Pages

Jan 7, 2015

அன்னையிட்ட தீ!...


அன்னையிட்ட தீயென் அடிவயிற்றுள் மூண்டெழவே
உன்னைநினைக் கின்றேன் உயர்தமிழே! - முன்னைப்
பிறந்தவளே! என்னுள் நிறைந்தவளே! யாப்பில்
சிறந்தவளே! காப்பாய் செழித்து!

ஒருகணமும் என்னை ஒதுக்கிட வேண்டாம்!
அருமணமாய் உன்னருளை அள்ளித் - தருகவே!
பாகாய் இனிக்கின்ற பா..படைக்க வேண்டுகிறேன்!
போகாதே நீயும் புறம்!

குன்றுநிகர் செல்வத்தைக் கொட்டிக்  குவித்தாலும்
என்றுமென் உள்ளமுறை இன்றமிழே! - அன்பமுதே!
தொன்றுதொட்டு மண்ணிற் துலங்கிடும் தென்மொழியே!
இன்றுதொட்டு என்னை இயக்கு!

தினையளவும் சிந்தையிற் தேன்தமிழே இன்றிப்
பனைபோல் உயர்ந்தாற் பயனோ? - உனைவந்து 
சேர்ந்திடும் செல்வம் செலவழிந்து போய்விடும்!
பேர்தரும் பைந்தமிழைப் பேணு!


மண்ணுக்கும் மக்களுக்கும் மாண்புறும் தொண்டாற்றிப்
பெண்ணுக்குள் நற்பேற்றை நான்பெறவே! - பண்ணுக்குள்
மின்னும் பசுந்தமிழே! விண்ணொளியே! நல்லாற்றல்
இன்னும் அளிப்பாய் எனக்கு!

ஆண்டவன் தந்த அருந்தமிழ்போல் இவ்வுலகில்
வேண்டினும் கிட்டுமோ வேறேதும்? - மூண்டெழும்
சிந்தனை யாவும் செழுந்தமிழே என்றாகி
வந்தனை செய்வேன் மகிழ்ந்து!

அன்னை அளித்ததமிழ்! அன்பை விளைத்ததமிழ்!
என்னை வளர்த்த எழிற்தமிழ்! - முன்னைக்
குறளைக் கொடுத்ததமிழ்! கொஞ்சுதமிழ்! கற்றே
உறவை வளர்ப்பேன் உவந்து!

பொங்கும் தமிழே! புகழொளியே! தேனொழுகத்
தொங்கும் கனியே! சுடரழகே! - தங்கி
எனக்குள் இருந்திடுக! ஈடின்றிப் பூத்தே
மணக்கும் கவிதை மலர்!
~~~~~~~~~~~~~~~

இங்கு ”அன்னையிட்ட தீ” என எனக்கு எழுதுவதற்கு 
அடியெடுத்துக் கொடுத்த மதிப்பிற்குரிய வலைப்பதிவர் 
ஐயா விஜூ யோசெப் - ஊமைக்கனவுகள் பதிவர் - அவர்களுக்கு
எனது அன்பையும் நன்றியையும் கூறிக்கொள்கின்றேன்! 
நன்றி ஐயா!
~~~~~~~~


இனிய வலைப்பூ உறவுகளே!..
அன்போடு நீங்கள் தரும் ஊக்கத்தினாற்தான்
வலையுலகில் எனது பதிவுகள் இன்னும் வலம் வருகின்றன.
உங்களின் ஆதரவும் இனிய கருத்துக்களுமே
என்னை எழுதவைக்கும் முக்கிய உந்துசக்திகளாகும்!
அதற்கு என் உளமார்ந்த இனிய நன்றிகள்!!!

அத்தோடு, இவ்வருடத்திலிருந்து தமிழ்மணம் தளத்திலும் என் பதிவுகள்
இடம்பெறுவதற்கு அனுமதி கிட்டியுள்ளது
என்பதனை மகிழ்வோடு கூறிக்கொள்கின்றேன்!

