக்க அளவேது?
நன்றி மலர்சொரிந்தேன் நான்!
~0~0~0~

வலையுலக அன்பு உறவுகளே! 

உங்களின் ஆதரவினால்தான் நான் இன்று இப்படி ஓர் உன்னத நிலையை அடைந்துள்ளேன்!
தொடர்ந்தும் எனக்கு உங்கள் ஆதரவை நல்க வேண்டுமென
மிகமிக அன்போடு கேட்டுக்கொள்கின்றேன்!

தவறுகளையும் சுட்டிக்காட்டத் தயங்காதீர்கள்! தவறாதீர்கள்!!
என்னைத் திருத்திக் கொள்ள மிக அவசியமானவை அவை!

மிக்க நன்றி!


68 comments:

 1. ஆஹா மிக்க மகிழ்ச்சி..தகுதியான பட்டம் தான் கவிஞர் இளமதி ...மனம் நிறைந்த வாழ்த்துகள்

  ReplyDelete
 2. வணக்கம் சகோதரி கீதா!

  அன்னைத் தமிழாள்! அவளொடு உங்களன்பும்
  என்னை உயர்த்தியது இன்று!

  உங்கள் முதல் வருகையும் உள்ளன்புமிக்க வாழ்த்தும் கண்டு
  மிக்க மகிழ்வடைகின்றேன்!

  என் உளமார்ந்த நன்றி சகோதரி!

  ReplyDelete
 3. வாழ்த்துக்கள் ´கவிஞர் இளமதி´
  கவிஞர் ஐயாவினால் வழங்கப்பட்டது பெருமைக்குரியதே. ஏனெனில் ஓர் ஆசிரியருக்கு தன் மாணாக்கன் சிறந்து விளங்குவதை விட வேறு பெருமை ஏது.
  கவிஞர் ஐயாவுக்கு நன்றிகள்.

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் அம்மு!..

   ஐயாவின் அதிரடி அறிவிப்பால் இன்னும் நான் சுய உணர்விற்கு வரவில்லை..:)

   தங்கள் கருத்து உண்மையானதே!
   உங்களின் அன்பான வரவிற்கும் வாழ்த்திற்கும்
   உளமார்ந்த நன்றி அம்மு!

   Delete
 4. ஆஹா! என்னவொரு ஆனந்தம்! கவிபாடும் என் தோழி கவிஞர் ஆனாரே, இளையநிலா இளமதி கவிஞர் இளமதி ஆனாரே! திறம் பார்த்துப் பட்டம் தந்த திரு.பாரதிதாசன் ஐயாவிற்கு நன்றியும் உங்களுக்கு என் மகிழ்ச்சிநிறைந்த வாழ்த்துக்களும் தோழி! மென்மேலும் சிறக்க தேன்தமிழ் பாட வாழ்த்துக்கள்

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் தோழி கிரேஸ்!

   ஐயோ!.. என்னைக் கலாய்ப்பதில் கண்ணும் கருத்துமாய் இருக்கின்றீர்களே..:)

   உங்கள் எல்லோருடைய ஆதரவு இல்லாவிடின் இளமதி என்றோ அப்படியே வானில் கரைந்திருப்பாள்! ...
   துலங்க வைத்த பெருமையில் உங்களுக்கும் பங்குண்டு!

   இன்னும் வளர வேண்டும் இந்த மதி!

   அன்பான வரவிற்கும் இனிமையான வாழ்த்திற்கும்
   இதயங் கனிந்த நன்றி தோழி!

   Delete
 5. வாழ்க.. வளமுடன்!..
  மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்!..

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் ஐயா!

   உங்கள் அன்பு வாழ்தொன்றே என்போருக்கு
   உகந்த வரம்!

   உளமார்ந்த நன்றி ஐயா!

   Delete
 6. குட்டு பட்டாலும்
  வைரமொதிரக் கையால்
  குட்டு பெற வேண்டும்...
  நீங்கள் வசிஷ்டர் கையால்
  குட்டு பெற்றவர்..
  ஆசான் கொடுத்த பட்டம்..
  தகுதியானது தங்களுக்கு...

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் சகோதரர் மகேந்திரன்!

   உங்கள் அன்பு கண்டு உள்ளம் மகிழ்ந்தேன்!

