Pages

Nov 12, 2014

பசுமை படர!..


பாரும் பசுமை படர்ந்தோங்கப்
பக்கத் துணையாய் ஒளிவேண்டும்!
நீரும் அதற்குக் குறையாமல்
நித்தம் கிடைத்தால் நிறைவாகும்!
வேரும் தண்டும் இலையரும்பும்
வேண்டும் வண்ணம் அவைபெருகி
யாரும் மகிழ்வு பெற்றிடவே
இயற்கை என்றும் அருளுகவே!


எண்ணும் போதில் இனித்திடுமே!
எம்மை மகிழ்வில் இணைத்திடுமே!
வண்ணம் நிறைந்த வடிவேற்று
வாழ்வில் கடந்த வசந்தமிதே!
இன்றும் தொடரும் நம்வழியின்
ஈர்ப்பாம் பசுமை நினைவுகளே!
மின்னும் அருமைக் காட்சிகளாய்
மீட்டிப் பார்க்க மிகும்மகிழ்வே!


செய்யும் பணிகள் நிறைவாகச்
சேர்க்கும் செல்வம் பசுமையன்றோ!
பொய்யும் புரட்டும் நிறைந்திட்டால்
புவியில் பெருகும் வறுமையன்றோ!
மெய்யாய் ஆற்றும் நற்பணியால்
மேவும் இனிமை வாழ்வன்றோ!
நெய்வோம் நம்மின் மொழியுயர
நீண்டு வளரும் சிறப்பன்றோ!


பண்ணும் பாட்டும் படர்கின்ற
பசுமைத் தமிழ்போல் மொழியுண்டோ?
எண்ணும் எழுத்தும் இருகண்ணாய்
ஏற்றோர் மனத்துள் இருளுண்டோ?
கண்ணுள் மணிபோல் கமழ்பவளைக்
காணும் பொழுதில் துயருண்டோ?
மண்ணும் மணக்கத் தமிழ்மொழியை
விண்ணின் இறையாய்த் தொழுதிடுக!


முன்னோர் சொன்ன முதுமொழிகள்
முதலும் முடிவும் தரும்நூல்கள்
உன்னோ(டு) இருக்கும் உயிர்நண்பா்
உண்மை! ஒழுக்கம்! உயர்அன்பு!
இன்றேன் நல்கும் நற்பேச்சு!
ஏழ்மை போக்கும் நற்றொண்டு!
தன்னேர் இல்லாத் தமிழன்னை
தழைக்கும் பசுமை வளமென்பேன்!


எங்கும் பசுமை என்றவுடன்
எண்ணல் இயற்கை ஒன்றினையோ?
தங்கும் சிறந்த நினைவுகளும்
தழைக்கும் பசுமை வாழ்க்கையிலே!
இங்கே ஆற்றும் நற்பணியால்
எல்லாம் பசுமை வளமேவும்!
பொங்கும் தமிழர் தம்நாட்டைப்
புனையும் நாளே படர்பசுமை!

~~0~~~0~~~0~~~0~~~0~~எண்ணத்திற் கொண்ட இனிய நினைவுகளே
பண்ணும் பசுமை படர்ந்தோங்க! - வண்ணமுடன்
வாழ்வு வளர்ந்தோங்க வல்ல புகழோங்கச்
சூழ்ந்தே இருக்கும் துணை!

~~0~~~0~~~0~~~0~~~0~~


படங்களிற்குக் கூகிளிற்கும் நன்றி!

85 comments:

 1. ஆவ்வ்வ்வ்வ் நீண்ட காலத்துக்குப் பின் மீதான் 1ஸ்ட்டூஊஊஊஊஊஉ... இருங்க ஒவ்வொரு வரியாப் படிப்பம்:)

  ReplyDelete
  Replies
  1. ஆகா..:) என்ன அதிசயம் இம்முறை..:)

   முதலாவதா இங்கே மீண்டும் நீங்கள்..!
   மெத்தச் சந்தோசம்..:)
   படிச்சிட்டு எழுதுங்கோ கருத்தை.. மிக்க நன்றி அதிரா!..:)

   Delete
 2. கவிதை கவிதையாப் போட்டு அதிராவைக் கலைச்சிடுவீங்க போலிருக்கே:).. என்னிடம் இருக்கும் ஒரு குட்டி இதயத்தை:) வச்சு இந்தப் பெரிய கருத்தடங்கிய கவிதையை எப்படிப் படிப்பேன்ன்... ஆனாலும் படிச்சிட்டேன் இயற்கை பற்றிய அழகிய கவிதை...

  இப்போ கொஞ்சக் காலமா குயில் வேலை செய்யிறேல்லைப் போல இருக்கே... தொடங்குங்கோ மீயும் செய்யத் தொடங்கியிருக்கிறன்.. நேரம் போதாமல் இருக்கே கர்ர்ர்ர்:).

  ReplyDelete
  Replies

  1. கவிதை கவிதையாப் போட்டு அதிராவைக் கலைச்சிடுவீங்க போலிருக்கே:)..