இங்கு தங்களின் கருத்துப் பகிர்வோடு என் பதிவுகளுக்கு
தங்களின் வாக்கினையும் இட்டுத் தமிழ்மணம் தளத்திலும்
என் பதிவுகள் வலம்வர உதவிடுமாறு
அன்புடன் கேட்டுக்கொள்கின்றேன்!
மிக்க நன்றி அன்பு உறவுகளே!!!..
~~~~~~~~~~~~~

படங்கள் உதவி கூகிள்!

43 comments:

 1. அருமையான வெண்பாக்கள்.
  படித்துச் சுவைத்தேன் தோழி.

  தமிழ்மணப்பட்டையில் வாக்கிட முடியவில்லை......(
  அப்படி வாக்கிட முடிந்திருந்தால் என் வாக்குதான் உங்களுக்கு முதல் வாக்காக வந்திருக்கும்.


  ReplyDelete
  Replies
  1. வணக்கம் இனிய தோழியே!

   தங்களின் முதல் வருகையும் முத்தான கருத்தும் கண்டு
   உள்ளம் மகிழ்ந்தேன்! மிக்க நன்றி தோழி!

   ஐயையோ.. இது பற்றி எனக்குத் தெரியாதே! போட்டுத்தந்தார்கள்.. வேலை செய்தது கண்டேன்.
   என் வாக்கினை ஏற்றுக் கொண்டதே..:!
   பார்ப்போம்! மிக்க நன்றி தோழி!

   Delete
 2. வணக்கம் !

  மூண்டெழும் சந்தேகம் முற்றிலும் வீணாகும் !
  வேண்டும் வரத்தையிங்கு பெற்றவளே !-ஆண்டு
  பலகடந்தும் செந்தமிழ்ப் பாதருவாய் என்றே
  திலகமும் இட்டேன் திளைத்து!

  எதற்கு இந்த வேண்டுதல் தோழி ?..அது தான் ஏற்கனவே
  அள்ளி அள்ளிக் கொடுத்துள்ளாளே அருந்தமிழ்ப் பா இனிக்க
  நல் வளத்தை இனியும் என்ன கவலை அடிச்சுத் தூள் கிளப்புங்க
  அதற்கு எங்கள் வாழ்த்துக்கள் எப்போதும் உங்கள் கூடவே இருக்கும் .

  ReplyDelete

 3. வணக்கம்!

  இளைய நிலவே! இனியதமிழ் இன்பம்
  விளைய வடித்துள்ளாய் வெண்பா! - சுளையாக
  நற்சுவை நல்கும்! நவிலும் பொழுதெல்லாம்
  பற்சுவை நல்கும் படர்ந்து!

  கவிஞா் கி. பாரதிதாசன்
  தலைவர்: கம்பன் கழகம் பிரான்சு

  ReplyDelete
 4. வணக்கம் என் அன்புத் தோழியே !
  தங்களின் தமிழின் மீது கொண்ட பற்றும் கவிதை மீது கொண்ட அடங்காத தாகமும் கண்டு வியக்கிறேன் அத்தனை ஆற்றலும் கிட்ட வேண்டி வாழ்த்துகிறேன்மா ..! அருமையான வெண்பாக்கள் தோழி வார்த்தையே இல்லை வாயடைத்து நிற்கின்றேன் தோழி. .

  குன்றிலே நின்றெரியும் குத்துவிளக் கேஎன்றும்
  கொண்டாடும் உள்ளங்கள் காலம் கடந்தபின்னும்
  நின்றாடும் நெஞ்சில் விதைத்திட்ட உம்பாக்கள்
  வென்று மகிழஎன் வாழ்த்து !

  அடங்காத காதல் அரும்பாவில் வைத்து
  மடங்காக பொங்கவே மாய்கின்றாய் மானே
  திடம்கொண்டு போராடி தேன்மழை சிந்தி
  கடப்பாய் கடலை விரைந்து !

  ReplyDelete
 5. பொங்கும் தமிழும்! புகழொளியும்
  எந்நாளும்
  தங்களுக்குள் இருந்திடும்
  நன்றி சகோதரியாரே

  ReplyDelete
 6. சுவையான பாக்கள்! மனதை அப்படியே கொள்ளை கொள்ளுகின்றது அழகுத் தமிழ்! தமிழ்மணத்தில் வலம் வரத் தொடங்கியதற்கு வாழ்த்துக்கள் சகோதரி! தொடருங்கள்! எங்கள் வாசிப்பும் வரவும் எப்போதும் உண்டு! தங்கள் தமிழைச் சுவைக்க!

  ReplyDelete
 7. சிறப்பான வரிகள்...