   இனிய வரவிற்கும் வாழ்த்திற்கும்
   உளமார்ந்த நன்றி சகோ!

   Delete
 7. நீரே கவிஞர்!!

  வாழ்த்துக்கள் தோழி.

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் வாருங்கள் தோழி!

   கவிஞர் ஐயாவின் ஆஸ்தான கவிஞர் அன்றோ நீங்கள்!..
   உங்கள் வாயால் இப்படிக் கேட்க நான் என்ன தவம் செய்தேனோ!..

   மிக்க மகிழ்ச்சி! வாழ்த்துகளுக்கு உளமார்ந்த
   நன்றி தோழி!

   Delete
 8. தங்களுக்கு ஏற்ற விருதுதான்! இது! தங்கலது தமிழும், தமிழ் பாக்களும் தங்களுக்கு ஈட்டித்தந்த ஒரு ஏற்றம் மிகு விருது! மிக்க மகிழ்ச்சி!

  வாழ்த்துக்கள் சகோதரி!

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் சகோதரரே!

   ஏற்றமிகு விருது எனக்குகந்ததெனப் போற்றும் உங்கள்
   வாழ்த்துக் கண்டு உள்ளம் நிறைந்தேன்!

   உளமார்ந்த நன்றி சகோதரரே!

   Delete
 9. ஞானி ஸ்ரீபூவு ஆசிகள் என்றும் நிலைத்தோங்கட்டும் அத்துடன் எமது வாழ்த்துக்களும் சகோதரி.

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் சகோதரரே!

   தங்கள் ஆசியும், வாழ்த்தும் கண்டு மகிழ்கின்றேன்!

   உளமார்ந்த நன்றி சகோ!

   Delete
 10. ஆவ்வ்வ்வ் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்ள்ள்>.. இதற்காகவேனும் இனி தினம் ஒரு கவிதை வடிக்கோணூம் சொல்லிட்டேன்ன்ன்ன்.....

  காதைக் கொண்டு வாங்கோ.. அதிரா பற்றீ ஒரு கவிதை வடிக்கிறீங்களோ/....

  ReplyDelete
  Replies
  1. வாங்கோ அதிரா!...:)

   வாழ்த்திற்கு மிக்க மிக்க நன்றி! உங்கள் தயவால்தானே நான் வலையுலகையே முதலில் கண்டேன்..:)

   இப்போ இங்கே என் உயர்வில் உங்களுக்கும் பங்கிருக்கு!..

   பாடினாப் போச்சு! .. முயற்சி செய்கிறேன்!..:)

   Delete
 11. வாழ்க.. வளமுடன்!..
  மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்!..
  Vetha.Lanagthilakam

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் சகோதரி!

   உங்களின் அன்பான வாழ்த்திற்கு
   உளமார்ந்த நன்றி சகோதரி!

   Delete
 12. வணக்கம் சகோதரி
  ரொம்ப ரொம்ப மகிழ்ச்சியான தருணத்தில் நாங்களும் உங்களோடு இருப்பதை எண்ணி மகிழ்கிறேன். கவிஞர் அய்யா அவர்களிடமிருந்து கவிஞர் பட்டம் என்றால் கால்கள் தரை தொட மறுக்கத் தானே செய்யும். குரு மற்றும் மாணவியின் கடிதம் படித்து மனம் மகிழ்கிறேன். குருவின் கடிதத்தில் என்னே சொல்லாடல், என்னே பெருந்தன்மை! பெரியோர் பெரியோர் தான்..
  `தேனூறும் செந்தமிழை நாளும் பருகி
  நலமுடனே பாக்கள் பல படைக்க
  இச்சிறியோனின் வாழ்த்துகளும் வணக்கங்களும்`

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் பாண்டியன்! வாங்கோ!..:)

   உண்மையில் உங்கள் வரவுகண்டு நான் கொள்ளும் மகிழ்விற்கு அளவில்லை!..:) இடையில் நீங்கள் இங்கு வராதது கவலையைத் தந்திருந்தும் புது மாப்பிளை...
   நேரம் தேவை அவருக்கும் எனக் காத்திருந்தேன்!

   அன்பான வரவுடன் ஆழ்ந்த இரசனையும் நற்கருத்துகளும் கண்டு மகிழ்கின்றேன்!
   வாழ்த்திற்கும் உளமார்ந்த நன்றி சகோதரரே!