   அதிரா எழுதும் கருத்தெல்லாம்
     அல்வா போன்று சுவைதருமே!
   புதிரா இருக்கும் சில..சொற்கள்!
     புதுமை பேசும் சில..அடிகள்!
   கதிரா? கனியா? கமழ்மலரா?
     கருத்தைக் கவரும் பல..உரைகள்!
   மதுரா தெய்வ அருள்என்று
     வாழ்த்தி வணங்கி மகிழ்கின்றேன்!

   உண்மையில் அதிராவின் கருத்துக்களை நான் விரும்பி படித்து சுவைப்பதுண்டு! அதிராவும் கவிதை எழுதக் கற்றுக்கொள்ளலாமே!

   கவிஞர் கி. பாரதிதாசன்
   தலைவர்: கம்பன் கழகம் பிரான்சு

   Delete
  2. அதிரா!..கவிதையால் கலைக்கிறேனோ உங்களை..:)
   அவ்வளவு கொடுமையாகவோ இருக்கு..:))
   ஆனாலும் ரசிச்சிருக்கிறீங்கதானே.. நன்றி அதிரா!!..:)

   பாருங்கோ உங்கள் ரசனை கண்டு ஐயாவே வந்து உங்களுக்கு விருத்தத்தால் வாழ்த்தியிருக்கிறார்..!

   மிக்க நன்றி ஐயா தங்களின் இனிய
   விருத்தக் கவி வாழ்த்திற்கு!

   Delete

  3. வணக்கம்!

   தங்கை அதிரா தருகின்ற சொல்லெல்லாம்
   பொங்கல் இனிமை பொழிந்தனவே! - தங்கமெனக்
   கொஞ்சும் தமிழைக் கொடுகின்ற சீா்வாழ்க!
   விஞ்சும் புகழை விளைத்து!

   கவிஞர் கி. பாரதிதாசன்
   தலைவர்: கம்பன் கழகம் பிரான்சு

   Delete
  4. அச்சச்சோ எனக்கு ஷை ஷையா வருதே:).. நான், தமிழ் எழுத்துக்களே சிலதில, தட்டுத் தடுமாறி விழுந்து எழும்பி.. மண்படாததுபோல :) காட்டி நடந்து போறனாம்:)..

   கவிஞர் பாரதிதாசன் அண்ணனுக்கு மியாவும் நன்றி... இவ்ளோ தூரமா என் எழுத்துக்களை ரசிக்கிறீங்க என பார்த்ததும் நம்ப முடியாமல் இருக்கு...

   எனக்கு இலக்கியத் தமிழ் வராது:) + புரியாது... :) அதனாலதான் இளமதியின் எழுத்துக் கண்டு ஓட வெளிக்கிடுறனான்:).. மற்றும்படி இளமதி நீங்க எங்கேயோ போயிட்டீங்க இலக்கியக் கவியில்.......

   Delete
  5. மொக்கை போடும் நேரத்தில்
   மொழியை படிக்க முயலுங்கள்
   சக்கை போடு போடுகின்ற
   சந்தக் கவியும் பாடிடலாம்
   திக்குத் தெரியா காடெனினும்
   திமிராய் நடந்தால் பாதைவரும்
   மொக்குப் பிள்ளை இதுவென்று
   முன்னோர் யாரையும் சொன்னதில்லை ,,!

   அதிராவா கொக்கா !
   ( உசுப்பேத்திட்டேன் ஏதோ நம்மளால முடிஞ்சது !

   Delete
 3. கவிதை அருமை சகோதரி....
  வாழ்த்துக்கள்...

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் சகோதரரே!

   தங்கள் அன்பான வரவிற்கும் வாழ்த்திற்கும்
   உளமார்ந்த நன்றி!

   Delete
 4. //பண்ணும் பாட்டும் படர்கின்ற
  பசுமைத் தமிழ்போல் மொழியுண்டோ?
  எண்ணும் எழுத்தும் இருகண்ணாய்
  ஏற்றோர் மனத்துள் இருளுண்டோ?
  கண்ணுள் மணிபோல் கமழ்பவளைக்
  காணும் பொழுதில் துயருண்டோ?//

  அருமையான வரிகள் இளமதி! மனமார்ந்த வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்!!

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் மனோ அக்கா!

   உங்கள் ரசனையே எனக்கு ஒரு ஊக்கச் சக்தி அக்கா!..:)
   அன்பான வரவிற்கும் வாழ்த்திற்கும்
   உளமார்ந்த நன்றி அக்கா!

   Delete
 5. முன்னோர் சொன்ன முதுமொழிகள்
  முதலும் முடிவும் தரும்நூல்கள்
  உன்னோ[டு] இருக்கும் உயிர்நண்பா்
  உண்மை! ஒழுக்கம்! உயர்அன்பு! //

  ஆஹா...தமிழ் கொட்டுகிறது தோழி உங்களிடம்...

  வாழ்த்துக்கள்.

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் தோழி உமையாள்!

   கொட்டும் தமிழென்று கூடித் தினம்பாடி
   எட்டுவோம் வெற்றி இணைந்து!