  தளம் .in என்று முடிவதால் தமிழ்மணம் ஓட்டுப்பட்டையாக மாறாது... அதை மாற்றினால் தான் அனைவரும் ஓட்டுப் போட முடியும்...

  விளக்கம் இதில் --> இனி நீங்கள் மா(ற்)ற வேண்டும்...!

  http://dindiguldhanabalan.blogspot.com/2014/03/Speed-Wisom-3.html

  ReplyDelete
 8. முடியவில்லை எனில், தங்களின் blogger mail id & password - எனது மின்னஞ்சலுக்கு அனுப்பவும்... நொடிகளில் மாற்றித் தருகிறேன்... நன்றி...

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் சகோதரரே!

   இனிய வாழ்த்திற்கு மிக்க நன்றி!

   தங்களின் மின்மடல் முகவரிக்கு எனது வலைத்தள முகவரி, மற்றும் விபரங்கள் அனுப்பியுள்ளேன்!

   ஆவன செய்து உதவ வேண்டுகிறேன்!
   மிக்க நன்றி சகோதரரே!

   Delete
 9. கற்கண்டு மழை பெய்தாற்போலிருக்கின்றது.

  வாழ்க நலம்!..

  ReplyDelete
 10. வெண்பாக்களை மிக அருமையாக எழுதியிருக்கிறீங்க இளமதி. அழகு தமிழ் உங்களிடமிருந்து அருவியாக கொட்டுகிறது.வாழ்த்துக்கள்.
  த.ம 2

  ReplyDelete
 11. எண்ணத்தின் ஊற்றாய் இளமதியார் வெண்பாக்கள்
  வண்ணத்தை சூடும் மகிழ்து.
  அற்புதமான வெண்பாக்கள் தோழி. மீண்டும் மீண்டும் படித்து மகிழ்ந்தேன்.

  ReplyDelete
 12. வரம் கேட்டு புனைந்த பா ..ரசனையி வளிம்பிலிருந்து ரசித்தேன்

  ReplyDelete
 13. பல கவிதைகளில் பார்க்கும் மரபுக் கவிதைக்காக இட்டு நிரப்பபடும் வார்த்தைக் கோவை என்று நான் சொன்னால் கோபப் படக் கூடாது. உங்கள் நெஞ்சம் சொல்லும் நான் உண்மை பேசுகிறேன் என்று. பொதுவாக எதிர்மறைக் கருத்துக்கள் சொல்வதை யாரும் விரும்புவதில்லை. பிடிக்கவில்லை என்றால் நீக்கிவிடுங்கள்.

  ReplyDelete
 14. வணக்கம்
  சகோதரி
  இன்பத் தமிழ்கொண்டு இசைபாடினாய்
  படிக்க படிக்க இன்பமாய் இருந்தது
  அழகிய வரிகளுடன் அழகிய வெண்பா கண்டு மகிழ்ந்தேன்... பகிர்வுக்கு நன்றி
  த.ம 3.
  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
 15. அருமையான வெண்பாக்கள் பாராட்டத் தகுதியின்றி படித்துத் சுவைத்தேன் சகோ...

  ReplyDelete
 16. அன்னையிட்ட தீயோ அணையாப் பெருந்தீயாய்
  என்னையுள் ளிட்டே எரிக்கிறதே..! --- பின்னையும்
  என்பேரோ? நான்நிஜமோ? என்றன் கனவுகளில்
  பின்தொடர்வ தெல்லாம் பிழை..!

  சகோ ““““அன்னையிட்ட தீ.““““. பட்டினத்தான் வாக்கு..
  புதுமைப்பித்தன் முயன்ற முதலும் கடைசியுமான முடிவடையா நாவல்.
  ஒரு விளையாட்டிற்குச் சொன்னதை இவ்வளவு அழகான வெண்பாக்களால் அசத்தி விட்டீர்கள்..!
  ஒரே ஒரு சங்கடம்தான்.
  என்னைக் குறிப்பிட்டிருக்க வேண்டியதில்லை!
  இங்கு வெண்பாப் பின்னூட்டம் என்னை நான் குறித்தெழுதியதன்றி உங்கள் பாடலைக்குறித்து எழுதியதல்ல.
  நன்றி.

  ReplyDelete

 17. சிறந்த பாவரிகள்
  தொடருங்கள்

  தைப்பொங்கலா? சிறுகதைப் போட்டியா?
  http://eluththugal.blogspot.com/2015/01/blog-post.html
  படித்துப் பாருங்களேன்!

  ReplyDelete