   Delete
 13. தங்கள் பாவரிகளில் காணும்
  தங்கள் பாப்புனையும் திறன்
  "கவிஞர் இளமதி" என்பதற்கு
  தக்க சான்று காணும்
  வாழ்த்துகள்

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் ஐயா!

   தங்களைப் போன்றோரின் ஆதரவும் நல் வாழ்த்துமே
   என் வளர்ச்சிக்கு பெரிய உரம்!

   உளமார்ந்த நன்றி ஐயா!

   Delete
 14. கவியரசிக்கு வாழ்த்துக்கள் ....பல்லாயிரம் முறை ..

  ReplyDelete
  Replies
  1. வாங்கோ அஞ்சு!..:0

   அவ்வ்வ்வ்.... இதென்ன புதுப் பெயர்..:)

   உங்கள் அன்பு வாழ்த்திற்கு பல்லாயிரம் முறை சொன்னேன் என் நன்றியினை நானும்!..:)

   Delete
 15. வணக்கம் !

  பாப்புனையும் வல்லமையால் பார்போற்ற வாழ்ந்திடுவீர் !
  காப்பவனே எந்நாளும் காத்திருக்க! தோப்பினில்
  இன்பமது சூழும் இளமதியே வாழியநீ
  அன்பால் தழைக்கும் அறம்!

  மட்டற்ற மகிழ்ச்சியில் கூத்தாடுது இவள் மனம்
  என் தோழியே நீ வாழிய வாழிய பல்லாண்டு நல்
  வளமும் நலனும் பெற்றுலகில் !கவிஞர் ஐயாவிற்கும்
  என் அன்பு கலந்த நன்றியும் வாழ்த்துக்களும் உரித்தாகுக !

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் தோழி!

   பாப்புனையும் வல்லமை பாவேந்தர் ஊக்கமே!
   யாப்பிலக்க ணங்களும் ஏற்பாக! - தோப்புக்
   குயிலானோர் பார்புகழக் கூவுகிறோம்! மேலும்
   பயின்றிடக் கிட்டும் பலன்!

   உங்கள் ஆனந்தக் கூத்துக் கண்டு நானும்
   மட்டற்ற மகிழ்ச்சி கொண்டேன்!..

   உங்கள் அன்பான வரவுடன் ஆத்மார்த்தமான வாழ்த்துகளுக்கு
   என் இதயம் நிறைந்த நன்றி தோழி!

   Delete
 16. வாழ்த்துக்கள் சகோதரியாரே

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் ஐயா!

   அன்பு வரவுடன் இனிய வாழ்த்திற்கும்
   உளமார்ந்த நன்றி ஐயா!

   Delete
 17. உங்களுக்கு ஏற்ற விருது. வாழ்த்துகள் சகோதரி.

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் சகோதரரே!

   உங்களின் அன்பான வாழ்த்திற்கு
   உளமார்ந்த நன்றி!

   Delete
 18. வாழ்த்துக்கள் கவிஞர் இளமதி. வாழ்க வளமுடன்.
  உங்கள் கவிதை பணி தொடர வாழ்த்துக்கள்.

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் சகோதரி!

   தங்களின் அன்பும் ஆசியும் என்னை வழி நடத்தும்!..

   வாழ்த்திற்கு மிக்க நன்றி சகோதரி!

   Delete
 19. இளமதி கவிஞர் இல்லை என்றால் வேறு யார் கவிஞர்?
  புரியலப்பா புரியலை

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் சகோதரர் மது!...:)

   ரொம்ம்ம்பத்தான் புரிந்தது எனக்கும்!...:)

   தங்களின் அன்பிற்கு என் உளமார்ந்த நன்றி சகோ!..:)

   Delete
 20. வணக்கம்
  கவிஞர் ( இளமதிசகோதரி)

  கவிஞர் என்ற பட்டம் அளித்த தலைப்பை
  கண்ட போதே என்னுள்
  ஆனந்த மகிழ்ச்சி துள்ளியது.
  சிறு துள்ளி பெரு வெள்ளம் என்பது போல.
  சிறு சிறு பாக்கள் எல்லாம் ஒன்று சேர்ந்து
  கவிதைக்கு உயிர் வடிவம் கொடுத்தது.
  சிறிது சிறிது காலம் கடக்க
  உளத்துக்கு மகிழ்வூட்டும் பாக்கள்

  உரமிக்க வலிமை படைத்தது.
  உலக அரங்கில் கவிஞர் என்ற
  அடை மொழி தன் வசம் மலர்ந்தது....
  பார் எங்கும் தமிழ் மணம் வீச
  பாரில் உள்ள மாந்தர்கள் மகிழ
  என்றென்றும் தமிழ் அன்னை
  அரன் காப்பாள்.