   அன்பு வரவிற்கும் வாழ்த்திற்கும்
   இனிய நன்றி தோழி!

   Delete
 6. செந்தமிழால் செதுக்கிய கவித்தேன்
  மதுரை விழா. பதிவு
  http://www.killergee.blogspot.ae/2014/11/blog-post.html

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் சகோதரரே!

   செந்தமிழ் சொட்டச் சொட்ட இனிக்கத் தந்த மதுரை விழாப்
   பதிவும் படங்களும் பார்த்து மகிழ்ந்தேன்!

   மிக்க நன்றி சகோ!

   Delete
 7. ''..பாரும் பசுமை படர்ந்தோங்கப்
  பக்கத் துணையாய் ஒளிவேண்டும்!
  நீரும் அதற்குக் குறையாமல்
  நித்தம் கிடைத்தால் நிறைவாகும்!..''

  mika nanru sakothari.
  Ntjh. ,yq;fhjpyfk;.

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் சகோதரி!

   நன்றிக்கு நன்றி சகோதரி!

   Delete

 8. வணக்கம்!

  பாரில் பசுமை படர.. எனும்விருத்தம்
  வேரில் பழுத்த வியன்கனியே! - சீரில்..செந்
  தேனொழுகும்! தீந்தமிழ் தின்மதியின் இவ்வலை
  வானொழுகும் நீரின் வளம்!

  கவிஞர் கி. பாரதிதாசன்
  தலைவர்: கம்பன் கழகம் பிரான்சு

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் ஐயா!

   சீரினிற் செம்மை சிறப்புறக் கற்றது
   நேரியர் நீவிருகந் திட்டவரம்! - பூரித்துப்
   போற்றி மகிழ்கின்றேன்! பூந்தமிழைத் தேரினில்
   ஏற்றுவேன் உம்மோ டிணைந்து!

   தாய்த்தமிழ்ச் சீருடன் தங்கள் கருணையும்
   வாய்த்ததிப் பேறான வாழ்த்து!

   தங்களின் அன்பான வருகையுடன்
   இனிய வெண்பா வாழ்த்திற்கு
   என் உளமார்ந்த நன்றி ஐயா!

   Delete
 9. இயற்கையும் செந்தமிழும் அழகோ அழகு கவிதை //..மண்ணும் மணக்கத் தமிழ்மொழியை
  விண்ணின் இறையாய்த் தொழுதிடுக!//


  உண்மைதான் தாய்மொழியை அனைவரும் தொழ வேண்டும் !!

  ReplyDelete
  Replies
  1. வாங்கோ அஞ்சு!..:)

   உங்கள் கவிதை ரசனைகண்டு மிக்க மகிழ்ச்சி!..
   தாய்மொழி என்றாலே தாய் தானே!..:)

   வரவிற்கும் நற் கருத்திற்கும் உளமார்ந்த நன்றி அஞ்சு!

   Delete
 10. Replies
  1. வணக்கம் சகோதரி!

   மிக்க நன்றி!

   Delete
 11. அருமை. ஆரம்ப வரிகள் பாரதியின் 'காணி நிலம் வேண்டும்' கவிதையின் சரணங்களை நினைவு படுத்தியது.

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் சகோதரர் ஸ்ரீராம்!

   ஓ.. அப்படியா! நானும் இப்பொழுதல்ல என்றோ
   படித்ததாக ஞாபகம்...
   உங்கள் இனிய வரவிற்கும் கருத்திற்கும்
   மிக்க நன்றி சகோ!

   Delete
 12. பசுமையை தமிழால் போற்றிய தங்களுக்கு வந்தனம்.

  "//பண்ணும் பாட்டும் படர்கின்ற
  பசுமைத் தமிழ்போல் மொழியுண்டோ?
  எண்ணும் எழுத்தும் இருகண்ணாய்
  ஏற்றோர் மனத்துள் இருளுண்டோ?
  கண்ணுள் மணிபோல் கமழ்பவளைக்
  காணும் பொழுதில் துயருண்டோ?
  மண்ணும் மணக்கத் தமிழ்மொழியை
  விண்ணின் இறையாய்த் தொழுதிடுக!
  //"

  அருமையான சிந்தனை. வாழ்த்துக்கள் சகோ.

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் சகோதரரே!

   தமிழே பசுந்தமிழ் அல்லவோ!..:)
   அன்பான வரவுடன் இனிய வாழ்த்திற்கும் என் நன்றி சகோ!

   Delete
 13. பச்சைவண்ணந் தோய்த்துப் பசுங்கவிதை தந்தாயே
  இச்சைக்கிளி யேநிலவே வாழ்க !!!
  இப்போ நானும் ட்ரை பண்ணினேன் தோழி!!
  (விஜூ அண்ணாவிற்கு நன்றி!)

  ReplyDelete
  Replies
  1. இந்த மூன்றில் ஒன்றுதானோ பிரச்சனை?!