 18. அருமையான வெண்பாக்களை புனைந்து அசத்தி விட்டீர்கள்! வாழ்த்துக்கள்! தொடருங்கள்! நன்றி!

  ReplyDelete
 19. ஆஹா... சூப்பர் வர வர உங்கட தமிழ் அதிக மணம் பரப்புது இளமதி... இத்தனை வளத்தையும் உள்ளே வைத்துக் கொண்டோ.. நேக்கு நேரமில்லை.. நேக்கு மனமில்லை.. நேக்கு வெக்கமாக் கிடக்கு என்று சொலிக்கொண்டு இருந்தனீங்க கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)..

  இத்தனைக்கும் கவியாழி கண்ணதாசன் அவர்கள் இல்லை எனில் இத்தனை தமிழும் காணாமல் போயிருக்கும்... அவரின் ஊக்குவிப்பால்தானே எழுதவே ஆரம்பித்தீங்க...

  தொடர்ந்து இப்படியே மகிழ்ச்சியாக கலக்க வாழ்த்துக்கள்.... போன காலத்தை நினைக்காதீங்க.. இன்றை மட்டும் எண்ணி மகிழ்வா வாழுங்கோ..

  ReplyDelete
 20. ///அருமணமாய் உன்னருளை அள்ளித் - தருகவே!////

  ஹா..ஹா..ஹா... அவசரமா இதை “அம்மணமாய்” எனப் படிச்சிட்டேன்ன்ன்... அப்போ எதுக்கு அருள்தர அம்மணமாகி இருக்கோணும் என எண்ணிப் பயந்திட்டேன்ன்:) 2ம் தடவை உன்னிப்பா படிச்சனா கரீட்டாப் புடிச்சிட்டேன்ன்:).

  ReplyDelete
 21. //தினையளவும் சிந்தையிற் தேன்தமிழே இன்றிப்
  பனைபோல் உயர்ந்தாற் பயனோ?// அருமையான வரிகள்!

  பாக்களை மிகவும் ரசித்தேன் தோழி..இளமதி போல் எழுத முடியுமா? அருமை தோழி! வாழ்த்துகள்! மேலும் பல பாக்களைத் தாருங்கள்..

  ReplyDelete
 22. அருமையான பாக்கள்...
  வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 23. இளைய நிலா பொழிந்ததவே -இதயம் வரை நனைந்ததுவே

  ReplyDelete
 24. தேன்சொட்டும்பாவரிகள் தித்திக்கின்றது.

  ReplyDelete
 25. இனிய கவிதை ...
  தேர்தல் மாற்றத்திற்கு வாழ்த்துக்கள்

  ReplyDelete
 26. உங்கள் எழுத்துக்கள் அருமை. வாசிக்கவும் சுவராஸ்யம்.. வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 27. தாமதமாய் வந்ததால் த ம 12

  ReplyDelete
 28. வாவ்வ்வ்வ்வ் தமிழ்மணத்தில் 12 வோட்டுக்களை தொட்ட இளமதிக்கு வாழ்த்துக்கள்... கொஞ்ச நேரத்திலயே அங்கின உள்ளுக்கு போய் மறைஞ்சிடுது தமிழ்மணத்தில்.. கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:).

  ReplyDelete
 29. தினையளவும் சிந்தையிற் தேன்தமிழே இன்றிப்
  பனைபோல் உயர்ந்தாற் பயனோ? - உனைவந்து
  சேர்ந்திடும் செல்வம் செலவழிந்து போய்விடும்!
  பேர்தரும் பைந்தமிழைப் பேணு!//
  பைந்தமிழை பேணும் இளமதிக்கு வாழ்த்துக்கள் கவிதை அருமை.

  ReplyDelete
 30. தோழியின் மூலமாக தளம் வந்தேன்...மிக அருமை.

  உங்களின் அழகு தமிழ் பிறவற்றையும் படிக்க தூண்டிவிட்டது. மனமார்ந்த வாழ்த்துக்கள் !!

  ReplyDelete
 31. தங்களுக்கும் தங்கள் இல்லத்தாருக்கும் இனிய பொங்கல் நல் வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 32. தைமகள் வருகை புரிந்திடல் வேண்டும்
  கைகளைக் கூப்பி வணங்கிடல் வேண்டும்