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் சகோதரரே!

   அன்பான வாழ்த்துக் கவி கண்டு உள்ளம் மகிழ்ந்தேன்!
   உங்கள் அன்பிற்கு உளமார்ந்த நன்றி சகோ!

   Delete
 21. அட! நான் சொல்ல நினைத்ததை அப்படியே வரிமாறாமல் மது(கஸ்தூரி) சொல்லிவிட்டாரே!!!! எப்படியோ படித்த பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றிருக்கும்(அய்யாவை தான் சொன்னேன்) கவிஞர் இளமதிக்கு வாழ்த்துகள்!

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் மைதிலி!.. வாங்கோ!

   எத்தனை சிறப்பு!.. ஆதர்சன இணையர் என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும்! ஒருவர் நினைப்பதை அடுத்தவர் சொல்லிவிடுவார் அல்லது செய்திடுவார்!..:)
   அதுபோலவே உங்கள் நினைவு சகோ. மதுவினால் இங்கு கூறப்பட்டுவிட்டது..:)

   ஆமாம் சரியாகச் சொன்னீர்கள்!...
   எங்கள் கவிஞர் ஐயா நடமாடும் பல்கலைக் கழகம்தான்!
   அங்கு படித்துப் பட்டம் பெறுவது பெரும் பாக்கியம்தான்!

   உங்கள் அன்பான வரவுடன் இனிய வாழ்த்திற்கும்
   என் உளமார்ந்த நன்றி தோழி!

   Delete
 22. சகோதரி கவிஞர் இளமதிக்கு வாழ்த்துக்கள்...

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் சகோதரர் குமார்!

   அன்பான வாழ்த்திற்கு உளமார்ந்த நன்றி!

   Delete
 23. பட்டத்துக்கு தகுதியானவர் நீங்கள் வாழ்த்துக்கள் அக்காச்சி.

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் நேசன்!

   அன்பாக அக்காச்சி எனக் கூப்பிட்டதே கோடி வாழ்த்துகள் ஆகிறதே!..:)
   அன்பு வரவுடன் இனிய வாழ்த்திற்கும் உளமார்ந்த நன்றி சகோ!

   Delete
 24. கவிஞர் இளமதி அவர்களுக்கு வாழ்த்துகள். பொருத்தமான பட்டம் தான் தந்திருக்கிறார் ஐயா.

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் சகோதரரே!

   உங்கள் இரசனையும் மிகமிக அருமையானதன்றோ!..

   வாழ்த்திற்கும் உளமார்ந்த நன்றி சகோதரரே!

   Delete
 25. வணக்கம் சகோ கவிஞர் இளமதியே !


  பொருத்தமான பட்டம் பாவேந்தர் தந்துவிட்டார்
  நெஞ்சம் நிறைந்த நல்வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் !


  வண்ணக் கவிபுனைவாய் வண்டமிழைக் காத்திடுவாய்
  எண்ணத்தில் இன்புறுவாய் ஏந்திழையே - பண்ணோடு
  பாக்கள் பலநூறு பாடிடுவாய் பாவரசர்
  ஊக்கம் தருவார் உவந்து !


  மேலும் பல பட்டங்கள் பெற்று ஈடிணை இல்லா பாக்கள் தரவேண்டும் இந்த மண் எங்கும் மணக்கட்டும் உன்புகழ்
  வாழ்த்துகிறேன் சகோ வாழமோடு வாழ்க !

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் கவிஞர் சீராளரே!

   ஊக்கம் தருவதற்கு உன்னைப்போல் யாருளர்?
   தேக்கம் அடையுமோ தீந்தமிழ்! - நோக்குமுன்
   வாக்கும் பலிக்க..வா! சோதரா! பாடியே
   போக்கப் பகையைப் புதைத்து!