   இச்சைக்கிளி - ( 1 1 2)
   வாழ்க - வெண்பாவின் இறுதி இரண்டாப் பிரிந்தால் கடைசியில் முடியும் எழுத்துகள் யாவை?
   என்னை இங்கே அழைத்ததற்கு சகோ மைதிலியை இவற்றைத் திருத்திப் பின்னூட்டமிட அழைக்கிறேன்.

   “பச்சை மலர்வனத்தைப் பார்க்கும் விழிகளிலே
   இச்சை நிறைய எழுதுகிறீர் - மெச்சுகலை
   வாணி இலக்கியங்கள் வாழக் கவிபடைக்கும்
   தேனிநீர் என்பேன் தெளிந்து“

   பாத்தாசில்ல...!
   இம் வரட்டும் அடுத்த பின்னூட்டம்!
   நன்றி சகோ!

   Delete
  2. அன்பு தோழி மைதிலி!

   நீங்களும் இப்போ கவிதைகளைச் சரமாரியாகப்
   பொழியத் தொடங்கி விட்டீர்களே!..:)

   மிகுந்த மகிழ்வாக இருக்கின்றது எனக்கும்!
   ஆரம்ப நிலை என்பதால் சில தடக்கல்கள், தவறுகள்
   வருவது இயல்பே..:) ஆசிரியையான உங்களுக்கே
   நான் பாடஞ் சொல்லித்தருவதா?..:))

   முயன்றிருக்கின்றீர்கள் அதுவே மன மகிழ்வாயிருக்கின்றது.!
   ஐயா விஜு சொன்னது போலத் தொடருங்கள்.. நானும் படிக்கக் காத்திருக்கின்றேன்!
   உங்கள் வளர்ச்சிக்கு என் வலைப்பூ தளமாக அமைந்தது
   பெரு மகிழ்ச்சியே எனக்கும்!..:)

   நன்றியுடன் வாழ்த்துக்கள் தோழி! தொடருங்கள்!!!..

   Delete
  3. அன்புத் தோழி மைதிலி!..

   மெச்சினார் உம்மை மிகவே விஜுஅய்யா!
   அச்சம் உமக்கேனோ அஞ்சுகமே! - மிச்சமின்றி
   நச்செனப் பா..பொழிவீர்! நன்றே உமதாற்றல்
   உச்சமுற காண்போம் ஒளிர்ந்து!

   Delete
  4. தோழி!!
   நீங்க என்னைபத்தி ரொம்ப தப்பா நினைத்திவிட்டீர்களே!!
   நான் தொடக்க நிலையில் தான் இருக்கிறேன், எனக்கு திருத்திக்கொள்ள வாய்ப்பளித்தால் மகிழ்வேனே அன்றி கோபித்துக்கொள்வேணா??? அதுவும் இந்த அன்பு இதயத்தை முறித்துக்கொண்டு செல்வேனா?? இது ஒரு GAME SPIRIT விடுங்க:)) இப்போ மறுபடி முயல்கிறேன்:))
   பச்சைவண்ணந் தோய்த்துப் பசுங்கவிதை தந்தாயே
   இச்சைக் கிளியே அழகு !!!
   ------------
   முயன்று தவறிப் பழகுதல் தான்முறை இங்கு
   பயின்றுபின் பாடிடுவேன் நன்கு!! :))

   Delete
  5. ஓ.. வாவ்வ்வ்..! வாங்க மைதிலி!..:)

   கச்சிதமாய்க் ஓர்குறள் காட்டி நிறைகின்றாய்!
   நிச்சயமாய் வல்லகவி நீ!

   அற்புதம் மா! மிக்க மகிழ்ச்சி! உங்களுக்கு அங்கே விடிகாலை!
   எனக்குக் கண்கள் சொருகுகின்றது!..:)

   தொடருங்கள்! வாழ்த்துக்கள் தோழி!

   Delete
  6. பச்சைவண்ணந் தோய்த்துப் பசுங்கவிதை தந்தாயே
   இச்சைக் கிளியே அழகறிந்து - மெச்ச
   முயன்று தவறிப் பழகுதல் தான்முறை இங்கு
   பயின்றுபின் பாடிடுவேன் நன்கு!! :))

   இனிமேல் யார்துணையும் தேவையில்லை்.
   எல்லாம் நிறைவேறிற்று.
   தொடருங்கள்!
   வாழ்த்துகள்!

   Delete
  7. அப்படா! ஒருவழியா ஆசான் எனக்கு பாஸ் மார்க் போட்டுட்டார்:)) நன்றி இளமதி! நன்றி அண்ணா!

   Delete
 14. மெய்யாய் ஆற்றும் நற்பணியால்
  மேவும் இனிமை வாழ்வன்றோ!//

  உண்மைதான் சகோ

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் சகோதரரே!

   உங்கள் வரவுகண்டு மிக்க மகிழ்வடைகின்றேன்!

   நன்றியுடன் வாழ்த்துக்களும்!

   Delete
 15. வேரும் தண்டும் இலையரும்பும்
  வேண்டும் வண்ணம் அவை பெருகி
  யாரும் மகிழ்வு பெற்றிடவே
  இயற்கை என்றும் அருளுகவே!..