  தையலை உயர்வு செய்திடல் வேண்டும்
  பைந்தமிழ் பூமி செழித்திடல் வேண்டும்

  தங்களுக்கும் தங்களது குடும்பத்தினருக்கும்
  எனது மனம் நிறைந்த
  இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்.

  புதுவை வேலு
  www.kuzhalinnisai.blogspot.fr

  ReplyDelete
 33. வணக்கம்!

  அன்புமனம் பொங்கட்டும்! பண்புமனம் பொங்கட்டும்!
  இன்பமனம் பொங்கட்டும் இன்றமிழாய்! - மன்பதையில்
  நன்மனிதம் பொங்கட்டும்! நல்லறங்கள் பொங்கட்டும்!
  பொன்னமுதம் பொங்கட்டும் பூத்து!

  எங்கும் பொதுமை இனிதே மலரட்டும்!
  சங்கும் முழங்கட்டும் சால்புகளை! - மங்கலமாய்த்
  தங்குகவே இன்பம்! தனித்தமிழ் நற்சுவையாய்ப்
  பொங்குகவே பொங்கல் பொலிந்து!

  கவிஞா் கி. பாரதிதாசன்
  தலைவர்: கம்பன் கழகம் பிரான்சு

  ReplyDelete
 34. வணக்கம் இனிய வலையுறவுகளே!

  என்னை வாழ்த்தித் தமிழ் மண வாக்குமிட்டு ஊக்குவிக்கும்
  உங்கள் அனைவருக்கும் உளமார்ந்த நன்றியுடன் இனிய நல் வாழ்த்துக்களையும் கூறிக் கொள்கின்றேன்!

  சிறிது உடல் நலக் குறைபாட்டினால் வலையுலத் தொடர்பில் இடைவெளி ஏற்பட்டுவிட்டது.
  தனித்தனியே நன்றிகூறவில்லையெனக் குறையெண்ண வேண்டாமெனப் பணிவன்புடன் கேட்டுகொள்கின்றேன்!

  உங்கள் அன்பிற்கும் ஆதரவிற்கும் என்றென்றும் என் நெஞ்சம் நிறைந்த இனிய நன்றிகள்!

  ReplyDelete
 35. அன்புடையீர், வணக்கம்.

  தங்களின் வலைத்தளம் இன்று வலைச்சரத்தில் என்னால் அடையாளம் காட்டி சிறப்பிக்கப்பட்டுள்ளது. பாராட்டுக்கள். வாழ்த்துகள்.

  தங்களுக்கு நேரம் கிடைக்கும்போது வருகை தாருங்கள் என அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.


  இணைப்பு:- http://blogintamil.blogspot.in/2015/01/blog-post_30.html

  ReplyDelete
 36. அன்புமிகு வலைப் பூ அன்பருக்கு,
  நல்வணக்கம்!
  திருமதி ஞா.கலையரசி அவர்களால்,
  வலைச்சரம் ஐந்தாம் நாள் - "வேருக்கு நீர் ஊற்றுவோம்"
  இன்றைய வலைச் சரத்தின்
  சிறப்புமிகு பதிவாளராக தாங்கள் தேர்வாகி,
  வலம் வந்தது கண்டு மிக்க மகிழ்ச்சி!
  வாழ்த்துக்களுடன்,
  புதுவை வேலு
  www.kuzhalinnisai.blogspot.com

  (S'inscrire à ce site
  avec Google Friend Connect)

  ReplyDelete
 37. அன்பின் இளமதி! தற்போது நலம் தானே! அருந்தமிழில் அழகு வரிகள்... இருந்தமிழே ... உன்னால் இருந்தோம்!

  ReplyDelete
 38. அருமையாக எழுதியிருக்கிறீங்கள் இளமதி. இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.
  //உடல் நலக் குறைபாட்டினால்// விரைவில் மீண்டும் பதிவு இட வருவீர்கள் என்று எதிர்பார்த்திருக்கிறேன்.

  ReplyDelete
 39. இளமதி,பெண்ணே ஸௌக்கியமா உடல்நலம் பூரணகுணமா. வாம்மா எப்போதாகிலும் வந்து போ. நலமுடன்இரு. அன்புடன்

  ReplyDelete

உங்களின் அன்பான வரவிற்கும் ஊக்கந்தரும்
இனிய கருத்திற்கும் என் உளமார்ந்த நன்றி! _()_