   உங்கள் பாத்திறனே எனக்கு ஊக்கம் தருவதாகும்!
   ஐயாவின் அன்பும் ஆதரவும் உண்மையில் எமக்கெல்லாம்
   ஈடிணையற்ற ஒரு வரம்! அவரால்தான் நானும் இவ்வளவிற்கேனும் கொஞ்சம் பாடுகிறேன்! இன்னும் கற்க வேண்டும்... காலம் துணை செய்ய வேண்டும்!

   உங்கள் அன்பான வரவிற்கும் ஊக்கமிகு நற்கருத்து மற்றும் வாழ்த்திற்கும் உளமார்ந்த நன்றி சகோ!

   Delete
 26. சகோதரி,
  கணினித் தொடர்போ இணையத் தொடர்போ இல்லாத சூழல்.
  அலைபேசி வழிப் பின்னூட்டங்களைப் பிரசுரிக்க மட்டுமே முடிகிறது.
  தங்களுக்குப் பட்டம் நல்கிய ஆசிரியர்க்கும் படடம் பெறும் முன்பே பட்டம் பெறுதற்குத் தகுதியாகிவிட்ட தங்களுக்கும் என் மனமார்ந்த வாழ்த்துகள்.
  பணிமுடித்து வீடு வந்ததும் மீண்டும் வருவேன்.
  நன்றி

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் ஐயா!..

   உங்கள் வரவே எனக்குப் பேருவகை!..
   ஆறுதலாக வாருங்கள்! உங்கள் கஷ்டத்திற்கு மத்தியிலும்
   என்னை வாழ்த்த இப்படியேனும் வந்ததே என் பேறாகும்!

   அன்பான வரவுடன் இனிய வாழ்த்திற்கும்
   உளமார்ந்த நன்றி ஐயா!

   Delete
 27. ஆகா ஆகா . அய்யாவின் வாழ்த்தும் , தங்களது நன்றிக் கவிதைகளும் மெய் சிலிர்க்க வைக்கின்றன.

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் சகோதரரே!

   உங்கள் வரவும் உவப்பான வாழ்த்திதுவும்
   எங்கும் கிடைக்கா இனிப்பு!

   வரவிற்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றி சகோதரரே!

   Delete
 28. ஈழத்துக் கவிஞரே இளமதியே
  என்இனிய வாழ்த்துக்கள் அருமைத் தோழியே !

  நாவுக்கரசியின் நல்லாசி பெற்றவளே
  நிற்கும் உம் புகழ் நிலைத்து!

  நாளும் புனைந்திடும் நற்கவிதை
  இனிசேர்க்கும் புகழ் சிறப்பாய் !

  தன்னடக்கமும் குருவைப் போற்றும் குணமுனக்கு
  என்றும் குன்றா விளக்காய் ஒளிர்வாய் !

  நான் vacation ல் நிற்பதால் நேரம் கிடைக்கவில்லை இதை பார்தததும் என்னால் மகிழ்ச்சி தாங்க முடியவில்லை அதனால் உடனேயே வாழ்த்த வேண்டும் என்ற ஆவல் கொண்டு அவசரமாக இக் கருத்தை இடுகிறேன். மேலும் மேலும் வளர வேண்டும் புகழ் ஒங்க வேண்டும் என விரும்பி வாழ்த்துகிறேன் என் தோழியே....! வாழ்க பல்லாண்டு !

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் இனிய இனியா!

   ஓய்வில் ஊர்விட்டு ஊர்போயுள்ள நேரத்திலும் வந்திங்கு
   வாழ்த்துகந்த அன்பினை என்னவென்பேன்?..

   உங்கள் வாழ்த்தே எனக்கு வரம்!
   தமிழன்னை தரம் உயர்ந்த முடிந்தவரை பணி செய்வேன்!..

   அன்பு வரவிற்கும் வாழ்த்திற்கும் உளம் நிறைந்த நன்றி தோழி!

   Delete
 29. கவிஞர் இளமைதிக்கு வாழ்த்துக்கள். பட்டங்கள் பல பெற வேண்டும். பார் புகழ புகழ் ஓங்க வேண்டும். நின்றிடவல்ல பட்டங்கள் வளர்ந்திடவே வந்தனையும் பட்டங்கள் . வாழ்க வளர்க

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் சகோதரி!

   தங்கள் வாழ்த்தும் என்னை மெய்சிலிர்க்க வைக்கின்றது!..