  அருமை.. மனம் மகிழ்கின்றது..

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் ஐயா!

   தங்களின் அன்பான வரவுடன் இனிய ரசனையும்
   எல்லையிலா ஆனந்தமே தருகிறது எனக்கு!..

   மிக்க நன்றி ஐயா!

   Delete
 16. நற்செயல் புரிந்தீர் நால்வர் படிக்க
  கற்றறிந்து காடுவளம் காக்க வேண்டும்
  பற்றிருக்க பலன்தருமே பசுமை புரட்சி
  நற்செயலே நாடுசெழிக்கும் நல் வித்து.

  மனமகிழ்ச்சியில் ஏதோ எனக்கு தெரிந்ததை எழுதிவிட்டேன். தவறாக இருந்தால் மன்னிக்க.

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் அன்புச் சசிகலா!

   நற்செயல் என்றீர் நனிநன்றி! நாமிணைந்து
   பொற்செயல் செய்வோம் புரிந்து!

   அருமையாக இருக்கின்றது உங்கள் கவிவரிகள்!
   தவறிழைத்தால் கவலையேன்...!
   திருத்தி எழுதிப் பழகிடச் சரியாகும்!.

   இனிய வரவிற்கும் கருத்துக் கவிக்கும் மிக்க நன்றி தோழி!

   Delete
 17. பசுமையை பசுமையாய் பாடினீர்
  விசும்பிடும் படியாய் விளக்கினீர்
  பேசுமும் புகழை பார்பாரீர்.

  உண்மையில் ஆச்சரியமாக இருக்கிறது தோழி இது வரை தங்கள் கவிதைகளை நான் ரசித்துள்ளேன் ஆனால் இபொழுது தான் வியக்கிறேன் எத்துணை ஆற்றல் தங்களுக்கு ஒவ்வொரு நுணுக்கங் களையும் உன்னிப்பாக கவனிக்க ஆச்சரியமே. அருமைத் தோழியே வாழ்க வளர்க வேண்டிய வெற்றிகள் யாவும் பெறுக விரைவாய் ....!

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் இனிய இனியா!..:)

   பசுமையாய் எங்களின் பண்பினைக் கொண்டால்
   விசும்பையும் முட்டலா மே!

   அச்சச்சோ ரொம்பவே புகழ்கின்றீர்கள் என்னை!..:)

   உங்கள் வரவும் பெயரைப் போலவே இனிய கருத்தும் கண்டு
   மகிழ்சியில் மனம் பறக்கின்றது..!
   உங்கள் ஆசி இன்னும் உயர்ந்திடுவேன்..:)
   அன்பான வாழ்த்திற்கு உளமார்ந்த நன்றி தோழி!

   Delete
 18. செய்யும் பணிகள் நிறைவாகச்
  சேர்க்கும் செல்வம் பசுமையன்றோ!
  பொய்யும் புரட்டும் நிறைந்திட்டால்
  புவியில் பெருகும் வறுமையன்றோ!//

  உண்மை.
  செய்யும் தொழிலில் நேர்மை, ஒழுக்கம், உண்மை இருந்தால் வாழ்வு வளம்பெறும் உண்மை.
  கவிதை சொல்லும் நீதி அருமை.

  வண்ணமுடன்
  வாழ்வு வளர்ந்தோங்க வாழ்த்துக்கள் இளமதி.

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் கோமதி அக்கா!

   கவிதையை ஆழ்ந்து ரசித்தமை கண்டு உள்ளம் பூரித்தேன்!..

   வாழ்த்திற்கும் இனிய நன்றி அக்கா!

   Delete
 19. பசுமையாய் ஒரு கவி பசுமையான நிறத்தில் எழுதப்பட்டுள்ளது

  நன்று

  ReplyDelete
  Replies
  1. வாங்கோ சகோதரரே!

   நீண்ட காலமாக உங்களைக் காணவில்லையே..!
   நலமாக இருக்கின்றீர்களோ?..
   வரவுகண்டு மனம் மகிழ்கின்றேன்!

   அன்பு நன்றி சகோதரரே!

   Delete
 20. பசுமை போர்க்க சொல்லும் கவிதை மனதில் இடம்பிடித்துவிட்டது! சிறப்பான கவிதை! வாழ்த்துக்கள்!

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் சகோதரர் சுரேஷ்!

   பசுமை என்றும் குளிர்மையானது..!
   மனதிற்கும் மகிழ்வு தரவல்லது அன்றோ..!

   உங்கள் அன்பான வரவுடன் இனிய கருத்திற்கும்
   வாழ்த்திற்கும் உளமார்ந்த நன்றி சகோ!

   Delete
 21. வணக்கம் சகோ.!தங்களின் கவிதை,'எண்ணும்போதே இனித்திடுதே! "பண்ணும் பாட்டும் படர்கின்ற
  பசுமைத் தமிழ்போல் மொழியுண்டோ?
  எண்ணும் எழுத்தும் இருகண்ணாய்
  ஏற்றோர் மனத்துள் இருளுண்டோ?".....வரிகள் அருமை!

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் சகோதரரே!

   உங்கள் வரவும் அழகிய கருத்தாடலும் மனதிற்கு உற்சாகத்தையும் ஊக்கத்தையும் தருகிறது!
   அன்புடன் நன்றி சகோதரரே!

   Delete
 22. மாச்சீர் மாச்சீர் காய்ச்சீராய்த்
  மடக்கித் தந்த தந்த அறுசீராம்
  விருத்தம் அருமை சகோதரி. அதிலும் “இயற்கை என்றும் அருளுகவே!“ என்றது எனக்கு மிகவும் பிடித்தது. பாரதிதாசனின் “அழகின் சிரிப்பு“ அறுசீர் விருத்தத்தில் புகழ்பெற்றது (நாலு காய்ச்சீர் ரெண்டு மாச்சீர் பா.தா.வின் சிறப்பு “ஒண்டமிழ்த்தாய் சிலம்படியின் முன்னேற்றம் ஒவ்வொன்றும் உன்முன் னேற்றம்“ என்பது போல!
  இந்த ரெண்டு மாச்சீர் ஒரு காய்ச்சீரில் புகழ்பெற்ற பாடல் -
  “தொடுக்கும் கடவுட் பழம்பாடல்” (மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ்)
  தொடர்ந்து பாவகைகளை வழங்கிட வாழ்த்துகள் சகோதரி.

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் ஐயா!

   தங்கள் அன்பான வருகையுடன் இனிய கருத்துக்கள் கண்டு
   உள்ளம் துள்ளுகிறது!.
   எடுத்துக்காட்டுகள் அற்புதம் ஐயா!
   உங்களைப் போன்றோரின் ஊக்கமும் ஆதரவும் என்னை வழிநடத்தத் தொடர்வேன் மேலும்!..

   வாழ்த்திற்கும் மிக்க நன்றி ஐயா!

   Delete
 23. தாமத வருகைக்கு மன்னிக்க சகோதரி!
  எந்தத் தயக்கமும் இன்றி இந்தப் பாடலைப் பாடப்புத்தகத்துக்குப் பரிந்துரை செய்யலாம்.
  ஆனால் அதில் அனுபவம் வாய்ந்த நிலவன் அய்யாவிற்குத் தெரியும் அதன் அரசியல்!

  பாட்டின் பசுமை அறுசீரில்
  பாகின் பசுமை தமிழ்பசுமை
  ஊட்டும் கவிதை உள்கசிய
  உணரும் பசுமை உயிர்ப்பசுமை
  தீட்டும் வைரம் இளமதியார்
  தேடும் பசுமை வாழ்வுதுயர்
  ஓட்டும் பசுமை பெருகிடவே
  உள்ளம் நெகிழ வாழ்த்துகிறேன்.!

  கவிதையில் தமிழ் முதிர்கிறது.
  வாழ்த்துகள் கவிஞரே!

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் ஐயா!

   பாட்டின் பொருளாம் பாவல..நின்
    பாங்காம் பசுமை தானன்றோ!
   காட்டும் கவிதைக் கோலங்கள்
    கண்டேன் கண்ணீர் பெருகவன்றோ!
   நாட்டம் மிகவாய் நற்றமிழை
    நன்றாய்ப் பயிலல் பசுமையென
   தேட்டம் திரட்டித் தருகின்றீர்
    தேனாம் நன்றி நானுகந்தேன்!

   தாமதம் ஒன்றுமில்லை ஐயா! நீங்களும் கண்டு
   கருத்துப் பகிர்ந்திட வேண்டி இங்கு அழைத்தேன்!
   ஆனால் உங்களுக்கு அகால வேளையாகி மிகவும் சிரமம் தந்துவிட்டேனென எண்ணுகிறேன்! மன்னிக்கவும் ஐயா!

   வந்ததும் அறுசீர் விருத்தத்தில் வாழ்த்தியதும்
   மிகவும் மகிழ்வாக இருக்கின்றது...!
   மிக்க நன்றி ஐயா!

   பாடப் புத்தகத்தில் பதிவிட இப்பாடலைப்
   பரிந்துரைத்தமைக்கும் மிக்க நன்றி ஐயா!

   Delete
 24. வணக்கம்
  கவிதைகள் அருமை
  சூழல் குறித்து சமூகம் விழிப்புடன் இருப்பது அவசியம்.
  தங்களின் கவி வரிகள் அதனை வலியுறுத்துகின்றன

  //பொங்கும் தமிழர் தம்நாட்டைப்
  புனையும் நாளே படர்பசுமை!
  //
  நாளை நமதாகட்டும்

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் சகோதரர் மது!

   உங்களின் அழகிய கருத்துப் பகிர்வு என்னை அசத்துகிறது!..

   அந்த நமதாகும் நாள் விரைவில் மலரட்டும்!

   மிக்க நன்றி சகோ!