   அன்பு வரவிற்கும் இனிய வாழ்த்திற்கும்
   உளமார்ந்த நன்றி தோழி!

   Delete
 30. தங்களுக்கு ஒரு விருது சகோ. என் தளம் வந்து ஏற்றுக் கொள்ளுங்கள். உங்களுடன் பகிர்ந்து கொண்டுள்ளேன். நன்றி

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் சகோதரி!

   மிக்க நன்றி சகோதரி! வந்தேன்! மகிழ்ந்தேன்! பெற்றேன்!

   வரவிற்கும் அறிவிப்பிற்கும் உளமார்ந்த நன்றி சகோதரி!

   Delete
 31. மனமார்ந்த இனிய நல்வாழ்த்துகள் தோழி... :)

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் கவிக்காயத்ரி!

   நீண்ட காலத்தின்பின் உங்கள் வருகை கண்டு
   உள்ளம் பூரித்தேன்!..

   அன்பு வாழ்த்திற்கு உளமார்ந்த நன்றி சகோதரி!

   Delete
 32. விருது பகிர்ந்துள்ளேன் மனமுவந்து ஏற்று கொள்ளுங்கள். சீக்கிரம் வந்து கருத்து இடுகிறேன். ok வா

  ReplyDelete
  Replies
  1. அன்பிற்கினிய இனியா!

   வந்தேன்! கண்டேன்! மகிழ்ந்தேன்! பெற்றேன் பேறு!

   உளமார்ந்த நன்றி தோழி!

   Delete
 33. கவிஞர் இளமதிக்கு வாழ்த்துக்கள்
  கவிஞர் கி. பாரதிதாசன் தந்த பட்டம்
  மிகவும் பொருத்தமானதே

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் ஐயா!

   தங்களின் அன்பான வருகைக்கும் இனிய வாழ்த்திற்கும்
   உளமார்ந்த நன்றி ஐயா!

   Delete
 34. நான் மிகத் தாமதமாக இங்கே வந்திருந்தாலும் மனம் நிறைய மகிழ்வுடன் வாழ்த்துகிறேன் இளமதி சிஸ்டரை. பாரதிதாசன் ஐயாவின் சொல்லுக்கு அட்டியேது...? நீவிர் கவிஞர் இளமதி என்றே இனி உலகத்தாரால் அழைக்கப்படுவீர்கள். நல்வாழ்த்துகள்... ஆசிகள்.... வாழிய நலம்!

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் சகோதரர் பால கணேஷ்!

   உங்கள் வருகை கண்டு உள்ளம் பூரித்தேன் சகோ!..:)
   சொல்லமுடியாத ஒரு உற்சாகம் என்னுள் உணருகிறேன்!

   தங்களின் அன்பான வாழ்த்திற்கும் இனிய கருத்துக்களுக்கும்
   உளமார்ந்த நன்றி சகோதரரே!

   Delete
 35. அன்புள்ள கவிஞர்.திருமதி.இளமதி அவர்களுக்கு,
  வணக்கம். இந்தப் பக்கத்தில்தான் திரு.இனியா அவர்கள் தங்களை ஈழத்துக்கு கவிஞரே! என்று விளித்ததால் நீங்கள் ஈழத்துக்காரராக இருக்கலாம் என்று ஒரு மடல் வரைந்தேன். அது தங்கள் பார்வைக்கு வந்ததா? இல்லையா என்று தெரியவில்லை.
  நன்றி,
  -மாறாத அன்புடன்,
  மணவை ஜேம்ஸ்.
  manavaijamestamilpandit.blogspot.in

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் ஐயா!

   ஆமாம் தோழி இனியாவின் கூற்று மிகச் சரியே!
   நான் ஈழத்தைத் தாய் நாடாகக் கொண்டவள்தான் ஐயா!
   இப்போ வசிப்பது ஜேர்மனி நாட்டில்!..:)

   உங்கள் முதல் கருத்துப் பதிவு இதற்கு முந்தையப் பதிவில் வந்ததே ஐயா!
   அன்பு நன்றியுடன் வாழ்த்துக்கள்!

   Delete

உங்களின் அன்பான வரவிற்கும் ஊக்கந்தரும்
இனிய கருத்திற்கும் என் உளமார்ந்த நன்றி! _()_