   Delete
 25. //முன்னோர் சொன்ன முதுமொழிகள்
  முதலும் முடிவும் தரும்நூல்கள்
  உன்னோ[டு] இருக்கும் உயிர்நண்பா்
  உண்மை! ஒழுக்கம்! உயர்அன்பு!///
  அருமை சகோதரியாரே
  அருமை நன்றி

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் ஐயா!

   தங்கள் இனிய வரவொடு நல்ல ரசனையும் கண்டு மகிழ்கின்றேன்!

   நன்றி ஐயா!

   Delete
 26. // இன்றும் தொடரும் நம்வழியின்
  ஈர்ப்பாம் பசுமை நினைவுகளே!
  மின்னும் அருமைக் காட்சிகளாய்
  மீட்டிப் பார்க்க மிகும்மகிழ்வே!// எப்போது பசுமையான நினைவுகளே தங்கிநிற்கும். அழகான சொல்லாடல்.
  இயற்கையின் பசுமையை பைந்தமிழால் விருத்தமாக்கிய உங்கள் ஆற்றலை பாராட்ட வார்த்தைகளில்லை. மிக நன்றாக எழுதியிருக்கின்றீகள்.பாராட்டுக்கள் இளமதி.

  ReplyDelete
  Replies
  1. வாங்கோ அன்பு அம்மு!

   ஆற்றல் என்று அளித்த கூற்றுக் கண்டு
   குதூகலிக்கின்றது மனம்!
   இதுவெல்லாம் தமிழன்னையின் சீரும்
   தன்னலமில்லாத கவிஞர் ஐயாவினதும் வழிகாட்டலுமே!

   பயிற்சி!.. நாமாக முயலக் கைவரும்!

   அன்பான இனிய கருத்திற்கும் பாராட்டிற்கும்
   உளமார்ந்த நன்றி அம்மு!

   Delete
 27. கொட்டும் அருவியும் தோற்றிடவே- தூயக்
  கொஞ்சும் தமிழில் போற்றிடவே
  பட்டுத் துணிபோல் மென்மைதர -இதனைப்
  படிப்போர் நெஞ்சம் இன்பமுற
  கட்டுவார் கவிதை இளமதியே -நல்ல
  கருத்துகள் நாளும் வளர்மதியே
  வெட்டும் மின்னல் ஒளியல்ல-தூண்டா
  விளக்கே என்றால் மிகையல்ல!

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் புலவர் ஐயா!

   மெட்டெடுத்து வந்து மிகவாகப் பாராட்டச்
   சிட்டாய்ப் பறந்தேன் சிலிர்த்து!

   நீண்ட காலத்தின் பின்பு உங்களின் இனிய வரவினைக் கண்டு
   உண்மையில் மனம் சிட்டாகப் பறக்கின்றது ஐயா!
   அருமையான கவி வாழ்த்தும் அளித்துள்ளீர்கள்!

   இருகரங்குவித்து இதயம் நிறைந்த நன்றியுடன்
   வணங்குகின்றேன் ஐயா!

   Delete
 28. அன்புச் சகோதரி,

  வசந்தப் பசுமைவெளி வார்த்தநதி கண்டு
  பசந்தவிழிப் பால்நிலவு பாடும் -- விசும்புறையும்
  விண்மீன்கள் கண்ணடிக்க வெட்கி முகிலினத்தின்
  பின்னொளியும் இவ்வெண் பிறை!

  நன்றி.


  ReplyDelete
  Replies
  1. வணக்கம் ஐயா!

   வெண்பா பொழிந்து வெகுவாகப் பாராட்டக்
   கண்களைக் கண்ணீர் கரைத்ததுவே! - பண்பாம்
   பசுமையோடு பாரில் நிலவும் ஒளிர
   விசும்பும் விலகும் விடுத்து!

   அருமையான வெண்பாக் கருத்துப் பொழிவாகக் காண
   மனம் மிக மகிழ்வாக உள்ளது!
   அருமை ஐயா!
   உளமார்ந்த நன்றி!

   Delete

 29. "பண்ணும் பாட்டும் படர்கின்ற
  பசுமைத் தமிழ்போல் மொழியுண்டோ?

  மண்ணும் மணக்கத் தமிழ்மொழியை
  விண்ணின் இறையாய்த் தொழுதிடுக!" என்ற
  அடிகளை அடியேனும் விரும்புகிறேன்!

  சிறந்த பாவரிகள்
  தொடருங்கள்

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் ஐயா!

   தாங்கள் செய்யும் தமிழ்மொழித் தொண்டு போற்
   பசுமை மிக்க தொண்டு வேறுண்டோ?..!

   தங்கள் அன்பான வரவிற்கும் நற் கருத்திற்கும்
   இனிய நன்றி ஐயா!

   Delete
 30. என்னென்று சொல்ல...
  சொற்களில்லை எம்மிடம் ........
  எங்கும் பசுமை செழுமையாய் படர
  இசைக்கப்பட்ட இன்னிசை...
  வாழ்த்துகள் சகோதரி...

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் சகோதரர் மகேந்திரன்!

   இலக்கியத் தமிழ்மொழித் தேட்டம் நீங்கள்!..
   உங்கள் ரசனையும் கருத்தும் எனக்கு ஒப்பற்றதொன்று!..

   வாழ்த்திற்கும் உளமார்ந்த நன்றி சகோதரர்!

   Delete
 31. அருமை! பசுமை!
  பார்க்கப் படிக்க இதம். பாராட்டுக்கள் இளமதி.

  ReplyDelete
  Replies
  1. வாங்கோ இமா!..:)

   பசுமையைப் படித்துப் பார்த்துச் சுகம் பெற்றுப்
   பாராட்டியமைக்கு மிக்க நன்றி!..:)

   Delete
 32. ஆஹா! பசுமை படர்ந்த கவிதை அருமை! கண்ணுக்கும் குளிர்ச்சி!

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் சகோதரரே!

   தங்கள் வரவும் அழகான ரசனைக் கருத்தும்
   என்னை மகிழ்ச்சிப்படுத்துகிறது!
   மிக்க நன்றி சகோதரர்!

   Delete
 33. உங்கள் தமிழ் வென்றது.

  வாழ்த்துகள் கவிஞரே!

  சென்றகவி நன்றெனவே ஒன்றிமன மன்றுரைய
  இன்றுலகக் குன்றிலொளி என்றிடவே - வென்றமதி
  கார்விலகக் கூர்நுதியின் போர்முனைவாள் கீறலிலே
  தூறலிடு வார்தமிழும் பார்!

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் ஐயா!

   இப்பொதுதான் செய்தியறிந்து திகைத்து நிற்கின்றேன்!
   என்ன நடக்கின்றது என ஒன்றும் புரியவில்லை!..

   வாழ்த்திற்கு மிக்க மிக்க நன்றி ஐயா!..

   சென்று பார்க்கின்றேன்!.. மீண்டு வருவேன்!.. நன்றி! நன்றி!!

   Delete
  2. வாழ்த்துக்கள் இளமதி. @}->--

   Delete
  3. வணக்கம் விஜு யோசெப் ஐயா!
   வணக்கம் இமா!..

   தங்களின் வாழ்த்துகளுக்கு இங்கே......

   www.ilayanila16.blogspot.de/2014/11/blog-post_2.html...நன்றி கூறுகின்றேன்!...
   என நன்றியைக் கூறியுள்ளேன்..!
   வாருங்கள்!

   மிக்க நன்றி!..

   Delete
  4. வணக்கம் ஐயா!

   இன்றுவந்து சொன்னகவி என்றுமென தெண்ணதிலே
   நின்றுதரு கின்றபுகழ் நீண்டதுவே! - கன்னற்பா
   கற்றிடுவேன் விற்பனரே! காற்றுவிசை தோற்கவரும்
   சற்குருவின் சொற்படித்துத் தான்!

   வந்து தந்த வாழ்த்துக் கண்டு கொண்டுவந்தேன்
   சொந்தச் சரக்கு..:)

   ஐயா!.. மீண்டும் அங்கு வந்து வாழ்த்தினால் எழுதலாம் என ஆயத்தப் படுத்தினேன்! அதற்குள் பலருக்கும் கருத்திட வேண்டியதாயிற்று! தாமதமானதற்கு வருந்துகிறேன்!..

   முதல் வாழ்த்தும் முத்தான வாழ்த்தும் உங்களதே!..
   மனமார்ந்த நன்றி ஐயா!

   Delete
 34. " ,,தங்கும் சிறந்த நினைவுகளும்
  தழைக்கும் பசுமை வாழ்க்கையிலே!..:"
  ஆஹா அருமை

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் ஐயா!

   தங்கள் அன்பான வரவோடு வாழ்த்திற்கும்
   உளமார்ந்த நன்றி ஐயா!

   Delete
 35. வணக்கம்
  ஓதிய வரிகள் உள்ளத்தில் பதிந்தது
  உற்று நோக்கினேன் உள்ளம் கசிந்தது..
  அழகிய கவிமழையில் நனைந்தேன்.... பகிர்வுக்கு நன்றி

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் சகோதரரே!

   உங்கள் அன்பில் நெகிழ்ந்தேன் நான்!

   மிக்க நன்றி!

   Delete
 36. உள்ளத்தில் உண்மை ஒளி உண்டெனில்
  இப்படி அற்புதக் கவியாய் வெளி வந்துதானே
  ஆகவேண்டும்
  மனம் கவர்ந்த அருமையான கவிதை
  வார்த்தைச் சரளம் வழக்கம்போல் பிரமிப்பூட்டுகிறது
  பகிர்வுக்கும் தொடரவும் மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் ஐயா!

   உளம் மகிழ உரைத்திட்ட உங்கள் வாழ்த்து
   களம்பல காணச் செய்யும் என்னை!..

   இனிய வரவுடன் இட்ட வாழ்த்திற்கு
   மனமார்ந்த நன்றி ஐயா!

   Delete

உங்களின் அன்பான வரவிற்கும் ஊக்கந்தரும்
இனிய கருத்திற்கும் என் உளமார்ந்த நன்றி! _()_